புலப்படாத பூனையும் (imperceptible) உணரப்படாத நிசப்தமும்
நேரக்கணக்கு எப்போதும் கடிகார
முள்ளின் நகர்வின் படி கணக்கிடப்படுவதில்லை. நிமிட முள்,
வினாடி முள், நேர முள்
என்று காலம் அதன் வேகத்தில்
அல்லது தாமதத்தில்
நகர்ந்து கொண்டே செல்கிறது. இப்பிரபஞ்சத்தின்
அசைவு வினாடி முள்ளின் வேகத்தைக்
காட்டிலும் மிகக் குறைவானது. நத்தை
ஊர்ந்து போவது போன்று பிரபஞ்ச
இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வளவு பெரிய பூமி
பத்து நேர கணக்கு படி
தன்னை தானே ஒரு சுற்று
சுற்றிக் கொள்ள 24 மணி நேரங்கள் எடுத்துக்
கொள்கிறது. இது பருப்பொருள் அசைவு.
அதை விட சத்தத்தின் அதிர்வு இயக்க
நகர்வு மிக
வேகமானது. ஒரு கல்லை தூக்கி
எரிவதற்கும், அதிர்வலைகள் மூலம் சத்தத்தை ஒரு
எல்லையில் இருந்து மற்ற எல்லைக்கு
அனுப்புவதற்கும் கால வித்தியாசம் உண்டு.
வெளிச்சத்தின் வேகத்தை அளப்பது மிகவும் கடினம். கணக்கிட முடியவில்லை
என்பதை விட மனித மூளைக்கு
அந்த திறன் இல்லை என்றுதான்
சொல்ல வேண்டும். அதி வேக இயக்கமான
ஒளியின் பாய்தலும் சரி மிக மிக
மிக குறைந்த வேகத்தில் இயங்கும்
இந்த பிரபஞ்சமானாலும் சரி மனித பார்வைக்கு
முன்பு அதன் இயக்கம் செயலற்ற
சிசப்த நிலையாகும். கணிக்க முடியாததால் ஒரு
இயக்க விதியை நிசப்த நிலை
என்கிறோம். பிரபஞ்சத்தின் அகண்ட வெட்ட வெளியில்
கிரகங்கள், விண்மீன்களின் இயக்கத்தை நிசப்தம்
என்று சொன்னால் அது பார்வை மயக்கம்.
புலன்களின் உணர்வுகளுக்கு அப்பால் பிரபஞ்சம் பேரியக்கத்தில்
இயங்கி கொண்டிருக்கிறது.