Friday, March 24, 2023

நான் புதுமைப்பித்தன்

எஸ். ராமகிருஷ்ணனின் நான் புதுமைப்பித்தன் நாடகம் கூத்துப்பட்டறையியில் இன்று (24/03/2023) அரங்கேறியது. காலையில் இருந்தே அதற்காக தயாராகிவிட்டோம். அதுவும் பித்தனுக்காக. புதுமைப்பித்தனின் முழு வாழ்க்கையையும்  இந்த நாடகத்தில் எஸ். ரா கச்சிதமாக வடிவமைத்திருக்கிறார் என்று சொல்லலாம். அதாவது ஒருவரின் () மரணம் வரை. பித்தனின் மரணத்தை முடிவாகக் கொண்டு நாடகம் உச்சத்தைத் தொடுகிறது. கடவுள், பால்வண்ணம் பிள்ளை என நாடகத்தின் பாத்திரங்கள் அனைவரும் பித்தனின் படைப்புகளில் இருந்து வந்து பிந்தனுக்கு இறுதி மரியாதையை செலுத்துகிறார்கள்.   நாடகத்தில் அதிகம் விவரிக்க முடியாது. வாழ்க்கையை பெரிய கதையாகவும் சொல்ல முடியாது. குறைந்த கால அளவில் அதுவும் காட்சி படுத்துதலை ஆதாரமாகக் கொண்ட நிகழ்த்து கலையில் வாழ்வின் அதன் முழுமையை நிகழ்த்துவது என்பது அசாதாரணம். மாய புனைவு இதனை சாத்தியமாக்கி இருக்கிறது. பித்தனாக நடித்தவரின் உயரமும் உடல் வாகும் ஒரு கட்டத்தில் பித்தனையே உணரச் செய்தது.   பால்வண்ணம் பிள்ளையின் நடிப்பு அபாரம். எதனை புனைவு என்று நினைத்து நாம் நாடகத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோமோ  அதுவே ஒரு கட்டத்தில் நிஜமாக உணரப்பட்டு அதற்குள் வேறொரு புனைவு உள்ளே நுழைகிறது. உள் நுழையும் புனைவுக்கு தெரியாது தான் உள் நுழையும் நாடகம் என்ற நிஜமும் ஒருவகையில் எஸ். ராவின் புனைவுதான் என்று. புனைவுக்கும் நிஜத்துக்குமான இந்த விளையாட்டு புதிர் தன்மைக் கொண்ட மந்திர விளையாட்டு.  எழுதும் போது அதில் ஒரு Punch 👊 இல்லாமல் இருந்தால் எப்படி.  நாடகம் முடிந்தவுடன் என்னையும் கட்டுப்படுத்த முடியாமல் நாடகத்தைப் பற்றி பேச உந்தித் தள்ளப்படேன். எப்போதும் இதுபோல் நிகழ்ந்தது இல்லை. பித்தனுக்காக.

No comments:

Post a Comment

”இது கதையல்ல மெய்”

                                                               ”இது கதையல்ல மெய்”       ஆசையே துன்பங்கள் அனைத்துக்கும் காரணம். ஆசையை விடும...