வீடுபேறு கிட்ட நண்பர்களை சம்பாதியுங்கள்
இன்று John Galsworthyயின் Strife என்னும் நாடகத்தை பற்றிய அறிமுகம் கிடைத்தது. இந்த பெயர் பரிச்சயமான
பெயர். அதே நேரத்தில் உள்ளூர பயத்தை ஏற்படுத்தும் பெயரும் கூட. சில எழுத்தாளர்களின்
பெயரை கேட்டவுடனே மகிழ்ச்சியான உணர்வு நமக்கு ஏற்படும். சில பெயர்கள் அதிலும் ஆங்கில
இலக்கிய படைப்பாளிகளின் பெயர்கள் மிகவும் பயமுறுத்தக்கூடியவைகள். Galsworthy UGC பரிட்சையின்
பயத்தை ஏற்படுத்தும் பெயர். பெயரைக் கேட்டதுமே இயல்பாக பயம் ஏற்பட்டுவிடும்.
கீழ்கண்டவற்றில் எது Galsworthyன் நாவல் என்ற கேள்வி ஏதோ தண்டனை கைதியிடம் குற்றத்தை
ஒப்புக் கொள்கிறாயா என்ற கேள்வி போன்று ஒரு மரண பயத்தை ஏற்படுத்தும். இன்று அப்படி
இல்லை. புத்தகம் மேஜையின் மீது வைக்கப்பட்டு அதைப்பற்றி பிரஸ்தாபமாக பேசப்பட்டது. Galsworthy
என்ற பெயர் எங்கேயோ கேட்ட பெயர் ஆயிற்றே என்ற கேள்வி மாத்திரம் மண்டையை துளைத்துக்
கொண்டே இருந்தது. அது UGC க்கு சொந்தமான பெயர் அல்லவா. யார் என்று தெறியாவிட்டால் படித்த
முழு படிப்பும் வீண். பதில் கிடைக்காத வரை அற்ப பதர்தான். பதில் கிடைத்துவிட்டால் நம்மை
போன்ற ஸ்காலர் உலகத்திலேயே ஒருவரும் இருக்க மாட்டார்கள்.

