Ken Follettன் The Pillars of the Earth ஆயிரம் பக்கங்களுக்கும் அதிகம் எண்ணிக்கைகளைக் கொண்ட வரலாற்று நாவல். நாவலின் கதை நடக்கும் இடம் இங்கிலாந்தில் உள்ள கற்பனை நகரமான கிங்ஸ் பிரிட்ஜ். கற்பனை நகரத்தில் பிரம்மாண்டமான தேவாலயம் ஒன்றும் கட்டப்படுகிறது. அது கட்டி முடிக்கப்பட சுமார் நாற்பது ஆண்டுகள் ஆகின்றன. கட்டிடம் முடிவடையும் போது மூன்றாவது தலைமுறை அதன் முழுமையை காண்கிறது. நாவலின் பக்கங்களும் சரி, அதன் நீண்ட நெடிய காலமும் சரி, பாத்திரங்களின் எண்ணிக்கைகளும் சரி, கட்டி முடிக்கப்பட்ட தேவாலயத்தின் பிரம்மாண்டமும் சரி அனைத்தும் ஒன்று சேர்ந்து வாசகனை சற்று பயமுறுத்தக் கூடியவைகள் தான். வாசகனை தூரத்தில் நிற்க வைத்து அருகில் அண்ட விடாமல் விலக்கி வைக்கும் தன்மை கொண்ட பிரம்மாண்ட புனைவு இது.
Tuesday, December 12, 2023
Friday, March 24, 2023
நான் புதுமைப்பித்தன்
எஸ். ராமகிருஷ்ணனின் நான் புதுமைப்பித்தன் நாடகம் கூத்துப்பட்டறையியில் இன்று (24/03/2023) அரங்கேறியது. காலையில் இருந்தே அதற்காக தயாராகிவிட்டோம். அதுவும் பித்தனுக்காக. புதுமைப்பித்தனின் முழு வாழ்க்கையையும் இந்த நாடகத்தில் எஸ். ரா கச்சிதமாக வடிவமைத்திருக்கிறார் என்று சொல்லலாம். அதாவது ஒருவரின் () மரணம் வரை. பித்தனின் மரணத்தை முடிவாகக் கொண்டு நாடகம் உச்சத்தைத் தொடுகிறது. கடவுள், பால்வண்ணம் பிள்ளை என நாடகத்தின் பாத்திரங்கள் அனைவரும் பித்தனின் படைப்புகளில் இருந்து வந்து பிந்தனுக்கு இறுதி மரியாதையை செலுத்துகிறார்கள். நாடகத்தில் அதிகம் விவரிக்க முடியாது. வாழ்க்கையை பெரிய கதையாகவும் சொல்ல முடியாது. குறைந்த கால அளவில் அதுவும் காட்சி படுத்துதலை ஆதாரமாகக் கொண்ட நிகழ்த்து கலையில் வாழ்வின் அதன் முழுமையை நிகழ்த்துவது என்பது அசாதாரணம். மாய புனைவு இதனை சாத்தியமாக்கி இருக்கிறது. பித்தனாக நடித்தவரின் உயரமும் உடல் வாகும் ஒரு கட்டத்தில் பித்தனையே உணரச் செய்தது. பால்வண்ணம் பிள்ளையின் நடிப்பு அபாரம். எதனை புனைவு என்று நினைத்து நாம் நாடகத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோமோ அதுவே ஒரு கட்டத்தில் நிஜமாக உணரப்பட்டு அதற்குள் வேறொரு புனைவு உள்ளே நுழைகிறது. உள் நுழையும் புனைவுக்கு தெரியாது தான் உள் நுழையும் நாடகம் என்ற நிஜமும் ஒருவகையில் எஸ். ராவின் புனைவுதான் என்று. புனைவுக்கும் நிஜத்துக்குமான இந்த விளையாட்டு புதிர் தன்மைக் கொண்ட மந்திர விளையாட்டு. எழுதும் போது அதில் ஒரு Punch 👊 இல்லாமல் இருந்தால் எப்படி. நாடகம் முடிந்தவுடன் என்னையும் கட்டுப்படுத்த முடியாமல் நாடகத்தைப் பற்றி பேச உந்தித் தள்ளப்படேன். எப்போதும் இதுபோல் நிகழ்ந்தது இல்லை. பித்தனுக்காக.
வாசிக்கும் போதே இந்த தன் வரலாற்று நூலின் சில பகுதிகளைப் பகிராமல் இருக்க முடியவில்லை. பௌத்த வேட்கையின் பயணத்தில் கொஸாம்பி எடுத்து வைத்த...
-
கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே கரிச்சான் குருவிகளை அதிகம் என் ஊரில் ப...
-
Prey Searching White Birds One can see thousands of birds camped on the bog land of “*******”. They are very busy by looking down into...
-
Four Legs Good Two Legs Bad I was reaching Velachary station. The speaker in the train announces that the station is the last one an...