How GW Can Grow 40K With 5 Marine Minis - Bell of Lost Souls belloflostsouls.net 730 × 828 Search by image முகம் ஒன்றுதான் அது அத்தனை உணர்வுகளுக்குமான நாடக மேடையாக திகழ்கிறது. எத்தனை அடுக்குகளிலான உணர்வுகள் அதன் மீது அரங்கேற்றப்படுகின்றன. அத்தனைக்கும் அந்த முகம் உயிர் கொடுக்கிறது. அந்த அரங்கேற்ற மேடை மாத்திரம் இல்லை என்றால் அத்தனை உணர்வுகளுக்கும் உயிர் அற்று போய் விடும். கோபம் இப்படித்தான் இருக்கும் என அதனை தனியாகத் துண்டித்துக் காட்டக் கூடியவர் யார்? கனிவு என்பதை அதன் இருப்பில் தனியாகத் துண்டித்துக் காட்ட முடியுமா? இவைகள் அனைத்துக்கும் முகம் என்ற நாடக மேடை அவசியப்படுகிறது. அனைத்து உணர்வுகளுக்குமான வெளியாக்கமாக முகம் இருப்பது இயல்பானது. அது அப்படித்தான் இருந்தாக வேண்டும். கோபம் வந்தால் உடனே அதனை வெளிப்படுத்தியாக வேண்டும். அன்பு என்றால் அதனையும் உடனே வெளிப்படுத்தியாக வேண்டும். இதில் ஒவ்வொருவரும் ஓவ்வொரு உணர்வை அதீதத்தில் வெளிக்காண்பிக்க பேர்போனவர்கள். அனைவரும் அனைத்து உணர்வுகளையும் சமச்சீர் விகிதத்தில் தங்கள் முகத்தில் திரையிடும் இயல்பு இல்லாதவர்கள். ஒரு மனிதனால்...