Skip to main content

Posts

தனித்து நிற்கும் எருக்கஞ்செடி

இன்று காலையில் நடை பயணம் செல்லும் போது எருக்கஞ்செடி ஒன்று கண்ணில் பட்டது. நகரத்தில் செடிகளும் பறவைகளும் அபூர்வமாக கண்ணில் படும் போது அவைகள் அதி முக்கியமானவைகளாக மாறிவிடுகின்றன. அதுவே கிராமம் என்றால் அவைகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. இங்கே ஜன நெருக்கடியின் மத்தியில் ஒற்றை ஆளாய் இவைகள் முக்கியத்துவம் பெற்று தனித்து நிற்கின்றன. தனித்து நிற்பவர்களுக்கே எப்போதும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நகரத்திலேயே பிறந்த ஒருவனுக்கு இவ்வளவு மக்கள் நெருக்கடியை பார்க்கும் போது அது புதிதானது அல்ல. கிராமத்தானுக்கு அது மிரட்சியை உண்டாக்கும். செடியும், பூவும், பறவைகளும்  நகரவாசிகளுக்கு அபூர்வமானவைகள். எருக்கஞ்செடி இன்று கண்ணில் பட்டவுடன் அது அவ்வளவு முக்கியத்துவம் கொண்டதாகிவிட்டது. அதுவும் கடற்கரை ஓரத்தில் ஒரு செடி தனித்து நிற்கும் போது ”இங்கே ஒருவன் உன் பார்வைக்காக தனித்து நிற்கிறேன். என்னிடம் அருகில் வா. வந்து மலர்களையும், இலைகளையும், பிஞ்சு விட்டு இருக்கிற பச்சைக் காயையையும் கொஞ்சம் உன் கேமராவில் படம் எடுத்துக் கொள்” என்று அழைப்பு விடுப்பது போன்று இருந்தது.

வாசி(ரி)ப்பு எனும் தொற்று நோய்க் கிருமி

சென்ற ஆண்டு மே மாத விடுமுறையை வீணாக்காமல் பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என்று முடிவு ஒன்று எடுக்கப்பட்டது. வருட இறுதியில் வாசிப்புக்கு ஒரு தமிழ் ஒரு ஐரோப்பிய நாவல் என இருந்தது அந்த முடிவு. முப்பது நாட்கள் விடுமுறை எதையுமே செய்யாமல் வீணடிக்கப்பட்டால் அது குறித்த வருத்தம் காசை வீணாக்கியதற்கு இணையாக இருக்கும். தொடர் விடுமுறைகள் பலனற்ற விதத்தில் விரயம் ஆகும் போது அங்கே மிக பெரிய வெற்றிடமும் வெறுமையும் ஆட்கொண்டு விடுகிறது.  சென்ற ஆண்டு அது ஏற்படக் கூடாது என்பது மிகத் தெளிவாக இருந்தது. ஏற்கனவே Ph.Dக்காக செலவிட்டு பலன் கிடைக்காமல் போன நாட்களின் வெற்றிடம் வேறு இன்னும் விரிந்து பாதாளம் போன்று பூதாகரமாகிக் கிடக்கிறது. எதை கொண்டு அதனை பூர்த்தி செய்து கொள்வது என்பது தெரியவில்லை. நாட்களின் வெற்றிடத்தை நல்ல கதைகள் மாத்திரமே பூர்த்தி செய்யக்கூடும் என்பது நம்பிக்கை. 

இருவர் என்பது முழுமை சார்ந்த விசயம்

இலட்சிய கதைகளின் நாயகர்கள் தங்களுடைய சிந்தனைத் திறனுக்கு முற்றிலும் மாறுபட்டவர்களையே நண்பர்களாக எற்றுக் கொள்கிறார்கள். டான் குவிக்சாட் அப்படிப்பட்ட இலட்சிய நாயகன். தன் வீர சாகச பயணத்தில் தனக்கென்று தோழன் ஒருவனை கண்டடைந்தான். குவிசாட்டுக்கு கொஞ்சமும் இணையானவன் அல்ல அவன். தன்னோடு ஒப்பிடும் போது அவ்வளவு பெரிய அறிவாளி ஒன்றும் கிடையாது. ஆனாலும் குவிசாட்டுக்கு அவனை பிடித்திருந்தது. இத்தனைக்கும் பண்ணை தொழிலாளி என்ற தகுதி நிலைதான் அவனுக்கு. குவிக்சாட் அவனை நண்பனாக ஏற்றுக் கொண்டான். சொல்லப்போனால்  சான்சோ இலட்சிய நாயகனின் கண்ணாடியில் பிரதிபலிக்கும் பிரதி பிம்பம். பார்த்த மாத்திரத்தில் எப்படி தன்னுடன் இலட்சிய பயணத்தில் துணைக்கு அழைக்க முடியும். சாஞ்சோ வேறொருவன் அல்ல. குவிக்சாட்டை கண்ணாடியில் நிழலாக பிரதிபலிப்பவன் அவன்.   சந்தித்த போது இருவருக்கும் அறிமுகம் ஏதும் தேவை இருந்திருக்கவில்லை. அழைத்தவுடனேய அவனும் எதிர் கேள்வி எதுவும் கேட்க்காமல் கிளம்பிவிடான்.

James Joyce: காவியம் பாடிய கலைஞன்

ஜேம்ஸ் ஜாய்சுக்கு தன் நாட்டைப் பற்றின தேசிய காவியம் ஒன்றை எழுத வேண்டும் என்ற விருப்பம் இருந்தது போலும். அதனை யுலிசஸ் என்ற நாவலாக எழுதிவிட்டார். காவியத்துக்கும் மண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. காவியம் மண்ணைப் பற்றி பேசும் போது அம் மண்ணும் மக்களும் காலத்தால் மறக்கப்பட்டாலும் காவியத்தால் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும் நினைவில் நிலை நிறுத்தப்படுகிறார்கள். இது காவியத்தில் மொழியின் சாதனை.  காவியம் பாடாத மொழி தன் மண்ணை தனக்கு சொந்தம் பாராட்டிக் கொள்ள முடியாது. சட்ட ரீதியாக மண் சொந்தமாக இல்லாமல் இருக்கலாம்.  உணர்வு ரீதியில் உரிமையின் அடிப்படையில் மண் காவியத்தால் சொந்தமாக்கப்படுகிறது.  மொழி தன் உரிமையை மண்ணின் மீது நிலை நாட்டிக் கொள்ள இருக்கும் ஒரே வாய்ப்பு காவியம் படைப்பதுதான்.  ஜாய்சுக்கு அந்த தேவை இருந்திருக்கிறது. அவர் ஒரு காவியம் இயற்றினால் போதும் அயர்லாந்து அவருக்கு சொந்தமானதாக ஆகி விடும்.  எல்லைக் கோடு இட்டு நிலத்தை ஆட்சி செய்பவன் உண்மையான அரசன் அன்று.  வேண்டுமானால் அவன் வரி வசூலித்துக் கொள்ளலாம். மண் அவனுக்கு சொந்தம் கிடையாது. ஜாய்சுக்கு மண்ணை ஆளவேண்...

ஜேம்ஸ் ஜாய்ஸின் Ulysses: Hades

நம்மை சுற்றின உலகத்தை கதைகளால் கட்டமைத்து வைத்திருக்கிறோம் என்ற எண்ணம் ஜேம்ஸ் ஜாய்ஸின் யுல்லிஸஸ் வாசிக்கும் போது ஏற்படுகிறது. கதைகள் மாத்திரம் அல்ல நம்பிக்கைகளாலும் அதனை கட்டமைத்து வைத்திருக்கிறோம். நம் முன்னோர்கள் உருவாக்கிய கதைகளைக் கொண்டும் நம்பிக்கைகளைக் கொண்டும் வாழ்வின் யதார்த்தத்தை அணுகுகிறோம். அல்லது இப்படியும் சொல்லலாம், வாழ்வின் யதார்த்தம் என்பதே நம்பிக்கைகள், கதைகளின் கூட்டுமொத்தம். இந்த மாயைக் கொண்டே வாழ்க்கையை அதன் பிறப்பு முதல் இறப்புவரை வாழ்ந்து முடித்துவிடுகிறோம். நம்மை சுற்றிலும் பிராண வாயு மூடியிருப்பது போன்று இந்த மாயை நம்மை ஆட்கொண்டிருக்கிறது. இந்த நம்பிக்கையின், கதைகளின் கட்டமைப்பிற்கு எதாவது ஒரு ஒற்றை சொல் கொண்டு அழைப்பதற்கு வேறெதுவும் சொற்கள் அகப்படவில்லை. மாயை என்ற வார்த்தையும் அதிக மத நம்பிக்கையின் சாரம் ஏற்றப்பட்ட வார்த்தை. ஆங்கிலத்தில் உத்தேசித்த வார்த்தை என்னவோ illusion. இந்த ஜட உலகத்தை இந்த illusionனைக் கொண்டே புரிந்து கொள்கிறோம், வாழ்கிறோம். இறுதியாக இந்த illusionனைக் கொண்டே கடந்து செல்கிறோம்.

எல்லையற்ற பிரபஞ்சம், முடிவற்ற காலம், கணக்கில் அடங்கா முகங்கள்

நம்மை சுற்றி எத்தனைவிமான முகங்கள். ஒன்று போல் மற்றொன்று இல்லை. அனைத்தும் வேறுபட்ட முகங்கள். ஏதோ இரண்டு மூன்று முகங்கள் கொஞ்சம் குறைய ஒற்றுமை கொண்டிருக்கும். அவைகளேக் கூட வித்தியாசப் பட்டவைகள். ஒரே மாதிரியாக சேர்ந்தாற்போன்று ஐந்து முகங்களை காண்பது அரிது. ஏன் இத்தனை வேறு பட்ட முகங்கள் என்று கேள்வி கேட்டுக் கொண்டதே இல்லை. இதைப் பற்றி யோசிக்கக் கூட இல்லை. ஒரே ஜாடையில் இரண்டு முகங்களை கண்டால் அது ஆச்சரியம். ஏதோ உலக அதிசயத்தை கண்டு விட்டது போன்றதொரு வியப்பு. ஜாடை ஒன்றாக இருப்பது என்னவோ இயல்புக்கு ஒவ்வாத ஒன்றுதான்.

கசாக்குகளின் இருட்டு: இருட்டு பகலைப் போன்றே இயல்பானது

கசாக்குகளின் இருட்டு : இருட்டு பகலைப் போன்றே இயல்பானது                நாவலின் சில வரிகள் மின்னல் போன்று நம் வாசிப்பில் சொற்ப நேரத்தில் மின்னிவிட்டு போகின்றன . அப்படிப்பட்ட மின்னல் போன்ற வரிகளை உடைய நாவல்கள் மிகவும் அரிதானவை . நல்ல மழை காலத்தில் மின்னல் வீச்சுகளுக்கு கணக்கே கிடையாது . தொடர்ந்து மின்னல்களும் இடிகளும் வந்து கொண்டே இருக்கும் . தொடர் மின்னல்களை உடைய நாவல் என ஆரம்ப கால பிரெஞ்சு நாவலான கார்கென்டுவா மற்றும் பென்ட்டகுரல் நாவலை சொல்வேன் . மறுமலர்ச்சி கால கட்டத்தில் உருவான அந்த நாவலை மனம் உட்கிறகித்துக் கொள்ள கொஞ்சம் ஆற்றல் தேவைப்பட்டது .

ஜீவன் என்னும் சிறப்பு அந்தஸ்து: ஏகாந்த நிலை

ஜீவன் என்னும் சிறப்பு அந்தஸ்து: ஏகாந்த நிலை இந்த பூமி ஜீவராசிகளின் வாழ்வாதாரத்திற்காக சுழன்று கொண்டிருக்கிறது. மற்றெந்த கிரகமும் ஜீவராசிகளின் இருத்தலுக்கு உகந்ததாக இல்லை. பூமியின் மீதான மனித ஜீவன்களுக்கு அத்தனை கிரகங்களும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பில் உள்ளன என்று நம்பப்படுகிறது. எது ஒன்று ஜீவனுக்கு உரியது இல்லையோ அது வணக்கத்துக்கு உரியதாக பூமியில் இருந்து போற்றப்படுகிறது. ஆனால் எது ஒன்று ஜீவராசிகளின் வாழ்வியலுக்கு ஆதாரமாக இயங்கிக் கொண்டிருக்கிறதோ அது முற்றிலும் கணக்கில் கொள்ளப்படாமல் நிராகரிக்கப்படுகிறது. பூமியின் மீதான உயிரினங்களின் வாழ்வியல் தொடர்ச்சி சுற்று வட்டத்தில் சங்கிலித் தொடராக ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இந்த சுழற்சியின் ஒரு சரடு அறுபட்டாலும் பூமியும் மற்ற கிரகங்கள் போன்று உயிரற்ற பாலைவனமாக மாறிவிடுமோ என்னும் சந்தேகம் ஏற்படுகிறது. நீரற்ற, பச்சையமற்ற ஒரு நிலபரப்பை பாலைவனம் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்லுவது.

காலமே பயணமாக

                                    காலமே பயணமாக காலம் என்ற பிரக்ஞைக்குள் நுழையும் போது பயணம் என்ற நகர்வுக்குள் நுழைந்து விடுக்கிறோம். காலம் ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு புள்ளிக்கு நகர்ந்து செல்கிறது. இதில் பயணம் செய்யும் நமக்கு அதன் ஓட்டத்தின் தொடர் நிகழ்வைப் பற்றின எந்த உணர்வும் ஏற்படுவதில்லை. இந்த பூமி நகர்கிறது. வெளிச்சம் கட்டுக்கடங்காத வேகத்தில் பயணிக்கிறது. ஒளியின் வேகத்திறுக்கு சற்று குறைவாக ஒலி தன் வேகத்தை சற்று குறைத்து நகர்கிறது.  ஒலி, ஒளி:  இவ்விரண்டின் இயங்கியலை உணருவது காலப் பயணத்தை உணருவதாகும். பூமியின் நகர்வையும் இதைக் கொண்டு உணர் ந்து கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் ஒரு மாபெரும் பயணம் ஒரு இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வேகம் நமக்கு புலப்படுவதாக தெரியவில்லை. அதாவது கண் பார்க்க வேண்டும். புலன்கள் துய்க்க வேண்டும். இவைகளின் எந்த ஒரு உணர்வும் இல்லாமல் பயணிக்கும் பூமிப் பந்தின் மீது அமர்ந்து கொண்டு நோக்கமற்று இலக்கற்று நாமும் பயணித்து கொண்டிருக்கிறோம். இந்த நகர்வின் ...

கிங் ஃபிஷ்ஷர்

தீபெட்டி: நெருப்பின் உறைவிடம்

தீபெட்டி: நெருப்பின் உறைவிடம் நெருப்பின் உறைவிடம் எது என கேட்டால் தீப்பெட்டி என்று சொல்ல தோன்றும். உரசப்படாத வரை ஆழ்ந்த தூக்கத்தில் சிறு பெட்டியினுள் நெருப்பு உறங்கிக் கொண்டிருக்கிறது. உரசிய உடன் ஜாலம் நிகழ்கிறது. வீட்டின் அத்தியாவசியத் தேவைகளில் இன்றியமையாதது தீபெட்டி. அதுவே உணவுக்கான ஆதாரம். ஆனால் அதுவே உணவு அல்ல. சமைத்தல் என்ற வழிமுறைக்கு மிகவும் அத்தியாவசியமானது நெருப்பு. வெறும் பாத்திரங்களையும், காய்கறிகளையும் வைத்துக் கொண்டு ஆண்டுகள் பல தவம் கிடந்தாலும் உள்ளது உள்ளபடியே இருக்கும். நெருப்பு பிறக்கும் போது சமைத்தல் நடைபெறுகிறது. தீக்குச்சியை பெட்டியின் ஓரத்தில் உரசும் போது நெருப்பு பிறக்கிறது. விழித்துக் கொள்கிறது என்று சொன்னால் அறிவியல் சிந்தனைக்கு சற்று ஏற்புடையதாக இருக்கும். ஏனெனில் எந்த ஆற்றலையும் நம்மால் உருவாக்கவோ, அழிக்கவோ முடியாது. ஒரு ஆற்றலை மற்றொரு ஆற்றலாக கடத்தி நம் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

All the Words Lead to Dabar

https://www.google.com/search?q=dabar+hebrew&source=lnms&tbm=isch&sa=X&ved=0ahUKEwj8z9K3qZ3iAhVZWisKHQ-9AHMQ_AUIDygC&biw=1366&bih=608#imgrc=1qxTBGPSZWuCEM: All the Words Lead to Dabar For a long time, Marius was neither dead nor alive. For many weeks he lay in a fever accompanied by delirium, and by tolerably grave cerebral symptoms, caused more by the shocks of the wounds on the head than by the wounds themselves.

செவ்வியல் கண்டடையும் வாசகன்

செவ்வியல் கண்டடையும் வாசகன்             புத்தக வாசிப்பில் வாசகன் புத்தகத்தை தெரிந்தெடுக்கிறானா அல்லது புத்தகம் வாசகனை தெரிந்தெடுக்கிறதா என்றால் புத்தகமே வாசகனை தெரிந்தெடுக்கிறது என சொல்லலாம். இது பட்டிமன்ற தலைப்பு போன்று தோன்றலாம். வாசிப்பனுபவம் இதனை உறுதி செய்கிறது. வாசிப்பின் தொடர்ச்சியில் ஒரு புத்தகம் முடியும் போது அடுத்த புத்தகம் வாசிப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறது. இது செவ்வியல் பிரதிகளின் விசயத்தில் அப்பட்ட உண்மை. ஒரு புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது அடுத்த புத்தகத்தை வாசகன் தெரிவு செய்வதில்லை. அவனது வாசிப்புக்காக புத்தகம் நீண்ட நாட்கள் காத்துக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு வகையில் புத்தகம் வாசகனை கண்டடைகிறது.

புலப்படாத பூனையும் (imperceptible) உணரப்படாத நிசப்தமும்

புலப்படாத பூனையும் (imperceptible) உணரப்படாத நிசப்தமும்      நேரக்கணக்கு எப்போதும் கடிகார முள்ளின் நகர்வின் படி கணக்கிடப்படுவதில்லை . நிமிட முள் , வினாடி முள் , நேர முள் என்று காலம் அதன் வேகத்தில் அல்லது   தாமதத்தில் நகர்ந்து கொண்டே செல்கிறது . இப்பிரபஞ்சத்தின் அசைவு வினாடி முள்ளின் வேகத்தைக் காட்டிலும் மிகக் குறைவானது . நத்தை ஊர்ந்து போவது போன்று பிரபஞ்ச இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இவ்வளவு பெரிய பூமி பத்து நேர கணக்கு படி தன்னை தானே ஒரு சுற்று சுற்றிக் கொள்ள 24 மணி நேரங்கள் எடுத்துக் கொள்கிறது . இது பருப்பொருள் அசைவு . அதை விட சத்தத்தின் அதிர்வு இயக்க நகர்வு   மிக வேகமானது . ஒரு கல்லை தூக்கி எரிவதற்கும் , அதிர்வலைகள் மூலம் சத்தத்தை ஒரு எல்லையில் இருந்து மற்ற எல்லைக்கு அனுப்புவதற்கும் கால வித்தியாசம் உண்டு . வெளிச்சத்தின் வேகத்தை   அளப்பது மிகவும் கடினம் . கணக்கிட முடியவில்லை என்பதை விட மனித மூளைக்கு அந்த திறன் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் . அதி வேக இயக்கமான...

IMPERCEPTIBLE

      புத்தக வாசிப்பில் ஒரு வார்த்தை ஒரே முறை தரிசனமாகி தன் அர்த்தத்தை காட்டிக் கொள்ளாமல் கடந்து சென்றால் போனால் போகிறது என்று விட்டு விடலாம் . இனி அந்த வார்த்தை நம்மை சந்திக்கப் போவதில்லை . பொருள் தெரியாத அந்த வார்த்தையை மெனக்கெட்டு அர்த்தம் கண்டு பிடித்து மூலையில் சேமித்து வைப்பதில் பயனில்லை . அகராதியை பார்த்து அர்த்தப்படுத்திக் கொண்டு மனதில் பதிய வைத்துக் கொண்டாலும் சீக்கிரத்தில் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விடும் . தேவையற்ற   உழைப்பு . அதுவும் நாவல் வாசிப்பில் இது போன்ற நேர விரையம் வாசிப்பின் சுவாரசியத்தை கெடுத்து விடும் . அரிதாக புழக்கத்தில் உள்ள வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை . மொழியில் தன் மேதமையை காட்டிக் கொள்ள வேண்டுமானால் இந்த அரிதான சொற்களை பேச்சு வாக்கில் அள்ளி தூவி விட்டு போகலாம் . கேட்கிறவர்கள் எப்படி அந்த வார்த்தையை கண்டும் காணாமல் செல்கிறார்களோ அதே போன்று இந்த மேதாவியையும் கண்டும் காணாமல் கடந்து செல்வார்கள் .

வீதி உலா

     சாதாரண நாட்களில் நாம் பார்க்கிற தெரு அவ்வளவு அழகானதாக இல்லை .   மக்கள் நாடமாடும் இடம் என்றாலும் ஒருவகையில் கைவிடப்பட்ட இடம் சாலை . அது தெருவாக இருக்கலாம் , பரபரப்பு மிக்க சாலையாக இருக்கலாம் கைவிடப்பட்ட இடங்கள் அவை . வீட்டுவாசலின் எல்லைக்கு வெளியே உள்ள பகுதி கைவிடப்படலின் ஆரம்பம் .   ஒருவர் வீட்டு வாசலின் எல்லைக்கு வெளியே நகரும் போது கைவிடப்படலின் எல்லைக்குள் நுழைகிறார் .

மாறிலிகள்

      ஒ ரே ஒரு நல்லவனுக்காக அவன் சார்ந்த ஒட்டு மொத்த தீயவர்களின் கூட்டத்தை நல்லவர்களாகவும் ,  ஒட்டு மொத்த நல்லவர்கள் கூட்டத்தை அவர்கள் மத்தியில் உள்ள ஒரே ஒரு தீயவனுக்காக கெட்டவர்கள் என அனைவரையும் முத்திரைக் குத்துவதும் அநீதி . ஒருவனது நன்னடத்தை அவனுக்கே உரிய சொத்து . அதே போன்று ஒருவனது தீமை குணம் அவனுக்கே உரிய அவமான சின்னம் .  ஒருவன் உண்டாக்கிய நற்பெயரில் ஊரே பங்கு பெறுகிறது .  ஒருவனது தீய செயலுக்காக அவன் சார்ந்த ஒட்டு மொத்த இனமும் தண்டிக்கப்படுகிறது .  இந்த அநேகருக்காக ஒருவர் பதிலீடு என்பது   நாகரிகத்தின் கண்டு பிடிப்பு என சொல்ல முடியாது . இது அறிவின்மையில் கண்டடையப்படும் திடீர் ஞானோதயம் .

ஓவியம்: ஒரிஜினலை காப்பியடிக்கும் Imitation

அ டிக்கடி நாம் பார்க்கின்றவைகள் ஒருவித சலிப்பை ஏற்படுத்தி விடுகின்றன . முக்கியமாக பழகிய மனிதர்கள் . மனது விரும்புவது புதுமையான ஒன்றை .   அதே இடம் அதே பழகிய மனிதர்கள் என்றால் இந்த பழகிய எல்லைக் கோட்டில் இருந்து தப்பித்து புதிய உலகத்தை கண்டடைய மனம் ஏ ங்கும் . நம் வரப்புக்கு மீறி அன்னியமான இடத்திற்கு நகரும் போது விட்டுப் பிரிந்த பழகிய இடத்தின் , மனிதர்களின் ,   பொருட்களின் மீதான பந்தம் பிரிவின் ஏக்கத்தை ஏற்படுத்தும் .   புதிய சூழல் பழகும் வரை எற்கனவே விட்டுப் பிரிந்த பழைய வாழ்க்கையின் நினைவுகள் மனதில் இருந்து நீங்காது வாதிக்கும் .   புதிய அனுபவம் பழக்கத்திற்கு உட்படும் வரை ’ பழைய’ என்ற ஒன்று பிரிவின் வேதனையாக மனதிற்குள் நின்று கொண்டே இருக்கும் .  

A Nest of Impermanence

                                                  https://www.google.com/search?q=crow+nest&source=lnms&tbm=isch&sa=X&ved=0ahUKEwj0g6WZ4NnhAhXS7XMBHT6lAlIQ_AUIDigB&biw=1600&bih=740#imgrc=Jc2SIWBkeO6uZM: A Nest of Impermanence Among birds, crows alone seem to be creatures of both curse and blessing. Much ambiguity is there in this kind. For its own fortune, a crow takes curse on its own being. It never fails others of their fortune by visiting them. When it is sitting on a rooftop, it is a sign that a long-awaited well-wisher is coming. If its wings brush against one’s shoulder, it is a sign of misfortune for the day.  Signs are many in his visitation. When it is associated with myth and modern short stories, it is surely a bird of ill omen. We Indians somehow maintain the sanctity of the bird. For us, it is neither the bird of...

காலத்தின் பரிசு

தென்ஆப்பிரிக்காவில்   தனக்கு   கிடைத்த   பெறும்   வெற்றி   நிச்சயம்   தாய்நாட்டுக்கும்   கிடைக்கும்   என்ற   நம்பிக்கையில்   சுதந்திர   தேசம்  பற்றின   கனவுகளை   சுயராஜ்ஜியம்   என்ற   தலைப்பில்   எழுத்துக்களாக   காகிதங்களில்   கன வென  சுமந்து   கொண்டு   துறைமுகத்தில்   நுழைகிறது   அந்த   கப்பல் .   வரலாறு   கண்ட   மாமனிதர்கள்   உருவங்கள்   சித்திரமாக   தீட்டபடாமல்   இருந்திருக்குமானால்   அவர்கள்   உயரம்   நம்   கற்பனைக்கு   அடங்கா மல்  இருந்திருக்கும் .   நெப்போலியன்   ஆறடி  நெட்டையானவராக   நமக்கு   தெரிந்திருப்பார் .  நம்   பார்வைக்கு   குள்ளமானாவர்கள்   அவலட்சணாமானவர்கள் .  நாட்டை   ஆள்பவனின்   உயரம்   அக்குடிகளின்   உயரத்திற்கு   சற்று  உயர    இருக்க   வேண்டும்   என்பது   எல்லோர...