Skip to main content

Posts

மொழி எனும் சுயேச்சை அதிகாரம்

உலகத்தில் எங்கேயோ யாராலோ பயன்படுத்தப்படும் மொழி ஏதோ ஒருவகையில் மற்ற இடங்களில் உள்ளவர்களுக்கும் புரியும்படி செய்தாக வேண்டும். மொழி பெயர்ப்பு இதனை சாத்தியப்படுத்திக் கொண்டு வருகிறது. மொழிக்கு மொழி நடக்கும் உரையாடல் இது. ஒரே இடத்தில் புழக்கத்தில் இருக்கும் மொழி அவ்விடத்தில் உள்ளவர்களுக்கே புரியவில்லை எனில் பிரச்சனை கெட்பவரிடத்தில் இல்லை. மொழியைப் பயன்படுத்துபவரிடம் இருக்கிறது. அடிப்படையில் மொழியின் இயங்கியல் உரையாடலுக்காகவே இருக்கிறது. ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும்வண்ணம் ஒலி வடிவில் மனிதன் கண்டடைந்த மகத்தான உரையாடல் கருவிதான் மொழி.

கீழ் வானம் சிவக்கும்

கீழ் வானம் சிவக்கும் பெட்ரிசியன் கல்லூரியில் Phantasia என்னும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்களே முன் நின்று  நடத்தும் நிகழ்வு இது. பேராசிரியர்களின் உதவியும் தேவைப்பட்டதால் எங்கள் பங்கிற்கு Face Painting நிகழ்வை ஒருங்கிணைக்கும் வாய்ப்பு எனக்கும் மற்றொரு பேராசிரியருக்கும் கிடைத்தது. போட்டியின் Judge ஆக வந்தவர் ஓவியர் சுஜித் குமார் கந்தன். இளங்கலை மற்றும் முதுகலை ஓவியம் பயின்றவர். இவ்வளவுதான் அவரைப் பற்றி எனக்கு கிடைத்த முன்தகவல். அவர் வரும் வரை அவரைப் பற்றியும் அவரது ஓவியங்கள் பற்றியும் அறிய கூகுளில் சொஞ்சம் நேரம் செலவழித்தேன். அவர் வந்தவுடன் கல்லூரி முதல்வரிடம் அறிமுகம் செய்துவிட்டு, சிறிது நேரம் அவருடன் உரையாடினேன். ஓவியர்களுடனான என் உரையாடல்களில் அதிகம் பேசு பொருட்களாக இருப்பவை இரண்டு: ஒன்று நீல நிறம், மற்றொன்று கியூபிசம். இவ்விரண்டைப் பற்றியும் எவ்வளவு பேசினாலும் அல்லது கேட்டாலும் சோர்வடைய செய்யாதவைகள். புலப்படும் நிறமும்  உருகொண்ட Geometry வடிவங்களும் ஓவியத்தை எப்போதும் புத்தம் புதிதாக காட்டி கொண்டே இருக்கும். புரிதல்கள் புதிது புதிதாக ஓவியத்தைப் பற்றி ஏற்பட்டுக் ...

பிரதிபிம்பம்: கண்ணாடியில் கண்கிறது போலக் கண்டு

பிரதிபிம்பம்: கண்ணாடியில் கண்கிறது போலக் கண்டு அழகு என்பதை வரையறை செய்ய தான் அல்லாத மற்றொன்று அவசியப்படுகிறது. தன்னிலையில் எது ஒன்றும் தன்னுடைய மதிப்பை அறிந்திருக்க முடியாது. பொருள் ஒன்றின் மதிப்பை அறிய மற்றமையின் நிலை அவசியப்படுகிறது. அல்லது தான் என்ற ஒன்றே மற்றமையின் நிலையில் நின்று தன்னையே பார்க்க வேண்டி இருக்கிறது. எது ஒன்றுக்கும் பிரிதொன்றின் இருப்பு அவசியமாகிறது. பிரதிபிம்பத்தையே உதாரணமாக சொல்லலாம். ஒருவர் தன்னை தானே பார்த்துக் கொள்ளும் வரை தான் இன்னார் என்ற பிரக்ஞை அவருக்கு ஏற்படுவதில்லை. தன்னைக் காணும் போது மாத்திரமே அவர் தன்னிலையை அறிகிறார். அதுவரை மற்றவர் பற்றின பிரக்ஞையே அதிகம் மேலிடும். எது ஒன்றின் அழகும் அப்படிப்பட்டதுதான். இதைப் பற்றி பொருள் பட புறிந்து கொள்ள வேண்டுமெனில் Fairy Tale ஒன்று உதவியாக செய்யும். கதையின் தலைப்பு ”மூன்று கண் சகோதரி, ஒற்றைக் கண் சகோதரி, இரண்டு கண் சகோ

சொற்கள் உண்ட செய்தி

சொற்கள் உண்ட செய்தி மூடி மறைப்பதற்கு அந்தரங்க ரகசியங்களும் இல்லை, ஊரே அறியும்படியான வெளிப்படையான உண்மைகளும் இல்லை. பொய்கள் உண்மையென நம்பப்படுகின்றன. உண்மை தர்க்கங்களால் நம்பும்படியான பொய்யாக உருமாற்றம் அடைகிறது. உண்மை/பொய் என்ற பெயரிடுதலே கூடிய சீக்கிரத்தில் அபத்தமாகிவிடும். எஞ்சியிருப்பது இரண்டு மாத்திரமே – இரகசியம், வதந்தி. பொருள் ஒன்றின் உண்மைத்தன்மையை அல்லது அதன் பொய்மையை அறிய/அடைய இந்த இரண்டு வழி பாதைகள் வழியே பயணிக்க வேண்டியிருக்கிறது. நிச்சயம் சென்று சேரும் இடம் இந்த இரட்டை நிலையங்களாகத்தான் இருக்கும். பொருள் ஒன்று தன்னை ஏதுமற்ற நிலையில் நிறுத்திக் கொள்ள முடியாது. தன் இருத்தலை மெய்ப்பிக்க பெயர் சுட்டிகளான உண்மை, பொய் என்பன அவசியப்படுகின்றன. ஒன்றினை சரி என்று முடிவு செய்து திரும்பிப் பார்க்கும் போதே அது பொய் என வேறொருவரால் மெய்ப்பிக்கப் பட்டுவிடுகிறது. ”சரி, நீ பொய் என்று ஒப்புக்கொள்கிறேன்” என்ற நிலைக்கு வரும் போது மெய்ப்பொருள் மூர்க்கம் கொண்டு சண்டைக்கு வந்துவிடுகிறது. இது புதிர் விளையாட்டு.

The Stately Ruler

The Stately Ruler Certain objects always seem to be the species of past. They remain not of the time which has been faded by the rhythmic ‘tick’ of the clock. They stay in the remote corner of one’s memory. When silence engulfs the memory, solitude gives life to the past and brings it to the present with an exquisite beauty. People may call it by the names ‘nostalgic’ and ‘memoire’. When an object of the past comes to the present in such a fashion it brings everything of the past and enchants the one who ponders it. If anyone thinks about the ‘ruler’ it must be the matter of reminisce.

இடைவெளி

சிறுபத்திரிகை விதை போன்றது அது எப்பேர்ப்பட்ட பாறையையும் உடைத்துக் முளைத்து  கொண்டு  வெளிவந்துவிடும் என்று கி ரா சொல்லக் கேட்டிருக்கிறேன். இப்போது இடைவெளி இதழின் ஆசிரியர் குழுவில் இருப்பது பெரும் மகிழ்ச்சி. நண்பர் சேது டார்வினுடன்  (#Sethu Darwin) உரையாடலில் விளைந்த ரணாடே கட்டுரையும் இதில் வெளிவந்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி. கட்டுரைகளை வெறும் கதை கவிதைகள் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறோமே இதைத் தவிர்த்து பிரதிக்கு வெளியே இருப்பதைப் பற்றி எழுத நம்மால் இயலாதோ என்ற ஆதங்கம் இருந்ததுண்டு. இக்கட்டுரை அதனை நிவர்த்தி செய்து வைத்தது. இலக்கியத்தின் வழியே ரணாடேவைப் பற்றி எழுதிய இலக்கியம் சாராத எனது முதல் கட்டுரை இது. எழுதி பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆசிரியர் குழுவில் கிடைத்த நண்பர்கள் நமக்கு மற்றுமொரு புதிய ஆரம்பம். நண்பர்கள் அடிக்கடி சந்தித்து உரையாடியதில் இதற்கு முன்பு வரை பயந்து கொண்டு தொடாமல் விட்டு வைத்திருந்த போர்கே கைவசமானார். ஆசிரியர் குழுவின் கூடுகையில் ஒவ்வொரு சந்திப்பும் புதிய புதிய திறப்புகளை உண்டாக்கிக் கொண்டே இருக்கின்றன. என் மீது நம்பிக்கைக் வைத்து ஆசிரியர் குழுவில் என்னை...

சந்தி கிழவனின் பாக்கு வெட்டி

சந்தி கிழவனின் பாக்கு வெட்டி பித்தன் பாக்கு வெட்டியைப் பற்றி கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். கட்டுரை காணாமல் போன பாக்கு வெட்டியைப் பற்றியது. பாக்கு வெட்டி கவிஞரின் உதவிக்காரனா அல்லது உண்மையிலேயே பாக்கு வெட்டி வெறும் இரும்பு கருவியா என தீர்க்கமாக சொல்லாமல் கட்டுரையை சிறிய அளவில் மாபெரும் சூட்சமமாக நீட்டுகிறார் பித்தன். வாசிக்கும் நமக்கு “பாக்கு வெட்டி” என்ற வார்த்தை விளையாட்டு படு ஜாலியாக இருக்கிறது. முதல் முறை வாசிக்கும் போது பாக்கு வெட்டி என்ற கருவியை மனதில் பதிய வைத்துக் கொண்டு வாசித்தால் கட்டுரை முழுவதும் பாக்கு வெட்டியின் பிரஸ்தாபம்   மேலிடுகிறது. வாசிப்பு மேலும் போக போக பாக்குவெட்டி   கருவியில் இருந்து ஒரு நபராக உருவெடுக்கிறது. கட்டுரை முடியும் போது “பாக்கு வெட்டி என்பது ’அது’ அல்ல ’அவன்’ என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இவர் என்ன கட்டுரையில் கவிதை எழுத ஆரம்பித்துவிட்டாரே என சிரிப்புத்தான் வருகிறது. கட்டுரைக்குள் கவிதை.

Elegy is an Old Women’s Business

Elegy is an Old Women’s Business Modern life is fleeting phantom. It vanishes from our sight in the blink of our eyes.   It can be further defined with the word “instant”. Instant in a sense that it demands everything at ready hand. It cannot go to raw material and processes it into the fine product for the consumer. What that left to the user is the processed material and with that processed material farther cooking needs to be done for the taste. Theuser of the product needs to over-process it once again. Hence, twice is the process.   

Hello Myshkin

Hello Myshkin How could one keep silent when an extraordinary event takes place in front of him?   Or an eminent person appears in an unexpected moment? He has to report it to at least five or ten of his associates. The thrill will be kept in its vigor for three days. After that the excitement will be extinguished like a dying flame. Only the thin beam of ascending smoke will be the living reminiscence. The story will be narrated like ‘once upon a time I met an eminent person on the seashore of ‘Nellankarai’.

To Be or Not To Be

To Be or Not To Be எழுத்தாளர் கட்டியங்காரன் தற்போதைய நவீன தமிழ் இலக்கியத்தில் தவிர்க்கமுடியாத ஆளுமை என உருவாகிவருகிறார். எங்கள் men Friday வாசிப்பு குழுமம் இவரை ஒரு மாபெரும் படைப்பாளியாக உருவாக்கும் பொருட்டு இலக்கிய தீனி போட்டு வளர்த்து வருகிறது. இவர் கதை எழுதுவதைப் பார்த்தால் பித்தனுக்கும், சு ரா வுக்கும் சற்றும் சளைத்தவர் அல்ல என்பது தெரிகிறது. கூட்டங்கள் என வெளியில் உலாவக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லியிறுக்கிறோம். எந்த இலக்கிய நிகழ்ச்சிக்கும் அவர் போக(வே)க் கூடாது என்பது குழுமத்தின் கட்டுப்பாடு. காலம் கெட்ட கெடப்பில் அரசியல் சார்பு மூளையில் ஒட்டிக்கொள்ளும். அதுவும் கோட்பாடற்ற அரசியல். மானுடதைப் பற்றி 'எழுதுய்யா' என்றால் தத்துவம், கருத்தியல், கோட்பாடு என எதையாவது உளறிக் கொண்டிருப்பார். 

மராட்டின் மரணம்: கலை பிரச்சாரத்திற்கே

மராட்டின் மரணம்: கலை பிரச்சாரத்திற்கே மராட்டின் மரணம் என்ற ஓவியம் Slovene சிந்தனையாளர் Slavoj Zizekன் மூலம் அறிமுகமானது. மராட் பிரென்ச்சு புரட்சியின் அங்கத்தினன். கோர்டே என்ற பெண் இவனை சாகும்படி நெஞ்சில் கத்தியால் குத்திவிடுகிறாள். கொலை செய்த பின்பு தப்பி ஓடாமல் அங்கேயே படபடப்பில் நின்று கொண்டிருந்திருக்கிறாள். புரட்சியாளர்கள் அவளை பிடித்துக் கொண்டுபோய் கொன்றுவிடுகின்றனர். இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு மராட்டின் நண்பனான ஓவியர் ழாக்-லூவிஸ் டேவிட் சம்பவத்தை ஓவியமாக தீட்டுகிறார். இந்த ஓவியம் பத்திரிக்கையாளன் மராட்டின் மரணம் என்றழைக்கப்படுகிறது. ஓவியர் டேவிட்   ’ரோபஸ்பியரின் தூரிகை’ என்று செல்லமாக அழைக்கப்பட்டிருக்கிறார். மராட்டின் மரணம் இவரை பெரிதும் பாதித்திருக்கிறது. வெறுமனே தன்னுடைய நண்பனுடைய மரணம் என்பதாக அவர் இம்மரணச்சம்பவத்தை அணுகவில்லை. அது ஒரு புரட்சி சிந்தனையின் மரணமாக அவர் அதனை பார்த்திருக்கிறார். நண்பனுடைய மரணத்தை ஓவியமாக்குவதில் பிரச்சனை ஒன்றும் பெரியதாக இல்லை. அப்படியே சம்பவத்தை பத்திரிக்கை செய்தியை போன்று தத்ரூபமாக வரைந்துவிட்டுப் போய் இருக்கலாம். ழா...

Madam Tussuads அருங்காட்சியகத்தின் மெழுகு உருவப்படிமங்கள்: நெப்போலியன் என்கிற புலிகேசி மன்னர்

53 best Madame Tussaud images on Pinterest | Madame tussauds, Wax ... Madam Tussuads அருங்காட்சியகத்தின் மெழுகு உருவப்படிமங்கள்: நெப்போலியன் என்கிற புலிகேசி மன்னர் எந்தவித முன் தகவலும் இன்றி ஓர் இடத்தையோ நபரையோ சென்று பார்க்கும் போது இடமும் நபரும் அடையாளமற்று ஆர்வத்தை தூண்டாமல் இருப்பார்கள். பிரமிப்பும் ஆர்வமும் முன் தகவலின் பேரில் ஏற்படுகின்ற ஒரு மனக் கிளர்ச்சியோ என தோன்றுகிறது. அது வைரமே என்றாலும் பாராட்ட வைரம் என்ற முன் தகவலும் அறிவும் அவசியப்படுகின்றன. அது இல்லாத பட்சத்தில் வைரம் வெறும் கண்ணாடி. பார்வையிடுபவர் முன்பு ஒரு பொருள் ஜடமாக நின்று கொண்டிருக்கும் போது (உயிர் கொண்ட - உயிர் அற்ற) அந்த இரண்டு பேர்கள் மத்தியிலும் எந்த உரையாடலும் நடைபெறுவதில்லை. உயிர் கொண்டவரை கிளர்ச்சியூட்ட ஜடப்பொருள் அசைய வேண்டும். இல்லையென்றால் தன்னை பார்க்க வருபவர் தன்னைப் பற்றின முழு அறிவையும் பெற்றிருக்க வேண்டும். முன்னறிவு ஜடப்பொருளை அசையச் செய்கிறது. இல்லை என்றால் சூன்யத்தை ஜடப்பொருள் தன்னைச் சுற்றி வளையமிட்டுக் கொள்ளும். பல மணி நேரங்கள் முறைத்துப் பார்த்தாலும் அமைதியில் இருவரும் நிலைத்திருப...

மலேசியா சிங்கப்பூர் பயணம்: வீடு திரும்புதல்

மலேசியா சிங்கப்பூர் பயணம்: வீடு திரும்புதல் பெட்ரிசியன் கல்லூரி பேராசிரியர்களின் மலேசிய சிங்கப்பூர் சுற்றுலா பயணம் இன்றோடு (7/5/2018) முடிவடைகிறது. வீடு திரும்புகின்றோம். எனக்கு சிங்கப்பூரை விட்டு போகிறோமே என்ற பிரிவின் வருத்தமும் இல்லை சென்னைக்கு போகிறோம் என்ற மகிழ்ச்சியும் இல்லை. ’யாதும் ஊரே யாவரும் கேளீர்’ எனும் மனநிலை இப்போது.

சிங்கப்பூர் பயணக் குறிப்பு (2) (Gardens by the Bay (Flower Dome + Cloud Forest): தேனீக்கு தெரியுமா மலரின் வாசனை

சிங்கப்பூர் பயணக் குறிப்பு (Gardens by the Bay (Flower Dome + Cloud Forest): தேனீக்கு தெரியுமா மலரின் வாசனை தூரத்தில் இருந்து பார்க்கும் போது கண்ணாடி மூடியால் மூடப்பட்ட இரண்டு மாபெரும் குமிழ்கள் தென்படுகின்றன. அதற்கு அந்தப்பக்கம் உயர்ந்த கட்டிடத்தின் மீது கப்பலை நிறுத்திவைக்கப்பட்ட வடிவத்தில்  7 நட்சத்திர ஓட்டல். இந்தப்பக்கம் இராட்சத சக்கரம். இவ்விரண்டையும் பார்த்துக் கொண்டே கண்ணாடி மூடிக்குள் செல்கிறோம். வாயிலில் நுழையும் போதே ஆயிரம் பூக்களின் வாசம் ஒன்று சேர்த்து கிரங்கடிக்கிறது. எது எந்த மலரின் வாசனை என்று ஊகித்தறியமுடியாத கலவை அது. நம் நுரையீரல்கள் அது போன்றதொரு வாசத்தை இதுவரை சுவாசித்திருக்காது என நினைக்கிறேன். ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கண்ணுக்கும் நுரையீரலுக்கும், மனதுக்கும் உகந்த காட்சி, வாசனை, இதம். எத்தனைவிதமான மலர்கள்! பார்த்து இனம் கண்டுபிடிப்பதற்கே மாதங்கள் செலவழியும்.    

மலேசியா பயணக்குறிப்பு (3): ஒரு பூவும் சிறு குருவியும்

மலேசியா பயணக்குறிப்பு (3): ஒரு பூவும் சிறு குருவியும் The Waste Land கவிதையில் எலியட் லண்டன் நகரத்தின் துரிதமான காலை நேரத்தைப் பற்றி பேசுவார். கூட்டமாக வேலைக்கு செல்லும் கும்பலில் தானும் ஒருவராக ஒருவருக்கு ஒருவர் பரிட்சயம் அற்ற நிலையில் கூட்டதில் தனிமையில் தலை கவிழ்ந்து நடந்து செல்கிறார். அக்கூட்டத்தில் ஒருவரை மாத்திரம் பார்த்து "There I saw one I knew, and stopped him, crying: “Stetson!" என்று கத்துகிறார். மாபெரும் கூட்டதில் தனிமையில் பிடித்த ஒருவரை பார்க்கும் போது ஒரு நிம்மதி பெருமூச்சு. கவிதையில் அவர் சந்தித்த நண்பர் எஸ்றா பௌன்ட் என எங்கள் பேராசிரியர் சொல்வார். அதே போன்றதொரு நிம்மதி பெருமூச்சு மலேசியாவில் எனக்கு எற்பட்டது. எலியட் கண்ட உற்ற நண்பனை பார்த்த நிம்மதி போன்றது அது. நான் பார்த்தது ஒரு பூவைம் ஒரு குருவியையும். எப்படி அந்த பாம் மரங்கள் மலேசியவைப் பற்றின ஒரு பிம்பத்தை எற்படுதுகிறதோ அதே போன்றதொரு மலேசியா பற்றின பதிப்பை இந்த இரு அழகுச் சித்திரங்கள் ஏற்படுத்தின. காலை உணவுக்காக விடுதிக்கு சென்ற போது இவர்கள் இருவரையும் கண்டேன். விடுதிக்கு ஒருவித செடியினால் வேலி அமைத்த...

சிங்கப்பூரில் சிட்டுக்குருவிகள் மத்தியில்: காக்கை குருவி எங்கள் ஜாதி (சிங்கப்பூர் பயணக் குறிப்பு 1)

சிங்கப்பூரில் சிட்டுக்குருவிகள் மத்தியில்: காக்கை குருவி எங்கள் ஜாதி (சிங்கப்பூர் பயணக் குறிப்பு 1) இன்று சிங்கப்பூர் சுற்றுளாவின் இரண்டாம் நாள். இராட்சத சக்கரத்தில் சாகச பயணம். அதற்கு முன்பு கடல் ஓரத்தில் கடல் கோள் பகுதியை நிலமக்கிய பிரம்மாண்ட இடத்தில் சிறிது நேர பார்வையிடல். மனித முயற்சியின் பிரம்மாண்டம் இப்பகுதி. இயற்கையின் பிரம்மாண்டம் எனக்குள் பிரமிப்பை உண்டாக்கும். ஆனால் மனிதனுடையதோ தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி என்னையே அறியாமல் தும்புறுத்திக் கொல்லும். எல்லாவற்றையும் பார்த்து முடித்து கரையோரமாக கட்டிட மேடையில் நீர் நிலையை பார்த்தவாறு அமர்ந்திருக்கிறேன். சீனர் ஒருவர் ரொட்டித் துண்டுகளை வீசிக் கொண்டிருக்கிறார். புறாக்கள்  ஒன்று கூடி அவைகளை கொத்தித் தின்கின்றன. ஓரமாக காகம் தனக்கான சமயத்தை எதிர்பார்த்து கத்துக்கிடக்கிறது. இவர்கள் அனைவரின் சாப்பாட்டையும் காகம் ஒருவரே ஏப்பம் விட்டுவிடுவார் போலிருக்கிறது. இமைக்கும் நேரத்தில் மற்றொருவர் போட்டிக்கு வருகிறார். மிக மிக சீன்னஞ் சிறு குருவி - சிட்டுக்குருவி. அவ்வளவு பெரிய பருத்த உருவங்களை பொருட்படுத்தாமல் எல்லாம் எனக்கே என்று ...

மலேசியா, நம் கண்முன் விரியும் தேசம் (பயணக் குறிப்பு 2)

நம் கண்முன் விரியும் தேசம் ஓவ்வொரு நிலமும் அதற்கான தனித்துவத்தைக் கொண்டிருக்கிறது. அது அந்நிலதின் குறிப்பிட்ட வாழ்வியல் முறையாக இருக்கலாம் அல்லது அந்நிலத்தின் இயற்கை வளமாக இருக்கலாம். இவைகள் அனைத்தும் அங்கேயே பிறந்து வளர்ந்த ஒருவருக்கு ஒரு பொருட்டாகவே தெரியாது. மற்றமை என்ற நிலையில் இருந்து பார்க்கும் போது அந்த நிலத்திற்கு உரிய சிறப்பு அம்சம் தனித்துவமாக காணப்படும். இதற்கு அந்த மற்றமையின் நிலையில் இருந்து நம்மையும் அல்லது மற்றவரையும் பார்க்க வேண்டியிருக்கிறது. நீண்ட நாட்களுக்கு முன்பு காலனிய காலத்து இந்தியாவை சித்தரிக்கும் நாவலை ஒன்றை வாசித்தேன். நாவலில் உள்ள ஓரே ஒரு படிமம் இந்தியா என்றால் என்ன என்ற உணர்வை கொடுத்தது இங்கிலாந்தில் இருந்து துரைச்சானி அம்மாள் இந்தியா வருகிறாள். துறைமுகத்தில் இருந்து சத்தம் ஒன்று கேட்கிறது. நிலப்பகுதியில் இருந்து வரும் சத்தத்தை இவ்வாறு பதிவு செய்கிறாள்: ஆயில் ஊற்றப்படாத மாட்டு வண்டி சத்தத்தை முதல் சத்தமாக இந்தியாவுக்குள் நுழையும் போது கேட்டேன் என்று. துரு பிடித்த நிலையில் உள்ள கட்டை வண்டியின் சத்தம் எவ்வளவு தூரத்திற்கு நம் பண்பாட்டின் சத்தமாக அவர்களை ...

மலேசியா பயணக் குறிப்பு(1)

மலேசியா பயணக் குறிப்பு தினமும் நாம் கடக்கும் சாலை முக்கியத்துவம் அற்ற ஒன்று. மிகவும் பழகிப் போன மும்மரமான சில மணி நேரங்களுக்கான உலகம் அது. அது அன்றாடதின் பகுதி. பழமையின் சாரம் ஊறிப் போனது அந்த அன்றாடத்தின் அங்கம். ஒரு பொருளை வாங்கிய புதியதில் அந்த பொருளின் மீது நமக்கு இருக்கும் புதுமையின் பார்வை எப்படி நீண்ட நாட்களுக்கு பின்பு முக்கியத்துவம் அற்ற புளித்து போன ஒன்றாகி விடுகிறதோ அதே போன்று இந்த சொற்ப நேர பயணத்தின் பாதை பழமையுமாகவும் இல்லாமல் புதுமையாகவும் அல்லாமல் ஏதோ ஒன்றாக இருக்கிறது. இதுதான் யதார்த்தமோ? இந்த ஏதோ ஒன்றுதான் நாவலில் யதார்த்தவாதம் போலும். ஊர் பயணம் என்றதும் அதே சாலை திருவிழா கோலம் பூண்டு விடுகிறது. ஏன் இப்படி ஒரு மற்றம் பார்த்து பழகிய பொருளின் மீது எற்படுகிறது. இதே உணர்வை வித்தியாசம் வித்தியாசமாக நாவலாசிரியர்கள் தங்கள் படைப்பில் கொண்டுவருவதும் படைப்பின் சூட்சமம்தான். இப்பொது கடல் (இல்லை) விண் கடந்து வேறு தேசம் செல்கிறேன். பழகிய அன்றாடத்தின் சாலை நேராக மலேசியாவுக்கே போவது போல் தோன்றுகிறது. 

எனக்கு ஐந்து[1] வயதிலேயே டால்ஸ்டாயைத் தெரியும்

எனக்கு ஐந்து [1] வயதிலேயே டால்ஸ்டாயைத் தெரியும் சாலையின் திருப்புமுனையில் நின்று கொண்டு ஒருவர் கைப்பிரதிகளை விநியோகித்துக் கொண்டிருப்பார். வேண்டாம் என்று உதாசினம் செய்பவர்கள் பலர். வாங்கி ’ஜோபியில்’ (சட்டைப் பை) போட்டுக் கொள்பவர்கள் சிலர். ஐந்து நிமிடங்கள் அதில் உள்ள உள்ளடக்கத்தை வாசிப்பவர்கள் மிகச் சொற்பம். எத்தனை கதைகள்! அவைகளை வாசித்த பின்பு ஒருவர் இலக்கியம் படிக்க நேரிட்டால் அது டாஸ்டாய் கதை அல்லவா? தாஸ்தாவஸ்கி கதை அல்லவா? என்று ஆச்சரியப்படக் கூடும். அப்படி அந்த கைப்பிரதியில் இருந்து என் ஒன்றாம் வகுப்பில் படிக்கக் கேட்ட கதை இன்றளவும் அது டால்ஸ்டாய் கதையல்லவா? என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. டாட்ஸ்டாயின் அந்த கதையைப் இப்போது படிக்கும் போதெல்லாம் எனக்கு அந்த ஐந்து வயதில் கதை கேட்ட அனுபவம் அந்த கதையின் மீது மெல்லியதொரு உணர்வாக படர்ந்து செல்லும். கைப்பிரதிகளை வாங்கும் போதெல்லாம் நிச்சயம் ஒரு அருமையான கதை அதில் இருக்கும் என்ற நிச்சயம். வாங்கிய உடன் இரயிலில் ஓரத்தில் அந்த கைப்பிரதியில் இருக்கும் கதைக்கு கொஞ்சம் மரியாதை செலுத்தி வாசிப்பேன். இறைமைந்தன் ஒரு உவமை...

The Parentage of Royal Enfield

The Parentage of Royal Enfield To own a Royal Enfield or a Thunder Bird is a matter of prestige. It is not just a matter of someone showcasing his wealth. It is something else in which we cannot relate it with money. A person who owns this motor cycle need not to a rich man. He stands beyond the measurement of currency value. On the road if we happened to hear that thundering noise of the gigantic machine installed in that cycle we may imagine the personality of whom the cycle bears him on its cushion comfortably. It is indeed a matter of prestige to ride this vehicle. Various impressions cross through our mind on this motor cycle and riders come across our memory. They are from various moments and different stages of my life. First time I saw this bike in my village. To spend time in our village in the afternoon is an eerie experience. The dead silence engulfs the whole village in the noon. Village folk drive their cattle at 9am in the morning for the pasture. From nine to th...