Skip to main content

ஆசை முகம் மறந்து போச்சே, நினைவு மறக்க லாமோ

                                                                                                                                                                                                                         Tamil Nadu Professor, Theatre Director Pitambarlal Rajani Dies Of ...        

    முதல் சந்திப்பில் பார்த்த ஒருவருடைய முகத்தை வாழ்நாளில்  ஒருபோதும் மறக்கவே முடியாது.  அது நெஞ்சில் வரையப்பட்ட அழியாத கோலம். நீடித்து காலத்திற்கும் நிலைநிற்கும் முகம் அது. பின்பு எத்தனை வருடங்கள் அந்த முகத்தோடு வாழ்ந்து பழகினாலும் அந்த முதல் சந்திப்பில்  பெற்றுக் கொண்ட சித்திரத்துக்கு அது ஈடாகாது. முதல் சந்திப்பின் முகம் தனித்து நிற்கும் முகம்.  நம் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் முதல் சந்திப்பின் முகத்தை நம் மனத்திற்குள் வரைந்து வைத்திருப்போம்.  விதிவிலக்காக அம்மாவின் முகத்தை வேண்டுமானால் சொல்லலாம். அது பழகிப் போன முகம். அது வியப்பையோ, அச்சத்தையோ திடீர் என்று ஏற்படுத்துவதில்லை. கருனையின் முகம் அது. மற்றபடி அப்பா முதல் நண்பர்கள் வரை எல்லாருடைய முகங்களும் ஏதோ ஒரு தாக்கத்தை நமக்குள் செலுத்தி அம் முகத்தை மனதிற்குள் பதியவைக்கின்றன. புகைப்பட கருவி போன்று. ஒரு கிளிக் செய்தவுடன் பட்டென்று வெளிச்சம் பாய்ந்து காட்சி கருவிக்குள் பதிய வைக்கப்படுகிறது.

முதல் சந்திப்பில் அறிமுகமாகும் முகம் மறக்க முடியாமல் போவதற்குக் காரணம் முதலில் அம் முகம் ஏற்படுத்தும் பாதிப்பு பின்பு அதன் விளைவாக நமக்குள் ஏற்படும் ஒரு விதமான மின்னல் தாக்கம். முன் சொன்னது போன்று அது  புகைப்படக் கருவியில் வெளிவரும் வெளிச்சத்தைப் போன்றது.  சிலருடைய முகம் கனிவுடன் மனதில் பதிய வைக்கப்படுகிறது.  சிலருடைய முகம் ஒருவித அச்சத்தை ஏற்படுத்திவிட்டு பதிவாகிறது. சிலருடைய முகம் ஒருவித வியப்பை ஏற்படுத்தி விட்டு பதிவாகிறது.  பின்பு அந்த தாக்கம் மறைந்து அந்த முகத்திற்கு உரிய நபரின் ஆளுமைக்கு கொஞ்சம் அருகில் சென்று நெருங்கிப் பழக ஆரம்பித்து விடுகிறோம். முகம் பழகிவிடுகிறது.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலவியல் முதுகலை பயில விண்ணப்பித்து இருந்தேன்.  நுழைவுத் தேர்வு மூலமே மாணவர்கள்  தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வின் பாதி மதிப்பெண் எழுத்து தேர்வு மூலமாகவும் பாதி நேர் முகத்தேர்வு மூலமாகவும் வழங்கப்படும். மிகவும் பதட்டத்துடன் நேர் முகத் தேர்வுக்கு தயாராக ஆங்கிலத்துரைக்கு வெளியே நடைக் கூடத்தில் காத்திருந்தேன். நடைக் கூடத்தில் உயரமான உருவத்துடன்,  வெண் தாடி காற்றில் பறக்க, தோள் பையை வயிற்றுக்கு முன் புறம் வைத்தவாறு மாணவர்களுடன் ஒரு நெடிய உருவம்  பேசிக் கொண்டிருந்தது. மேலிருந்து வெண் தாடி முதல் பேரகன் செருப்பு அணிந்த கால் வரையிலான அந்த உருவம் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து கவனிக்க செய்யும்படியான உருவம்.

பார்த்த மாத்திரத்தில் அதீத பாதிப்பையும் ஈர்ப்பையும் ஏற்பட்டுத்தும் உருவத் தோற்றம். அது பேராசிரியருக்கேயான உருவம். அந்த உடல் தோற்றம் வேறு எந்த தொழிற் புலத்திற்கும்உரியது அல்ல.  பேராசிரியருக்கு மட்டுமேயான உருவம். ஒருவர் பார்த்த மாத்திரத்தில்  கண்டிப்பாக இவர் இங்கு பணி புரியும் பேராசிரியராகத்தான்  இருக்க வேண்டும் என்று சொல்லி விடுவார்.

நேர்முகத் தேர்வின் என்னுடைய முறை வந்தது.  பதட்டம் ஒருவித படபடப்பாக மாறியது. முதுகலை படிப்பை விட்டால் வாழ்க்கையில் வேறு வழியே இல்லை என்ற நிர்பந்தத்தில் இருந்தேன். உள்ளே நுழைந்தவுடன் வெண் தாடி பேராசிரியர் மற்ற பேராசிரியர்களோடு தேர்வுக்கான கேள்விகளைக் கேட்க அமர்ந்திருந்தார். தோள்பையை கழற்றாமல் அப்படியே அமர்ந்திருந்தார்.  மற்றுமொரு தாடி வைத்த நவீனத்தின் அறிவு முதிச்சியை வெளிக் காட்டும் படியான கருப்புத் தாடி பேராசிரியர் இன்னொருவரும் உடன் இருந்தார். அந்த இரண்டு முகங்களும் தேர்வு  பற்றின படபடப்பை அமைதியடையச் செய்தன.  வெண் தாடிக்காரர் கொஞ்சம் மிரட்டும் தொணியுடன் முதலில் கேள்வியைக் கேட்டார். கேள்வி மிரட்டலாக இருந்தலும் பயத்தைவிட பெரும்மதிப்பு பதில்களை தடையின்றி சொல்லச் செய்தது.  சேக்‌ஷ்பியரின் டிராஜிக் காமடி பற்றி விளக்கும் படிகட்டளை புறப்பட்டது. படபடவென்று வெடித்து தள்ளிவிட்டேன். இப்போதைய என்னுடைய ஆய்வு நெறியாளர் பேராசிரியர்  ரமணன் ஐயாவும் தேர்வுக் குழுவில்  இருந்தார். சமீபத்தில் என்ன புத்தகம் படித்தாய் என்று அவர் தரப்புக்கு ஒரு கேள்வியைக்  கேட்டார். பதில் தயாராக இருந்தாலும் அக் கேள்வியினால் சற்று  அச்சமடைய வேண்டியிருந்தது. அப்பொழுது டாம்ஜோன்ஸ் நாவலை படித்து முடித்திருந்தேன். டாம் ஜோன்ஸ்  என்றுபதில் அளித்தேன். அது என்ன வகையான நாவல் என்று அடுத்து அச்சமூட்டும் கேள்வியை எழுப்பினார். பதிலேதெரியாத அந்த கேள்விக்கு கருப்பு தாடி பேராசிரியடிடம் பதில் இருந்தது. அவர் கேள்விகள் எதுவும் கேட்கவில்லை. இருந்தும் மிக கவனத்தோடு பதில்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவருடைய அந்த அக்கறையான கவனிப்பில் இருந்து பதில் கிடைத்தது. தெரியாத பதிலை யோசிக்காமல் அது ரொமான்ஸ் வகையான நாவல் என்று என்னையும் அறியாமல் பத்தில் அளித்து விட்டேன். ரொமான்ஸ் என்ற வார்த்தைக்கு திரணாய் வின்படியான அர்த்தம் அப்போது எனக்கு தெரியாவிட்டாலும் பதில் ஒருவருடைய கரிசனையான கவனிப்பில் இருந்தும் மற்றொருவர் மீதான பெருமத்திப்பில் இருந்தும் வெளிவந்தது. வெண் தாடியின் முகமும், முதல் சந்திப்பில்பெரும்மரியாதைக்குரிய முகமாக அப்போது மனதில் ஆழ பதிந்து போய் விட்டது. பல்கலையில்இடம்  கிடைத்தால் இந்த மாபெரும் ஆளுமையிடம் ஆங்கிலம்  பயிலப் போகிறோம் என்ற ஆவல் மிகுதியாக இருந்தது.

அந்த முதல் சந்திப்பின் முகத்தை இப்பபோது பழகிப்போன அந்த பேராசிரியடம் தேடிப்பார்க்கிறேன் கிடைக்கவே இல்லை. அந்த முதல் சந்திப்பின் முகத்தை இப்பொது இருக்கும் பழகிய முகத்தில் இருந்து பிரதி எடுக்க முயற்சி செய்கிறேன் முடியவில்லை.

இத்தனை ஆண்டுகள் பழகிப்போன மற்றொரு முகமும் கூட இனி இல்லை. பழகின அந்த முகமும் மறைந்து விட்டது. மறைவு கொடுக்கும் பாதிப்பு ”வேதனை” என்று வார்த்தையில் எழுதிவைத்தால் வேதனையின் தாக்கத்தை  உணர முடியாது. அது சொல் விளக்கா துயரம். பழகின முகம் பிரிவின் முகமாக கண்ணீரை வரவைக்கிறது. சென்று வாருங்கள் ரெஜானி. பெரும்மதிப்பை அளித்த அந்த முதல் சந்திப்பின் முகத்தையும்,  முதுகலை நாட்கள் முதல் இன்றுவரை பழகின முகத்தையும், புகைப்படங்களில் இப்போது பிரிவு சொல்லும் முகமாக கண்டு கொஞ்சம் பிரிவின் கண்ணீரை அஞ்சலியாக செலுத்துகிறோம்.சென்று வாருங்கள்.

Comments

Popular posts from this blog

காவியமான ஆனைச் சாத்தான்

கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே    கரிச்சான் குருவிகளை அதிகம் என் ஊரில் பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நேரங்களில் வித்தியாசமான பாதிப்புகளை அவை என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன. இரட்டைவால் குருவி என்பதும் இவர்களுடைய மற்றொரு பெயர். இரட்டைவால் குருவியைக் காகத்துடன் ஒப்பிடும் போது அவ்வளவு ஒன்றும் பெரிய உருவம் கிடையாது. மிகச்சிறிய உருவம்தான் இந்தக் கரிச்சான் குருவி. வெளிநாட்டவர்கள் இங்கு வந்தால் காகம் என்றுதான் அழைப்பார்கள் போலும். அதன் உடலுக்கு அழகே அந்த வால்தான். நீண்டு கடைசியில் இரண்டாக பிளவுபட்டு இருக்கும். அதனாலேயே இரட்டைவால் குருவி என்று பெயரோ என்னவோ. மற்றபடி வால் சிறுத்திருந்தால் இவரையும் சிறிய காகம் என்றுதான் அழைப்பார்கள். காகம் என்றால் கூட சற்று சாம்பல் நிறம் கழுத்தில் பூத்திருக்கும். அண்டங்காக்கையென்றால் கருப்பா பயங்கரமா இருக்கும். அதீதக் கருப்பும் கருப்பல்ல. சாம்பல் பூத்த கருப்பும் கருப்பல்ல. கரிச்சான் குருவிகளின் நிறம்தான் கருப்புக்கு சிறந்த உதாரணம். அதனாலேயே இவர்கள் கரிச்சான் குருவி என்று அழைக்கப்ப...

இரு துரதிருஷ்டசாலிகள்

இரு துரதிருஷ்டசாலிகள்      என்னுடைய மாருதி 800ல் பழுது பார்க்கும் வேலை கொஞ்சம் இருந்தது. ரேடியேட்டரில் தண்ணீரை ஊற்றினால் கொதிகலன் அதனை இன்ஜினின் இருபது நிமிட இயக்கத்திற்குக் கூட சுழற்சி செய்து தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. வெளியில் சென்று வீடு திரும்பும் ஒவ்வொரு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டி இருந்தது. கடைசியாக டெம்பரேச்சர் முள் அதன் வரைவுக் கோட்டீன் எல்லையைத் தாண்டி ℌ அருகே சென்று கொண்டிருந்தது. இதனை கல்பாக்கம் சென்று கொண்டிருக்கும் போது வண்டி மகாபலிபுரத்தைத் தாண்டி அம்மாவின் பாட்டி ஊரான பெருமாளேரியைக் கடக்கும் போதுதான் கவனித்தேன். ஐந்து மைல் தூரத்திற்கு ஒருமுறை வண்டியை நிறுத்தி நிறுத்தி இன்ஜினின் வெப்பம் குறையட்டும் என்று ஒவ்வொரு முறையும் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஒருவழியாக இன்ஜினில் இருந்து புகை எதுவும் கிளம்பாத அளவுக்கு பத்திரமாக வண்டியை சென்னைக்குக் திரும்பக் கொண்டுவந்து சேர்த்து விட்டேன்.      பழுதை சரி செய்ய மெக்கானிக் குறைந்தது ஒரு வாரம் ஆகும் என்றார். ரேடியேட்டரில் பிரச்சனையாம். இல்லை இல்லை ரேடியேட்டரே பிரச்சனையாம். அதை முழுவதுமாக மாற்றி புதிய ஒ...

Four Legs Good Two Legs Bad

Four Legs Good Two Legs Bad I was reaching Velachary station. The speaker in the train announces that the station is the last one and requests the passengers to get down from the train. Such monotonous tone always irritates the passengers from station to station. Our professor often curses that female voice with an unparliamentarily word "*****". Now the question is what is special in it to speak about this incident in this essay? What is special in that announcement to register it in words? Yes, there is something special about my reaching Velachary and that ***** *****’s voice. The latter one is very less in significance. But the first one carries historical significance.