Skip to main content

”ஈசனருள்”: தமிழ் நவீனத்தில் கதைசொல்லியின் பிறப்பிடம்



 ”ஈசனருள்”: தமிழ் நவீனத்தில் கதைசொல்லியின் பிறப்பிடம்

உயிர்மை நவம்பர் இதழில் வெளியான “ஈசனருள்” கதையை வாசித்தேன். பொதுவாக கதை படித்த உடன் என் போன்ற நபர்கள் கத ’சூப்பர்’ சார் என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுவோம். காரணம் கதைகள் அவ்வளவாக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதனால் கதையைப் பற்றி பேசுவதற்கு எதுவும் வார்த்தைகள் இருக்காது. ஆனால் சிறந்த கதைகளோ மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தி குறைந்தது சில நாட்களுக்காவது சிந்திக்க வைக்கும், அதைப் பற்றி பேசவும் வைக்கும். உங்களுடைய எங்கதெ அப்படிப்பட்ட பாதிப்பை உண்டாக்கி நீண்ட நாள் விவாதங்களை துறையில் நண்பர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.  நான் இந்த கதையை பாராட்ட ’சூப்பர்’ என்று சொல்லி கதையை கொச்சைப் படுத்த விரும்பவில்லை.
கதையை படித்த உடன் உடனடியாக என் எண்ணங்கள் கதை சொல்லப்பட்ட முறையைப் பற்றிதான் அதிகம் சிந்திக்கலாயின. நம் மத்தியில் அநேகர் கதை சொல்வதில்தான் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். கதை தான் அவர்கள் நோக்கமாக இருந்திருக்கிறது. அதனால் கதையில் கதை சொல்லி என்று யாரும் இல்லையோ என்ற கேள்வி எழுகிறது. உங்களுடைய கதை சொல்லப்பட்ட விதமும் அதில் கதை சொல்லியின் நிலையும் தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
முக்கியமாக முழுக்கதையும் இசையாக மீட்டப்பட்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. கதையின் பொருளைக் காட்டிலும் கதை கொடுக்கும் இசை உணர்வு அதை புரிந்து கொள்ளவதைக் விட ரசிக்கவே என்னை தூண்டுகிறது. சந்திரவதனம் தன் வாழ்க்கையை இசையால் வாழ்கிறாள் இசையால் மற்றவர்களுடன் சம்பாஷிக்கிறாள் இசையைக் கொண்டே தன் காதலையும் தெரிவிக்கிறாள். மற்றவர்களுக்கு அது வெறுமனே பொழுது போக்கு மற்றும் பக்தி பாடல்களாகவே புரிகிறது. அதன் நாதத்ததை இரசித்தது அவளுடைய வயோதிகக் காதலன் மட்டுமே. இதை நம்மாலும் ஏன் சந்திரவதனத்தாலும் கூட புரிந்து கொள்ள முடியாது. காரணம் காதலும் இசையைப் போன்றது தான். அதை உணரச் செய்ய முடியுமே அன்றி புரியவைக்க முடியாது. புரியப்படாததால் சந்திரவதனத்தின் வாழ்க்கை கடைசியில் மற்றவர்களின் புறியாமை என்ற புற்று நோயால் சிதைக்கப் படுகிறது.       
ஒருவேளை கதை சந்திரவதனத்தின் கதையாக மட்டுமாகவே இருந்திருந்தால் எனக்கு கதை மாத்திரமே போதும். படித்துவிட்டு சூப்பர் சார் என்று நான் தப்பித்து விடுவேன். எனக்கு சந்திரவதனத்தைப் பற்றி எந்த பிரச்சனையும் இல்லை. அவளுக்காக ஒரு சொட்டு கண்ணீர் சிந்தி விட்டு என் பாராட்டை கதைக்கான மரியாதையாக தெறிவித்து விடுவேன். ஆனால் ”ஈசன் அருள்” வெறுமனே கதையாக நின்றுவிடவில்லை. அது ஒரு வாழப்பட்ட வழ்க்கை. கலியம்மாள் பாத்திரமாக அல்ல ஒரு வாழ்க்கையை மனிஷியாக கதையில் வாழுகிறாள். இங்கு கலியம்மாவாள் கதை அதன் கற்பனை நிலையில் இருந்து யதார்த்தம் என்ற தளத்திற்கு நகர்த்தப்படுகிறது.
கதையிலிருந்து இந்த யாதார்த்தம் என்ற தளத்திற்கு நகரும் போது அதற்கு நிஜ-யதார்த்தத்தின் மீதான தன் பொறுப்பு அதிகமாகிறது. இந்த கற்பனை-யாதார்த்தத்தில் ஆசிரியன் தன் சொந்தக் கருத்தை சொல்ல எந்த இடமும் இல்லை. தன் சொந்தக் கருத்து இங்கு உட்செருகப்படும் போது கதை சிதைந்து நிஜ யதார்த்தை முதன்மைப் படுத்துவதற்கு பதிலாக அதை விமர்சனம் செய்ய ஆரம்பித்து விடுகிறது. இதைத்தான் யதார்தவாதம் என்ற பெயரில் அனேகர் கதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் கதையின் முக்கியமான சிறப்பம்சம் அதில் ஆசிரியன் தன் கருத்துக்களை திணிக்கவில்லை என்பதுதான். ஆசிரியனுக்கும் கதைக்கும் மிக நீண்ட இடைவெளி இருப்பதை நான் இங்கு பார்க்கிறேன். இந்த இடைவெளியின் மூலம் கதை தன் உயிரை பாதுகாத்துக் கொள்கிறது. இங்கு கதை ஒரு தனித்த படைப்பாக ஆசிரியனின் எண்ணங்களுக்கு விடுபட்டு நிற்கிறது. இது என்னுடைய முதலாவது அவதானிப்பு. இரண்டாவது, என்னதான் கதையை அதன் தற்சார்பு நிலையில் வைக்க ஆசிரியன் முயன்றாலும் கதை சொல்லி என்ற உயிர்குரல் கதையில் இல்லை என்றால் சொல்லப்பட்ட கதை ஆசிரியனின் கதையாகத்தான் இருக்கும். பின்பு கதை கலியம்மாளின் கதையாக மாறிவிடும்.
கதை ஒரு வாழ்க்கையாக நிகழ்த்தப்படுவது கதை சொல்லியின் கையில் தான் இருக்கிறது. கதை சொல்லியின் குரல் இல்லாமல் கதை பட்டைப்பாகாது. கதை சொல்லியின் நிலைப்பாட்டால் இந்தக் கதையில் ஒரு மாபெரும் பிரச்சனை தவிர்க்கப் படுகிறது. பொதுவாக வாசிப்பில் நாம் நம்முடைய நிலைப்பாட்டை கதையின் போக்கில் நாமே எடுத்துக் கொள்வோம். ஒருவேளை நான் தலித்தாக இருந்தால் கதை கலியம்மாளின் கதையாக வாசிக்கப்படும். ஒருவேளை நான் மேல் சாதிக்காரனாக இருந்தால் கதை முழுக்க முழுக்க சந்திரவதனத்தின் கதையாக வாசிக்கப்படும். வாசிப்பவர்களின் அரசியல் நிலைப்பாட்டை பொருத்து வாசிப்பும் மாறுகிறது. உண்மையில் இது யாருடைய கதையும் கிடையாது. இங்கு ஒரு வாழ்க்கை வாழப்பட்டிருக்கிறது அந்த வாழ்க்கையைதான் ஆசிரியன் முதன்மைப்படுத்துகிறானே ஒழிய அதை கதையாக விமர்சிப்பது அல்ல. அது சமூக ஆர்வலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களின் பிழைப்பு. நமக்கு தேவை எல்லம் ஒரு வாழ்க்கை வாழப்பட்டிருக்கிறது அதை ஆசிரியன் எவ்வாறு முதன்மைப் படுத்துகிறான் என்பதுதான் முக்கியம். அப்படிப்பட்ட முதன்மைப் படுத்தப்பட்ட வாழ்கை நீங்கள் கையாண்டிருக்கும் கதை சொல்லியின் மூலமாக படைப்பாக்கப் பட்டிருக்கிறது. இங்கு வாசிப்பவனின் வாசிப்பு அரசியல் மிகவும் பிரச்சனைக்குறியது. அது முற்றிலும் கதை சொல்லியினால் தவிடு பொடியாகிறது. கதை சொல்லி என்ற வடிகட்டி வாசகனின் அரசியல் சாக்கடையை கதையில் வரவிடாமல் வடிகட்டுகிறது. கலியம்மாள் ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறாள் சந்திரவதனமும் ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறாள் அவ்வளவுதான். இதை சாத்தியப்படுத்துகிறவன் கதை சொல்லி.

குறிப்பு:
சார், இந்த கதைக்கான பரிமானம் நாவல் வடிவம் என்று நினைக்கிறேன். இது என்னுடைய வெறும் கருத்து மட்டும் தான்.


      

Comments

Popular posts from this blog

காவியமான ஆனைச் சாத்தான்

கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே    கரிச்சான் குருவிகளை அதிகம் என் ஊரில் பார்த்திருக்கிறேன். வித்தியாசமான நேரங்களில் வித்தியாசமான பாதிப்புகளை அவை என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன. இரட்டைவால் குருவி என்பதும் இவர்களுடைய மற்றொரு பெயர். இரட்டைவால் குருவியைக் காகத்துடன் ஒப்பிடும் போது அவ்வளவு ஒன்றும் பெரிய உருவம் கிடையாது. மிகச்சிறிய உருவம்தான் இந்தக் கரிச்சான் குருவி. வெளிநாட்டவர்கள் இங்கு வந்தால் காகம் என்றுதான் அழைப்பார்கள் போலும். அதன் உடலுக்கு அழகே அந்த வால்தான். நீண்டு கடைசியில் இரண்டாக பிளவுபட்டு இருக்கும். அதனாலேயே இரட்டைவால் குருவி என்று பெயரோ என்னவோ. மற்றபடி வால் சிறுத்திருந்தால் இவரையும் சிறிய காகம் என்றுதான் அழைப்பார்கள். காகம் என்றால் கூட சற்று சாம்பல் நிறம் கழுத்தில் பூத்திருக்கும். அண்டங்காக்கையென்றால் கருப்பா பயங்கரமா இருக்கும். அதீதக் கருப்பும் கருப்பல்ல. சாம்பல் பூத்த கருப்பும் கருப்பல்ல. கரிச்சான் குருவிகளின் நிறம்தான் கருப்புக்கு சிறந்த உதாரணம். அதனாலேயே இவர்கள் கரிச்சான் குருவி என்று அழைக்கப்ப...

இரு துரதிருஷ்டசாலிகள்

இரு துரதிருஷ்டசாலிகள்      என்னுடைய மாருதி 800ல் பழுது பார்க்கும் வேலை கொஞ்சம் இருந்தது. ரேடியேட்டரில் தண்ணீரை ஊற்றினால் கொதிகலன் அதனை இன்ஜினின் இருபது நிமிட இயக்கத்திற்குக் கூட சுழற்சி செய்து தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. வெளியில் சென்று வீடு திரும்பும் ஒவ்வொரு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டி இருந்தது. கடைசியாக டெம்பரேச்சர் முள் அதன் வரைவுக் கோட்டீன் எல்லையைத் தாண்டி ℌ அருகே சென்று கொண்டிருந்தது. இதனை கல்பாக்கம் சென்று கொண்டிருக்கும் போது வண்டி மகாபலிபுரத்தைத் தாண்டி அம்மாவின் பாட்டி ஊரான பெருமாளேரியைக் கடக்கும் போதுதான் கவனித்தேன். ஐந்து மைல் தூரத்திற்கு ஒருமுறை வண்டியை நிறுத்தி நிறுத்தி இன்ஜினின் வெப்பம் குறையட்டும் என்று ஒவ்வொரு முறையும் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஒருவழியாக இன்ஜினில் இருந்து புகை எதுவும் கிளம்பாத அளவுக்கு பத்திரமாக வண்டியை சென்னைக்குக் திரும்பக் கொண்டுவந்து சேர்த்து விட்டேன்.      பழுதை சரி செய்ய மெக்கானிக் குறைந்தது ஒரு வாரம் ஆகும் என்றார். ரேடியேட்டரில் பிரச்சனையாம். இல்லை இல்லை ரேடியேட்டரே பிரச்சனையாம். அதை முழுவதுமாக மாற்றி புதிய ஒ...

Four Legs Good Two Legs Bad

Four Legs Good Two Legs Bad I was reaching Velachary station. The speaker in the train announces that the station is the last one and requests the passengers to get down from the train. Such monotonous tone always irritates the passengers from station to station. Our professor often curses that female voice with an unparliamentarily word "*****". Now the question is what is special in it to speak about this incident in this essay? What is special in that announcement to register it in words? Yes, there is something special about my reaching Velachary and that ***** *****’s voice. The latter one is very less in significance. But the first one carries historical significance.