Skip to main content

Posts

நெப்(போலியனின்) கைக்குட்டை

போரும் வாழ்வும் நாவலில் ஓரிடத்தில் டால்ஸ்டாய் நெப்போலியனைப் பற்றி இவ்வாறு சொல்லுவார் “ அவன் உள்ளுக்குள் ஒரு இத்தாலியன், வெளிப்பாவனையில் ஒரு பெரென்சுக்காரன்” என்று. அத்தனையும் நடிப்பு. உண்மைத்தன்மை என்று எதுவும் அவனிடத்தில் கிடையாது. அது இருக்கட்டும். அந்த நெப்போலியனைப் பற்றி இப்போது நமக்கு என்ன கவலை என்று கேள்வி எழலாம். இப்போது நூறு ஆண்டுகளுக்கு முன் சர்வாதிகாரியாக வாழ்ந்த நெப்போலியனைப் பற்றி யார் கவலைப் படப்போகிறார்கள். ஹிட்லர் என்றால் கூடப் பரவாயில்லை. நமக்கு இங்கு முக்கியமாகப்படுவது டால்ஸ்டாய் காட்டும் நெப்போலியன்தான். நாவலில் நாவலாசிரியன் காட்டும் ஒரு மனிதன் நிஜத்தைக் காட்டிலும் தத்ரூபமானவன். நெப்போலியனை அநேகர் புகழ்ந்துதான் கேள்விப்பட்டிருக்கிறோம். அனால் போரும் வாழ்வும் மாத்திரம்தான் நெப்போலியன் என்றால் யார் என்று மிக அருகில் நம்மை அழைத்துக் கொண்டு போய்க் காண்பிக்கிறது. நாம் கேட்டறிந்த நெப்போலியன் வரலாறு கட்டமைத்த நெப்போலியன். அதில் தகவல்கள் மாத்திரம் அதிகமே தவிர உண்மைக்கு எந்த இடமும் கிடையாது.

காவியமான ஆனைச் சாத்தான்

கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே    கரிச்சான் குருவிகளை அதிகம் என் ஊரில் பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நேரங்களில் வித்தியாசமான பாதிப்புகளை அவை என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன. இரட்டைவால் குருவி என்பதும் இவர்களுடைய மற்றொரு பெயர். இரட்டைவால் குருவியைக் காகத்துடன் ஒப்பிடும் போது அவ்வளவு ஒன்றும் பெரிய உருவம் கிடையாது. மிகச்சிறிய உருவம்தான் இந்தக் கரிச்சான் குருவி. வெளிநாட்டவர்கள் இங்கு வந்தால் காகம் என்றுதான் அழைப்பார்கள் போலும். அதன் உடலுக்கு அழகே அந்த வால்தான். நீண்டு கடைசியில் இரண்டாக பிளவுபட்டு இருக்கும். அதனாலேயே இரட்டைவால் குருவி என்று பெயரோ என்னவோ. மற்றபடி வால் சிறுத்திருந்தால் இவரையும் சிறிய காகம் என்றுதான் அழைப்பார்கள். காகம் என்றால் கூட சற்று சாம்பல் நிறம் கழுத்தில் பூத்திருக்கும். அண்டங்காக்கையென்றால் கருப்பா பயங்கரமா இருக்கும். அதீதக் கருப்பும் கருப்பல்ல. சாம்பல் பூத்த கருப்பும் கருப்பல்ல. கரிச்சான் குருவிகளின் நிறம்தான் கருப்புக்கு சிறந்த உதாரணம். அதனாலேயே இவர்கள் கரிச்சான் குருவி என்று அழைக்கப்ப...

குஞ்சிதபாதத்தின் பூர்வாங்கம்: சில கிசு கிசுக்கள்

குஞ்சிதபாதத்தை அடிக்கடி சந்தித்துவருகிற நமக்கு அவருடைய பூர்வாங்கத்தைப் பற்றி ஒன்றும் தெளிவாகத் தெரியாது. தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமும் நமக்கு இல்லை. அதனால் அப்படியே விட்டுவிட முடியாது இல்லையா? ஒரு மகா புருஷன், அதுவும் கதையின் நாயகன். ஆரம்பம் என்று இல்லாமலா பொய் விடும்? யார் இந்த பூமியில் சுயம்புவாக இருந்திருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் ஆதியும் முடிவும் இருந்தாக வேண்டுமே. நம்முடைய குஞ்சிதபாதம் மாத்திரம் விதிவிலக்கா என்ன! அவனும் சொற்ப ஆயுள் கொண்ட அற்பப் பிறவிதானே. எனினும் எப்போதும் அரித்தெடுக்கிற நம்முடைய துருதுரு மண்டைக்கு அவனைப் பற்றி சில தகவல்களைத் தீனிபோட வேண்டியிருக்கிறது. தீர்மாணமான தகவல்கள் ஏதும் கிடைக்காவிட்டாலும் எதாவது ’கிசு கிசு’வாவது நிச்சயம் இருந்தாக வேண்டும். உண்மைக்கு அடுத்து நாம் நம்பியிருக்கிற தார்மீகத் தகவல் கிசு கிசு மாத்திரம்தானே.
நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுத்தாளர் கட்டியங்காரனை சந்தித்தேன். உற்சாகத்தின் மிகுதியில் இருந்தார். நான் எதுவும் வாய் கொடுக்கவில்லை. ஏன் தேவையில்லாமல் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டும் என்று பக்திப் பழமாக அருகில் சென்று அமைதியாக அமர்ந்தேன். அவர்தான் முதலில் பேச வேண்டும். அதுவே நியதி. மெல்ல பேச்சை ஆரம்பித்தார். ஆறு மாதமாக ஒரு கதை கருவை மனதில் போட்டு ஊறவைத்திருந்தேன். இன்று ஏனோ தெரியவில்லை அதைப் பற்றிய ஒரு புதிய அதுவும் முழுமையான பார்வை கிடைத்தது. எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு கதையை எழுத முற்பட்டுவிட்டேன். ஒரே மூச்சாகக் கதையை எழுதி முடித்துவிட்டேன். எங்கும் எதுவும் கொடுக்காத பரமானந்த நிலை என்னுள் இப்போது நிலவுகிறது என்றார். டைட்டில் ”கோமாளிக் கூத்தன் பஃப்பூன்”. இந்தக் கதை புதுமைப்பித்தனின் ”கயிற்றரவு” கதைக்கு இணையான புகழை எனக்கு ஈட்டித்தரப்போகிறது பார். சரி, டைட்டில் எப்படி என்றார். அவர் பேசுவார் பதில் எதிர்பார்க்க மாட்டார். அது ஒரு பொருட்டே அல்ல. எனக்குள் சிரிப்பு வந்துவிட்டது. இந்தச் சாமியார்களுக்கும் சரி படைப்பாளிகளுக்கும் சரி பரமானந்த நிலை  என்றால் என்ன என்பது இன்றுவரை நமக்கு...

மோட்சப் பயணம்

கிரேக்க புராணத்தில் செத்தவர்களின் ஆன்மாக்கள் ஒரு படகின் மூலமாக அடுத்த உலகத்திற்கு செல்வார்கள். படுகுக்காரனிடம் காசு கொடுக்க வேண்டும். பொருள் இலார்க்கு எவ்வுலகமும் கிடையாது என்பது உண்மைபோலும். இந்த மானிடப்பிறவிகளுக்கு மாத்திரம் ஏன்தான் இந்த சாபமோ. அனைத்தையும் காசு கொடுத்துதான் அனுபவிக்க வேண்டும். காசே அனைத்தையும் தீர்மாணிக்கும் காரணி. இறந்த பின்பு கூட காசு அவசிப்படுகிறது. நதிக்கு அப்புறம் இருக்கும் உலகம் எப்படிப்பட்டது என்பது நமக்கும் தெரியவில்லை. அங்கும் காசின் அதிகாரம் தானோ என்னவோ? யார் கண்டது. யாராவது அங்கிருந்து வந்து நமக்கு அந்த உலகத்தைப் பற்றி அறிவித்தால் நன்றாக இருக்கும். முன் கூட்டியே அந்த உலகத்துக்கு உண்டான கரன்சியை சம்பாதித்து வைத்துக் கொள்ளலாம். இந்த மானிடப் பிறவிகளுக்கு எதுவும் இலவசம் கிடையாது. கடைசிக் காசுவரைக்கும் குறைவின்றி செலுத்தித் தீர வேண்டும். காசு கிடக்கிறது காசு. அதற்கு எந்தப் பஞ்சமும் கிடையாது. அதனை அடைவதற்கு பலவழிகள், பல தந்திரங்கள் உள்ளன. என்னுடைய கவலையெல்லாம் நன்னெறி போதனைகள் கூட பணம் எப்படி சம்பாதிக்க வேண்டும் என்றுதான் சொல்கிறதே தவிற பணம் என்ற மையத்தை...

வாசகசாலை

தனியாக நூலகம் செல்லும் போதெல்லாம் கண்ணைக் கட்டி யாருமற்ற தீவில் விடப்பட்டதைப் போன்ற மனநிலை இருக்கும். சுற்றிலும் வாசகர்கள் இருப்பார்கள் இருப்பினும் நாம் மாத்திரம் யாருமற்று இருப்பது போன்ற தனிமை நிலவும். அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு செல்லும் போது அப்படிப்பட்ட பயம் இருந்தாலும் கண்ணாடிச் சுவர்கள் ஓரளவிற்கு அந்த பயத்தை போக்கி விடும். வெளி உலகம் நம் கண் முன் ஒரு விஸ்தார நிலையில் காட்சியளிக்கும். நேற்றைய அனுபவம் முற்றிலும் வித்தியாசமானது.  # வாசகசாலை  ”தமிழ்ச் சிறுகதைகளின் நூற்றாண்டு  விழா கொண்டாட்டம்” வாராந்திர தொடர் நிகழ்வுகள் – நிகழ்வு 2 நேற்று அண்ணா நுலகத்தில் நடைபெற்றது. நிறைய நண்பர்கள் அறிமுகமானார்கள். தனிமையில் புத்தகமும் அதில் கிடைக்கப் பெறும் அறிவைக் காட்டிலும் அதனை நண்பர்கள் மத்தியில் அறிமுகப்படுத்திக் கொள்வது என்பது ஒரு இனிமையான அனுபவம். இதற்காக பெரும்பாலும் நண்பர்களுடனேயே நூலகம் செல்ல விரும்புவேன். நிறைய நேரங்களில் அப்படிப்பட்ட தருணங்கள் வாய்க்கப்பெறாது. அவை மிக அரிதானவை. நேற்று மாத்திரம் ஒரு முழு நூலகமே நட்பு சூழலில் எனக்கு மிக நெருக்கமாக இருந்ததை உணர்ந்தேன். யார...

அவரா நீங்க!

சிலருடைய ஆளுமையை அடையாளம் காண்பதற்கு நீண்ட நாட்கள் ஆகும். ஒருவேளை அது சாத்தியப் படாமல் கூடப் போய் விடும். ஒரு நபர் என்னதான் தன்னுடைய சிறந்ததை வெளிக்கொணர்ந்தாலும் நாம் ரசித்து விட்டு அப்படியே அவரை மறந்து விடுவோம். நீண்ட நாட்கள் நம் நினைவில் அவர் தங்குவதில்லை. அந்த நபர் நமக்கு மிகவும் இணக்காமானவராக மாற வேண்டும். அதுமுதற்கொண்டே நாம் அந்த நபரின் ஆளுமையை சரியாக அடையாளம் காண்கிறோம் என்று அர்த்தப்படும். அந்த வகையில் Sir. Anthony Hopkins என்னை மிக நீண்ட நாட்களுக்குப் பின்னரே அதிகம் யோசிக்க வைத்த ஒருவராக மாறினார். இவர் எனக்கு மிகவும் முக்கியமானவராகப் படுவது ஒரே ஒரு காரணத்தால் மாத்திரமே. இவரை நான் முதன் முதலில் பார்த்தது Silence Of The Lambs. அவர் வெளிப்படுத்திய ஒரு கதையின் பாத்திரம் மிகவும் பயப்பட வைக்கக் கூடியது. மிக நீண்ட தூரத்தில் வைத்துப் பார்த்து இரசிக்க வேண்டிய ஒருவர் போன்று திரைக் கதையில் காணப்படுவார். எதையும் தீர்மாணமாக சொல்ல முடியாத ஒரு முகம். அதில் இருந்து வரும் மொழிக்கு ஒரு வசிகரம் இருக்கும். எனினும் அது நம்மை எளிதில் அருகில் அனுமதிக்காது.

”இது மிஷின் யுகம்”

”இது மிஷின் யுகம்” இரண்டு மேற்கோள்களுக்கு மத்தியில் இருக்கும் சுதந்திரமே சுதந்திரம். கற்பனை வரட்சி ஏற்படும் காலத்தில் நல்ல தலைப்பிற்கு திண்டாடும் நேரங்களில் மேற்கோள்களின் உதவியைப் போன்று வேறெதுவும் இருக்க முடியாது. அப்படியே நமக்கு பிடித்த மேதை ஒருவரின் கதைக்/கட்டுரையின் தலைப்பை இரண்டு மேற்கோள்களின் மத்தியில் சிறைபிடித்துவிட்டால் கேள்வி கேட்க யாரும் கிடையாது. ஒருவேளை தலைப்புக்கு சொந்தக்காரரே வந்தாலும் வேலையப்பாருமையா என்று அதிகாரத்தோடு விரட்டியடித்துவிடலாம். தற்போது நமக்கு அந்தப் பிரச்சனையே கிடையாது. அந்த மனுஷன் கல்லைறையில் இருந்து எழுந்து வந்தாலும் ரெடியா இருக்கு MLA Hand Book. இடத்தை சுட்டிக்காட்டி விட்டு ”எல்லாம் சட்டப்படிதான் செய்யுறோம் என்று வாதிட வந்தவரை வாயடைத்து போகச் செய்துவிடலாம். இந்த மேற்கோள் என்பது ஒரு சொகுசு பேருந்து மாதிரி. தலைப்புக்கு சொந்தக்காரரே வந்து அதனிடமே புலம்பினாலும் வாயையே திறக்காது. அவ்வளவும் சொகுசு வாழ்க்கை. பிடித்து வைத்த பிள்ளையார் போன்று வாயைத் திறக்கவே திறக்காது. சரி, அந்த மேற்கோளாவது என்னுடையதா என்றால் அதுவும் கிடையாது. யார் வேண்டுமானாலும்...

பாப்லோ பிக்காசோ: விளங்கிக் கொள்ள முடியாத கலைஞன்

ஒவியங்களைப் புரிந்து கொள்வதற்கு அதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அவசியப்படுகிறார்கள். நாம் சில ஓவியங்களை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டே இருப்போம். ஒன்றும் விளங்காது. ஒருவர் அதன் அழகியல் தன்மையை விவரிக்கும் போது இதை ஏன் நாம் இது வரை பார்க்கத்தவறிவிட்டோம் என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிடுவோம். ஓவியத்துக்கும் நமக்கும் இடையில் இருக்கும் அந்த நபர் நம் பார்வையை முற்றிலும் நம்முடையது அல்லாத ஒரு பார்வையாக மாற்றியமைக்கிறார். முன்பு இருந்த பார்வை அவர் காட்டும் அந்தத் தருணத்தில் இருப்பதில்லை. முன்பு பார்த்த பார்வையில் வெறுமனே காட்சி மாத்திரம் தான் இருக்கிறது அதில் அந்த ஓவியம் காட்டும் தரிசனம் முற்றிலுமாகக் காணாமல் போகிறது.

டான் குயிக்ஸாட்டும் வாசிப்பனுபவமும்: பகுத்தறிவின் கண்கள் திறக்கப்படும் தருணம்

சில புத்தகங்களை நாம் மாத்திரமே வாசிக்க வேண்டும் போல் இருக்கும். அவைகளை மற்றவர்கள் யாரேனும் வாசிக்க நேர்ந்தால் பொறாமைத் தீ அவர்கள் மீது பற்றி எரியும். சில புத்தகங்களை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் வாசித்து விட முடியாது. அப்படிப்பட்ட புத்தகக்களை வேறொருவர் வாசிக்க நேர்ந்தால் அவர்மீது தோழமை உணர்வு அதிகமாகிவிடும். இவைகளுக்கும் மீறி சில புத்தகங்கள் உள்ளன. அவைகள் தனிப்பட்ட வாசிப்பனுபவத்திற்கோ பெருமிதத்தின் வாசிப்பனுபத்திற்கோ ஆன புத்தகங்கள் அல்ல. வாசித்து முடித்தவுடன் அதனை இந்த உலகமே வாசிக்க வேண்டும் என்ற ஒரு புனிதமான எண்ணம் நமக்குள் உருவாகி விடும். அதனை வாசிக்கும் படி இந்த முழு உலகத்திற்கும் பரிந்துரை செய்வோம்.

திருநீர்சாமி: உண்மையை உணர்த்தும் உரையாடல் களம்

இமையத்தின் கதைகள் இதுவரை அவைகளின் கதைகளுக்காகவும், கதை மாந்தர்களுக்காகவும்  சிறப்பைப் பெற்றிருந்தன. செடல், கலியம்மாள் போன்றவர்களை வாழும் மனிதர்களாகப் பார்க்கவேண்டியிருக்கிறது. அதே போன்று பெத்தவன், எங்கதெ போன்றவை யதார்த்ததின் வாழ்க்கையாக நம்மால் அறியப்படுகின்றன. இவைகள் மாத்திரமே கதைகளின் சிறப்பம்சங்களா? கதை மாந்தர்கள் கதையின் வாழும் யதார்த்ததிற்கு மிக அருகில் இருப்பவர்கள்.  இம்மாத உயிர்மையில் வெளியாகி இருக்கும் ”திருநீர்சாமி” கதை இமையத்தின் கதைசொல்லலின் வேறொரு பரிமாணத்தைச் சுட்டிக் காட்டுகிறது. கதைக்கு என்று மூன்று பிரதானக் கூறுகள் இருக்கின்றன எனக் கொள்ளலாம். கதைப் பாத்திரம், கதைக் கரு, மற்றும் உரையாடல். இவைகளில் முதல் இரண்டை இலக்கிய விமர்சனத்தில் அதிகம் வைத்து விவாதித்து விட முடியும். மூன்றாவதை அவ்வளவு எளிதில் இலக்கிய விமர்சனம் என்ற அளவுகோளில் வைத்து விவாதிக்க முடியாது. அது முற்றிலும் தத்துவம் சார்ந்த ஒன்று. உரையாடல் என்று வரும்போது அது தத்துவத்திற்கான ஒரு களம் அல்லது கருவி. சொல்லப்போனால் உடையாடலைக் கொண்டே கதையாடலைக் கூட சாத்தியப்படுத்திவிட முடியும். இமையம் தன்னுடைய பெரும்...

அதிமேதாவி குஞ்சிதபாதம்

பண்டிகைகளும் அர்த்தமற்ற கொண்டாட்டங்களும் குஞ்சிதபாதத்தைச் சந்தித்து பல நாட்கள் ஆகிவிட்டன. நட்பு முறிந்துவிடக்கூடாதே என்று இடைவிடாமல் நான் தான் அவனைச் சந்தித்து வருகிறேன். ஒரு நாள் கூட அவன் என்னை வந்து பார்த்ததே கிடையாது.  ஒரு போன் கூட செய்ததில்லை. நான் தான் வெட்கமின்றி அவனைத் தொடர்ந்து போய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உன்னுடைய ஆத்மார்த்த நண்பன் யார் என்று கேட்டால் செல்லமாக ”குஞ்சிதம் தான் என் ஒரே நண்பன்” என்று பெருமிதப்பட்டுக் கொள்வேன். ஆனால் அப்படி ஒரு நினைப்புக் கூட அவனுக்குக் கிடையாது. அவனுக்கு இருக்கும் நட்பு வட்டாரத்தில் நான் பத்தோடு பதினொன்று. பெயரைக் குறிப்பிட்டுக் ”கட்டியங்காரனைப் பற்றி தெரியுமா” என்று கேட்டால் திருதிருவென்று முழிப்பான். சொல்லப்போனால் அவனுக்கு நண்பர்கள் என்ற வகையில் உயிருக்குயிரான நண்பர்கள் என்று செண்டிமெண்டெல்லாம் எதுவும் கிடையாது. அவன் பாட்டுக்கு அவன் உண்டு பல்கலைக்கழகம் உண்டு அவனுடைய விடுதி அறை உண்டு என்று வாழ்பவன். கற்கண்டைத் தேடி அலையும் எறும்புகளைப் போன்று அவனைத் தேடி எங்கிருந்து வந்துவிடுவார்களோ தெரியாது. எப்படி அவன் அநேக நண்பர்களைச் சம்பாத்த...

”Publish or Perish”

”Publish or Perish” என்று சொல்வார்கள். ஆரம்ப காலத்தில் இதைக் கேட்கும் போது உள்ளூர நடுக்கம் ஏற்படும். படிப்பு பிழைப்பு எல்லாம் இலக்கியம். வாழவே முடியாதோ என்ற பயம் அது. எழுதுவது என்பது ஒரு அலாதியான அனுபவம் என்பதை கற்றுக் கொடுத்தவர் நண்பர் அபிலாஷ். அதனையே பதிப்பில் பார்க்கும் போது கிடைக்கிற மன நிறைவு அதை விட அதிகம். என்னாலும் எழுதமுடியும் என்ற நம்பிக்கையை நான் உணர்ந்தது நணபர் அபிலாஷின் நட்பின் சூழலில் மாத்திரமே. அவருடைய நாவல் ’ரசிகன்’ பற்றி பல நாட்கள் என்னால் எதனையும் பேச முடியாமல் இருந்து வந்தது. ஏதோ ஒரு மையப்புள்ளியை நோக்கி என்னுடைய மௌனம் நாவலில் பயணித்துக் கொண்டிருந்தது. சடார் என்று ஒரு நாள் அந்த மையப்புள்ளியின் இருப்பிடம் தென்பட்டது. இரவு ஒரு மணிக்குள் மதிப்புரையை எழுதி முடித்து விட்டேன். இப்போது ”புத்தகம் பேசுது” இதழில் நூல் மதிப்புரையை பதிப்பில் பார்ப்பது பூரண மகிழ்ச்சியைத் தருகிறது. Thanks to Abilash.

அதிமேதாவி குஞ்சிதபாதம்

அகட விகடம் பத்திரிக்கையில் தனக்கு ஒரு பத்தியை ஆசிரியர்கள் ஒதுக்கியது தனது பூர்வ ஜென்மத்துப் பலன் என்று எழுத்தாளர் கட்டியங்காரன் தன்னைப் பற்றி சுமார் ஒரு மணி நேரத்திற்கு தம்பட்டம் அடித்துக் கொண்டார். எரிச்சல் தாங்க முடியவில்லை. பொதுவாக எழுத்தாளர்களின் படைப்பு என்னவோ மகா அற்புதம் ஆனால் அவர்களை நேரில் சந்தித்தால் தான் ஆத்திரம் பொத்துக் கொண்டு வருகிறது. பளார் என்று ஒரு அரை விடவேண்டும் போல் தோன்றும். தாங்கள் தான் இந்த பூமியில் வாழும் ஒரே ஜீவ ராசி என்றும் தாங்கள் மாத்திரம் தான் புதிதாக சுவாசிப்பது போலவும் வாழ்வது போலவும் மற்றவர்கள் வெறும் ஜடங்கள் போலவும் நினைத்துக் கொள்கிறார்கள். இருந்தாலும் எழுத்தாளர்களின் நட்பு முகவும் முக்கியம். அதனால் ஏதாவது நமக்கும் கொஞ்சம் அறிவு ஊற்றெடுக்கும். நம்ம ஊர் பேராசிரியர்களுக்கு தற்பெருமை படைப்பாளிகள் எவ்வளவோ மேல். சிறிதும் எதிர்ப்புக் காட்டாமல் மௌனமாக கட்டியங்காரன் பேசியதற்கு எல்லாம் மாடு போல் தலையாட்டினேன்.

அறிவுக் கொழுந்து குஞ்சிதபாதம்

நேற்று இரவு ஒரே மனச் சோர்வு. யாரிடமாவது கொட்டித் தீர்க்க வேண்டும். இல்லை என்றால் அதுவே விஷமாக மாறி என்னையே கொன்றுவிடும் போல் இருந்தது. தற்போது அனைவருக்கும் மன நோய் பிடித்திருப்பதால் யாரிடமும் போய் பேச்சுக் கொடுக்கவும் முடியாது. மீறி பேசச் சென்றால் உலகத்தில் உள்ள விஷமிக்க வைரஸ்களை விட நம்முடையவர்களின் மன நோய் வைரஸ் நம் மனதை எளிதில் பாத்தித்து விடும். மிகவும் ஆபத்தான தொற்று நோய் இது. இந்த நோய் தாக்கப்படாத ஒரே நபர் நம்முடைய குஞ்சிதபாதம் ஒருவர் தான். அவருடைய விடுதி அறையின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும். எப்போது வேண்டுமானாலும் கதவைத் தட்டலாம். வெறுப்பைக் காட்டமாட்டார்.  
சமீபத்தில் இரண்டு புத்தகங்களை வாசித்தேன். ஒன்று சிறந்த கட்டுரை. மற்றொன்று மார்க்விசின்  நூற்றாண்டு தனிமையில் நாவலை தழுவிய ஒரு தமிழ் நவீன நாவல். இந்த நாவல் மார்க்விசை விட சிறந்த நாவல் என்று சொல்லுவேன். அடுத்த முறை இந்த நவீனத்திற்கு கண்டிப்பாக நோபல் பரிசை கொடுத்தாக வேண்டும். கட்டுரையை பற்றி சொல்ல வேண்டுமே. அது என்னுடையது தான். இந்திய ஆங்கில நாவல் ௨௦௨௦ பற்றிய மிக நீண்ட கட்டுரை . இது ஒரு பக்தினிய  அணுகுமுறை. எப்படி பலக்குரல்கள் உத்தி இந்த   நாவலில் உள்ளது என்பதை பற்றிய கட்டுரை. இந்தக் கட்டுரையும் நவீனமும் இந்நூற்றாண்டின் முக்கியமான படைப்புகள். இரண்டும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட வேண்டியவைகள்.
கோட்பாடு வேறு உண்மை வேறு . கோட்பாட்டை ஒரு இயக்கத்திற்கு உரியதாக / சொத்தாக வைத்துக் கொண்டாடலாம் . கோட்பாடு ஒரு இயக்கத்திற்கு அப்பழுக்கற்ற உண்மையாகவும் இருக்கலாம் . ஆனால் உண்மை கோட்பாடாக மாறமுடியாது . உண்மைக் கோட்பாடு அல்ல . அப்படி என்றால் கோட்பாடு என்பது என்ன என்பதுதான் கேள்வி . தலை சுற்றுகிறது . விதியே என்று ஒரு சாராரின் கொள்கைகளை வாழ்க்கையாக வாழ்ந்து விட்டால் பிரச்சனையே இல்லை . கொள்கையற்று எங்கும் காணக் கிடைக்காத உண்மையைத் தேடி அலைவதுதான் மரணத்தின் வலி . இருப்பினும்   இந்துவில் THE AGE OF POST-TRUTH POLITICS என்னும் தலைப்புக் கொண்ட நடுப் பக்கப் பத்தி சற்று ஆறுதல் அளிக்கிறது . 

குழப்பத்தின் யுகம் நம்முடைய யுகம், அதன் குழப்பத்தை ஏற்க நாம் மறுக்கிறோம்

குழப்பத்தின் யுகம் நம்முடைய யுகம், அதன் குழப்பத்தை ஏற்க நாம் மறுக்கிறோம் இருபதாம் நூற்றாண்டு மிகவும் கொடூரமான நூற்றாண்டு. உலகப்போர்களைக் கண்ட நூற்றாண்டு அது. அதனிடம் திரும்பிச் செல்ல யாருமே விரும்ப மாட்டார்கள். படைப்பாளிகள் கூட அதனை அப்படியே தங்களுடைய கதைகளில் காட்சிப்படுத்தவில்லை. போர்களை காட்ட காதல் காவியங்கள் மாத்திரமே அதனை பேசுவதற்கு துணை நின்றன. நேரில் பார்த்து சகிக்ககூடாத யுகம் அது. அது தன்னை தற்போது கதைகள் மூலமாக நம்மை திருபத் திரும்ப நான் மீண்டும் வருவேன் என்று பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது. நாமும் அது தரும் அச்சத்திலேயே நம்முடைய இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த நூற்றாண்டு எப்போது வெடித்தெழும்புமோ என்ற மெல்லியதான அச்சம் தேசிய/சர்வதேசிய அளவில் மாற்றங்கள் ஏற்படும் போது துளிர்க்க ஆரம்பிக்கிறது. இருந்தாலும் அந்த அகோரமான நூற்றாண்டு நம்மிடம் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டேயிருக்கிறது.

உலகப் புகழ் பெற்ற பேனா

உலகப் புகழ் பெற்ற பேனா என்னுடைய பௌண்டன் பேனா ஆயிரம் ரூபாய். வாங்கியபோது அதிகம் விலை கொடுத்து ஏமாந்து விட்டேனோ என்ற குற்ற உணர்வு தொடந்து இருந்து கொண்டே இருந்தது. ஏறக்குறைய ஒரு ஆண்டிற்கு யாரிடமும் அதனுடைய விலையைப் பற்றி சொல்லவே இல்லை. யாரேனும் “என்ன விலை” என்று கேட்டாள் அன்பளிப்பு என்று மழுப்பி விடுவென். திறந்து பார்த்து விட்டு ”இரிடியம் பாய்ன்ட்” என்று சொல்லி அதிகம் விலை இருக்கும் என்று திரும்பத் தந்து விடுவார்கள். அதுதான் என் பேனாவைப் பற்றிய முதல் அறிவுத் தகவல். அது வரை இரிடியம் பாயின்ட் பேனாவிற்கும் மற்ற பேனாக்களுக்கும் எந்த வித்தாசமும் தெரியாது. தெரிந்திருக்க அவசியமும் இருந்திருக்கவில்லை. பள்ளிக் கூடத்தோடு எல்லாம் முடிந்து விட்டது. அப்போதெல்லாம் Ink பேனா அவ்வளவு பெரிய விஷயமாக இருக்காது. அப்போது இருந்த ரெனால்ட்ஸ் பேனாக்கள் தான் அதிகம் கவனத்தை ஈர்க்கும். அந்தப் பேனாக்களுக்கே டியூப்ளிக்கேட் வந்து கொண்டிருந்தது. ரெனாட்ஸ் நான்கு ரூபாய் என்றால் போலி ஒரு ரூபாய். எனினும் பௌண்டன் பேனா பக்கம் கவனம் திருபியதே கிடையாது. அது ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை. எனது பக்கத்து தெரு பையன் அவனுட...

கெய்ஷா: ஆண் அகங்காரத்தின் மீட்டெடுப்பு

கெய்ஷா :   ஆண்   அகங்காரத்தின்   மீட்டெடுப்பு ஜெயமோகனின்   கெய்ஷா   சிறுகதை தன்னில் தானே ஒரு வசிகரத்தை வைத்துக் கொண்டு வாசிப்பை வலியின்றி தன்னுள் இலகுவாக பயணிக்கச் செய்யும் கதையாகும் . அவருடைய வலைபக்கத்தில் கதையை பார்த்தவுடன் முழுவதையும் வாசித்து விட வேண்டும் என்ற தீர்மானம் ஏற்பட்டது . கதை ஆரம்பித்ததுதான் தெரியும் எப்படி முடிந்தது என்று எண்ணம் கொஞ்சம் கூட இல்லை . அதுதான் ஒரு சிறந்தக் கதைக்கான இயல்பு . உண்மையில் அன்று காலை , வாசிப்புக்கு ஏற்ற காலையாக இருக்கவில்லை . நோக்கம் எதுவும் இன்றி எதை எதையோ இயந்திரத்தனமாக செய்து கொண்டிருந்தேன் . அந்தத் தருணத்தில் கதை தன்னுடையை கரங்களை கெய்ஷாவைப் போல் தன்னுள் என் வாசிப்பை அரவணைத்துக் கொண்டது .