இன்று காலையில் நடை பயணம் செல்லும் போது எருக்கஞ்செடி ஒன்று கண்ணில் பட்டது. நகரத்தில் செடிகளும் பறவைகளும் அபூர்வமாக கண்ணில் படும் போது அவைகள் அதி முக்கியமானவைகளாக மாறிவிடுகின்றன. அதுவே கிராமம் என்றால் அவைகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. இங்கே ஜன நெருக்கடியின் மத்தியில் ஒற்றை ஆளாய் இவைகள் முக்கியத்துவம் பெற்று தனித்து நிற்கின்றன. தனித்து நிற்பவர்களுக்கே எப்போதும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நகரத்திலேயே பிறந்த ஒருவனுக்கு இவ்வளவு மக்கள் நெருக்கடியை பார்க்கும் போது அது புதிதானது அல்ல. கிராமத்தானுக்கு அது மிரட்சியை உண்டாக்கும். செடியும், பூவும், பறவைகளும் நகரவாசிகளுக்கு அபூர்வமானவைகள். எருக்கஞ்செடி இன்று கண்ணில் பட்டவுடன் அது அவ்வளவு முக்கியத்துவம் கொண்டதாகிவிட்டது. அதுவும் கடற்கரை ஓரத்தில் ஒரு செடி தனித்து நிற்கும் போது ”இங்கே ஒருவன் உன் பார்வைக்காக தனித்து நிற்கிறேன். என்னிடம் அருகில் வா. வந்து மலர்களையும், இலைகளையும், பிஞ்சு விட்டு இருக்கிற பச்சைக் காயையையும் கொஞ்சம் உன் கேமராவில் படம் எடுத்துக் கொள்” என்று அழைப்பு விடுப்பது போன்று இருந்தது.
Monday, February 24, 2020
Sunday, February 16, 2020
வாசி(ரி)ப்பு எனும் தொற்று நோய்க் கிருமி
சென்ற ஆண்டு மே மாத விடுமுறையை வீணாக்காமல் பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என்று முடிவு ஒன்று எடுக்கப்பட்டது. வருட இறுதியில் வாசிப்புக்கு ஒரு தமிழ் ஒரு ஐரோப்பிய நாவல் என இருந்தது அந்த முடிவு. முப்பது நாட்கள் விடுமுறை எதையுமே செய்யாமல் வீணடிக்கப்பட்டால் அது குறித்த வருத்தம் காசை வீணாக்கியதற்கு இணையாக இருக்கும். தொடர் விடுமுறைகள் பலனற்ற விதத்தில் விரயம் ஆகும் போது அங்கே மிக பெரிய வெற்றிடமும் வெறுமையும் ஆட்கொண்டு விடுகிறது.
சென்ற ஆண்டு அது ஏற்படக் கூடாது என்பது மிகத் தெளிவாக இருந்தது. ஏற்கனவே Ph.Dக்காக செலவிட்டு பலன் கிடைக்காமல் போன நாட்களின் வெற்றிடம் வேறு இன்னும் விரிந்து பாதாளம் போன்று பூதாகரமாகிக் கிடக்கிறது. எதை கொண்டு அதனை பூர்த்தி செய்து கொள்வது என்பது தெரியவில்லை. நாட்களின் வெற்றிடத்தை நல்ல கதைகள் மாத்திரமே பூர்த்தி செய்யக்கூடும் என்பது நம்பிக்கை.
Thursday, February 13, 2020
இருவர் என்பது முழுமை சார்ந்த விசயம்
இலட்சிய கதைகளின் நாயகர்கள் தங்களுடைய சிந்தனைத் திறனுக்கு முற்றிலும் மாறுபட்டவர்களையே நண்பர்களாக எற்றுக் கொள்கிறார்கள். டான் குவிக்சாட் அப்படிப்பட்ட இலட்சிய நாயகன். தன் வீர சாகச பயணத்தில் தனக்கென்று தோழன் ஒருவனை கண்டடைந்தான். குவிசாட்டுக்கு கொஞ்சமும் இணையானவன் அல்ல அவன். தன்னோடு ஒப்பிடும் போது அவ்வளவு பெரிய அறிவாளி ஒன்றும் கிடையாது. ஆனாலும் குவிசாட்டுக்கு அவனை பிடித்திருந்தது. இத்தனைக்கும் பண்ணை தொழிலாளி என்ற தகுதி நிலைதான் அவனுக்கு. குவிக்சாட் அவனை நண்பனாக ஏற்றுக் கொண்டான். சொல்லப்போனால் சான்சோ இலட்சிய நாயகனின் கண்ணாடியில் பிரதிபலிக்கும் பிரதி பிம்பம். பார்த்த மாத்திரத்தில் எப்படி தன்னுடன் இலட்சிய பயணத்தில் துணைக்கு அழைக்க முடியும். சாஞ்சோ வேறொருவன் அல்ல. குவிக்சாட்டை கண்ணாடியில் நிழலாக பிரதிபலிப்பவன் அவன்.
சந்தித்த போது இருவருக்கும் அறிமுகம் ஏதும் தேவை இருந்திருக்கவில்லை. அழைத்தவுடனேய அவனும் எதிர் கேள்வி எதுவும் கேட்க்காமல் கிளம்பிவிடான்.
Subscribe to:
Posts (Atom)
வாசிக்கும் போதே இந்த தன் வரலாற்று நூலின் சில பகுதிகளைப் பகிராமல் இருக்க முடியவில்லை. பௌத்த வேட்கையின் பயணத்தில் கொஸாம்பி எடுத்து வைத்த...
-
கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே கரிச்சான் குருவிகளை அதிகம் என் ஊரில் ப...
-
Four Legs Good Two Legs Bad I was reaching Velachary station. The speaker in the train announces that the station is the last one an...
-
Nostalgic feelings of the nursery rhyme gush to one’s memory whilst the eye gazes at the night sky. The floating pristine disc invite...