கீழ் வானம் சிவக்கும்
பெட்ரிசியன்
கல்லூரியில் Phantasia என்னும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்களே முன் நின்று
நடத்தும் நிகழ்வு இது. பேராசிரியர்களின் உதவியும் தேவைப்பட்டதால் எங்கள் பங்கிற்கு
Face Painting நிகழ்வை ஒருங்கிணைக்கும் வாய்ப்பு எனக்கும் மற்றொரு பேராசிரியருக்கும்
கிடைத்தது. போட்டியின் Judge ஆக வந்தவர் ஓவியர் சுஜித் குமார் கந்தன். இளங்கலை மற்றும்
முதுகலை ஓவியம் பயின்றவர். இவ்வளவுதான் அவரைப் பற்றி எனக்கு கிடைத்த முன்தகவல். அவர்
வரும் வரை அவரைப் பற்றியும் அவரது ஓவியங்கள் பற்றியும் அறிய கூகுளில் சொஞ்சம் நேரம் செலவழித்தேன்.
அவர் வந்தவுடன் கல்லூரி முதல்வரிடம் அறிமுகம் செய்துவிட்டு, சிறிது நேரம் அவருடன் உரையாடினேன்.
ஓவியர்களுடனான என் உரையாடல்களில் அதிகம் பேசு பொருட்களாக இருப்பவை இரண்டு: ஒன்று நீல
நிறம், மற்றொன்று கியூபிசம். இவ்விரண்டைப் பற்றியும் எவ்வளவு பேசினாலும் அல்லது கேட்டாலும்
சோர்வடைய செய்யாதவைகள். புலப்படும் நிறமும் உருகொண்ட Geometry வடிவங்களும் ஓவியத்தை
எப்போதும் புத்தம் புதிதாக காட்டி கொண்டே இருக்கும். புரிதல்கள் புதிது புதிதாக ஓவியத்தைப்
பற்றி ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.