பனிக்கட்டியின் தன்மை ' குளிர் ' என்று ஒரு சொல்லை மொழி கண்டடையாத வரை பனிக்கட்டியைப் பற்றின அனுபவம் புதிரானதுதான் . அதுவும் பனிக்கட்டியை பார்த்திராத வெப்ப மண்டலத்தைச் சார்ந்த ஒருவர் திடீர் என்று அதனைத் தொட்டுணரும் போது அங்கு வெறும் அனுபவம் மாத்திரமே அவருக்கு எஞ்சி இருக்கும் . அவருக்கு பனி சுடுகிறது என்றாலும் குளிர்கிறது என்றாலும் இரண்டும் ஒன்றுதான் . குளிர் × சூடு என்ற இருமையை மொழியில் உண்டாக்கிய பின்பு அனுபவம் இரண்டாம் பட்சமாகவும் கண்டடைந்த சொல் முதன்மையானதாகவும் ஆகிவிடுகின்றன . இருமையில் எழுந்த ' குளிர் ' என்ற சொல் அனுபவத்தின் புத...