Skip to main content

Posts

Showing posts from January, 2016

”ஈசனருள்”: தமிழ் நவீனத்தில் கதைசொல்லியின் பிறப்பிடம்

 ” ஈசனருள் ”: தமிழ் நவீனத்தில் கதைசொல்லியின் பிறப்பிடம் உயிர்மை நவம்பர் இதழில் வெளியான “ ஈசனருள் ” கதையை வாசித்தேன் . பொதுவாக கதை படித்த உடன் என் போன்ற நபர்கள் கத ’ சூப்பர் ’ சார் என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுவோம் . காரணம் கதைகள் அவ்வளவாக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை . அதனால் கதையைப் பற்றி பேசுவதற்கு எதுவும் வார்த்தைகள் இருக்காது . ஆனால் சிறந்த கதைகளோ மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தி குறைந்தது சில நாட்களுக்காவது சிந்திக்க வைக்கும் , அதைப் பற்றி பேசவும் வைக்கும் . உங்களுடைய எங்கதெ அப்படிப்பட்ட பாதிப்பை உண்டாக்கி நீண்ட நாள் விவாதங்களை துறையில் நண்பர்கள் மத்தியில் ஏற்படுத்தியது .   நான் இந்த கதையை பாராட்ட ’ சூப்பர் ’ என்று சொல்லி கதையை கொச்சைப் படுத்த விரும்பவில்லை .