Skip to main content

Posts

Showing posts with the label டான் குயிக்ஸாட்

பாப்லோ பிக்காசோ: விளங்கிக் கொள்ள முடியாத கலைஞன்

ஒவியங்களைப் புரிந்து கொள்வதற்கு அதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அவசியப்படுகிறார்கள். நாம் சில ஓவியங்களை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டே இருப்போம். ஒன்றும் விளங்காது. ஒருவர் அதன் அழகியல் தன்மையை விவரிக்கும் போது இதை ஏன் நாம் இது வரை பார்க்கத்தவறிவிட்டோம் என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிடுவோம். ஓவியத்துக்கும் நமக்கும் இடையில் இருக்கும் அந்த நபர் நம் பார்வையை முற்றிலும் நம்முடையது அல்லாத ஒரு பார்வையாக மாற்றியமைக்கிறார். முன்பு இருந்த பார்வை அவர் காட்டும் அந்தத் தருணத்தில் இருப்பதில்லை. முன்பு பார்த்த பார்வையில் வெறுமனே காட்சி மாத்திரம் தான் இருக்கிறது அதில் அந்த ஓவியம் காட்டும் தரிசனம் முற்றிலுமாகக் காணாமல் போகிறது.

டான் குயிக்ஸாட்டும் வாசிப்பனுபவமும்: பகுத்தறிவின் கண்கள் திறக்கப்படும் தருணம்

சில புத்தகங்களை நாம் மாத்திரமே வாசிக்க வேண்டும் போல் இருக்கும். அவைகளை மற்றவர்கள் யாரேனும் வாசிக்க நேர்ந்தால் பொறாமைத் தீ அவர்கள் மீது பற்றி எரியும். சில புத்தகங்களை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் வாசித்து விட முடியாது. அப்படிப்பட்ட புத்தகக்களை வேறொருவர் வாசிக்க நேர்ந்தால் அவர்மீது தோழமை உணர்வு அதிகமாகிவிடும். இவைகளுக்கும் மீறி சில புத்தகங்கள் உள்ளன. அவைகள் தனிப்பட்ட வாசிப்பனுபவத்திற்கோ பெருமிதத்தின் வாசிப்பனுபத்திற்கோ ஆன புத்தகங்கள் அல்ல. வாசித்து முடித்தவுடன் அதனை இந்த உலகமே வாசிக்க வேண்டும் என்ற ஒரு புனிதமான எண்ணம் நமக்குள் உருவாகி விடும். அதனை வாசிக்கும் படி இந்த முழு உலகத்திற்கும் பரிந்துரை செய்வோம்.

தண்டனைக்கான காரணம்: குற்றமா தப்பிக்க வழியின்மையா?

தண்டனைக்கான காரணம்: குற்றமா தப்பிக்க வழியின்மையா? (கோமாளிக் குயிஸாட்டின் பதில்கள்) சமுகத்தில் பாவப்பட்டவர்கள் என்று யாரேனும் ஒரு குழுவினர் இருக்கிறார்களா. அப்படி இருந்தால் அவர்களுக்கான மீட்பு என்பது அவசியப்படுகிறதா. அப்படியே அவர்களை விடுதலையாக்க ஒருவன் வந்தாலும் அவன் தரும் விடுதலையை ஏற்பதற்கு அந்த அடிமைப்பட்ட மக்கள் தயாராக இருப்பார்களா. இவைகள் எல்லாம்  இன்னும் புரிந்து கொள்வதற்கு நம்மால் முடியவில்லை. இலட்சியவாதிகள் எப்போதும் தாங்கள் பாவ பட்ட ஜென்மங்களை விடுவிக்க பிறந்த மகா புருஷர்கள் என்றே நம்பிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் யாரும் தங்களுக்கான விடுதலையை விரும்பியதும் இல்லை உணர்ந்ததும் இல்லை. விடுதலை தேவை என்ற உணர்வு ஏற்பட்டால் தானே அவர்களுக்கு கிடைக்கப்போகும் விடுதலையை உண்மையான விடுதலை என்றும் தாங்கள் பாவப்பட்டவர்கள் என்றும் உணர்வார்கள். சொல்லப்போனால் பாவப்பட்டவர்கள், ஆள்கிறவர்கள், அடிமைப்பட்டவர்கள் என்று யாரும் கிடையாது. இதெல்லாம் நாம் உருவாக்கிக் கொண்டிருக்கும் கற்பனை பிம்பங்களே.