Skip to main content

Posts

Wish You The Same

Wish You The Same ஆங்கிலத்தில் ஒருவர் நமக்கு வாழ்த்து கூறும் போது அதற்கு மறு வாழ்த்து கூறுவது சங்கடமான காரியம். ”Wish You Happy Diwali Sir”. மறுவாழ்த்து கூற தமிழில் இருந்து அப்படியே மொழிப் பெயர்ப்பு செய்தால் ஊர் சிரித்துவிடும். அதற்காக மௌனம் காக்கவும் முடியாது. எதையாகிலும் உளறி வைத்துவிட்டால் எல்லாம் முடிந்தது. அவ்வளவுதான். நாம் எவ்வளவு ஆங்கிலத்தில் உலக இலக்கியத்தை வாசித்திருந்தாலும் அந்த ஒரு நொடிப் பொழுதில் நம்முடைய எல்லா வாசிப்பனுபவமும் பூஜ்ஜியமாகி விடுகிறது. மறுவாழ்த்து சொல்ல கற்றுத்தராத  இலக்கியம் என்ன பெரிய இலக்கியம் என்ற ஆற்றாமை அப்போது நாம் வாசித்த வாசிப்புகள் அனைத்தின் மீதும் கோபத்தை ஏற்படுத்திவிடும். அதுவும் நவீனத்தின் மிடுக்கோடு இருக்கிற மாணவர்களைக் கண்டால் போதும் நம்முடைய ஆங்கிலத்தில் இருக்கிற “do” “does” ஆகிவிடும் “does” “do” ஆகிவிடும்.

நொடிப்பொழுதில் இலயித்திருக்கும் கவிதைகள்

நொடிப்பொழுதில் இலயித்திருக்கும் கவிதைகள் [ நேற்று டான் குயிக்ஸாட்டின் எட்டாம் அத்யாயத்தை வாசித்து கொண்டிருக்கும் போது கவிதையைப் பற்றியும் அதில் வரும் பாடு பொருள்களைப் (குறிப்பாக பெண்களின் அழகு) பற்றியும் செர்வான்டஸ் செய்த கோபம் மிகுந்த கேளிக் கிண்டல் அதனைப் பற்றி சிறிது யோசிக்க வைத்தது. அதுபோன்ற சிந்தனைகளை வீணடிப்பது மாபெறும் தவறு என்பதினால் உடனே சிந்தனையை ஐநூறு எண்ணிக்கைகளிலான வார்த்தைகளில் பதிவு செய்து விட்டேன். ] கவிதை தன் இயல்பில் ஒருபோதும் எதையும் அதன் இயல்புதன்மையில் வைத்துப் பார்க்காது. ஒரு படி மேலே சென்று அதனை சற்று உயர்த்தி அல்லது அழகு படுத்தித் தான் காண்பிக்கும். கவிதையின் பாடுபொருள்களே இப்படித்தான். ஒன்று கிடைத்து விட்டால் போதும் அதனை மெருகேற்றி அதன் இயல்பு தன்மையில் இருந்து சற்று மாற்றித் தான் காண்பிக்கும். ஏன் இயல்பில் உள்ள பொருட்களை அவைகள் இருப்பது போன்று காட்ட கூடாதா? இயல்பு நிலை அவ்வளவு அவலட்சணமானதா? இதெல்லாம் நம்மை மீண்டும் மீண்டும் சிந்திக்க வைக்கிறவைகள். இது கவிதையின் குணாதசியமா. அல்லது இயல்பு நிலையை ஒருபோதும் அதன் இயல்பு நிலைக்கு மீறி காட்டமுடியாது என்பதா....

இமையத்தின் வீணடிக்கப்படாத போலச்(imitate) செய்யும் சொற்கள்

இமையத்தின் வீணடிக்கப்படாத போலச் (imitate) செய்யும் சொற்கள் இமையம் எப்போதும் வார்த்தைகளை எழுத்தாளர்கள் வீணடிக்கிறார்கள் என்று குறைவு பட்டுக் கொண்டிருப்பார். இதனால் மற்ற எழுத்தாளர்களை திட்டவும் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் இதனைக் கேட்க்கும் போது உள்ளூர குற்ற உணர்வு ஏற்படும். எழுதுவதற்கு தயக்கமும் ஏற்படும். எழுத்தை வீணடிக்கக் கூடாது என்று இமையம் சொல்லும் போது அவர் எதை அர்த்தப்படுத்தி பேசினார் என்பது இன்றைக்கு அவருடைய பேட்டியை இந்துவில் படித்த பின்புதான் புரிந்து கொண்டேன். இமையம் தன் எழுத்திற்கென்று சமீப காலங்களாக ஒரு கோட்ப்பாட்டை முன் நிறுத்திக் கொண்டிருக்கிறார். இதனை கோட்பாடு என்று சொல்வதற்கு கூட பயமாய் இருக்கிறது. காரணம் கோட்பாடு என்ற வார்த்தை முழுவதும் இப்போது தவறாக அதுவும் கல்வி புலங்களில் பேராசிரியர்களால் அறைகுறையாக புரிந்து கொள்ளப்பட்டு போதிக்கப் பட்டு பதிப்பிக்கப்பட்டும் வருகின்றன. எனினும் இமையம் உருவாக்கும் தன்னுடைய விழுமியங்கள் (இந்த வார்த்தை கூட கொஞ்சம் சிக்கலான வார்த்தை தான்) முற்றிலும் தன்னுடைய படைப்பு சார்ந்ததாகவே இருக்க செய்கின்றன. படைப்பில் இருந்து உருவாக்கப்படும் ...

மில்லரின் சாபம்

மில்லரின் சாபம் நாராயணனும் கோபாலனும் அக்கல்விச்சாலைக்குட் புகுந்து மாணாக்கர் தொகுதியையும் ஆரவாரத்தையுங் கண்டு அதிசயித்துக்கொண்டே பிரதம ஆசிரியராகிய டாக்டர் மில்லர் துரையவர்களிருக்கும் அறையை தேடிச் சென்றார்கள். அப்புலவர் திலகருக்கு அபொழுது ஐம்பது வயதுக்கு மேலிருக்கலாம். அவர் சரீரத்தின் உன்னத எழுச்சியையும் நிமிந்த கம்பீர நடையையும், மயிர்செறிந்த களையும், எப்பொழுதும் பிறர் நன்மையைச் சூழவெழும் நினைவுக்களால் உண்டான வரிகளோடிய விசாலமான நெற்றியையும், உதடுகள் பொருந்தி மன உறுதியைக் குடிகொண்டு விளக்கும் தோற்றத்தையும் கண்டவர்கள் நெஞ்சில், ஒருவித ஆர்வமும் அச்சமும் வியப்பும் செல்வமும் உண்டாதல் இயல்பே.  அவர், ஸ்கோத்லாந்து தேசத்தில் செல்வமும் கண்யமும் பொருந்திய ஒரு நற்குடும்பத்தில் பிறந்து கல்வியில் சிறந்த பண்டித் தியத்தையடைந்து கீர்த்திப் பட்டங்கள் பெற்றவராயினும் சுயநயத்தையும் பொருளீட்டலையும் சிறிதும் பாராட்டாதவராய், ஔவையார் “திரைகலலோடியுங் கீர்த்தியைத்தேடு” என்ற முது மொழியைக் கைப்பற்றியவர்போல், மாதர் வலைச்ச்சிக்கி மனமுறுக்கும் இளம்பிராயத்திலேயே இத்தேசத்திற்கு வந்து, சென்னைக் கிறிஸ்தவ க...

பாப் டிலன்: சில நேரங்களில் சில பரிசுகள்

தி இந்து - The Hindu 600 × 458 Search by image பாப் டிலன்: சில நேரங்களில் சில பரிசுகள் பாப் டிலன் நொபேல் பரிசைப் பெற்றது பலதரப்பு சிந்தனையாளர்களிடம் இருந்து பலவிதமான கருத்துக்களை நம் மத்தியில் எழுப்பியிருக்கின்றன. சர்ச்சை என்று சொல்லாமல் கருத்துக்கள் என்று சொல்லவே பிரியப்படுகிறேன். பாப் டிலனின் இந்த தருணம் மிக முக்கியமான தருணம். நமக்கு மூன்று தரப்பினர்களின் விவாதங்கள் முக்கியப்படுகின்றன. இம்மூன்றைத் தவிர்த்து மற்ற எந்த விவாதமும் சர்ச்சைகளாத்தான் கொள்கிறேன். மூவர்கள் முறையே; நாட்டுப்புறவியல் வல்லுனர், சமூக சிந்தனையாளர் மற்றும் தேர்ந்த இலக்கியவாதி இலக்கிய விமர்சகர். இவர்களின் பெயர்கள் எனக்கு மாத்திரமே இரகசியமானவைகள். அதை வெளிப்படுத்தி இப்போது பேசுவது அறமாகாது. எனினும் இவர்களின் நிலைப்பாடுகளை முன் நிறுத்தி பேசுவது மிகவும் அவசியப்படுகிறது. இவர்கள் ஐரோப்பியர்களோ அல்லது கீழைத்தேயத்து அறிஞர்களோ அல்ல. நம்முடைய தமிழர்கள் அதுவும் பச்சைத் தமிழர்கள்.

வீடுபேறு கிட்ட நண்பர்களை சம்பாதியுங்கள்

வீடுபேறு கிட்ட நண்பர்களை சம்பாதியுங்கள் இன்று John Galsworthyயின் Strife என்னும் நாடகத்தை பற்றிய அறிமுகம் கிடைத்தது. இந்த பெயர் பரிச்சயமான பெயர். அதே நேரத்தில் உள்ளூர பயத்தை ஏற்படுத்தும் பெயரும் கூட. சில எழுத்தாளர்களின் பெயரை கேட்டவுடனே மகிழ்ச்சியான உணர்வு நமக்கு ஏற்படும். சில பெயர்கள் அதிலும் ஆங்கில இலக்கிய படைப்பாளிகளின் பெயர்கள் மிகவும் பயமுறுத்தக்கூடியவைகள். Galsworthy UGC பரிட்சையின் பயத்தை ஏற்படுத்தும் பெயர். பெயரைக் கேட்டதுமே இயல்பாக பயம் ஏற்பட்டுவிடும். கீழ்கண்டவற்றில் எது Galsworthyன் நாவல் என்ற கேள்வி ஏதோ தண்டனை கைதியிடம் குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா என்ற கேள்வி போன்று ஒரு மரண பயத்தை ஏற்படுத்தும். இன்று அப்படி இல்லை. புத்தகம் மேஜையின் மீது வைக்கப்பட்டு அதைப்பற்றி பிரஸ்தாபமாக பேசப்பட்டது. Galsworthy என்ற பெயர் எங்கேயோ கேட்ட பெயர் ஆயிற்றே என்ற கேள்வி மாத்திரம் மண்டையை துளைத்துக் கொண்டே இருந்தது. அது UGC க்கு சொந்தமான பெயர் அல்லவா. யார் என்று தெறியாவிட்டால் படித்த முழு படிப்பும் வீண். பதில் கிடைக்காத வரை அற்ப பதர்தான். பதில் கிடைத்துவிட்டால் நம்மை போன்ற ஸ்காலர் உலகத...

கதைக்கதையாம் காரணமாம்

கதைக்கதையாம் காரணமாம் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மொழி எந்த அளவிற்கு போதாமைத் தன்மையை கொண்டிருக்கிறது என்பதை விளக்க மொழியியலாளரோ மானுடவியலாளரோ நமக்கு வேண்டியதில்லை. அன்றாடம் நம்மைச் சுற்றி நடக்கும் உரயாடல்களை கவனித்தாலே போதும். அவைகளில் பாதி மொழியற்று இயங்கும் பரிமாற்றங்கள் என்பதை கண்டு பிடித்துவிடுவோம். மொழி என்பது தன்னுடைய நிலையில் பாதி அளவில் தான் உரையாடலை தொடர அனுமதிக்கும். அதற்கு மேல் நம்மால் கருத்துக்களை மற்றவர்களுடன் தொடர முடியாமல் போகிறது. மௌனங்களும் திக்கல்களும் ஒருவழியாக நம்மை காடைசியில் சொல்ல முற்படுவதை சொல்ல வைத்து விடுகின்றன. இதற்கும் மீறி ஒருவன் சரலமாக மொழியை மிக நீண்ட நேரம் கையாள்பவன் என்றால் நிச்சயம் அவன் அசாதாரண மனிதனாகத்தான் இருக்க முடியும்.
புனித வில்லியின் மன்றாட்டு: கோமாளிகளின் கலகக் குரல் ஸ்காட்லாந்து கவிஞர் ராப்ர்ட் பர்ன்ஸ் ஆங்கில கவிஞர்களிலேயே மிக முக்கியமான கவிஞர். முதலில் ஆங்கிலக் கவி/எழுத்தாளர் இன்னார் என்பதை வரையறுப்பதே சற்று குழப்படியான வேலை. அவர் ஆங்கிலத்தில் எழுதியதாலேயே அவரை ஆங்கிலக் கவி என்று வைத்துக்கொள்வோம். மற்றபடி அவர் ஸ்காட்லாந்து கவி. இவர் மிகச் சிறந்த கவி என்பதை நிரூபிக்க மற்றொரு ஆங்கி லேயக் கவி மேத்திவ் அர்னால்ட் ”Study of Poetry”ல் Touch Stone முறையை பயன்படுத்துவார். எல்லாருடைய கவிதைகளையும் இந்த முறைமையில் பரிசீலித்து கடைசியில் ராபர்ட் பர்ன்ஸே சிறந்த கவி என்று நிரூபிப்பார். இந்த விமர்சன கட்டுரையைப் பேராசிரியர் ரெஜானி 2008ம் ஆண்டு எங்களுக்குப் பாடமாக நடத்தினார். அவர் நடத்திய ஒவ்வொரு வரியும் அப்படியே மனதில் பதிந்துவிட்டது. மறுபரிசீலனை செய்யும் வண்ணமாக ரமணன் சார் பர்ன்ஸின் புனித வில்லியின் மன்றாட்டு என்ற கவிதையைத் தற்போதைய மாணவர்களுக்குப் பாடம் எடுக்க ஆரம்பித்தார். ரெஜானி எப்போதும் மிகப் பெரிய அறிவுத்தொகுதியில் இருந்து நம்பிக்கையே இல்லாமல் ஒரு  கட்டுரையை அல்லது கவிதையை நடத்த பெரும...

வெற்றிடம் விழுங்கும் இராட்சத வார்த்தை

dostoyevsky.tumblr.com 583 × 727 Search by image வெற்றிடம் விழுங்கும் இராட்சத வார்த்தை எழுத்தாளனக்கு தேவையானதெல்லாம் தான் சுதந்திரமாக எழுதுவதற்கான ஒரு பத்தி அவ்வளவுதான். அதில் அவன் நினைப்பது அனைத்தும் எழுதப்படுகிறது. அந்தப் பத்தி எந்த ஒரு கட்டுப்பாட்டையும் எழுத்தாளன் மீது விதிக்காது. தன் சுதந்திரம் முழுவதும் அந்த குறிப்பிட்ட பத்திக்குள் கட்டற்று செயல்பட ஆரம்பிக்கிறது. பொதுவாக வார மற்றும் மாத பத்திரிக்கைகளில் ஒதுக்கப்படும் பத்திகள் சிறுகதைகளுக்காகவும், கட்டுரைகளுக்காகவும், கவிதைகளுக்காகவும், மற்றும் மதிப்புரைகளுக்காகவும் இருக்கின்றன. அந்த பத்திகள் சுதந்திர சிந்தனைக்கான அடக்குமுறையாகும். இவைகள் எழுத்தாளனை இப்படித்தான் எழுத வேண்டும் என்று ஒரு வடிவத்திற்குள் கட்டுப்படுத்துகின்றன. அவனை ஒரு வகையான எழுத்தின் கட்டுப்பாட்டுக்குள் அடைத்து விடுகின்றன. அதற்காக இவைகள் கூடாது என்றல்ல. இவைகள் கட்டாயமானவைகள். சுதந்திரமானவைகள் அல்ல. எனினும் படைப்பு என்பதை இந்த குறிப்பிட்ட வகைமையின் வடிவத்தில் தான் எழுத வேண்டும் என்று வற்புறுத்த முடியாது. ஒரு பக்கத்தில் வடிவங்களுக்காக படைப்புகள் உ...

ஓலைச்சுவடியில் என்ன இருக்கிறது?

ஓலைச்சுவடியில் என்ன இருக்கிறது ? தமிழ்த்துரை மாணவர்கள் எப்போதும் எளிமையாக காட்சியளிப்பவர்கள் . அட , இவர்களிடம் என்ன இருக்க போகிறது என்ற எண்ணம் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் . சற்று அருகில் சென்று விவாதிக்கும் போதுதான் தெரியும் ஆங்கிலத்துரை மாணவர்கள் கற்க வேண்டியது அதிகம் அவர்களிடம் இருக்கிறது என்பது . ஆனால் இடைவெளி எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் . இந்த இடைவெளி உடையும் போது கிடைக்கும் ஆதாயம் இருசாராருக்கும் அதிகம் . தமிழ் துரை மாணவர்கள் கட்டுரைகளை படிக்கும் போது அதிகம் கோட்பாடுகளை அள்ளி வீச மாட்டார்கள் . தரவுகளை சேகரித்து நேர்த்தியான விதத்தில் தருவதில் கைத்தேர்ந்தவர்கள் . ஆனால் ஆங்கிலத்துரை மாணவர்கள் பீட்டர் இங்லீஷ்சை வைத்துக் கொண்டு ஒரு கருத்தை மாத்திமே வைத்து கொண்டு வீடு கட்டிவிடுவார்கள் . இது மொழி சார்ந்த பிரச்சனையாக இருக்கலாம் . ஆனாலும் அவர்களிடம் கற்க வேண்டியது அதிகம் .

THE "EVERYDAYNESS"

                                                                               www.thehindu.com 465 × 636 Search by image                                                                                                THE "EVERYDAYNESS"  Shiv Viswanathan is one of my favorite column writers in The Hindu. Each and every day I read the editorial page with a self-imposed compulsion. When Shiv comes, the day is made. Today, the editorial editorial page carried a brilliant article by the columnist. He says that “everydayness” is rev...

செவ்வியல் காட்டும் உலகம்: தொடுவானம் தொடும் விரிந்தகன்ற பார்வை

        meaningness.com 437 × 560 Search by image / The Mountain: a view from hell yes செவ்வியல் காட்டும் உலகம்: தொடுவானம் தொடும்  விரிந்தகன்ற  பார்வை டால்ஸ்டாய் மற்றும் தாஸ்தாவஸ்கியை படிக்கும் போதெல்லாம் குறிப்பிட்ட உணர்வு இப்படைப்பாளிகளை பற்றிய புறிதலை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். ஆனால் அது இதுதான் என்று வார்தையில் கூறமுடியாத உணர்வாக இருக்கும். எனினும் இவர்களின் படைப்புகள் வாழ்க்கையின் ஆழத்தையும் மேல்நோக்கிய பிரபஞ்சத்தின் உயரத்தையும் காட்டுபவைகளாக இருந்தன. குறிப்பாக கரமசோவ் சகோதர்கள் மற்றும் போரும் வாழ்வும் இது போன்ற உணர்வை எப்போதும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். எனினும் ஆழத்தை அதன் ஆழத்தில் இருந்து பார்க்க முடியாது. அதே போன்று உயரத்தின் எல்லையை அதன் முடிவில் சென்று காண முடியாது.

மேற்கத்திய ஆளுமையில் சாதியைப் பற்றிய அறிவுசார் விசாரணை

மேற்கத்திய ஆளுமையில் சாதியைப் பற்றிய அறிவுசார் விசாரணை கடர்கரையில் நண்பர்கள் அனைவரும் அம்பேத்கரின் முன்னுரைகளை மையமாக வைத்து அதில் எவ்வாறு இலக்கியம் தத்துவம் ஆகியவற்றின் தாக்கம் அவரில் மேலோங்கி நிற்கிறது என்பதைப் பற்றிய ஒரு விசாரணையில் வாசிக்க ஆரம்பித்தோம். இதுபோன்று மொட்டைத்தலைக்கும்  முழங்காலுக்கும் முடிச்சு போடுவது அபத்தமான காரியம் தான். எனினும் மறைக்கப் பட்ட உண்மையை பற்றி பேசும் போது இது போன்ற அபத்தம் என்னும் முற்று புள்ளி உண்மையை வெளிச்சப்படுத்துவதற்கு மிகம் பெரிய அபத்தம் ஆகும். அம்பெத்கருடைய கட்டுரைகளை வாசிக்க நேர்கையில் ஒரு பொருள் கொண்ட விசாரணைமாத்திரமே அவைகளில் இருக்கும். சாதியை பற்றிய எதிர்ப்பு குரள் மாத்திரமே அம்பேத்கரின் ஆய்வு பணி. இது அவருடைய ஆளுமை ஒரு சிறிய சட்டகத்திற்குள் சுருக்கி விடுகிறது. இதற்கு வெளியில் அவருடைய சக மனிதத் தன்மை அறிவு ஜீவி தன்மை என்பவைகள் முற்றிலும் அறியப்படாத ஒன்றாகும். சாலையின் முடிவில் இருக்கும் சிலையும் பாடபுத்தகங்களில் ஒரு கண்ணாடி அணிந்த உருண்ட முகமும் தான் அவருடைய அடையாளங்களாக இருகின்றன. இதற்கு மீறின அவருடைய வாழ்க்கை சார்ந்த குறிப்புகளில் ...
                                                   www.amazon.com 304 × 500 Search by image இடியட் நாவலின் இந்த அட்டைப் படம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. கதையின் நாயகன் மிஷ்கினுக்குள் இருக்கும் ஆன்மாவை வெளிக்காட்டுகிற சித்திரம் இது. நாவலை வாசிக்கும் முன்பு இச்சித்திரத்தை பார்க்கும் போதெல்லாம் புதிய ஏற்பாட்டில் வருகின்ற சம்பவம் ஞாபகம் வரும். இயேசு கிறிஸ்து கடலின் மறுகரைக்கு தன் சீடர்களுடன் படகில் செல்லுவார். புயல் காற்றும் கடல் கொந்தளிப்பும் மூர்க்கமாக இருக்கும். இயேசுவோ நிம்மதியாக படகில் உறங்கிக் கொண்டிருப்பார். மீதி என்ன நடந்தது என்பது நமக்கே தெரியும். அக்கரைக்கு சென்றவுடன் பேய்பிடித்த ஒருவனை இயேசு குணமாக்குவார். குணமாக்கப் பட்ட நிலையில் இருக்கும் மனிதான் இந்த அட்டைப் படத்தில் இருக்கும் மிஷ்கின். குழப்பத்திலும் கொந்தளிப்பிலும் இருந்து விடுபட்ட ஆன்மாவின் நிலை தான் மகிஷ்கினின் இந்த நிலை. இது பைத்தியத்தின் நிலையும் அல்ல தெளிந்த மனதின் நிலையு...

கிழவனும் கடலும்: பரிசோ இலக்கோ இல்லாத நம்பிக்கையின் பயணம்

starashbraswell.wordpress.com 640 × 513 Search by image   starashbraswell  கிழவனும்  கடலும்: பரிசோ இலக்கோ இல்லாத நம்பிக்கையின் பயணம் இலக்கியத்தில் இசங்கள் பல வந்த பிறகும் ஹெம்மிங்வே மாத்திரம் தன்னை ஒரு குறிப்பிட்ட வகைமைக்குள் தினித்துக் கொள்ளாமல் தனித்து நிற்கும் படைப்புகளை தந்தவர். ஜேம்ஸ் ஜாய்ஸ் போன்றவர்கள் தங்களுடைய புனைவுகளில் ஒரு குறிப்பிட்ட மனோவியல் உத்தியை கையாளாமல் இருந்திருந்தால் அவர்கள் படைப்புகள் ஆரம்ப நிலையில் இருந்த யதார்த்த புனைவுகளாக தான் இருந்திருக்கும். யதார்த்ததிற்கும் மீறிய பரிசோதனை முயற்சி மாத்திரமே அவர்களை தனித்து நிற்பவர்களாக காட்டியது. எட்மன்ட் வில்சன் என்ற விமசர்சகர் ஜாய்சின் யுல்லிசஸ் பற்றி விவாதிக்கும் போது, நனவோடை உத்தியை மீறி ஜாய்சிடம் இருப்பது வெறுமனே மேடம் பொவாரி கதை மாத்திரம் தான் என்று கூறுவார். இந்த மேடம் பொவாரி என்ற யதார்த்ததிற்கு மீறி யுல்லிசஸில் இருப்பது நனவோடை உத்தியால் மாத்திரமே. இதைப் பற்றி பேசுவதானால் நவீனத்துவம் என்ற ஒரு இயக்கத்தின் தீவிரத்தினால் ஏற்பட்ட இலக்கிய படைப்புகளை தாழ்த்தி பேசுவது என்பது அல்ல. மாறாக இவ...

போரும் அமைதியும்: ஈடேறிய கனவு

ஞாயிறு இரவு ஒரு மணிக்கு போரும் அமைதியும் நிறைவுற்றது. இதை வாசித்து முடிப்பதே வாழ்கையின் இலட்சியமாகக் கொண்டிருந்தேன். இப்போது பெரும் நிம்மதி. இனி அமைதியாக மற்ற பிரதிகளில் பயணம் செய்யலாம். இக்காவியத்தை வாசித்து முடிக்க எனது முதுகலை இரண்டாம் ஆண்டில் முயற்சி செய்தேன். நல்ல வேலை அது ஈடேராமல் போய்விட்டது. அப்போதைக்கு ஆறுதலாக   Dumasன் Count of Monte Cristo வை மாத்திரம் முழுவதுமாக வாசித்து முடிக்க முடிந்தது. அது ஒரு இளம் வாலிபனின் சாகசக் கதை. எனது வாசிப்பில் அது ஒரு மைல் கல். பல நீண்ட வருடங்களாக போரும் அமைதியும் ஒரு ஈடேராதக் கணவாகவே இருந்து வந்தது. பயணத்தின் அடுத்த சந்திப்பாக தாஸ்தாவஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் என்னை அதிகம் பாதித்தது. அது ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் என்னை தாஸ்தாவஸ்கி பைத்தியமாக்கி விட்டது. காரணம் அது மனிதனின் ஆழத்தையும் அதின் நிஜத்தையும் பற்றிய ஒரு மாபெரும் தத்துவ அலசல்/தேடல். தாஸ்தாவஸ்கியின் உலகத்தை எட்டிப்பார்ப்பது என்பது பாதாளத்தின் ஆழத்தை எட்டிப் பார்ப்பது போன்றதாகும். அதில் பயணிக்க மரணம் என்ற நுழைவு வாயிலை நாம் கடந்தாக வேண்டும். உண்மையில் அது ஒரு எல்லையற்ற பாதாள...

டால்ஸ்டாய் என்கிற காந்தியப் புனிதம்

www.catchnews.com 730 × 419 Search by image டால்ஸ்டாய் என்கிற காந்தியப் புனிதம் நேற்று நண்பர் ராஜனுடன் டால்ஸ்டாய் பற்றி உரையாடிக்கொண்டிருந்தேன். ஒரு ரஷ்ய எழுத்தாளன் எவ்வாறு தன் படைப்புகளின் மூலம் இந்திய தேசத்தின் மகாத்மாவை உருப்பெறச் செய்தார் என்பதைப் பற்றியதாய் இருந்தது அந்த உரையாடல். மெல்ல பேச்சு அம்பேத்கரிடம் திரும்பியது. இதுவரை தலித்திய பார்வையில் அம்பேத்காரைக் கொண்டு காந்தியைக் கண்டவர்கள் அவரை ஒரு தீமையின் வடிவமாகத்தான் கண்டனர். இடது சாரிய பார்வைக்கு (பெண்ணியம் உட்பட) அவர் ஒரு தீமையின் உருவம் தான். எனக்கும் இதில் அதிக உடன்பாடு இருந்தது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை இம்மாமனிதனை என்னால் ஒரு சாதாரண மனிதனாக அடையாளம் காண முடியவில்லை. நம்முடைய பிழையெல்லாம் நாம் அவரை மகாத்மாவாக ஆக்கி விட்டதுதான். மகாத்மா தவறு இழைக்கும் போது நம் மனது இயல்பில் அம்மாமனிதனை தீமையின் உருவமாக கண்டு விடுகிறது.

கதையின் முடிவுக்கு வந்து விட்டீர்கள்: வாசகனில் ஒளிந்திருக்கும் குற்றவாளியை நோக்கிய தேடல்

கதையின் முடிவுக்கு வந்து விட்டீர்கள் : வாசகனில் ஒளிந்திருக்கும் குற்றவாளியை நோக்கிய தேடல் அபிலாஷின் சமீபத்திய நாவலான கதையின் முடிவுக்கு வந்து விட்டீர்கள் நாவலை வாசிக்கும் போது அதை ஒரு குறிப்பிட்ட நாவல் வகைமைக்குள் புகுத்துவது என்பது சிரமமான காரியமாக இருக்கிறது . இது துப்பறியும் நாவலா , திரில்லர் வகைமையா அல்லது வெறுமனே நாவல் மட்டுமா என்ற கேள்வி எழுந்துகொண்டிருக்கிறது . எழுத்தாளன் இந்த வகைமையில் தான் தன் கதையை பரிசோதிக்க போகிறேன் என்று முயற்சி செய்து ஒரு கதையை உருவாக்கி விடுகிறான் ஆனால் கதை தான் எதிர்பார்த்த வகைமைக்கு மீறி எதுவும் அல்லாத ஒரு வகைமையில் நிற்கிறது . இதற்கு காரணம் கதையை பரிசோதனை என்ற முயற்சியில் செய்ததினால் உண்டானதாகும் . விளைவு வகைமைப்பாட்டிற்கு வெளியில் பிரதி தன்னை நிறுத்திக் கொள்கிறது . இங்கு கேள்வி பரிசோதனையில் படைப்பிற்க்கான உயிர் அதில் தக்கவைக்கப்படுகிறதா அல்லது பரிசோதனையில் எதுவும் அற்ற நிலையில் நிறுத்தப்படுகிறதா என்பதுதான் .