Skip to main content

Posts

சொல்லும், செயலும்

வழிமுறை எதுவாயினும் பரவாயில்லை இலக்கை அடைவதுதான் முக்கியம். அடையும் வழிமுறை எப்படிப்பட்ட ஒழுக்க மீறலில் செயல்பட்டாலும் அது ஒரு பொருட்டே அல்ல. இலக்குதான் முக்கியம். இதனை ஒரு மதவாதி பேசவே துணிய மாட்டார். செய்வது ஒன்றாக இருந்தாலும் அதனை நியாயமாகவே அவர் முன் நிறுத்தி பேசுவார். மதம் எப்போதும் உண்மையை தன் ஆடையாக போர்த்திக் கொண்டு எந்தக் காரியத்தையும் செயல்படுத்தும். அது நன்மையாக இருக்கட்டும் தீமையாக இருக்கட்டும் தன்னை முன்நிலைப்படுத்திக் கொள்வது உண்மை என்ற சாதனத்தின் மூலமாகவே. மதம் சற்று சாரம் பொருந்திய வார்த்தையான ’தர்மம்’ என்ற பத்தத்தை பயன்படுத்திக் கொள்கிறது. அந்த வார்த்தையின் வைப்ரேஷன் சற்று கூடுதலானது. மதம் மாத்திரமே கையில் எடுக்கும் பதம். அறம், தர்மம் இந்த வார்த்தைகளை தொட தத்துவவாதிகள் வெட்கப்படுவார்கள். மதம் அவர்களுக்கு ஒவ்வாமையை உண்டாக்குகிறது. இந்த வார்த்தைகளைத் தொட சற்று நாணுவார்கள். அப்படியே பயன்படுத்திவிட்டாலும் அவர்களுடைய நிலைப்பாடே மாறிவிடுகிறது. மதத்தின் தளத்தில் தங்களைப் பொருத்திக் கொள்கிறார்கள். சொல்லும் சொல்லே ஒருவருடைய அடையாளமாகிறதோ? தத்துவவாதிகள் தர்மம், அறம், சத...

கரன் கார்க்கியின் ஒற்றைைப் பல்: நிணத்தின் வாடைவீசும் யதார்த்தவாதம்

கரன் கார்க்கியின் ஒற்றைப் பல்: நிணத்தின் வாடைவீசும் யதார்த்தவாதம் யதார்த்தவாதத்தைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் வெட்டி தோலுரித்து தொங்கவிடப்பட்ட மாமிசத்தின் மீது  எழும் நிணத்தின் வாடை நினைவிற்கு வரும். அனைவருக்கும் வாய்க்காத எழுத்தின் உத்தி யதார்த்தவாதத்தின் உத்தி. அதுவே உயர் கலை என கொள்ளலாம். வாழ்க்கை நம் கண் முன் தோலுரித்துக் காட்டப்படுகிறது. ஒருமுறை எழுத்தாளர் இமயத்திடம் பேசிக்கொண்டிருக்கும் போது யதார்த்தவாதம் பற்றி கேள்வி கேட்டேன். அவர் மிக இயல்பாக பதிலைத் தந்தார். பதில் கேள்வியாகவே இருந்தது. ”எழுத்தில் ஏது யதார்த்தம். பேனாவை தொட்டவுடனேயே கற்பனையில் இறங்கிவிடுகிறோமே?” இலக்கியத்தில் நாம் நினைக்கிற அதி தூய்மையான யதார்த்தவாதம் சாத்தியம் கிடையாது” என்று சொன்னார். எனினும் ரஷ்ய எழுத்தாளர் கார்க்கியைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் A 1 பீப் ஸ்டாலில் எழும் மாம்சத்தின் நிண வாடை நினைவில் எழும்பும். வாழ்க்கையை அதன் நிர்வாண நிலையில் முதன்மைப்படுத்துவது அது. அதனிடம் அணுகிச் செல்லுவதற்கு நமக்கு ஏனோ பயம். இது பிரதியை பிரித்து வாசிக்காமலேயே ஏற்படும் பாதிப்பு. அதுவே கரன் கார்க்கியின் ஒற்றைப...

ஆதித் தேடலும், செட்டிக்கடை வட்டியும்

ஆதித் தேடலும், செட்டிக்கடை வட்டியும் புலன்களுக்கு சிக்காத எதுவொன்றும் நம்மை அச்சமூட்டக்கூடியவை. அதுவே ஐம்புலன்களின் ஆளுகைக்குள் உட்படும் போது அச்சம் நீங்கி ஆளுகை செய்ய வேண்டும் என்ற ஆவல் மேற்கொள்கிறது. நாம் எவ்வளவு தீரர்கள் என்பது பொருட்டல்ல. நம்முடைய பிரக்ஞையில், உணர்வுகளில் உட்படும் போது அது நமதாக மாறிவிடுகிறது. வானத்தின் உயரமும் கடலின் ஆழமும் நம்மை எப்போதும் பிரமிக்க வைக்கக்கூடியவைகள். யாரேனும் ஒருவர் அவைகளின் எல்லையைத் தொட்டுவிட்டு வரும் போது அந்த ஒருவரின் அனுபவம் நம் அனைவரின் அகந்தையாக மாறிவிடுகிறது. அந்த ஒருவரின் எல்லையைப்பற்றியக் கண்டுபிடிப்பு நம்முடையதாகவும் மாறிவிடுகிறது. காரணம் இதுதான்: அதுவரை எல்லையே ஒன்று கிடையாது என்ற சூட்சமத்தில் வாழ்ந்துவந்தோம் அதனால் அச்சம் பீடித்திருந்தது. எல்லை ஒன்று உண்டு என சொன்ன பின்பு அச்சம் நீங்கி “இப்பிரபஞ்சம் என்னுடையது” என்ற கர்வம் ஏற்படுகிறது. முடிவே இல்லாத ஒன்றில் நம் அச்சத்தை எப்போதும் வைத்திருக்கிறோம். முடிவற்றதின் எல்லையைக் கண்டடையும் போது அதுவரை நாம் வைத்திருந்த அனைத்துக் கற்பிதங்களும் தகர்ந்து தர்க்கத்திற்கு உள்ளாகிறது. புலன்களுக...

மந்திரக்காரன் கார்சியா மார்க்கேஸ்

மந்திரக்காரன் கார்சியா மார்க்கேஸ் இலக்கிய வாசிப்புக்கு இனி எதுவும் கிடையாது என்று சொன்னால் சந்தோசமாக தண்டனையை ஏற்றுக் கொள்வேன். One Hundred Years of Solitude முடிந்துவிட்டது. கண்களை மூடிக்கொண்டு கனவு உலகத்தில் மிதந்தது போன்று இருந்தது வாசிப்பு அனுபவம். மூன்று நாட்கள் விடுமுறை. மழைக்காலமும் தோதாகிவிட்டது. புற உலகம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. இரண்டாயிரத்து பதினான்கில் இதே போன்றதொரு அனுபவம். இடைவெளிவிடாமல் The Idiot ஒரு நீண்ட கனவாக நான்கு நாட்கள் தொடர்ந்தது. மிஷ்கினின் க்ளைமேக்ஸையும் புயேந்தியாக்களின் க்ளைமேக்ஸையும் இனி மறக்கவே முடியாது. மார்க்வேஸ் தன் கதைகளில் ஜாலங்கள் செய்யும் ஒரு மந்திரக்காரன். இந்த இரண்டு நாவல்களை இரசனையோடு வாசித்தேன் என்ற அனுபம் ஒன்றே போதும். இன்னும் ஒருமுறை இவ்விரண்டையும் தமிழ் மொழிபெயர்ப்பில் முயற்சி செய்ய வேண்டும்.

Prey Searching White Birds

Prey Searching White Birds One can see thousands of birds camped on the bog land of “*******”. They are very busy by looking down into the marsh land searching for something. They look like the one who had lost his precious diamond on the open ground. Almost for entire day they are in that constant search. When the day is gone they go back to their nests. But their search is only on this marsh land. They come here and start their duty everyday. No one knows when they are going to discover their lost diamond. For this alone they take a long journey for this unending pursuit.

இஞ்சி குஞ்சி இடியாப்பங்கள்: டர்ர்ர்ர் புர்ர்ர்ர் டமால்

Photo: Greenhouse gases புரட்சியாகட்டும், கலகமாகட்டும் அது தனிமனிதன் சார்ந்த காரியம் அல்ல. ஒரு குழு கூடும்போது அதில் இருக்கும் ஒன்று அல்லது இரண்டு பேர்களுடைய தாக்கம்தான் அது. அவர்களுடைய ஆற்றலே முழு குழுவிற்குமான ஆற்றல். ஆரம்பிப்பது என்னவோ ஒரே ஒருவனிடத்தில் இருந்துதான் தொடங்குகிறது. பின்பு அது அனைவரையும் தொற்றிக் கொள்கிறது. இது தான் காலங்கள் தோறும் நடந்துவரும் புரட்சிகளின் நிதர்சனம். அந்த ஒரே ஒரு இயங்கு சக்தியை முடக்கிவிட்டால் முழு கூட்டத்தின் செயல்திரனும் ஸ்தம்பித்துவிடும். அந்த ஒற்றைப் புள்ளியை இனம் காணாமல் ஒரு பெரிய ஆற்றலை அணுகுவது காட்டுத்தீயை ஒரு வாளி தண்ணீரைக் கொண்டு அணைப்பதற்கு இணையானதாகும். இது ஆபத்தை விளைவிக்கும். ஒரு கூட்டத்தின் ஆற்றலை முடக்குவதற்கான வழி அதுவல்ல. கூட்டத்தில் ஒற்றையாக இருக்கும் மைய சக்தி அதுதான் மிக முக்கியம்.

விரியும் கனவுகளும், உருகும் மெழுகுச்சிறகுகளும்

அவனுக்கு மெழுகுச் சிறகுகள் கொடுக்கப்பட்டன. பறப்பதற்கான சுதந்திரம் அது. அதைக் கொண்டு எவ்வளவு அகலத்திற்கு வேண்டுமானாலும் அவன் பறக்கலாம். அதிக உயரம் மாத்திரம் கூடாது. எச்சரிப்பு அவன் தந்தையிடம் இருந்து வந்தது. செய்யாதே என்று சொல்லும் போதுதானே அதை செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது. அதுவே மனித இயல்பு. Icarus உயரத்தின் எல்லையை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் எச்சரிக்கையை தடையாகக் கருதாமல் தடையை விசாசலமான வாசலாகக் கருதி மெழுகு றெக்கைகளை படபடத்துக் கொண்டு மேல் நோக்கி இன்னும் அதிகம் இன்னும் அதிகமாக பறக்க ஆரம்பித்தான். கனவுகள் இன்னும் விரிய ஆரம்பித்தன. இன்னும் மேலும் மேலும் செல்ல உயர பறக்க ஆசை உந்தித் தள்ளியது. வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க மெழுகு வெப்பம் தாளாமல் உருக ஆரம்பித்துவிட்டது. சிறகுகள் உருகிக் கொண்டே அவன் பூமியின் மீது இறங்கிக் கொண்டிருந்தான். அவன் பூமியை நெருங்கும் போது பூமியின் குடிகள் அனைவரும் அந்த வீழ்ச்சியின் காட்சியை கண்டு கொண்டிருந்தனர். அன்று அந்த காட்சிக்கு பார்வையாகத கண்கள் எதுவும் கிடையாது. அவர்களுக்கு இருந்த ஒரே விசேஷித்தக் காட்சி அந்த வீழ்ச்சி மாத...

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்

How GW Can Grow 40K With 5 Marine Minis - Bell of Lost Souls belloflostsouls.net 730 × 828 Search by image முகம் ஒன்றுதான் அது அத்தனை உணர்வுகளுக்குமான நாடக மேடையாக திகழ்கிறது. எத்தனை அடுக்குகளிலான உணர்வுகள் அதன் மீது அரங்கேற்றப்படுகின்றன. அத்தனைக்கும் அந்த முகம் உயிர் கொடுக்கிறது. அந்த அரங்கேற்ற மேடை மாத்திரம் இல்லை என்றால் அத்தனை உணர்வுகளுக்கும் உயிர் அற்று போய் விடும். கோபம் இப்படித்தான் இருக்கும் என அதனை தனியாகத் துண்டித்துக் காட்டக் கூடியவர் யார்? கனிவு என்பதை அதன் இருப்பில் தனியாகத் துண்டித்துக் காட்ட முடியுமா? இவைகள் அனைத்துக்கும் முகம் என்ற நாடக மேடை அவசியப்படுகிறது. அனைத்து உணர்வுகளுக்குமான வெளியாக்கமாக முகம் இருப்பது இயல்பானது. அது அப்படித்தான் இருந்தாக வேண்டும். கோபம் வந்தால் உடனே அதனை வெளிப்படுத்தியாக வேண்டும். அன்பு என்றால் அதனையும் உடனே வெளிப்படுத்தியாக வேண்டும். இதில் ஒவ்வொருவரும் ஓவ்வொரு உணர்வை அதீதத்தில் வெளிக்காண்பிக்க பேர்போனவர்கள். அனைவரும் அனைத்து உணர்வுகளையும் சமச்சீர் விகிதத்தில் தங்கள் முகத்தில் திரையிடும் இயல்பு இல்லாதவர்கள். ஒரு மனிதனால்...

மிஸ்ட்டர் பேனா அமுக்கி

சென்ற வாரம் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் இருந்து கடிதம் ஒன்று வந்தது. என் வாழ்நாளில் இதுதான் எனக்கு வந்த முதல் கடிதம். அதாவது நீல நிற Inland letterல். ஆவலோடு பிரித்து வாசிக்க ஆரம்பித்தேன். வாசிப்பின் தொடர்ச்சியில் என்னை பயம் கவ்விக் கொள்ள ஆரம்பித்தது. அது ஒரு விமர்சனக் கடிதம். நான் எழுதிய “கூப்பிடுக்கள் புதுமைப்பித்தனை” கட்டுரைக்கான எதிர்வினை அது. கிழித்து தொங்கபோட்டுவிட்டார். எழுதிய கடிதத்தை அப்படியே என்னுடைய பிலாக்கில் பதிவிடும்படி உத்தரவும் போட்டுவிட்டார். சில வசவுகளை மாத்திரம் நீக்கிவிடுகிறேன் என்ற கோரிக்கைக்கு சம்மதம் தெறிவித்துக் கொண்டார். கடித்தத்தில் வந்த எதிர்வினை இதுதான். மிஸ்ட்டர் பேனா அமுக்கி, விலை உயர்ந்த அந்த காமா பேனா அதிகம் இன்க் பிடிக்கும் என்பதால் கண்டமேனிக்கு எழுதுவதை தவிர்த்தல் நலமாக இருக்கும். பேசும்போது நாவடக்கம் எவ்வளவு அவசியாமோ அதே அளவிற்கு பேனாவைக் கையாளும்போதும் அதிகம் அவசியம். தர்க்கம் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. “கொசுக்களை வடிகட்டி ஒட்டகத்தை விட்டுவிடுகிறீகள்”. நான் ஒட்டகம் என்று சொன்னது வணிக இலக்கியத்தைப் பற்றினது. கொசுக்கள் என்று சொன்னது சீரி...

ஒழுக்கம் என்னும் ஒற்றைக் கோடு

சாராயம் அருந்தாத ஐந்து பேரை கிராமங்களில் பார்ப்பது அரிது. மதுவுக்கு அடிமையானவர்கள்/ஆகாதவர்கள் என்று வேறு பிரித்து வைத்து பார்க்கிறோம். இதனை அதிகம் ஒழுக்கத்தோடு தொடர்புப்படுத்தி பார்த்துவிட்டோம். ஐந்து பேர் மாத்திரம் சாராயம் குடித்துவிட்டு மற்ற ஆண்கள் அனைவருமே யோக்கியர்களாக இருந்தால் அந்த ஐந்து பேரை ஒழுக்கத்தின் சாட்டையால் தண்டித்துவிடலாம். இப்போது பிரச்சனை ஐந்து பேர் யோக்கியர்களாகவும் மற்ற அனைத்து கிராமத்தார்கள் குடிகாரர்களாகவும் இருப்பது நம்மை யோசிக்க வைக்கிறது. அந்த ஐந்து பேரைக் கொண்ட குழு இயல்பானதா? அல்லது ஊர் முழுக்க குடிகாரர்களாக இருப்பது இயல்பானதா? என்பதும் கேள்வியே. இந்தக் கேள்வி என் சிறுவயதுமுதல் கேள்வியாக இல்லாமல் ஒருவித குழப்பமாகவே இருந்து வந்திருக்கிறது. அந்த ஐந்து பேர் மாத்திரம் ஏன் விதிவிலக்காக இருக்கிறார்கள் என்பதுவும் ஆச்சரியமூட்டுகிறது. அவ்வளவு சுய கட்டுப்பாடு கொண்டவர்களா அந்த ஐந்து பேர்கள்? இமயம் தன்னுடைய சிறுகதை ஒன்றில் “ஏன் எங்கள் தெரு பெண்களுக்கு மாத்திரம் பேய் பிடிக்கிறது?” என்ற கேள்வியைக் கேட்பார். அதே கேள்வியை நானும் “ஏன் அந்த ஐந்து பேரைத் தவிர்த்து மற்றவ...

Into this Silence of Watching

Into this Silence of Watching In my present reading of War and Peace there is a new perspective of life. I could see it through two insignificant characters.  One is the eight year-old boy and the other is a very old man. One is Natasha’s brother, heroine of the story, and the other one is the hero's (Prince Andrew) father. Tolstoy has knitted these characters into the novel in such fine fabric. They finely go along with the main texture of the novel. They cannot be removed from the larger texture. If these two threads are removed from the complete texture then it will unweave the whole fabric.

உசிலம்பட்டி காற்றாலையும், உள்ளூர் குயிக்சாட்டுகளும்

கள்ளிப்பட்டியானால் என்ன? காற்றாலைகளே இல்லாத உசிலம்பட்டியானால் என்ன? நம்முடைய கட்டுரையின் கருவின் கட்டாயத்திற்காக புனைவிற்காகவாவது ஒரே ஒரு காற்றாலையை நம்முடைய அசகாய வீரனுக்காக தற்காலிகமாக அங்கே நட்டுவைப்போமாக.    ஒரே ஒரு முறை புனைவில் ஒரு சாகச வீரன் அரக்கர்களை வீழ்த்த முயன்று தோற்று போனான். அந்த தோல்விதான் புனைவை யதார்த்தமாக்கியது. ஒருவேளை அவன் அந்த அரக்கர்களை அழித்திருந்தால் அவன் ஏறக்குறைய ஐநூறு நூற்றாண்டுகளுக்கு ஞாபகத்தில் இல்லாமல் போய் இருப்பான். அவனுடைய வெற்றி கற்பனைக்கதையாக வாசிக்கப்பட்டு என்றோ மறக்கப்பட்டிருந்திருக்கும். அவனுடைய தோல்வியும் அவனுடைய பார்வையில் இருந்த மாய வித்தையும் அவனை கோமாளியாக என்றென்றைக்கும் நம் நினைவில் வைக்க வேண்டிய கட்டாயமாகிவிட்டது. காலம் காலமாக இருந்து வந்த அந்த சாகச வீரம் அசட்டுத்தனமாக்கப்பட்டுவிட்டது. இதையெல்லாம் ஏற்படுத்தியது அந்த படைப்பாளியின் கதையாடல். அதுவரையில் என்றும் இல்லாத ஒரு கதையாடலையும் கதையையும் வைத்துவிட்டுப் போய் விட்டான். அது தன்னில் இன்றும் தனித்துவமாக நிலைநின்று கொண்டிருக்கிறது.

Four Legs Good Two Legs Bad

Four Legs Good Two Legs Bad I was reaching Velachary station. The speaker in the train announces that the station is the last one and requests the passengers to get down from the train. Such monotonous tone always irritates the passengers from station to station. Our professor often curses that female voice with an unparliamentarily word "*****". Now the question is what is special in it to speak about this incident in this essay? What is special in that announcement to register it in words? Yes, there is something special about my reaching Velachary and that ***** *****’s voice. The latter one is very less in significance. But the first one carries historical significance.

Piercing through the Wind

Nostalgic feelings of the nursery rhyme gush to one’s memory whilst the eye gazes at the night sky.  The floating pristine disc invites a dark man from Tamil Nadu, to sing the ever tiding "Nila Nila Odi Va". Rational faculties constantly fall short in studying this moment. Tales and songs usher one to cherish this unforgettable experience. Yet, trained culture merely reasons out ignoring nature. Culture of the learned demands only scientific observation of the starry night. 

அறிதலே அதிகாரத்தின் ஆரம்பம்

ஒரு பொருளை அதன் பௌதிக நிலையில் வைத்து அதனை விளங்கிக் கொள்ள முடியுமா என்பது சந்தேகமாக இருக்கிறாது. முதலில் அதனைப் பார்க்கிறோம், பின்பு அதனை மனதில் இருத்திக் கொள்கிறோம். இவ்வளவுக்கும் பிறகு அதனைக் கற்றல் என்ற அவசியம் ஏன் தேவைப்படுகிறது? ஒரு பொருளை, அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், பார்த்து அதனை மனதில் பதிய வைத்துக் கொண்டால் மாத்திரம் போதாதா? அதற்கும் மேல் சென்று ஏன் அதனை ஒரு பெயர் இட்டு படிக்கிறோம். இப்பிரபஞ்ச வெளியில் இருக்கும் அனைத்தையும் நாம் படித்தாக வேண்டுமா? படித்தல் மூலமாகத்தான் நாம் இவ்வுலகத்தையே அறிகிறோமோ? அப்படியெனின் அந்த அறிதல் என்பதுதான் என்ன?

நியூட்டனியத் தருணம்

நியூட்டன் பலமுறை அந்த மரத்தடிக்கு சென்றிருக்கலாம். அங்கு பழங்கள் விழுவது அவரது எண்ணங்களை ஈர்க்காமல் இருந்திருக்கலாம். அவருடைய கவனமும் அவைகள் மீது செலுத்தப்படாமல் இருந்திருக்கலாம். அந்த ஒரு நாள் மாத்திரம் சூழ்நிலை முற்றிலும் ஒருமித்து ஒரு மாபெரும் புதிய கண்டுபிடிப்பிற்கான தருணமாக அமைந்துவிட்டது. அது ஒரு கண்டுபிடிப்பிற்கானத் தருணம். இப்படித்தான் சொல்லியாக வேண்டும். அந்த ஒரு பொறிதட்டல்தான் ஒரு யுகத்திற்கான மாபெரும் கண்டுபிடிப்பை சாத்தியமாக்கியது. அதனையே மக்கள் நம்பவும் ஆரம்பித்தனர். இது போன்று ஒரு தருணத்தை என்னுடைய ஆய்வேட்டை பிரிண்ட் எடுத்து பைண்டிங் செய்ய பெல்ஸ் ரோட்டில் காம்லக்ஸ் ஒன்றிற்கு சென்றபோது ஏற்பட்டது. அது ஒரு நியூட்டனியத் தருணம் என்று சொல்லிக் கொள்ள முடியாவிட்டாலும் அது ஒரு அகவிழி திறந்தத் தருணம் என்றாவது சொல்லலாம்.

திருநெல்வேலியும், திருவல்லிக்கேணியும்

திருவல்லிக்கேணியில் ஒரு உயர்தர சைவ ஓட்டலில் அமர்ந்து கொண்டு புரட்சியைப் பற்றியும் பசியைப் பற்றியும் ஒருவன் சிந்தித்தால் அது எப்படிப்பட்ட புரட்சி சிந்தனையாக இருக்கும். பசியைப் பற்றி பேசுவதென்றால் பசியில் வாடும் மக்களை நேரில் சென்று பார்க்க வேண்டும் உள்ளம் பதபதைக்க வேண்டும். அதன் பின்பு பேனா முனை கூர்மையாக வேண்டும். ஆனாலும் பேனா முனை அதன் குமிழியில் இருக்கும் மையை இது போன்ற சைவ ஓட்டல்களில் உடகார்ந்தால்தான் மையை சீராக வெளியேற்றுவேன் என்று அடம் பிடிக்கிறது. உண்மையில் அது பேனாவின் பிடிவாதம் கிடையாது, சிந்தனையின் பிடிவாதம். என்னை நானே குற்றப்படுத்திக் கொள்ள முடியாது அல்லவா? அதனால்தான் முழுப் பழியையும் அந்த அய்யோப் பாவம் பேனாவின் மீது போட்டுவிட்டேன். எனக்காக அந்த உயிர் அற்ற ஜடம் பழி ஏற்றுக் கொண்டால் அதற்கு மனம் வலிக்கவா போகிறது. வீச்சரிவாளை விட தனக்குத்தான் சக்தி அதிகம் என்று பெருமைப் பட்டுக் கொள்கிறார் அல்லவா? இதையும் சற்று சுமந்து திரியட்டும். அழட்டும் நன்றாக அழட்டும்.

ஆள் பாதி ஆடை பாதி

நம்ம ஊர்க்காரர்கள் டை கட்டுவது பார்ப்பதற்கே மிகவும் வேடிக்கையான காட்சி. நமக்கு கச்சிதமானது கதர் சட்டையும் வேட்டியும்தான். மிக எடுப்பான உடைகள். சில காலங்களுக்கு முன்பு கோட்டை மாட்டிக் கொண்டு இடுப்பில் வேட்டியை கட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த முட்டை போண்டா மாதிரியான தொப்பை உடலுக்கு கோட் என்பது மிகவும் வேடிக்கையான உடைதான். இதையெல்லாம் நமக்கு யார் கற்றுக் கொடுத்தார்கள் என்பதுதான் இன்னும் புரியவே இல்லை. இன்றைய சில வாலிபர்கள் கோட்டை அணிந்துக் கொண்டு டை கட்ட மறந்து விடுகிறார்கள். எப்படியோ மேலை நாட்டு நாகரீகம் நமக்கு முற்றிலும் ஒத்து வருவதற்கு மறுக்கிறது. அந்த உடை நாகரிகத்தைச் சரியாக கடைபிடிப்பவர்கள் சேல்ஸ் ரெப்ரெசென்டேட்டிவ்ஸ் என்றே நினைக்கிறேன். அதுகூட தூரத்தில் இருந்து பார்க்கும் போது மாத்திரம் தான் மிக நாகரீகத் தோற்றத்தைக் கொடுக்கிறது. மிக அருகில் சென்று பார்க்கும் போது பாவம் விதியே என்று இந்த உடையை அணிந்து கொள்கிறார்கள் போலும் என்ற இரக்கம் மேலிட ஆரம்பித்துவிடுகிறது. பேண்ட் இல்லாதக் கோட்டும், டை இல்லாத கோட்டும், முடிவாக கோட்டே இல்லாமல் வெறும் சட்டையின் மீது டை கட்டிய நாகரீகமும் ஏதோ ...

நெப்(போலியனின்) கைக்குட்டை

போரும் வாழ்வும் நாவலில் ஓரிடத்தில் டால்ஸ்டாய் நெப்போலியனைப் பற்றி இவ்வாறு சொல்லுவார் “ அவன் உள்ளுக்குள் ஒரு இத்தாலியன், வெளிப்பாவனையில் ஒரு பெரென்சுக்காரன்” என்று. அத்தனையும் நடிப்பு. உண்மைத்தன்மை என்று எதுவும் அவனிடத்தில் கிடையாது. அது இருக்கட்டும். அந்த நெப்போலியனைப் பற்றி இப்போது நமக்கு என்ன கவலை என்று கேள்வி எழலாம். இப்போது நூறு ஆண்டுகளுக்கு முன் சர்வாதிகாரியாக வாழ்ந்த நெப்போலியனைப் பற்றி யார் கவலைப் படப்போகிறார்கள். ஹிட்லர் என்றால் கூடப் பரவாயில்லை. நமக்கு இங்கு முக்கியமாகப்படுவது டால்ஸ்டாய் காட்டும் நெப்போலியன்தான். நாவலில் நாவலாசிரியன் காட்டும் ஒரு மனிதன் நிஜத்தைக் காட்டிலும் தத்ரூபமானவன். நெப்போலியனை அநேகர் புகழ்ந்துதான் கேள்விப்பட்டிருக்கிறோம். அனால் போரும் வாழ்வும் மாத்திரம்தான் நெப்போலியன் என்றால் யார் என்று மிக அருகில் நம்மை அழைத்துக் கொண்டு போய்க் காண்பிக்கிறது. நாம் கேட்டறிந்த நெப்போலியன் வரலாறு கட்டமைத்த நெப்போலியன். அதில் தகவல்கள் மாத்திரம் அதிகமே தவிர உண்மைக்கு எந்த இடமும் கிடையாது.

காவியமான ஆனைச் சாத்தான்

கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே    கரிச்சான் குருவிகளை அதிகம் என் ஊரில் பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நேரங்களில் வித்தியாசமான பாதிப்புகளை அவை என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன. இரட்டைவால் குருவி என்பதும் இவர்களுடைய மற்றொரு பெயர். இரட்டைவால் குருவியைக் காகத்துடன் ஒப்பிடும் போது அவ்வளவு ஒன்றும் பெரிய உருவம் கிடையாது. மிகச்சிறிய உருவம்தான் இந்தக் கரிச்சான் குருவி. வெளிநாட்டவர்கள் இங்கு வந்தால் காகம் என்றுதான் அழைப்பார்கள் போலும். அதன் உடலுக்கு அழகே அந்த வால்தான். நீண்டு கடைசியில் இரண்டாக பிளவுபட்டு இருக்கும். அதனாலேயே இரட்டைவால் குருவி என்று பெயரோ என்னவோ. மற்றபடி வால் சிறுத்திருந்தால் இவரையும் சிறிய காகம் என்றுதான் அழைப்பார்கள். காகம் என்றால் கூட சற்று சாம்பல் நிறம் கழுத்தில் பூத்திருக்கும். அண்டங்காக்கையென்றால் கருப்பா பயங்கரமா இருக்கும். அதீதக் கருப்பும் கருப்பல்ல. சாம்பல் பூத்த கருப்பும் கருப்பல்ல. கரிச்சான் குருவிகளின் நிறம்தான் கருப்புக்கு சிறந்த உதாரணம். அதனாலேயே இவர்கள் கரிச்சான் குருவி என்று அழைக்கப்ப...