Picture of Dorian Gray நீண்ட நாட்களாக வாசிக்க வேண்டும் என்று வாசிக்காமல் ஒத்திப் போட்டுக் கொண்டு வந்திருந்த நாவல். உணவு வகைகளை சாப்பிடுவதைப் போன்று, புத்தகங்களை எடுத்து உடனடியாக வாசித்து விட முடிவதில்லை. குளிர் சாதன பெட்டியை திறந்து வேண்டியதை எடுத்து சாப்பிடுவதை போன்று இருப்பதில்லை புத்தக வாசிப்பு. எல்லா நேரங்களிலும் நினைத்ததை எடுத்து வாசித்து விடவும் முடிவதில்லை. வாசிப்பில் அதற்கென்று பெயர் பட்டியல் (catalogue) ஒன்று உருவாக வேண்டும். தற்போது வாசிக்கும் புத்தகம் முன்பு வாசித்த புத்தகத்தின் தொடர்ச்சியாக அமைகிறது.