நம்மை சுற்றின உலகத்தை கதைகளால் கட்டமைத்து வைத்திருக்கிறோம்
என்ற எண்ணம் ஜேம்ஸ் ஜாய்ஸின் யுல்லிஸஸ் வாசிக்கும் போது ஏற்படுகிறது. கதைகள் மாத்திரம்
அல்ல நம்பிக்கைகளாலும் அதனை கட்டமைத்து வைத்திருக்கிறோம். நம் முன்னோர்கள் உருவாக்கிய
கதைகளைக் கொண்டும் நம்பிக்கைகளைக் கொண்டும் வாழ்வின் யதார்த்தத்தை அணுகுகிறோம். அல்லது
இப்படியும் சொல்லலாம், வாழ்வின் யதார்த்தம் என்பதே நம்பிக்கைகள், கதைகளின் கூட்டுமொத்தம்.
இந்த மாயைக் கொண்டே வாழ்க்கையை அதன் பிறப்பு முதல் இறப்புவரை வாழ்ந்து முடித்துவிடுகிறோம்.
நம்மை சுற்றிலும் பிராண வாயு மூடியிருப்பது போன்று இந்த மாயை நம்மை ஆட்கொண்டிருக்கிறது.
இந்த நம்பிக்கையின், கதைகளின் கட்டமைப்பிற்கு எதாவது ஒரு ஒற்றை சொல் கொண்டு அழைப்பதற்கு
வேறெதுவும் சொற்கள் அகப்படவில்லை. மாயை என்ற வார்த்தையும் அதிக மத நம்பிக்கையின் சாரம்
ஏற்றப்பட்ட வார்த்தை. ஆங்கிலத்தில் உத்தேசித்த வார்த்தை என்னவோ illusion. இந்த ஜட உலகத்தை
இந்த illusionனைக் கொண்டே புரிந்து கொள்கிறோம், வாழ்கிறோம். இறுதியாக இந்த illusionனைக்
கொண்டே கடந்து செல்கிறோம்.
Tuesday, December 31, 2019
Friday, December 13, 2019
எல்லையற்ற பிரபஞ்சம், முடிவற்ற காலம், கணக்கில் அடங்கா முகங்கள்
நம்மை
சுற்றி எத்தனைவிமான முகங்கள். ஒன்று போல் மற்றொன்று இல்லை. அனைத்தும் வேறுபட்ட முகங்கள்.
ஏதோ இரண்டு மூன்று முகங்கள் கொஞ்சம் குறைய ஒற்றுமை கொண்டிருக்கும். அவைகளேக் கூட வித்தியாசப்
பட்டவைகள். ஒரே மாதிரியாக சேர்ந்தாற்போன்று ஐந்து முகங்களை காண்பது அரிது. ஏன் இத்தனை
வேறு பட்ட முகங்கள் என்று கேள்வி கேட்டுக் கொண்டதே இல்லை. இதைப் பற்றி யோசிக்கக் கூட
இல்லை. ஒரே ஜாடையில் இரண்டு முகங்களை கண்டால் அது ஆச்சரியம். ஏதோ உலக அதிசயத்தை கண்டு
விட்டது போன்றதொரு வியப்பு. ஜாடை ஒன்றாக இருப்பது என்னவோ இயல்புக்கு ஒவ்வாத ஒன்றுதான்.
Subscribe to:
Posts (Atom)
வாசிக்கும் போதே இந்த தன் வரலாற்று நூலின் சில பகுதிகளைப் பகிராமல் இருக்க முடியவில்லை. பௌத்த வேட்கையின் பயணத்தில் கொஸாம்பி எடுத்து வைத்த...
-
கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே கரிச்சான் குருவிகளை அதிகம் என் ஊரில் ப...
-
Four Legs Good Two Legs Bad I was reaching Velachary station. The speaker in the train announces that the station is the last one an...
-
Nostalgic feelings of the nursery rhyme gush to one’s memory whilst the eye gazes at the night sky. The floating pristine disc invite...