ஒரு
பொருளை அதன் பௌதிக நிலையில் வைத்து அதனை விளங்கிக் கொள்ள முடியுமா என்பது சந்தேகமாக
இருக்கிறாது. முதலில் அதனைப் பார்க்கிறோம், பின்பு அதனை மனதில் இருத்திக் கொள்கிறோம்.
இவ்வளவுக்கும் பிறகு அதனைக் கற்றல் என்ற அவசியம் ஏன் தேவைப்படுகிறது? ஒரு பொருளை, அது
என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், பார்த்து அதனை மனதில் பதிய வைத்துக் கொண்டால்
மாத்திரம் போதாதா? அதற்கும் மேல் சென்று ஏன் அதனை ஒரு பெயர் இட்டு படிக்கிறோம். இப்பிரபஞ்ச
வெளியில் இருக்கும் அனைத்தையும் நாம் படித்தாக வேண்டுமா? படித்தல் மூலமாகத்தான் நாம்
இவ்வுலகத்தையே அறிகிறோமோ? அப்படியெனின் அந்த அறிதல் என்பதுதான் என்ன?
Thursday, May 25, 2017
Saturday, May 6, 2017
நியூட்டனியத் தருணம்
நியூட்டன்
பலமுறை அந்த மரத்தடிக்கு சென்றிருக்கலாம். அங்கு பழங்கள் விழுவது அவரது எண்ணங்களை ஈர்க்காமல்
இருந்திருக்கலாம். அவருடைய கவனமும் அவைகள் மீது செலுத்தப்படாமல் இருந்திருக்கலாம்.
அந்த ஒரு நாள் மாத்திரம் சூழ்நிலை முற்றிலும் ஒருமித்து ஒரு மாபெரும் புதிய கண்டுபிடிப்பிற்கான
தருணமாக அமைந்துவிட்டது. அது ஒரு கண்டுபிடிப்பிற்கானத் தருணம். இப்படித்தான் சொல்லியாக
வேண்டும். அந்த ஒரு பொறிதட்டல்தான் ஒரு யுகத்திற்கான மாபெரும் கண்டுபிடிப்பை சாத்தியமாக்கியது.
அதனையே மக்கள் நம்பவும் ஆரம்பித்தனர். இது போன்று ஒரு தருணத்தை என்னுடைய ஆய்வேட்டை
பிரிண்ட் எடுத்து பைண்டிங் செய்ய பெல்ஸ் ரோட்டில் காம்லக்ஸ் ஒன்றிற்கு சென்றபோது ஏற்பட்டது.
அது ஒரு நியூட்டனியத் தருணம் என்று சொல்லிக் கொள்ள முடியாவிட்டாலும் அது ஒரு அகவிழி
திறந்தத் தருணம் என்றாவது சொல்லலாம்.
திருநெல்வேலியும், திருவல்லிக்கேணியும்
திருவல்லிக்கேணியில்
ஒரு உயர்தர சைவ ஓட்டலில் அமர்ந்து கொண்டு புரட்சியைப் பற்றியும் பசியைப் பற்றியும்
ஒருவன் சிந்தித்தால் அது எப்படிப்பட்ட புரட்சி சிந்தனையாக இருக்கும். பசியைப் பற்றி
பேசுவதென்றால் பசியில் வாடும் மக்களை நேரில் சென்று பார்க்க வேண்டும் உள்ளம் பதபதைக்க
வேண்டும். அதன் பின்பு பேனா முனை கூர்மையாக வேண்டும். ஆனாலும் பேனா முனை அதன் குமிழியில்
இருக்கும் மையை இது போன்ற சைவ ஓட்டல்களில் உடகார்ந்தால்தான் மையை சீராக வெளியேற்றுவேன்
என்று அடம் பிடிக்கிறது. உண்மையில் அது பேனாவின் பிடிவாதம் கிடையாது, சிந்தனையின் பிடிவாதம்.
என்னை நானே குற்றப்படுத்திக் கொள்ள முடியாது அல்லவா? அதனால்தான் முழுப் பழியையும் அந்த
அய்யோப் பாவம் பேனாவின் மீது போட்டுவிட்டேன். எனக்காக அந்த உயிர் அற்ற ஜடம் பழி ஏற்றுக்
கொண்டால் அதற்கு மனம் வலிக்கவா போகிறது. வீச்சரிவாளை விட தனக்குத்தான் சக்தி அதிகம்
என்று பெருமைப் பட்டுக் கொள்கிறார் அல்லவா? இதையும் சற்று சுமந்து திரியட்டும். அழட்டும்
நன்றாக அழட்டும்.
ஆள் பாதி ஆடை பாதி
நம்ம ஊர்க்காரர்கள் டை கட்டுவது பார்ப்பதற்கே
மிகவும் வேடிக்கையான காட்சி. நமக்கு கச்சிதமானது கதர் சட்டையும் வேட்டியும்தான். மிக
எடுப்பான உடைகள். சில காலங்களுக்கு முன்பு கோட்டை மாட்டிக் கொண்டு இடுப்பில் வேட்டியை
கட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த முட்டை போண்டா மாதிரியான தொப்பை உடலுக்கு கோட் என்பது
மிகவும் வேடிக்கையான உடைதான். இதையெல்லாம் நமக்கு யார் கற்றுக் கொடுத்தார்கள் என்பதுதான்
இன்னும் புரியவே இல்லை. இன்றைய சில வாலிபர்கள் கோட்டை அணிந்துக் கொண்டு டை கட்ட மறந்து
விடுகிறார்கள். எப்படியோ மேலை நாட்டு நாகரீகம் நமக்கு முற்றிலும் ஒத்து வருவதற்கு மறுக்கிறது.
அந்த உடை நாகரிகத்தைச் சரியாக கடைபிடிப்பவர்கள் சேல்ஸ் ரெப்ரெசென்டேட்டிவ்ஸ் என்றே
நினைக்கிறேன். அதுகூட தூரத்தில் இருந்து பார்க்கும் போது மாத்திரம் தான் மிக நாகரீகத்
தோற்றத்தைக் கொடுக்கிறது. மிக அருகில் சென்று பார்க்கும் போது பாவம் விதியே என்று இந்த
உடையை அணிந்து கொள்கிறார்கள் போலும் என்ற இரக்கம் மேலிட ஆரம்பித்துவிடுகிறது. பேண்ட்
இல்லாதக் கோட்டும், டை இல்லாத கோட்டும், முடிவாக கோட்டே இல்லாமல் வெறும் சட்டையின்
மீது டை கட்டிய நாகரீகமும் ஏதோ ஒன்றை சொல்ல வருகிறது. அதிகாரம் நம் மீது அதீதத்தில்
திணிக்கப்பட்டு அசௌகரியத்துக்காக எதிர்ப்பைக் காட்ட வேண்டுமே என்பதன் பேரில் கோட்டு
சூட்டுக்கான உடைகளில் ஒன்றை நிராகரித்து புரட்சியைக் காட்டி விடுகிறோம். இருப்பினும்
நீ எதையாவது மாட்டிக் கொண்டே ஆக வேண்டும் என்னும் அதிகாரத்தில் அதையும் கண்டு கொள்ளாமல்
விட்டுவிடுகிறது. நோக்கம் இதுதான். இந்த மேல் நாட்டு உடையில் எதாவது இரண்டு அம்சங்களாவது
நம் உடல் மீது இருந்தாக வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)
வாசிக்கும் போதே இந்த தன் வரலாற்று நூலின் சில பகுதிகளைப் பகிராமல் இருக்க முடியவில்லை. பௌத்த வேட்கையின் பயணத்தில் கொஸாம்பி எடுத்து வைத்த...
-
கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே கரிச்சான் குருவிகளை அதிகம் என் ஊரில் ப...
-
Four Legs Good Two Legs Bad I was reaching Velachary station. The speaker in the train announces that the station is the last one an...
-
Nostalgic feelings of the nursery rhyme gush to one’s memory whilst the eye gazes at the night sky. The floating pristine disc invite...