Sunday, August 25, 2024

”இது கதையல்ல மெய்”

                                                           


  ”இது கதையல்ல மெய்”

      ஆசையே துன்பங்கள் அனைத்துக்கும் காரணம். ஆசையை விடும் போது மனிதன் துன்பத்தின் பிடியில் இருந்து விடுபடுகிறான். இது என்றோ சொன்ன வாக்கானாலும் இன்றும் அதில் எவ்வளவு உண்மை பொதிந்து இருக்கிறது. இதனை மேலோட்டமாக ஒருவர் சொல்லக் கேட்கும் போது, ”ஆசை இல்லாத மனிதர் யாராவது உண்டா?” என்று நம்மிடம் சொல்லப்பட்ட அந்த வாக்கியத்தின் மீதே எதிர் வாதம் செய்ய ஆரம்பித்து விடுகிறோம். தங்கத்தை மையமாக வைத்து நிகழும் திரைக்கதை ஒன்றின் வழியே இந்த வாக்கியத்தை வாசிக்கும் போது அது ஏதோ துறவி ஒருவர் என்றோ சந்நதமாக உதிர்த்த வாக்கியமாக தோன்றவில்லை. அது சமூக யதார்த்தத்தில் நிலவும் அவலத்தை கண்டு வேதனையில் உதிர்த்த பரிவு மிக்க வார்த்தைகள் என்று திரைக்கதையை பார்கும் போது தோன்றுகிறது. தங்கத்தின் மீதான ஆசை மனிதனை எவ்வளவு பேராசை கொண்டவனாக ஆக்குகிறது! மேலும் அவனை அது வன்முறையாளனாகவும் மாற்றுகிறது. வரலாறு கூறவருவது; தங்கத்தின் மீதான பேராசையும், நிலத்தின் மீதான பேராசையும் மனிதர்களை காலங்கள் தோறும் வன்முறையாளர்களாக மாற்றிக் கொண்டே இருக்கின்றன என்பதுதான்.

Monday, August 12, 2024

மனதில் குடிகொள்ளும் உயிர்கொண்ட சொற்கள்



வரும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளை இந்த வாரத்திலேயே நடத்தி முடித்தாக வேண்டியிருந்ததுநேற்று தமிழ்த்துறை நண்பர்கள் போட்டிகளுக்கான தலைப்புகளைப் பற்றி விவாத்தித்துக் கொண்டிருந்தனர். போட்டிகளின் தலைப்பு சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றியதாக இருந்தாக வேண்டும் என்பது நிபந்தனை. அதிலும் முக்கியமாக அது காலத்தில் நாம் மறந்து போன வீரர்களைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்பது அழுத்தம் கூடிய நிபந்தனை.

ஐயா, பாருங்கள்  தலைப்புக்கு இந்த catchy வார்த்தை எடுபடுமாஎன்றார் ஒருவர். அவர் சொன்ன அந்த வார்த்தை,'அறியப்படாத' என்பதாகும்.

"'அறியப்படாத' இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள்"

அறியப்படாத என்ற வார்த்தை தலைப்புக்கு  Catchyயாக இருந்தாலும் இந்திய என்ற வார்த்தை கட்டுரையின் தலைப்புக்கான அழகை கொஞ்சம் மங்கச் செய்வது போன்று இருந்தது. தலைப்பு சொற்றொடர் போன்று நீண்டுவிடுகிறது. என்னுடைய இந்த எண்ணத்தை உடனடியாக தெரிவித்தேன்.

சார்,   நீட்டி அளக்காமல் வெறுமனே சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று வைத்துக் கொள்வோமே ஏன் 'இந்திய' என்ற இணைப்பு”. 

வெறுமனே சுதந்திர போராட்ட வீரர்கள்ன்னு சொன்னா  எந்த நாட்டு வீரர்கள்ன்னு பதில் கேள்வி கேட்பான். எதற்கு வம்பு இந்தியான்னு சேத்துடுவோம்”. என்றார் மற்றொரு பேராசிரியர்.  

நம்மையும் ஆலோசனைக்கு அழைத்துவிட்டார்கள். ஒரே ஒரு அபிப்பிராயத்தை மட்டும் தெரிவித்துவிட்டு மேற்கொண்டு எதையும் பேசாமல் சென்று விட்டால் நன்றாக இருக்காது. அழைத்து கருத்து கேட்டமைக்கு நம் பக்கத்தில் இருந்து எதையாவது சொல்ல வேண்டும்.  ”அறியப்படாதஎன்ற பதம் நன்றாகத்தான் இருக்கிறது. தொ பா ஒன்றும் கல்லரையில் இருந்து எழுந்து வந்து பதிப்புரிமை சிக்கலை  உண்டாக்கப் போவதில்லை. அதை விட தலைப்புக்கு நன்கு பொருந்திப் போகின்ற இந்த வார்த்தையை வைத்துக் கொண்டால் என்ன என்று என் பங்கிற்கு நானும் ஒரு catchy வார்த்தையை போட்டு வைத்தேன். அது, 'பெயரழிந்த' என்ற சொல்லாகும்

" 'பெயரழிந்த'சுதந்திர போராட்ட வீரர்கள்".

இது வெறுமனே கருத்தாக இருந்தால் பிரச்சனை இல்லை. அவர்களின் ஈகோவைத் தூண்டுவது போன்று அமைந்துவிட்டது. அதையே எடுத்துக் கொள்கிறோம் என்றோ இல்லை அதனை நிராகரிக்கிறோம் என்றோ எந்த பதிலும் இல்லை. கள்ள மௌனம். அதன் அர்த்தம் ’தலைப்பை முடிவு செய்துவிட்டு அனுப்பி வைக்கிறோம் ஆங்கில மொழியாக்கத்தை மட்டும் செய்துத் தா. மேற்கொண்டு அதிகப்பிரசங்கித்தனம் எதுவும் வேண்டாம் என்பதுதான்.

இப்பதங்கள் இரண்டும் எவ்வளவு உயிர்ப்புள்ளவைகளாக இருக்கின்றன! 'அறியப்படாத' தமிழகம்!, 'பெயரழிந்த' வரலாறு! இந்த இரண்டு சொற்களில் ஏதேனும் ஒன்றினை எடுத்துக் கொண்டு நம்முடைய தலைப்பில் இணைக்கும் போது நம் கட்டுரைத் தலைப்பு கூட ஒருவித புராதன தன்மையை அடைந்து விடுகிறது. புராதனத்தன்மை என்று சொல்லிவிட முடியாது! ஆனால் ஃபேன்ஸி என்று சொல்லிக் கொள்ளலாம்.

அறியப்படாத, பெயரழிந்த என்னும் சொற்களைப் பயன்படுத்தும் போதே அச் சொற்களுக்கான உடைமையாளர்களும் நினைவிற்கு வந்து விடுகின்றனர். எவ்வளவுதான் மற்றொருவர் இப்பதங்களை தங்கள்  கட்டுரைகளுக்கோ புத்தகங்களுக்கோ எடுத்துப் பயன்படுத்தினாலும் அவைகள் கடன் வாங்கப்பட்ட சொற்களாகவே காதுகளுக்கு ஒலிக்கின்றன. அவைகள் பொது சொற்கள் அல்ல. படைப்பாளன் ஒருவன் உயிர் கொடுத்து உலாவவிட்ட தனிப் பிறவிகள். இச் சொல் இன்னாருடையது என்று உடனடியாக அடையாளம் கண்டு கொள்கிறோம். கவிதைகளும் அப்படித்தான் போலும்.

            மேற்சொன்ன இரண்டு சொற்களின் உயிர்த் தன்னமைகள் அவைகள் ஓங்கி ஒலிக்கும் வலிமையைப் பொறுத்து அமைந்தது. சொற்களுக்கான வலிமை அவைகளுக்கு உள்ளேயே இருந்தாக வேண்டும். ஒரு வேளை கவிதைகளுக்கு உள் இப்படிப்பட்ட சொற்கள் இருக்குமானால் அக்கவிதை எவ்வளவு வலிமை கொண்டதாக இருக்கும்! பின்வரும் இந்தக் கவிதையில் ஒருவித சந்தம் இருக்கிறது அதே நேரத்தில் வலிமைக் கொண்டதாகவும் இருக்கிறது.

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இப்பாடலில் உள்ள சொற்கள் எவ்வளவு வலிமை மிக்கவைகளாக உள்ளன. இவைகளை சிறு குழந்தைகளின் முன்னிலையில் வெறுமனே பாடினாலே போதும் அவர்கள் மனதில் பாடல் பசை போன்று சீக்கிரத்தில் ஒட்டிக் கொள்ளும். அவர்களை ஓரிடத்தில் அமரச் செய்து கொடுமைப் படுத்தி மனப்பாடம் செய்ய வைக்க வேண்டிய அவசியமே இல்லை.

மகள் பூர்வியின் பள்ளியில் இருந்து செய்தி ஒன்று வந்தது. உங்கள் குழந்தைக்கு பிடித்தமான சுதந்திர போராட்ட பாடல் ஒன்றை கற்றுக் கொடுத்து அனுப்புங்கள் அவர்கள் அதை சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடக்கும் போட்டியில் பாடுவார்கள் என்று இருந்தது. எந்த பாடல் அவள் மனப்பாடம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும் என்ற குழப்பத்தில் இருந்தேன். பூர்வியின் அம்மா தீடீர் என்று இந்த பாடலை பற்றி சொல்லி போட்டிக்கு பூர்வி இந்தப் பாடலையே பாடினால் என்ன என்று கேட்டார்.

சரி இந்த பாடலையே பூர்வி Recite செய்யட்டும் என்று இறுதியாக முடிவானது. (இந்த Recite என்ற வார்த்தை மிகவும் சுவாரசியமானது. அது மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது அல்ல. பசுமையாக நம்முள் பத்திந்த வார்த்தைகளை இயல்பாக மனதில் இருந்து உரைப்பது.) பாடலின் வரிகளை ஒருமுறை வாசித்துப் பார்த்தேன் முதல் பகுதியை வாசிக்க வாசிக்க ஒரு சொல்லுக்கும் குறைவான ஓர் அலகு தனித்து நிற்பது போன்று இருந்தது. அதனை அசையா அல்லது ஓசையா என என்னவென்று சொல்வது. பாடல் முழுவதும்ச்சஓசை. அதில் உள்ள இந்த ஓசை நயத்தை வெகுவாக இரசிக்க முடிந்தது. பூர்விக்கு அதிகம் பிடிக்கும் என்று நினைத்தேன். அது அப்படித்தான் ஆனது.  

பிரச்சனை என்னவெனில், ”அச்சம் இல்லைஎன்று பாடலை ஆரம்பிக்கும் முன்னமே உச்சி மீதுஎன்று நம் மனதும் நாவும் இயல்பாகத் பாடலின் கடைசிப் பகுதிக்குத் தாவிச் செல்லும். UKG படிக்கும் பூர்விக்கும் அப்படித்தான் இந்தப் பாடல் மனப்பாடம் ஆகியிருக்கிறது. பாடலின் முதல் பகுதி முடிவடையும், "இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்," என்பதுவரை அவள் மனதில் பதிய வைக்க எந்த சிரமமும் ஏற்படவில்லை. பிரச்சனையே பாடலின் கடைசி வரியே இரண்டாம் வரியாக மனதில் பதிந்து போனதுதான். அதை முதலில் அகற்றியாக வேண்டும். மற்றபடி பூர்விக்கு இப்பாடல் வரிகளை அதிகம் மெனக்கெட்டு மனப்பாடம் செய்விக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. பாடலின்ச்சஎன்ற ஓசை நயனம் ஒன்றே போதும் இயல்பாக முழு பாடலும் தானாக மனதில் வந்து குடி அமர்ந்துவிடும். பாரதிக்கு நம் உள்ளத்தை திறந்து அளித்தால் மாத்திரம் போதும் போல பின்பு இயல்பாக அவனது கவிதைகள் நம்முள் குடிகொண்டு விடும்

சேக்ஷ்பியரும் அப்படித்தான். ஆயினும் அவரது சொற்களில் ஊறிப்போன பேராசிரியர் ஒருவர் அவைகளை கனத்த குரலுடன் பாடம் படிக்க வேண்டும். பாடம் நத்தும் போதே அவைகள் இயல்பாக நம்முடைய சொற்களாக ஆகிவிடுகின்றனமற்றவரின் சொல் நம் சொல்லாக அகுவது என்பது இலக்கியத்தில் நிகழும் மாபெரும் ரசவாதம்

”இது கதையல்ல மெய்”

                                                               ”இது கதையல்ல மெய்”       ஆசையே துன்பங்கள் அனைத்துக்கும் காரணம். ஆசையை விடும...