அ டிக்கடி நாம் பார்க்கின்றவைகள் ஒருவித சலிப்பை ஏற்படுத்தி விடுகின்றன . முக்கியமாக பழகிய மனிதர்கள் . மனது விரும்புவது புதுமையான ஒன்றை . அதே இடம் அதே பழகிய மனிதர்கள் என்றால் இந்த பழகிய எல்லைக் கோட்டில் இருந்து தப்பித்து புதிய உலகத்தை கண்டடைய மனம் ஏ ங்கும் . நம் வரப்புக்கு மீறி அன்னியமான இடத்திற்கு நகரும் போது விட்டுப் பிரிந்த பழகிய இடத்தின் , மனிதர்களின் , பொருட்களின் மீதான பந்தம் பிரிவின் ஏக்கத்தை ஏற்படுத்தும் . புதிய சூழல் பழகும் வரை எற்கனவே விட்டுப் பிரிந்த பழைய வாழ்க்கையின் நினைவுகள் மனதில் இருந்து நீங்காது வாதிக்கும் . புதிய அனுபவம் பழக்கத்திற்கு உட்படும் வரை ’ பழைய’ என்ற ஒன்று பிரிவின் வேதனையாக மனதிற்குள் நின்று கொண்டே இருக்கும் .