Skip to main content

காலத்தின் பரிசு


தென்ஆப்பிரிக்காவில் தனக்கு கிடைத்த பெறும் வெற்றி நிச்சயம் தாய்நாட்டுக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சுதந்திர தேசம் பற்றின கனவுகளை சுயராஜ்ஜியம் என்ற தலைப்பில் எழுத்துக்களாக காகிதங்களில் கனவென சுமந்து கொண்டு துறைமுகத்தில் நுழைகிறது அந்த கப்பல்.  வரலாறு கண்ட மாமனிதர்கள் உருவங்கள் சித்திரமாக தீட்டபடாமல் இருந்திருக்குமானால் அவர்கள் உயரம் நம் கற்பனைக்கு அடங்காமல் இருந்திருக்கும்.  நெப்போலியன் ஆறடி நெட்டையானவராக நமக்கு தெரிந்திருப்பார். நம் பார்வைக்கு குள்ளமானாவர்கள் அவலட்சணாமானவர்கள். நாட்டை ஆள்பவனின் உயரம் அக்குடிகளின் உயரத்திற்கு சற்று உயர  இருக்க வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பம்.
அந்த நெப்போலியனும் சரி இலட்சியகனவுகளை சுமந்துவரும் இந்த இளைஞனும் சரி நாம் எதிர்ப்பார்க்கும் நெடிய உயரம் கொண்டவர்கள் அல்ல. சராசரிக்கும் சற்று குறைவான உயரம் கொண்டவர்கள். இது இருபதாம் நூற்றாண்டு கொடுத்த காலத்தின் பரிசு. ஒரே வித்தியாசம் ஆனால் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்.  ஒருவர் வாள் கொண்டு யுத்தம் செய்தவர்.  மற்றொருவர், அதாவது நம்முடைய இளைஞன்,  துன்புறுத்தாமை என்னும் ஆயுதம் கொண்டு அமைதிக்காக உண்ணாவிரதம் இருக்கபோகிறவர்.  இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நெப்போலியனுக்கும் இந்த இளைஞனுக்கும் சம்பந்தம் எதுவும் கிடையாது.
அவர்கள் உயரம் வேண்டுமானால் ஒப்புமைக்கான சந்திப்பு புள்ளியாக கருதலாம். ஒப்புமை மற்றொண்டும் உள்ளது. முழு உலகத்துக்கும் நவீன காலம் என்னும் புதிய யுகத்திற்கான கதவு நெப்போலியன் என்று பிரெஞ்சு நாவலாசிரியர் விக்ட்டர் யூகோ கூறுவார். அதே கூற்றை நம் இளைஞனுக்கும் பொறுத்திப் பார்க்கலாம். இருபதாம் நூற்றாண்டு இந்த இளைஞனை தன் கதவாகக் கொண்டு திறக்கப்போகிறது. இதனுள் கீழைநாடுகள் மாத்திரம் அல்ல மேற்கும் (ஆளவும் ஆள்வதற்கென்றும் பிறந்த இனத்தை ஆண்டைகள் என்ற ஆதிக்க எண்ணத்தில் இருந்து) விடுவிக்கப்பட போகிறது. விடுதலை என்னவோ இருவருக்கும்தான்.
வரலாறு தன் விடுதலைக்கான கருவியாக தன்னை பயன்படுத்த போகிறது என்பதை துறைமுகத்தில் வந்திறங்கிய இளைஞனுக்கு அப்போது தெரியாது.  வரலாறு சில நேரங்களில் சக்திவாய்ந்த மனிதர்களை நிராகரிக்கிறது.  மிகவும் பலகீனமானவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறது.  அடர்ந்த காடு சிங்கங்களையோ புலிகளையோ பலுகிப்பெருக அனுமதிப்பதில்லை. அச்சதில் வாழ்கிற உயிரினம் வாழ்வதற்க்கு காடு தன் கரங்களை விரித்து அணைத்துக் கொள்கிறது. இது உலகத்தின் எந்த காட்டுக்கும் பொருந்தும். இத்தேசம் இதில் விதிவிலக்கு. இந்த தேசத்தின் காடு கொல்லப்படும் மான்களின் கூட்டத்திற்கு உரியது அல்ல. இது Rudyard Kipling சித்தரிக்கும்தேசம். விலங்குகள் நிறைந்த கூட்டத்தில் ஒரே ஒரு மனித இனத்தை சார்ந்த சிறுவன் நுழைகிறான்.  முழு கதையும் வினோதமாக மாறுவது அச்சிறுவனது நுழைவினால். சிறுவனை கதையில் இருந்து நீக்கினால் கதை இல்லை, கதை ஓட்டம் இல்லை புனைவும் இல்லை. விலங்குகளின் கூட்டமான காடு ஒரு இயல்பு நிலை. அதுவே சிறுவன் ஒருவன் மிருகங்கள் மத்தியில் அவைகளைப் போன்று தானும் ஒன்றாக மாறும் போது புனைவு பிறக்கிறது.
மேற்கத்தியர்களுக்கு பன்னையில் விலங்குகள் மனிதனாக மாற முயற்சிப்பது புனைவின் அதிசயம். நமக்கோ மிருகங்ளின் மத்தியில் மனிதன் மிறுகத்தோடு அல்லது மிருகங்களின் இயல்புக்கு தன்னை தகவமைத்துக்கொள்வது வெறும் புனைவு மாத்திரம் அல்ல அதற்கும் மீறி கதை ஜாலக் கதையாக மாறுகிறது.
துறைமுகத்தில் இருந்து அகண்ட தேசத்திற்குள் நுழையும் இளைஞன் இருபதாம் நூற்றாண்டின் அற்புதக் கதைக்கு காரணமாகப் போகிறான். இந்த நூற்றாண்டு விடுதலைக்கான நூற்றாண்டு.  வரலாறு தனக்காக பயன்படுத்திக் கொள்ளபோகிற கருவி. மிக நீண்ட பாரம்பரியத்தில் வந்த சக்தி வாய்ந்த மன்னர்களை அல்ல.  மிகவும் பலவீனமான குள்ளாமான சீட்டுக்குருவி என ஆங்கிலேயர்களால் கேளியாக அழைக்கப்பட்ட இந்த இளைஞன்.  
தென் ஆப்பிரிக்காவில் தனக்கு கிடைத்த சாதனை இங்கேயும் கிடைக்கும் என்கிற பெறும் நம்பிக்கை அவன் முகத்தில் தெரிகிறது. இது தான் பிறந்த சொந்த தேசமே என்றாலும் இன் நாட்டிற்கு அவன் ஒரு அன்னியன்.  Mowgli போன்று தன்னை வேறொரு வாழ்க்கை முறைக்கு தகவமைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. ஆதற்கே காலம் போதாது. காரணம் இருபதாம் நூற்றாண்டு மிகவும் துரிதமானது. தனக்கான தேவையை மிகவும் பலவீனமானவர்களை வைத்து பூர்த்தி செய்துகொள்ளப்போகிறது. இளைஞன் ஆயிறமாண்டு பௌத்த ஞானத்தையோ பின்பு கூடுதலான ஆயிரம் ஆண்டு சனாதனத்தின் தரிசனத்தையோ கண்டடைய யூகங்களுக்கான தவத்தை மேற்கொள்ளபோவதில்லை. (இப்படியும் சொல்லலாம் ஆயிரம் ஆண்டு சனாதனத்தின் ஞானத்தையோ, ஆயிரம் ஆண்டு பௌத்தத்தின் தரிசனத்தையோ என) நவீனத்தில் அப்பேர்ப்பட்ட பூதாகரமான காலத்திற்கு இடம் இல்லை.  எதற்காக முழு உலகமும் மனித நாகரீகம் தோன்றிய நாள் முதல் உழைத்து கொண்டு அடைய முடியாமல் போனதோ அவற்றை கால் நூற்றண்டுக்குள் இவ்விளைஞனைக் கொண்டு அடையப்போகிறது இன்நூற்றாண்டு.  விடுதலை.
வரலாற்றின் கரத்தில் மனிதன் வெறும் கருவி மாத்திரமே. சக்தி வாய்ந்தவர்கள் அனைத்தும் தங்களாலேயே நடக்கின்றன என்று யோசிக்க முற்படுகிறார்கள். பலவீனமானவர்கள் காலத்தின் கோரமுகத்தைக் கண்டு அஞ்சி விலகி ஓட முற்படுகிறார்கள். எனினும் வம்படியாக கக்தியற்றவர்கள் வரலாற்றில் தவிர்க்க முடியாதவர்கள் ஆகிறார்கள்.
கிப்ளிங்கின் கதையில் கொடூரமான Shere Khan,  அதிவேகம் கொண்ட Bagheera,  பெருந்தீனி Baloo,  வெறிப்பசிகொண்ட ஓனாய்கள் என பலர் காட்டை ஆள இருந்தனர், இருக்கின்றனர். தேசத்தின் மாய புனைவுக்கு அவைகளின் மத்தியில் சிறுவன் ஒருவன் அவசியம். இளைஞன் தேசத்திற்குள் நுழையும் தருணம் தேசத்தின் அதிபுனைவின் ஆரம்பம்.
இந்த புனைவின் மாயைக்கு ஆட்படாமல் தென் பகுதி மாத்திரம் தன் தொல் குடியின் நீண்ட தொடர்ச்சியில் தனித்து இயங்கிக்கொண்டிருக்கிறது.  கிப்ளிங்கின் ஜாலக்க்கதை இவர்களுக்கு வெறும் சிறுவர் இலக்கியம்.  இளைஞனே மகாத்மாவாக வேண்டுமானாலும் இந்த தொல்குடியால்தான் முடியும். பட்டத்தை வேண்டுமானால் தேசிய கவி சூடட்டும். எனினும் தேசம் பற்றின நவீன வரலாற்றில் தென் பகுதி மறந்து போனகதை.  அகண்ட தேசத்தின் இரு காவியங்கள் கூட இதைப் பற்றி பேச போதாது.  ஒன்று இந்த நிலப் பகுதியை விட்டு விட்டு தன் கதையை சொல்லும், மற்றொண்டு இப்படி ஒரு நிலம் இருப்பதையே கணக்கில் கொள்ளாமல் தெற்கே உள்ள தீவுக்கும் தேசத்தின்வடக்குக்கும் கதை ஓட்டம் தாவிச் செல்லும்.


Comments

Popular posts from this blog

காவியமான ஆனைச் சாத்தான்

கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே    கரிச்சான் குருவிகளை அதிகம் என் ஊரில் பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நேரங்களில் வித்தியாசமான பாதிப்புகளை அவை என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன. இரட்டைவால் குருவி என்பதும் இவர்களுடைய மற்றொரு பெயர். இரட்டைவால் குருவியைக் காகத்துடன் ஒப்பிடும் போது அவ்வளவு ஒன்றும் பெரிய உருவம் கிடையாது. மிகச்சிறிய உருவம்தான் இந்தக் கரிச்சான் குருவி. வெளிநாட்டவர்கள் இங்கு வந்தால் காகம் என்றுதான் அழைப்பார்கள் போலும். அதன் உடலுக்கு அழகே அந்த வால்தான். நீண்டு கடைசியில் இரண்டாக பிளவுபட்டு இருக்கும். அதனாலேயே இரட்டைவால் குருவி என்று பெயரோ என்னவோ. மற்றபடி வால் சிறுத்திருந்தால் இவரையும் சிறிய காகம் என்றுதான் அழைப்பார்கள். காகம் என்றால் கூட சற்று சாம்பல் நிறம் கழுத்தில் பூத்திருக்கும். அண்டங்காக்கையென்றால் கருப்பா பயங்கரமா இருக்கும். அதீதக் கருப்பும் கருப்பல்ல. சாம்பல் பூத்த கருப்பும் கருப்பல்ல. கரிச்சான் குருவிகளின் நிறம்தான் கருப்புக்கு சிறந்த உதாரணம். அதனாலேயே இவர்கள் கரிச்சான் குருவி என்று அழைக்கப்ப...

இரு துரதிருஷ்டசாலிகள்

இரு துரதிருஷ்டசாலிகள்      என்னுடைய மாருதி 800ல் பழுது பார்க்கும் வேலை கொஞ்சம் இருந்தது. ரேடியேட்டரில் தண்ணீரை ஊற்றினால் கொதிகலன் அதனை இன்ஜினின் இருபது நிமிட இயக்கத்திற்குக் கூட சுழற்சி செய்து தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. வெளியில் சென்று வீடு திரும்பும் ஒவ்வொரு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டி இருந்தது. கடைசியாக டெம்பரேச்சர் முள் அதன் வரைவுக் கோட்டீன் எல்லையைத் தாண்டி ℌ அருகே சென்று கொண்டிருந்தது. இதனை கல்பாக்கம் சென்று கொண்டிருக்கும் போது வண்டி மகாபலிபுரத்தைத் தாண்டி அம்மாவின் பாட்டி ஊரான பெருமாளேரியைக் கடக்கும் போதுதான் கவனித்தேன். ஐந்து மைல் தூரத்திற்கு ஒருமுறை வண்டியை நிறுத்தி நிறுத்தி இன்ஜினின் வெப்பம் குறையட்டும் என்று ஒவ்வொரு முறையும் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஒருவழியாக இன்ஜினில் இருந்து புகை எதுவும் கிளம்பாத அளவுக்கு பத்திரமாக வண்டியை சென்னைக்குக் திரும்பக் கொண்டுவந்து சேர்த்து விட்டேன்.      பழுதை சரி செய்ய மெக்கானிக் குறைந்தது ஒரு வாரம் ஆகும் என்றார். ரேடியேட்டரில் பிரச்சனையாம். இல்லை இல்லை ரேடியேட்டரே பிரச்சனையாம். அதை முழுவதுமாக மாற்றி புதிய ஒ...

Four Legs Good Two Legs Bad

Four Legs Good Two Legs Bad I was reaching Velachary station. The speaker in the train announces that the station is the last one and requests the passengers to get down from the train. Such monotonous tone always irritates the passengers from station to station. Our professor often curses that female voice with an unparliamentarily word "*****". Now the question is what is special in it to speak about this incident in this essay? What is special in that announcement to register it in words? Yes, there is something special about my reaching Velachary and that ***** *****’s voice. The latter one is very less in significance. But the first one carries historical significance.