Skip to main content

Posts

Showing posts from January, 2018

பைத்தியங்கள்

பைத்தியங்கள் கரமசோக்களின் உலகத்தில் இருந்து தூர இருக்க வேண்டும் என்பது என்னுடைய தற்போதைய விருப்பம் அல்லது கட்டாயம். தாஸ்தாவஸ்கியின் நாவலில் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை தூர தூக்கி எறிந்து நிம்மதி காணும் அனுபவம் நம்முடையது அல்ல. எவ்வளவுக்கு எவ்வளவு நடுக்கடலில் தூக்கி எறிகிறோமோ கடலலைகள் நம்முடைய அந்த எதிர்முகத்தை அதாவது கண்ணாடி போல் பிரதிபளிக்கும் முகத்தை துக்கிக் கொண்டு வந்து நம் கண் முன் வைத்து “பார் இதுதான் நீ” என்று மீண்டும் மீண்டும் நினைப்பூட்டிக் கொண்டே இருக்கின்றன. இந்த காரணத்தினாலேயே தாஸ்தாவஸ்கியின் உலகத்தைக் கைவிட்டு ஆண்டுகள் பல ஆகிவிட்டன. இப்போது கோமாளித்தனம் நிறைந்த வகுப்புகளை எதிர்கொள்வதால் ஆத்திரம் சில நேரங்களில் என்னுடைய உறுதியான மன வலிமை சோதித்து கண்ணாடி போன்று சுக்கு நூறாக உடைக்கிறது. முற்றிலும் கோமாளிகளின் உலகமாக இந்த உலகம் மாறிக்கொண்டே வருகிறது போன்ற உணர்வு. மாணவர்களின் பைத்திய நிலையை சில நேரங்களில் புரிந்து கொள்வதற்கு யாராவது ஒருவரோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டுமே என முயற்சி செய்ததுண்டு. நினைவுக்கு எட்டிய ஒரே ஒரு முகம் பேட் மேனில் வரும் ஜோக்கர். கன்னங்களில் சிரிப்ப...