வீட்டின் பின்புறம் காட்டுவா மரம் ஒன்று இருக்கிறது. பசுமையான இலைகள் மூடி தழைத்து நிற்கிறது. மொட்டை மாடிக்கு சென்று சிறிது நேரம் தனிமையில் இருக்கும் போதெல்லாம் அந்த மரத்தில் வந்தடங்கும் பறவைகளை உற்று நோக்குவது வாடிக்கை. சில நேரங்களில் பச்சைக் கிளிகள் ஒன்று இரண்டு என வந்து அமர்ந்திருக்கும். தண்ணீரில் சிறு ஓடு ஒன்றை விட்டெறிந்தால் எப்படி தத்தி தத்தி குதித்து செல்லுமோ அது போன்று சிறு கிளைகளில் சிட்டு குருவிகள் ஓர் இடத்தில் உட்காராமல் சதா குதித்துக் கொண்டே இருக்கும். காகங்கள் இல்லாமல் அந்த மரம் ஓய்ந்திருப்பதில்லை.
Friday, November 13, 2020
Tuesday, October 27, 2020
கடைசியில் எஞ்சி நிற்பது
வரலாறு முழுக்க மனித சிந்தனை ஒரு மாபெரும் பரிணாம வளர்ச்சியில் பயணித்து கொண்டிருக்கிறது. நேற்றைய சிந்தனை இன்று இல்லை. இன்று எதை இலட்சியக் கனவாக உறுதியாக பற்றி பிடித்துக் கொண்டிருக்கிறோமோ அது நாளை காலாவதியாகிவிட்டிருக்கும். உண்மை என்னவெனில் மனிதர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக சிந்திப்பவர்கள் அல்ல. மனிதன் யோசனை செய்யும் விலங்கு என்று சொன்னால் அது பொய்.
Monday, August 10, 2020
ஆசை முகம் மறந்து போச்சே, நினைவு மறக்க லாமோ
முதல் சந்திப்பில் பார்த்த ஒருவருடைய முகத்தை வாழ்நாளில் ஒருபோதும் மறக்கவே முடியாது. அது நெஞ்சில் வரையப்பட்ட அழியாத கோலம். நீடித்து காலத்திற்கும் நிலைநிற்கும் முகம் அது. பின்பு எத்தனை வருடங்கள் அந்த முகத்தோடு வாழ்ந்து பழகினாலும் அந்த முதல் சந்திப்பில் பெற்றுக் கொண்ட சித்திரத்துக்கு அது ஈடாகாது. முதல் சந்திப்பின் முகம் தனித்து நிற்கும் முகம். நம் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் முதல் சந்திப்பின் முகத்தை நம் மனத்திற்குள் வரைந்து வைத்திருப்போம். விதிவிலக்காக அம்மாவின் முகத்தை வேண்டுமானால் சொல்லலாம். அது பழகிப் போன முகம். அது வியப்பையோ, அச்சத்தையோ திடீர் என்று ஏற்படுத்துவதில்லை. கருனையின் முகம் அது. மற்றபடி அப்பா முதல் நண்பர்கள் வரை எல்லாருடைய முகங்களும் ஏதோ ஒரு தாக்கத்தை நமக்குள் செலுத்தி அம் முகத்தை மனதிற்குள் பதியவைக்கின்றன. புகைப்பட கருவி போன்று. ஒரு கிளிக் செய்தவுடன் பட்டென்று வெளிச்சம் பாய்ந்து காட்சி கருவிக்குள் பதிய வைக்கப்படுகிறது.
Wednesday, April 15, 2020
பொன் பரப்பி
தெரு முனையில்தான் மருந்து கடை. இந்த மிகக் குறுகிய தூரத்தை நடந்து சென்று வருவதற்குள் எத்தனை அதிசயங்கள் கண் முன் நடக்கின்றன. இது சென்னைதானா! சாலை வெறிச்சோடிக் கிடக்கிறது. மருந்து வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும் போது தேன் சிட்டுக்கள் சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. சொஞ்சம் கவனித்து பார்த்தால் சிறிய மரங்களில் ஒன்று இரண்டு என ஆங்காங்கே தேன் சிட்டுக்களை காண முடிகிறது. தனித்தனியாக ஒவ்வொரு பறவையின் சத்தத்தையும் தனித்து கேட்கமுடிகிறது. கிளியின் சத்தமும் கேட்கிறது. தூரத்தில் குயிலின் ஓசை. கவித்துவமாக இருக்கட்டுமே என்று சொல்லவில்லை. உண்மை. இவர்கள் எல்லாம் இத்தனை நாட்கள் எங்கிருந்தார்கள். ஏதோ காக்கைகள் மாத்திரமே நிரந்தர சென்னைவாசிகள் போன்று முன்பெல்லாம் நகரத்தை வட்டம் வருவார்கள். அத்தனை காக்கைகள் இருந்தும் இப்போது அவைகளை பொருட்படுத்த முடியவில்லை. சிங்காரமான தேன்சிட்டும், கண்ணுக்கு தெரியாமல் கூவிக்கொண்டிருக்கும் குயிலும் எண்ணிக்கையில் குறைவுதான். விரல் விட்டு எண்ணிவிடலாம். இப்போது தெருவில் அவர்களே முக்கிய பிரஜைகள் என்று ஆகிவிட்டார்கள். காகங்களின் இருப்பு பொருளற்று போய்விட்டது.
Saturday, March 28, 2020
நாலுகெட்டு: புதிய தாயத்தின் பாரதக்கதை
Monday, March 23, 2020
பேரிடர் காலங்களும், நீடிக்கும் பெருங்காதல் கதைகளும்
Saturday, March 21, 2020
பொந்தன் மாடன்
Monday, February 24, 2020
தனித்து நிற்கும் எருக்கஞ்செடி
Sunday, February 16, 2020
வாசி(ரி)ப்பு எனும் தொற்று நோய்க் கிருமி
Thursday, February 13, 2020
இருவர் என்பது முழுமை சார்ந்த விசயம்
Monday, January 20, 2020
James Joyce: காவியம் பாடிய கலைஞன்
வாசிக்கும் போதே இந்த தன் வரலாற்று நூலின் சில பகுதிகளைப் பகிராமல் இருக்க முடியவில்லை. பௌத்த வேட்கையின் பயணத்தில் கொஸாம்பி எடுத்து வைத்த...
-
கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே கரிச்சான் குருவிகளை அதிகம் என் ஊரில் ப...
-
Four Legs Good Two Legs Bad I was reaching Velachary station. The speaker in the train announces that the station is the last one an...
-
Nostalgic feelings of the nursery rhyme gush to one’s memory whilst the eye gazes at the night sky. The floating pristine disc invite...