Skip to main content

Posts

Showing posts from March, 2018

கவித்துவத்தின் உச்சங்கள்

கவித்துவத்தின் உச்சங்கள் தந்தை மகன் உறவைப் பற்றி கட்டுரை எழுதப்போக அது “Prodigal Son” உவமைக் கதையை நினைவுப்படுத்தியது. அதைப் பற்றின நல்ல படம் இருக்குமா என தேட Rembrandtன் இந்த ஓவியம் கிடைத்தது. இந்த ஓவியரைப் பற்றி எங்களுடைய பேராசிரியர் அதிகம் பேசியிருக்கிறார். பசுமாட்டிற்கு பிடில் வாசிப்பது போன்று அவர் பேசுவது அப்போதெல்லாம் இருக்கும். ஒன்றும் விளங்காது. இப்போது மிகவும் மானசீகமான ஒரு கதைக்கான Rembrandt ன் ஓவியம் எனக்கு ஓவியத்தைப் பற்றின பெரிய திறப்பை ஏற்படுத்திவிட்டது. ஊதாரி மகன் கதை இதுதான்; அப்பாவிடம் இருந்து சொத்தை பாகம் போட்டுக் கொண்டு தூர தேசம் செல்கிறான் இளைய மகன். காமக் களியாட்டு என தகாத வழிகளில் பணத்தை செலவழிக்கிறான். பணம் மொத்தம் காலியாகிவிடுகிறது. ஊரில் பஞ்சம் வேறு ஏற்பட்டுவிடுகிறது. ஊரில் உள்ள குடியானவன் ஒருவனிடம் தஞ்சம் புகுந்து பன்றி மேய்க்கும் தொழில் செய்கிறான். பன்றி மேய்க்கும் போது பசிக்கு பன்றியின் உணவை சாப்பிடப் போக பன்றியின் உணவை அவனிடம் இருந்து தட்டிப் பறித்துவிடுகிறார்கள். இப்போது அவனது அப்பாவின் நினைவு வருகிறது. அப்பாவின் வீட்டில் வேலைக்காரர்களுக்கே நல்ல உ...

அப்பாக்களும் பையன்களும்: புரியாத புதிர்கள்

அப்பாக்களும் பையன்களும்: புரியாத புதிர்கள் அப்பாக்கள் அனைவரும் ஒரே மாதிரி இல்லை. ஒருவரில் இருந்து மற்றொருவர் மாறுபடுகிறார். தங்கள் மகன்களைக் கண்டிக்கும் போதும் சரி, அன்பு செலுத்தும் போதும் சரி அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் கிடையாது. இதுவரை என்னுடைய வகுப்புகளில் மாணவர்கள் என்ற மட்டில் பல பையன்களைப் பார்த்து அன்பு செலுத்தியிருக்கிறேன், கோபப்பட்டிருக்கிறேன், கேலி செய்திருக்கிறேன், பயந்திருக்கிறேன். அனைத்து குணங்களைக் கொண்டவர்களின் கூட்டு மொத்தம் ஒரு வகுப்பறை. வேறுபட்ட குணாம்சங்களை எதிர்கொள்வது என்பது மிக சுவாரசியமான அனுபவமும் கூட. வருடா வருடம் புதிது புதிதாக இந்த தொடர் சுவாரசியம் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே செல்லும். மானுடப் படைப்பு எவ்வளவு விசித்திரமானது. நம்மை நாமே நாம் பார்த்து அலுத்து போய்விட்டது. ஒரே சுற்றத்தாரைக் கண்டும் வேதனைக் கொண்டோம். வகுப்பறையோ ஒரு புதுமையின் உலகம். எனினும் வகுப்பறை ஒற்றை குணம் கொண்ட மாணவர்களின் கூட்டுத் தொகுதியாக இருக்க வேண்டும் என்பது நமது விருப்பம். உள்ளே நுழைந்தவுடன் அனைவரும் புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டு நம் முகத்தையே உற்று நோக்கி...

ஸ்டீபன் ஹாக்கிங்கோடு ஒரு ஆழ்நிலை உறக்கம்

ஸ்டீபன் ஹாக்கிங்கோடு ஒரு ஆழ்நிலை உறக்கம் உலகத்திலேயே மிகவும் ஆபத்தான செயல்பாடு விவாதிப்பது என தோன்றுகிறது. கைக்களப்பு என்றால் கூட பரவாயில்லை எண்ணங்களின் உரசல்? அது புரோட்டானையும் நியூட்ரானையும் மோதவிடுவது போலிருக்கிறது. அணுச்சிதைவும் எண்ணங்களின் மோதலும் நம் உள்ளான மனோவியல் உலகத்தை சிதைவுறச்செய்து ஆட்டம்காணச் செய்கிறது. ஒருவர் ஆக்ரோஷமாக விவாதிக்க வரும்போது அணுச்சிதைவுக்கு ஒப்பான பேராபத்து ஏற்படுமோ என பயம் பீடித்துக் கொள்கிறது. விவாதத்தை தவிர்க்க வேண்டும் போல் இருக்கிறது. அதே நேரம் வீம்புக்கு விவாத களத்தில் குதித்து அதன் சூட்டில் உச்சத்திற்கு சென்று சண்டை போட்டு வெற்றிபெற வேண்டும் என்ற பேராவல். எதிராளியை சொற்களால் வீழ்த்தவேண்டும் என்பதுதான் விவாதத்தின் நோக்கமே. எதிராளி மண்ணைக் கவ்வ வேண்டும். ஒருமுறை வாய்ச் சண்டை போட்டபின்பு அதன் பின்விளைவுகள் மிக நீண்ட நாட்களுக்கு தொடரும் போல. எப்படி ஒரு முறை அணுச்சிதைவு நடந்து அதன் பாதிப்பு பல காலங்களுக்கு ஒரு உயிர் பரிணாமத்தையே அங்கங் குறைய பாதித்தது போன்று நம் மன அழகை அகோரமாக்கிவிடுகிறது இந்த எண்ணங்களின் அணுச்சிதைவு. இருப்பினும் ஒருவர் பேச ...