Skip to main content

Posts

இரு துரதிருஷ்டசாலிகள்

இரு துரதிருஷ்டசாலிகள்      என்னுடைய மாருதி 800ல் பழுது பார்க்கும் வேலை கொஞ்சம் இருந்தது. ரேடியேட்டரில் தண்ணீரை ஊற்றினால் கொதிகலன் அதனை இன்ஜினின் இருபது நிமிட இயக்கத்திற்குக் கூட சுழற்சி செய்து தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. வெளியில் சென்று வீடு திரும்பும் ஒவ்வொரு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டி இருந்தது. கடைசியாக டெம்பரேச்சர் முள் அதன் வரைவுக் கோட்டீன் எல்லையைத் தாண்டி ℌ அருகே சென்று கொண்டிருந்தது. இதனை கல்பாக்கம் சென்று கொண்டிருக்கும் போது வண்டி மகாபலிபுரத்தைத் தாண்டி அம்மாவின் பாட்டி ஊரான பெருமாளேரியைக் கடக்கும் போதுதான் கவனித்தேன். ஐந்து மைல் தூரத்திற்கு ஒருமுறை வண்டியை நிறுத்தி நிறுத்தி இன்ஜினின் வெப்பம் குறையட்டும் என்று ஒவ்வொரு முறையும் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஒருவழியாக இன்ஜினில் இருந்து புகை எதுவும் கிளம்பாத அளவுக்கு பத்திரமாக வண்டியை சென்னைக்குக் திரும்பக் கொண்டுவந்து சேர்த்து விட்டேன்.      பழுதை சரி செய்ய மெக்கானிக் குறைந்தது ஒரு வாரம் ஆகும் என்றார். ரேடியேட்டரில் பிரச்சனையாம். இல்லை இல்லை ரேடியேட்டரே பிரச்சனையாம். அதை முழுவதுமாக மாற்றி புதிய ஒ...
Recent posts
    வாசிக்கும் போதே இந்த தன் வரலாற்று நூலின் சில பகுதிகளைப் பகிராமல் இருக்க முடியவில்லை. பௌத்த வேட்கையின் பயணத்தில் கொஸாம்பி எடுத்து வைத்த முதல் அடி அர்னால்ட் எழுதிய , ”Light of Asia” ஆகும். அது அவரைத் தேடி அவரிடம் தானாக வந்தடைந்த புத்தகம் . கொஸாம்பி இதனை மராத்தி மொழிபெயர்ப்பில் வாசித்திருக்கிறார். இதனை மொழிபெயர்ப்பில் முழுமையாக வெளிப்படாத நூல் என்கிறார்கள். மூல நூலில் இருந்து ஆறில் ஒரு பங்கு மட்டுமே வெளிப்பட்ட அந்த மராத்தி மொழிபெயர்ப்பு நூல் கொஸாம்பியை பெருமளவில் கவர்ந்திருக்கிறது. மூல நூல் ஆங்கிலத்தில் இருப்பதால் ஆங்கிலத்தையும் கற்க தயாராக இருந்திருக்கிறார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நூல் கௌதம புத்தரின் வாழ்க்கையை விவரிக்கும் கவிதை நடையில் எழுதப்பட்ட கதைசொலல் ஆகும். மேலும் மேலும் பௌத்தத்தை பற்றி கற்க விரும்புகிறார் . அதற்கு மொழி அவருக்கு ஒரு தடையாக இருந்திருக்கவில்லை. ஏற்கனவே அவர். இங்கே பூனேவுக்கு வந்த நோக்கமே எப்படியாவது சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்பதுதான். அதுகூட பௌத்ததை முழுமையாக் கற்பதற்குத்தானோ! பௌத்ததைப் பற்றி மேற்கொண்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இலங்கை அ...

”இது கதையல்ல மெய்”

                                                               ”இது கதையல்ல மெய்”       ஆசையே துன்பங்கள் அனைத்துக்கும் காரணம். ஆசையை விடும் போது மனிதன் துன்பத்தின் பிடியில் இருந்து விடுபடுகிறான். இது என்றோ சொன்ன வாக்கானாலும் இன்றும் அதில் எவ்வளவு உண்மை பொதிந்து இருக்கிறது. இதனை மேலோட்டமாக ஒருவர் சொல்லக் கேட்கும் போது, ”ஆசை இல்லாத மனிதர் யாராவது உண்டா?” என்று நம்மிடம் சொல்லப்பட்ட அந்த வாக்கியத்தின் மீதே எதிர் வாதம் செய்ய ஆரம்பித்து விடுகிறோம். தங்கத்தை மையமாக வைத்து நிகழும் திரைக்கதை ஒன்றின் வழியே இந்த வாக்கியத்தை வாசிக்கும் போது அது ஏதோ துறவி ஒருவர் என்றோ சந்நதமாக உதிர்த்த வாக்கியமாக தோன்றவில்லை. அது சமூக யதார்த்தத்தில் நிலவும் அவலத்தை கண்டு வேதனையில் உதிர்த்த பரிவு மிக்க வார்த்தைகள் என்று திரைக்கதையை பார்கும் போது தோன்றுகிறது. தங்கத்தின் மீதான ஆசை மனிதனை எவ்வளவு பேராசை கொண்டவனாக ஆக்குகிறது! மேலும் அவனை...

மனதில் குடிகொள்ளும் உயிர்கொண்ட சொற்கள்

வரும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளை இந்த வாரத்திலேயே நடத்தி முடித்தாக வேண்டியிருந்தது .  நேற்று தமிழ்த்துறை நண்பர்கள் போட்டிகளுக்கான தலைப்புகளைப் பற்றி விவாத்தித்துக் கொண்டிருந்தனர் . போட்டிகளின் தலைப்பு சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றியதாக இருந்தாக வேண்டும் என்பது நிபந்தனை . அதிலும் முக்கியமாக அது காலத்தில் நாம் மறந்து போன வீரர்களைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்பது அழுத்தம் கூடிய நிபந்தனை . ” ஐயா , பாருங்கள்   தலைப்புக்கு இந்த catchy வார்த்தை எடுபடுமா ” என்றார் ஒருவர் . அவர் சொன்ன அந்த வார்த்தை ,' அறியப்படாத ' என்பதாகும். "' அறியப்படாத ' இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் " அறியப்படாத என்ற வார்த்தை தலைப்புக்கு   Catchy யாக இருந்தாலும் இந்திய என்ற வார்த்தை கட்டுரையின் தலைப்புக்கான அழகை கொஞ்சம் மங்கச் செய்வது போன்று இருந்தது . தலைப்பு சொற்றொடர் போன்று நீண்டுவிடுகிறது . என்னுடைய இந்த எண்ணத்தை உடனடியாக தெரிவித்தேன் . ” சார் ,   நீட்டி அளக்காமல் வெறுமனே சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று வைத்துக் கொள்வோமே ஏன் ' இந்திய ...

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்   புதிரானதுதான் .  அதுவும்   பனிக்கட்டியை   பார்த்திராத   வெப்ப   மண்டலத்தைச்   சார்ந்த   ஒருவர்   திடீர்   என்று   அதனைத்   தொட்டுணரும்   போது   அங்கு   வெறும்   அனுபவம்   மாத்திரமே   அவருக்கு   எஞ்சி   இருக்கும் .  அவருக்கு   பனி   சுடுகிறது   என்றாலும்   குளிர்கிறது   என்றாலும்   இரண்டும்   ஒன்றுதான் .  குளிர் × சூடு   என்ற   இருமையை   மொழியில்   உண்டாக்கிய   பின்பு   அனுபவம்   இரண்டாம்   பட்சமாகவும்   கண்டடைந்த   சொல்   முதன்மையானதாகவும்   ஆகிவிடுகின்றன .  இருமையில்   எழுந்த  ' குளிர் '  என்ற   சொல்   அனுபவத்தின்   புத...