கிரேக்க புராணத்தில் செத்தவர்களின் ஆன்மாக்கள் ஒரு படகின் மூலமாக அடுத்த உலகத்திற்கு செல்வார்கள். படுகுக்காரனிடம் காசு கொடுக்க வேண்டும். பொருள் இலார்க்கு எவ்வுலகமும் கிடையாது என்பது உண்மைபோலும். இந்த மானிடப்பிறவிகளுக்கு மாத்திரம் ஏன்தான் இந்த சாபமோ. அனைத்தையும் காசு கொடுத்துதான் அனுபவிக்க வேண்டும். காசே அனைத்தையும் தீர்மாணிக்கும் காரணி. இறந்த பின்பு கூட காசு அவசிப்படுகிறது. நதிக்கு அப்புறம் இருக்கும் உலகம் எப்படிப்பட்டது என்பது நமக்கும் தெரியவில்லை. அங்கும் காசின் அதிகாரம் தானோ என்னவோ? யார் கண்டது. யாராவது அங்கிருந்து வந்து நமக்கு அந்த உலகத்தைப் பற்றி அறிவித்தால் நன்றாக இருக்கும். முன் கூட்டியே அந்த உலகத்துக்கு உண்டான கரன்சியை சம்பாதித்து வைத்துக் கொள்ளலாம். இந்த மானிடப் பிறவிகளுக்கு எதுவும் இலவசம் கிடையாது. கடைசிக் காசுவரைக்கும் குறைவின்றி செலுத்தித் தீர வேண்டும். காசு கிடக்கிறது காசு. அதற்கு எந்தப் பஞ்சமும் கிடையாது. அதனை அடைவதற்கு பலவழிகள், பல தந்திரங்கள் உள்ளன. என்னுடைய கவலையெல்லாம் நன்னெறி போதனைகள் கூட பணம் எப்படி சம்பாதிக்க வேண்டும் என்றுதான் சொல்கிறதே தவிற பணம் என்ற மையத்தை...