எஸ். ராமகிருஷ்ணனின் நான் புதுமைப்பித்தன் நாடகம் கூத்துப்பட்டறையியில் இன்று (24/03/2023) அரங்கேறியது. காலையில் இருந்தே அதற்காக தயாராகிவிட்டோம். அதுவும் பித்தனுக்காக. புதுமைப்பித்தனின் முழு வாழ்க்கையையும் இந்த நாடகத்தில் எஸ். ரா கச்சிதமாக வடிவமைத்திருக்கிறார் என்று சொல்லலாம். அதாவது ஒருவரின் () மரணம் வரை. பித்தனின் மரணத்தை முடிவாகக் கொண்டு நாடகம் உச்சத்தைத் தொடுகிறது. கடவுள், பால்வண்ணம் பிள்ளை என நாடகத்தின் பாத்திரங்கள் அனைவரும் பித்தனின் படைப்புகளில் இருந்து வந்து பிந்தனுக்கு இறுதி மரியாதையை செலுத்துகிறார்கள். நாடகத்தில் அதிகம் விவரிக்க முடியாது. வாழ்க்கையை பெரிய கதையாகவும் சொல்ல முடியாது. குறைந்த கால அளவில் அதுவும் காட்சி படுத்துதலை ஆதாரமாகக் கொண்ட நிகழ்த்து கலையில் வாழ்வின் அதன் முழுமையை நிகழ்த்துவது என்பது அசாதாரணம். மாய புனைவு இதனை சாத்தியமாக்கி இருக்கிறது. பித்தனாக நடித்தவரின் உயரமும் உடல் வாகும் ஒரு கட்டத்தில் பித்தனையே உணரச் செய்தது. பால்வண்ணம் பிள்ளையின் நடிப்பு அபாரம். எதனை புனைவு என்று நினைத்து நாம் நாடகத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோமோ அத...