Skip to main content

Posts

கடைசியில் எஞ்சி நிற்பது

https://images.app.goo.gl/dq563dAy1QNehLKbA வரலாறு முழுக்க மனித சிந்தனை ஒரு மாபெரும் பரிணாம வளர்ச்சியில் பயணித்து கொண்டிருக்கிறது. நேற்றைய சிந்தனை இன்று இல்லை. இன்று எதை இலட்சியக் கனவாக உறுதியாக பற்றி பிடித்துக் கொண்டிருக்கிறோமோ அது நாளை காலாவதியாகிவிட்டிருக்கும். உண்மை என்னவெனில் மனிதர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக சிந்திப்பவர்கள் அல்ல. மனிதன் யோசனை செய்யும் விலங்கு என்று சொன்னால் அது பொய்.

ஆசை முகம் மறந்து போச்சே, நினைவு மறக்க லாமோ

                                                                                                                                                                                                                                                          ...

பொன் பரப்பி

தெரு முனையில்தான் மருந்து கடை . இந்த மிகக் குறுகிய தூரத்தை நடந்து சென்று வருவதற்குள் எத்தனை அதிசயங்கள் கண் முன் நடக்கின்றன . இது சென்னைதானா ! சாலை வெறிச்சோடிக் கிடக்கிறது . மருந்து வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும் போது தேன் சிட்டுக்கள் சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கின்றன . சொஞ்சம் கவனித்து பார்த்தால் சிறிய மரங்களில் ஒன்று இரண்டு என ஆங்காங்கே தேன் சிட்டுக்களை காண முடிகிறது . தனித்தனியாக ஒவ்வொரு பறவையின் சத்தத்தையும் தனித்து கேட்கமுடிகிறது . கிளியின் சத்தமும் கேட்கிறது . தூரத்தில் குயிலின் ஓசை . கவித்துவமாக இருக்கட்டுமே என்று சொல்லவில்லை . உண்மை . இவர்கள் எல்லாம் இத்தனை நாட்கள் எங்கிருந்தார்கள் . ஏதோ காக்கைகள் மாத்திரமே நிரந்தர சென்னைவாசிகள் போன்று முன்பெல்லாம் நகரத்தை வட்டம் வருவார்கள் . அத்தனை காக்கைகள் இருந்தும் இப்போது அவைகளை பொருட்படுத்த முடியவில்லை . சிங்காரமான தேன்சிட்டும் , கண்ணுக்கு தெரியாமல் கூவிக்கொண்டிருக்கும் குயிலும் எண்ணிக்கையில் குறைவுதான் . விரல் விட்டு எண்ணிவிடலாம் . இப்போது தெருவில் அவர்களே...

நாலுகெட்டு: புதிய தாயத்தின் பாரதக்கதை

இந்த அகண்ட பாரதத்தின் ஒரு சிறிய பகுதியாக கேரளம் தன்னைத்தானே கதையாக எழுதிக் கொண்டது “நாலுகெட்டு” என்று M T Vயின் நாவலை சொல்லலாம். நாலு கெட்டு வீட்டின் பாகப்பிரிவினை மண்ணின் பெருங்கதை. இந்த நாவலை எம். டி. வாசுதேவன் நாயர் ஒரு வட்டாரத்தின் நாவலாக எழுதியிருக்கலாம். ஆனால் நாவல் விரிந்த மண்ணின் கதையாக மாறுகிறது. வட்டாரத்தோடு பாரதத்தின் கதையும் நாவலோடு சேர்த்து நெசவு செய்யப்படுகிறது. இங்கு பாரதம் என்பது தேசம் என்று பொருள் கொள்ள முடியாது. தேசம் என்பது மிக சமீபத்தில் உருவான கருத்தியல். அதற்கு நூறு வருடங்கள் கூட ஆகவில்லை. ஆனால் அகண்ட பாரதம் அதற்கு முன்பிருந்தே விரிந்த நிலமாக ஒரு மாபெரும் கதையால் தன் இருப்பை மக்கள் மனதில் எழுதிக் கொண்டே இருக்கிறது. பாரதக் கதை மக்கள் மனதில் புவியியல் எல்லைக் கோட்டைக் கொண்டு வரையப்பட்ட பெருங்கதை என்று சொல்லலாம். இம்மண்ணின்  எந்த வட்டாரமும் இந்த பாரதக் கதையோடு தன் கதையையும் இணைத்து நெசவு செய்து கொள்ளும் போது அவ்வட்டாரம் பரந்துவிரிந்த நிலப்பரப்பின் பகுதியாக மாறிவிடுகிறது. எம் டி வாசுதேவன் நாயரின் நாலுகெட்டு நவீனத்தின் உள்ளடக்கமான Indian Literature என்...

பேரிடர் காலங்களும், நீடிக்கும் பெருங்காதல் கதைகளும்

Giovanni  Boccaccio வின்  The  Decameron    நூறு கதைகளின் தொகுப்பைக் கொண்ட மறுமலர்ச்சி காலகட்டத்தின் பேரிலக்கியம். அதில் இருந்து ஒரு கதையை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. வாசித்த அந்த கதை லத்தின் அமெரிக்க இலக்கியத்தில் உள்ள மற்றொரு கதையை நினைவுக்கு கொண்டு வந்தது. இந்த இரண்டு கதைகளும் கொள்ளை நோயை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதைகள். மையக்கதை என்னவோ என்றும் அழியாத மானுடத்தின் ஒப்பற்ற கதையான பெருங்காதலைப் பற்றியது. டெக்கமரனின் அந்த கதை நீண்ட நட்களுக்கு மனதில் இருந்து அகலாமல் அப்படியே நிலைகொண்டுவிட்டது. அக்கதையின் தலைப்பு " Federigo's  Falcon".

பொந்தன் மாடன்

பொந்தன் மாடன் ஒரு வீட்டுக்கு சொந்தமானவன் அல்ல. எந்த வீடும் அவனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. குடும்பம் அவனுக்கு கிடையாது. வீடு, குடும்பம் என எதை அவன் தேடிக்கொண்டாலும், அல்லது அவனுக்கு கொடுக்கப்பட்டாலும் அவைகள் நீடிக்கப்போவதில்லை. எதுவுமற்று தன் மண்ணில் சுற்றித் திரிவதே அவனுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை. மிகவும் வித்தியாசமான மனிதன் இந்த பொந்தன் மாடன். வீடு கட்டிக் கொள்வதும், குடும்பத்தை தேடிக் கொள்வதும் மனிதன் காலம் காலமாக தனக்கென நிறைவேற்றிக் கொள்ளும் அத்தியாவசியக் கடன்கள். இவைகள் எதுவுமே இல்லாமல் ஒருவன் வாழ்வின் முடிவுவரை வாழ்ந்துவிட்டால் அவன் பெரும்பான்மையில் இருந்து தனித்து நிற்பவனாக மாறிவிடுகிறான். இந்திய சமூகம் அப்படிப்பட்ட மனிதனை கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை. பொந்தன் மாடன் முக்கியப்படுத்திப் பார்க்க வேண்டிய ஒருவன். அவனை தனித்தவனாக பார்க்கும் போது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவனாக தெரியமாட்டான். பொந்தன் மாடனை தனித்து காட்டி முக்கியத்துவம் பெற்ற மனிதனாக பார்க்க வேண்டும் எனில் அவனை போன்று அவனல்லாத வேறு ஒருவனோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது மாத்திரமே அவன் தனித்து தெரிவான்.  ...

தனித்து நிற்கும் எருக்கஞ்செடி

இன்று காலையில் நடை பயணம் செல்லும் போது எருக்கஞ்செடி ஒன்று கண்ணில் பட்டது. நகரத்தில் செடிகளும் பறவைகளும் அபூர்வமாக கண்ணில் படும் போது அவைகள் அதி முக்கியமானவைகளாக மாறிவிடுகின்றன. அதுவே கிராமம் என்றால் அவைகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. இங்கே ஜன நெருக்கடியின் மத்தியில் ஒற்றை ஆளாய் இவைகள் முக்கியத்துவம் பெற்று தனித்து நிற்கின்றன. தனித்து நிற்பவர்களுக்கே எப்போதும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நகரத்திலேயே பிறந்த ஒருவனுக்கு இவ்வளவு மக்கள் நெருக்கடியை பார்க்கும் போது அது புதிதானது அல்ல. கிராமத்தானுக்கு அது மிரட்சியை உண்டாக்கும். செடியும், பூவும், பறவைகளும்  நகரவாசிகளுக்கு அபூர்வமானவைகள். எருக்கஞ்செடி இன்று கண்ணில் பட்டவுடன் அது அவ்வளவு முக்கியத்துவம் கொண்டதாகிவிட்டது. அதுவும் கடற்கரை ஓரத்தில் ஒரு செடி தனித்து நிற்கும் போது ”இங்கே ஒருவன் உன் பார்வைக்காக தனித்து நிற்கிறேன். என்னிடம் அருகில் வா. வந்து மலர்களையும், இலைகளையும், பிஞ்சு விட்டு இருக்கிற பச்சைக் காயையையும் கொஞ்சம் உன் கேமராவில் படம் எடுத்துக் கொள்” என்று அழைப்பு விடுப்பது போன்று இருந்தது.

வாசி(ரி)ப்பு எனும் தொற்று நோய்க் கிருமி

சென்ற ஆண்டு மே மாத விடுமுறையை வீணாக்காமல் பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என்று முடிவு ஒன்று எடுக்கப்பட்டது. வருட இறுதியில் வாசிப்புக்கு ஒரு தமிழ் ஒரு ஐரோப்பிய நாவல் என இருந்தது அந்த முடிவு. முப்பது நாட்கள் விடுமுறை எதையுமே செய்யாமல் வீணடிக்கப்பட்டால் அது குறித்த வருத்தம் காசை வீணாக்கியதற்கு இணையாக இருக்கும். தொடர் விடுமுறைகள் பலனற்ற விதத்தில் விரயம் ஆகும் போது அங்கே மிக பெரிய வெற்றிடமும் வெறுமையும் ஆட்கொண்டு விடுகிறது.  சென்ற ஆண்டு அது ஏற்படக் கூடாது என்பது மிகத் தெளிவாக இருந்தது. ஏற்கனவே Ph.Dக்காக செலவிட்டு பலன் கிடைக்காமல் போன நாட்களின் வெற்றிடம் வேறு இன்னும் விரிந்து பாதாளம் போன்று பூதாகரமாகிக் கிடக்கிறது. எதை கொண்டு அதனை பூர்த்தி செய்து கொள்வது என்பது தெரியவில்லை. நாட்களின் வெற்றிடத்தை நல்ல கதைகள் மாத்திரமே பூர்த்தி செய்யக்கூடும் என்பது நம்பிக்கை. 

இருவர் என்பது முழுமை சார்ந்த விசயம்

இலட்சிய கதைகளின் நாயகர்கள் தங்களுடைய சிந்தனைத் திறனுக்கு முற்றிலும் மாறுபட்டவர்களையே நண்பர்களாக எற்றுக் கொள்கிறார்கள். டான் குவிக்சாட் அப்படிப்பட்ட இலட்சிய நாயகன். தன் வீர சாகச பயணத்தில் தனக்கென்று தோழன் ஒருவனை கண்டடைந்தான். குவிசாட்டுக்கு கொஞ்சமும் இணையானவன் அல்ல அவன். தன்னோடு ஒப்பிடும் போது அவ்வளவு பெரிய அறிவாளி ஒன்றும் கிடையாது. ஆனாலும் குவிசாட்டுக்கு அவனை பிடித்திருந்தது. இத்தனைக்கும் பண்ணை தொழிலாளி என்ற தகுதி நிலைதான் அவனுக்கு. குவிக்சாட் அவனை நண்பனாக ஏற்றுக் கொண்டான். சொல்லப்போனால்  சான்சோ இலட்சிய நாயகனின் கண்ணாடியில் பிரதிபலிக்கும் பிரதி பிம்பம். பார்த்த மாத்திரத்தில் எப்படி தன்னுடன் இலட்சிய பயணத்தில் துணைக்கு அழைக்க முடியும். சாஞ்சோ வேறொருவன் அல்ல. குவிக்சாட்டை கண்ணாடியில் நிழலாக பிரதிபலிப்பவன் அவன்.   சந்தித்த போது இருவருக்கும் அறிமுகம் ஏதும் தேவை இருந்திருக்கவில்லை. அழைத்தவுடனேய அவனும் எதிர் கேள்வி எதுவும் கேட்க்காமல் கிளம்பிவிடான்.

James Joyce: காவியம் பாடிய கலைஞன்

ஜேம்ஸ் ஜாய்சுக்கு தன் நாட்டைப் பற்றின தேசிய காவியம் ஒன்றை எழுத வேண்டும் என்ற விருப்பம் இருந்தது போலும். அதனை யுலிசஸ் என்ற நாவலாக எழுதிவிட்டார். காவியத்துக்கும் மண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. காவியம் மண்ணைப் பற்றி பேசும் போது அம் மண்ணும் மக்களும் காலத்தால் மறக்கப்பட்டாலும் காவியத்தால் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும் நினைவில் நிலை நிறுத்தப்படுகிறார்கள். இது காவியத்தில் மொழியின் சாதனை.  காவியம் பாடாத மொழி தன் மண்ணை தனக்கு சொந்தம் பாராட்டிக் கொள்ள முடியாது. சட்ட ரீதியாக மண் சொந்தமாக இல்லாமல் இருக்கலாம்.  உணர்வு ரீதியில் உரிமையின் அடிப்படையில் மண் காவியத்தால் சொந்தமாக்கப்படுகிறது.  மொழி தன் உரிமையை மண்ணின் மீது நிலை நாட்டிக் கொள்ள இருக்கும் ஒரே வாய்ப்பு காவியம் படைப்பதுதான்.  ஜாய்சுக்கு அந்த தேவை இருந்திருக்கிறது. அவர் ஒரு காவியம் இயற்றினால் போதும் அயர்லாந்து அவருக்கு சொந்தமானதாக ஆகி விடும்.  எல்லைக் கோடு இட்டு நிலத்தை ஆட்சி செய்பவன் உண்மையான அரசன் அன்று.  வேண்டுமானால் அவன் வரி வசூலித்துக் கொள்ளலாம். மண் அவனுக்கு சொந்தம் கிடையாது. ஜாய்சுக்கு மண்ணை ஆளவேண்...

ஜேம்ஸ் ஜாய்ஸின் Ulysses: Hades

நம்மை சுற்றின உலகத்தை கதைகளால் கட்டமைத்து வைத்திருக்கிறோம் என்ற எண்ணம் ஜேம்ஸ் ஜாய்ஸின் யுல்லிஸஸ் வாசிக்கும் போது ஏற்படுகிறது. கதைகள் மாத்திரம் அல்ல நம்பிக்கைகளாலும் அதனை கட்டமைத்து வைத்திருக்கிறோம். நம் முன்னோர்கள் உருவாக்கிய கதைகளைக் கொண்டும் நம்பிக்கைகளைக் கொண்டும் வாழ்வின் யதார்த்தத்தை அணுகுகிறோம். அல்லது இப்படியும் சொல்லலாம், வாழ்வின் யதார்த்தம் என்பதே நம்பிக்கைகள், கதைகளின் கூட்டுமொத்தம். இந்த மாயைக் கொண்டே வாழ்க்கையை அதன் பிறப்பு முதல் இறப்புவரை வாழ்ந்து முடித்துவிடுகிறோம். நம்மை சுற்றிலும் பிராண வாயு மூடியிருப்பது போன்று இந்த மாயை நம்மை ஆட்கொண்டிருக்கிறது. இந்த நம்பிக்கையின், கதைகளின் கட்டமைப்பிற்கு எதாவது ஒரு ஒற்றை சொல் கொண்டு அழைப்பதற்கு வேறெதுவும் சொற்கள் அகப்படவில்லை. மாயை என்ற வார்த்தையும் அதிக மத நம்பிக்கையின் சாரம் ஏற்றப்பட்ட வார்த்தை. ஆங்கிலத்தில் உத்தேசித்த வார்த்தை என்னவோ illusion. இந்த ஜட உலகத்தை இந்த illusionனைக் கொண்டே புரிந்து கொள்கிறோம், வாழ்கிறோம். இறுதியாக இந்த illusionனைக் கொண்டே கடந்து செல்கிறோம்.

எல்லையற்ற பிரபஞ்சம், முடிவற்ற காலம், கணக்கில் அடங்கா முகங்கள்

நம்மை சுற்றி எத்தனைவிமான முகங்கள். ஒன்று போல் மற்றொன்று இல்லை. அனைத்தும் வேறுபட்ட முகங்கள். ஏதோ இரண்டு மூன்று முகங்கள் கொஞ்சம் குறைய ஒற்றுமை கொண்டிருக்கும். அவைகளேக் கூட வித்தியாசப் பட்டவைகள். ஒரே மாதிரியாக சேர்ந்தாற்போன்று ஐந்து முகங்களை காண்பது அரிது. ஏன் இத்தனை வேறு பட்ட முகங்கள் என்று கேள்வி கேட்டுக் கொண்டதே இல்லை. இதைப் பற்றி யோசிக்கக் கூட இல்லை. ஒரே ஜாடையில் இரண்டு முகங்களை கண்டால் அது ஆச்சரியம். ஏதோ உலக அதிசயத்தை கண்டு விட்டது போன்றதொரு வியப்பு. ஜாடை ஒன்றாக இருப்பது என்னவோ இயல்புக்கு ஒவ்வாத ஒன்றுதான்.

கசாக்குகளின் இருட்டு: இருட்டு பகலைப் போன்றே இயல்பானது

கசாக்குகளின் இருட்டு : இருட்டு பகலைப் போன்றே இயல்பானது                நாவலின் சில வரிகள் மின்னல் போன்று நம் வாசிப்பில் சொற்ப நேரத்தில் மின்னிவிட்டு போகின்றன . அப்படிப்பட்ட மின்னல் போன்ற வரிகளை உடைய நாவல்கள் மிகவும் அரிதானவை . நல்ல மழை காலத்தில் மின்னல் வீச்சுகளுக்கு கணக்கே கிடையாது . தொடர்ந்து மின்னல்களும் இடிகளும் வந்து கொண்டே இருக்கும் . தொடர் மின்னல்களை உடைய நாவல் என ஆரம்ப கால பிரெஞ்சு நாவலான கார்கென்டுவா மற்றும் பென்ட்டகுரல் நாவலை சொல்வேன் . மறுமலர்ச்சி கால கட்டத்தில் உருவான அந்த நாவலை மனம் உட்கிறகித்துக் கொள்ள கொஞ்சம் ஆற்றல் தேவைப்பட்டது .

ஜீவன் என்னும் சிறப்பு அந்தஸ்து: ஏகாந்த நிலை

ஜீவன் என்னும் சிறப்பு அந்தஸ்து: ஏகாந்த நிலை இந்த பூமி ஜீவராசிகளின் வாழ்வாதாரத்திற்காக சுழன்று கொண்டிருக்கிறது. மற்றெந்த கிரகமும் ஜீவராசிகளின் இருத்தலுக்கு உகந்ததாக இல்லை. பூமியின் மீதான மனித ஜீவன்களுக்கு அத்தனை கிரகங்களும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பில் உள்ளன என்று நம்பப்படுகிறது. எது ஒன்று ஜீவனுக்கு உரியது இல்லையோ அது வணக்கத்துக்கு உரியதாக பூமியில் இருந்து போற்றப்படுகிறது. ஆனால் எது ஒன்று ஜீவராசிகளின் வாழ்வியலுக்கு ஆதாரமாக இயங்கிக் கொண்டிருக்கிறதோ அது முற்றிலும் கணக்கில் கொள்ளப்படாமல் நிராகரிக்கப்படுகிறது. பூமியின் மீதான உயிரினங்களின் வாழ்வியல் தொடர்ச்சி சுற்று வட்டத்தில் சங்கிலித் தொடராக ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இந்த சுழற்சியின் ஒரு சரடு அறுபட்டாலும் பூமியும் மற்ற கிரகங்கள் போன்று உயிரற்ற பாலைவனமாக மாறிவிடுமோ என்னும் சந்தேகம் ஏற்படுகிறது. நீரற்ற, பச்சையமற்ற ஒரு நிலபரப்பை பாலைவனம் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்லுவது.

காலமே பயணமாக

                                    காலமே பயணமாக காலம் என்ற பிரக்ஞைக்குள் நுழையும் போது பயணம் என்ற நகர்வுக்குள் நுழைந்து விடுக்கிறோம். காலம் ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு புள்ளிக்கு நகர்ந்து செல்கிறது. இதில் பயணம் செய்யும் நமக்கு அதன் ஓட்டத்தின் தொடர் நிகழ்வைப் பற்றின எந்த உணர்வும் ஏற்படுவதில்லை. இந்த பூமி நகர்கிறது. வெளிச்சம் கட்டுக்கடங்காத வேகத்தில் பயணிக்கிறது. ஒளியின் வேகத்திறுக்கு சற்று குறைவாக ஒலி தன் வேகத்தை சற்று குறைத்து நகர்கிறது.  ஒலி, ஒளி:  இவ்விரண்டின் இயங்கியலை உணருவது காலப் பயணத்தை உணருவதாகும். பூமியின் நகர்வையும் இதைக் கொண்டு உணர் ந்து கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் ஒரு மாபெரும் பயணம் ஒரு இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வேகம் நமக்கு புலப்படுவதாக தெரியவில்லை. அதாவது கண் பார்க்க வேண்டும். புலன்கள் துய்க்க வேண்டும். இவைகளின் எந்த ஒரு உணர்வும் இல்லாமல் பயணிக்கும் பூமிப் பந்தின் மீது அமர்ந்து கொண்டு நோக்கமற்று இலக்கற்று நாமும் பயணித்து கொண்டிருக்கிறோம். இந்த நகர்வின் ...

கிங் ஃபிஷ்ஷர்

தீபெட்டி: நெருப்பின் உறைவிடம்

தீபெட்டி: நெருப்பின் உறைவிடம் நெருப்பின் உறைவிடம் எது என கேட்டால் தீப்பெட்டி என்று சொல்ல தோன்றும். உரசப்படாத வரை ஆழ்ந்த தூக்கத்தில் சிறு பெட்டியினுள் நெருப்பு உறங்கிக் கொண்டிருக்கிறது. உரசிய உடன் ஜாலம் நிகழ்கிறது. வீட்டின் அத்தியாவசியத் தேவைகளில் இன்றியமையாதது தீபெட்டி. அதுவே உணவுக்கான ஆதாரம். ஆனால் அதுவே உணவு அல்ல. சமைத்தல் என்ற வழிமுறைக்கு மிகவும் அத்தியாவசியமானது நெருப்பு. வெறும் பாத்திரங்களையும், காய்கறிகளையும் வைத்துக் கொண்டு ஆண்டுகள் பல தவம் கிடந்தாலும் உள்ளது உள்ளபடியே இருக்கும். நெருப்பு பிறக்கும் போது சமைத்தல் நடைபெறுகிறது. தீக்குச்சியை பெட்டியின் ஓரத்தில் உரசும் போது நெருப்பு பிறக்கிறது. விழித்துக் கொள்கிறது என்று சொன்னால் அறிவியல் சிந்தனைக்கு சற்று ஏற்புடையதாக இருக்கும். ஏனெனில் எந்த ஆற்றலையும் நம்மால் உருவாக்கவோ, அழிக்கவோ முடியாது. ஒரு ஆற்றலை மற்றொரு ஆற்றலாக கடத்தி நம் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

All the Words Lead to Dabar

https://www.google.com/search?q=dabar+hebrew&source=lnms&tbm=isch&sa=X&ved=0ahUKEwj8z9K3qZ3iAhVZWisKHQ-9AHMQ_AUIDygC&biw=1366&bih=608#imgrc=1qxTBGPSZWuCEM: All the Words Lead to Dabar For a long time, Marius was neither dead nor alive. For many weeks he lay in a fever accompanied by delirium, and by tolerably grave cerebral symptoms, caused more by the shocks of the wounds on the head than by the wounds themselves.

செவ்வியல் கண்டடையும் வாசகன்

செவ்வியல் கண்டடையும் வாசகன்             புத்தக வாசிப்பில் வாசகன் புத்தகத்தை தெரிந்தெடுக்கிறானா அல்லது புத்தகம் வாசகனை தெரிந்தெடுக்கிறதா என்றால் புத்தகமே வாசகனை தெரிந்தெடுக்கிறது என சொல்லலாம். இது பட்டிமன்ற தலைப்பு போன்று தோன்றலாம். வாசிப்பனுபவம் இதனை உறுதி செய்கிறது. வாசிப்பின் தொடர்ச்சியில் ஒரு புத்தகம் முடியும் போது அடுத்த புத்தகம் வாசிப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறது. இது செவ்வியல் பிரதிகளின் விசயத்தில் அப்பட்ட உண்மை. ஒரு புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது அடுத்த புத்தகத்தை வாசகன் தெரிவு செய்வதில்லை. அவனது வாசிப்புக்காக புத்தகம் நீண்ட நாட்கள் காத்துக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு வகையில் புத்தகம் வாசகனை கண்டடைகிறது.

புலப்படாத பூனையும் (imperceptible) உணரப்படாத நிசப்தமும்

புலப்படாத பூனையும் (imperceptible) உணரப்படாத நிசப்தமும்      நேரக்கணக்கு எப்போதும் கடிகார முள்ளின் நகர்வின் படி கணக்கிடப்படுவதில்லை . நிமிட முள் , வினாடி முள் , நேர முள் என்று காலம் அதன் வேகத்தில் அல்லது   தாமதத்தில் நகர்ந்து கொண்டே செல்கிறது . இப்பிரபஞ்சத்தின் அசைவு வினாடி முள்ளின் வேகத்தைக் காட்டிலும் மிகக் குறைவானது . நத்தை ஊர்ந்து போவது போன்று பிரபஞ்ச இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இவ்வளவு பெரிய பூமி பத்து நேர கணக்கு படி தன்னை தானே ஒரு சுற்று சுற்றிக் கொள்ள 24 மணி நேரங்கள் எடுத்துக் கொள்கிறது . இது பருப்பொருள் அசைவு . அதை விட சத்தத்தின் அதிர்வு இயக்க நகர்வு   மிக வேகமானது . ஒரு கல்லை தூக்கி எரிவதற்கும் , அதிர்வலைகள் மூலம் சத்தத்தை ஒரு எல்லையில் இருந்து மற்ற எல்லைக்கு அனுப்புவதற்கும் கால வித்தியாசம் உண்டு . வெளிச்சத்தின் வேகத்தை   அளப்பது மிகவும் கடினம் . கணக்கிட முடியவில்லை என்பதை விட மனித மூளைக்கு அந்த திறன் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் . அதி வேக இயக்கமான...