Skip to main content

Posts

Showing posts with the label இமையம்

திருநீர்சாமி: உண்மையை உணர்த்தும் உரையாடல் களம்

இமையத்தின் கதைகள் இதுவரை அவைகளின் கதைகளுக்காகவும், கதை மாந்தர்களுக்காகவும்  சிறப்பைப் பெற்றிருந்தன. செடல், கலியம்மாள் போன்றவர்களை வாழும் மனிதர்களாகப் பார்க்கவேண்டியிருக்கிறது. அதே போன்று பெத்தவன், எங்கதெ போன்றவை யதார்த்ததின் வாழ்க்கையாக நம்மால் அறியப்படுகின்றன. இவைகள் மாத்திரமே கதைகளின் சிறப்பம்சங்களா? கதை மாந்தர்கள் கதையின் வாழும் யதார்த்ததிற்கு மிக அருகில் இருப்பவர்கள்.  இம்மாத உயிர்மையில் வெளியாகி இருக்கும் ”திருநீர்சாமி” கதை இமையத்தின் கதைசொல்லலின் வேறொரு பரிமாணத்தைச் சுட்டிக் காட்டுகிறது. கதைக்கு என்று மூன்று பிரதானக் கூறுகள் இருக்கின்றன எனக் கொள்ளலாம். கதைப் பாத்திரம், கதைக் கரு, மற்றும் உரையாடல். இவைகளில் முதல் இரண்டை இலக்கிய விமர்சனத்தில் அதிகம் வைத்து விவாதித்து விட முடியும். மூன்றாவதை அவ்வளவு எளிதில் இலக்கிய விமர்சனம் என்ற அளவுகோளில் வைத்து விவாதிக்க முடியாது. அது முற்றிலும் தத்துவம் சார்ந்த ஒன்று. உரையாடல் என்று வரும்போது அது தத்துவத்திற்கான ஒரு களம் அல்லது கருவி. சொல்லப்போனால் உடையாடலைக் கொண்டே கதையாடலைக் கூட சாத்தியப்படுத்திவிட முடியும். இமையம் தன்னுடைய பெரும்...

பணம் பொய்த்த நிலையும், வாசிக்கவிருக்கும் செல்லாத பணமும்

தி இந்து - The Hindu 256 × 207 Search by image பணம் பொய்த்த நிலையும், வாசிக்கவிருக்கும்  செல்லாத பணமும் அநீதிகள் நிகழும் போது யாரோ ஒருவர் ஏதோ ஒரு விதத்தில் அதற்கெதிரான எதிர்குரலை எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். அக்குரல்கள் ஏதோ ஒரு பாதுகாப்பு வலையத்திற்குள்ளாக தங்களைப் பாதுகாத்துக் கொண்டே கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றன. எதிர்க்குரல்கள் எப்போதும் எதிர்குரல்களாக இருப்பதில்லை. அவைகள் பாதுகாப்பு என்கிற காப்பீட்டின் உதவியில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அநீதியும் சரி அதற்கான எதிர்க்குரலும் சரி ஏதோ ஒரு விதத்தில் ஒன்றுடன் ஒன்று உடன்பட்டுத்தான் செயல்படுகின்றன. இவைகள் இரண்டிற்கும் மத்தியில் ஏதோ ஒன்றின் செயல்பாட்டிற்கு நாம் தலையசைத்து ஆமோதித்தே ஆக வேண்டியிருக்கிறது.  எதிர்க்குரலின் புரட்சிதன்னமைக்கு  இசைந்து செயல்படுவதுதான் மிகவும் ஆபத்தானது. அது வெறும் எதிர்ப்புக் குரல் மாத்திரமே. பிரச்சனை இங்கு என்னவெனில் இன்று எது எதிர்க்குரலாக இருக்கிறதோ அதுதான் நாளைக்கான அதிகாரத்தின் குரல். அதிகாரத்தின் குரலும் சரி புரட்சிக் குரலும் சரி எதோ ஒரு விதத்தில் ஒன்றாகத்தான் இயங்க...

இமையத்தின் வீணடிக்கப்படாத போலச்(imitate) செய்யும் சொற்கள்

இமையத்தின் வீணடிக்கப்படாத போலச் (imitate) செய்யும் சொற்கள் இமையம் எப்போதும் வார்த்தைகளை எழுத்தாளர்கள் வீணடிக்கிறார்கள் என்று குறைவு பட்டுக் கொண்டிருப்பார். இதனால் மற்ற எழுத்தாளர்களை திட்டவும் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் இதனைக் கேட்க்கும் போது உள்ளூர குற்ற உணர்வு ஏற்படும். எழுதுவதற்கு தயக்கமும் ஏற்படும். எழுத்தை வீணடிக்கக் கூடாது என்று இமையம் சொல்லும் போது அவர் எதை அர்த்தப்படுத்தி பேசினார் என்பது இன்றைக்கு அவருடைய பேட்டியை இந்துவில் படித்த பின்புதான் புரிந்து கொண்டேன். இமையம் தன் எழுத்திற்கென்று சமீப காலங்களாக ஒரு கோட்ப்பாட்டை முன் நிறுத்திக் கொண்டிருக்கிறார். இதனை கோட்பாடு என்று சொல்வதற்கு கூட பயமாய் இருக்கிறது. காரணம் கோட்பாடு என்ற வார்த்தை முழுவதும் இப்போது தவறாக அதுவும் கல்வி புலங்களில் பேராசிரியர்களால் அறைகுறையாக புரிந்து கொள்ளப்பட்டு போதிக்கப் பட்டு பதிப்பிக்கப்பட்டும் வருகின்றன. எனினும் இமையம் உருவாக்கும் தன்னுடைய விழுமியங்கள் (இந்த வார்த்தை கூட கொஞ்சம் சிக்கலான வார்த்தை தான்) முற்றிலும் தன்னுடைய படைப்பு சார்ந்ததாகவே இருக்க செய்கின்றன. படைப்பில் இருந்து உருவாக்கப்படும் ...