Skip to main content

Posts

கதையின் முடிவுக்கு வந்து விட்டீர்கள்: வாசகனில் ஒளிந்திருக்கும் குற்றவாளியை நோக்கிய தேடல்

கதையின் முடிவுக்கு வந்து விட்டீர்கள் : வாசகனில் ஒளிந்திருக்கும் குற்றவாளியை நோக்கிய தேடல் அபிலாஷின் சமீபத்திய நாவலான கதையின் முடிவுக்கு வந்து விட்டீர்கள் நாவலை வாசிக்கும் போது அதை ஒரு குறிப்பிட்ட நாவல் வகைமைக்குள் புகுத்துவது என்பது சிரமமான காரியமாக இருக்கிறது . இது துப்பறியும் நாவலா , திரில்லர் வகைமையா அல்லது வெறுமனே நாவல் மட்டுமா என்ற கேள்வி எழுந்துகொண்டிருக்கிறது . எழுத்தாளன் இந்த வகைமையில் தான் தன் கதையை பரிசோதிக்க போகிறேன் என்று முயற்சி செய்து ஒரு கதையை உருவாக்கி விடுகிறான் ஆனால் கதை தான் எதிர்பார்த்த வகைமைக்கு மீறி எதுவும் அல்லாத ஒரு வகைமையில் நிற்கிறது . இதற்கு காரணம் கதையை பரிசோதனை என்ற முயற்சியில் செய்ததினால் உண்டானதாகும் . விளைவு வகைமைப்பாட்டிற்கு வெளியில் பிரதி தன்னை நிறுத்திக் கொள்கிறது . இங்கு கேள்வி பரிசோதனையில் படைப்பிற்க்கான உயிர் அதில் தக்கவைக்கப்படுகிறதா அல்லது பரிசோதனையில் எதுவும் அற்ற நிலையில் நிறுத்தப்படுகிறதா என்பதுதான் .

”ஈசனருள்”: தமிழ் நவீனத்தில் கதைசொல்லியின் பிறப்பிடம்

 ” ஈசனருள் ”: தமிழ் நவீனத்தில் கதைசொல்லியின் பிறப்பிடம் உயிர்மை நவம்பர் இதழில் வெளியான “ ஈசனருள் ” கதையை வாசித்தேன் . பொதுவாக கதை படித்த உடன் என் போன்ற நபர்கள் கத ’ சூப்பர் ’ சார் என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுவோம் . காரணம் கதைகள் அவ்வளவாக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை . அதனால் கதையைப் பற்றி பேசுவதற்கு எதுவும் வார்த்தைகள் இருக்காது . ஆனால் சிறந்த கதைகளோ மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தி குறைந்தது சில நாட்களுக்காவது சிந்திக்க வைக்கும் , அதைப் பற்றி பேசவும் வைக்கும் . உங்களுடைய எங்கதெ அப்படிப்பட்ட பாதிப்பை உண்டாக்கி நீண்ட நாள் விவாதங்களை துறையில் நண்பர்கள் மத்தியில் ஏற்படுத்தியது .   நான் இந்த கதையை பாராட்ட ’ சூப்பர் ’ என்று சொல்லி கதையை கொச்சைப் படுத்த விரும்பவில்லை .

எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது: வினாடிகளில் உறைந்திருக்கும் மணி நேரங்கள்

www.jeyamohan.in 960 × 540 Search by image எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது: வினாடிகளில் உறைந்திருக்கும் மணி நேரங்கள்                                                                                                                                    கால அளவையில் வினாடிகள் கண் இமைக்கும் நேரத்தில் கடந்து செல்பவை . ஒளி வீச்சுகள் மட்டுமே இக்கால வினாடிக்குள் நடைபெறும் நிகழ்வுகள் . மற்றபடி எந்த நிகழ்வும் நடத்தப்படுவதற்கு கால அவகாசம் நீடிக்கப்பட வேண்டியிருக்கிறது . சாகசக் காவியங்களின் யுகங்கள் கால அளவில் அளக்க முடியாததாயினும் சாகச வீரனின் இளமைப் பருவக் காதல் நேரத்தில் அளக்கப்படுகிறது . நாடகங்கள் ஐந்து மணி நேரங்...

விடுதலை கீதங்களின் தேசியத் தேடல்

homemcr.org 400 × 200 Search by image விடுதலை கீதங்களின் தேசியத் தேடல் செய்யுள் விதிகளுக்குட்பட்ட மரபுக் கவிதைகளையும் , விதிகளைக் கலைந்த நவீனக் கவிதைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பொது ஒன்றையொன்று விரோதிக்கும் நிலையிலே அவைகள் முரண்பட்டு நிற்கின்றன , நவீனக் கவிதைகள் தங்களுக்கென்று எந்த விதிமுறைகளையும் கொண்டிருப்பதில்லை என்பது மரபுக்கவிதையின் குற்றச்சாட்டு . இதற்கு எதிரிடையாக மரபுக்கவிதைகள் தங்களுக்கென்று எந்த கவிதைத் தன்மையையும் செய்யுள் வடிவத்தில் கொண்டிருக்கவில்லை என்பது மரபுக் கவிதையின் மீதான நவீனக் கவிதையின் குற்றசாட்டு . நவீனக் கவிதைகள் மொழி அலங்காரங்களான பா வகைகளை முற்றும் களைந்து நிர்வாண   நிலையில் நிற்கின்றன . கவிதையின் தத்துவமும் உருவகங்களுமே இலக்கண   வறையறை அற்ற நவீனத்தை கவிதையாக சாத்தியப்படுத்துகிறது . நவீனக்   கவிதை இலக்கண விதிகளுகுட்படுமாயின்   தத்துவம் சார்ந்த தன் உயிரை இழந்து விடுகிறது . இலக்கண விதிமுறைகளுக்காகவே படைக்கப்பட்டு கவிதை தன் ஆன்மாவை தொலைத்துவிடுகிற...

தோட்டாக்கள் பாயும் வெளி: மாயத்தில் கவிதையாகும் யதார்த்த வெளி

tamil.thehindu.com 188 × 250 Search by image இன்று   எந்த கவிதைத் தொகுப்பை எடுத்துக் கொண்டாலும் இவைகள் தாம் இக்கவிதைகள்   என அஞ்சனம் கூறி கவிதைக்குள் இலகுவாக பயணிக்கலாம். காரணம் கவிதைகள் தங்களுக்கென பாடுபொருள்களை வைத்துக்கொண்டு அவைகளைச் சுற்றியே பயணிக்கின்றன. கவிதைகள் அழகியலுக்காக மட்டும் செய்யப்படுகின்றனவோ என்ற உணர்வை இவைகள்   ஏற்படுத்துகின்றன. மண் சார்ந்த கவிஞனின் அனுபவம் அரிதாகவே காணப்படுகி றது . கவிதைகள்   அறிவுத் தேடலுக்காகவும் தன சுயம் சார்ந்த   தேடலுக்ககவும் செய்யப்ப ட்டு தோல்வியடைகி ன்றன .

பாலச்சந்திரனின் இறுதியுணவு: பாவக்கனி ருசித்த கலகக் குரல்

பாலச்சந்திரனின் இறுதியுணவு: பாவக்கனி ருசித்த கலகக் குரல் இன்று நாம் குறிப்பிடும் கவிதை என்ற சொல் வெறுமனே ஒரு இலக்கிய வகைமையை  குறிப்பிடுகிறதா அல்லது வகைமைகளுக்கு மீறி  இலக்கியம் என்ற பொது தளத்தில் இயங்குகிறதா என்ற  கேள்வி  நவீனகவிதைகளை வாசிக்கும் போது ஏற்படுகிறது. இச்சொல் உரை நடை அல்லது  பாடல் என்ற வரைமுறையை மீறி  ஒரு பிரதிக்குள் இருக்கும் அழகியலையே குறிப்பிடுகிறது. ரஷ்ய இலக்கிய மேதை தாஸ்தாவஸ்கி தன் எழுத்துக்கள் உரைநடையாயினும்  பீட்டர்ஸ் பெர்க் கவிதைகள் என்றே அழைக்கிறார் . தன் கரமசாவ் சகோதரர்கள்  நாவலில் வரும் ஒரு பகுதியான கிராண்டு இன்க்விசிட்டரையும் கவிதை என்று தான் அழைக்கிறார். இங்கு மொழி  வடிவம் பற்றிய வரையறைகளைத்  தாண்டி பிரதியின் அழகியலை காண முனைகிறோம்.  பிரதிக்குள் கலைஞன் தான் அடைய முயற்ச்சிக்கும் அழகியலே அதனை கவிதை என அழைக்க நம்மைத் தூண்டுகிறது.