”இது கதையல்ல மெய்” ஆசையே துன்பங்கள் அனைத்துக்கும் காரணம். ஆசையை விடும் போது மனிதன் துன்பத்தின் பிடியில் இருந்து விடுபடுகிறான். இது என்றோ சொன்ன வாக்கானாலும் இன்றும் அதில் எவ்வளவு உண்மை பொதிந்து இருக்கிறது. இதனை மேலோட்டமாக ஒருவர் சொல்லக் கேட்கும் போது, ”ஆசை இல்லாத மனிதர் யாராவது உண்டா?” என்று நம்மிடம் சொல்லப்பட்ட அந்த வாக்கியத்தின் மீதே எதிர் வாதம் செய்ய ஆரம்பித்து விடுகிறோம். தங்கத்தை மையமாக வைத்து நிகழும் திரைக்கதை ஒன்றின் வழியே இந்த வாக்கியத்தை வாசிக்கும் போது அது ஏதோ துறவி ஒருவர் என்றோ சந்நதமாக உதிர்த்த வாக்கியமாக தோன்றவில்லை. அது சமூக யதார்த்தத்தில் நிலவும் அவலத்தை கண்டு வேதனையில் உதிர்த்த பரிவு மிக்க வார்த்தைகள் என்று திரைக்கதையை பார்கும் போது தோன்றுகிறது. தங்கத்தின் மீதான ஆசை மனிதனை எவ்வளவு பேராசை கொண்டவனாக ஆக்குகிறது! மேலும் அவனை...