கோட்பாடு வேறு உண்மை வேறு. கோட்பாட்டை ஒரு இயக்கத்திற்கு உரியதாக/சொத்தாக வைத்துக் கொண்டாடலாம். கோட்பாடு ஒரு இயக்கத்திற்கு அப்பழுக்கற்ற உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் உண்மை கோட்பாடாக மாறமுடியாது. உண்மைக் கோட்பாடு அல்ல. அப்படி என்றால் கோட்பாடு என்பது என்ன என்பதுதான் கேள்வி. தலை சுற்றுகிறது. விதியே என்று ஒரு சாராரின் கொள்கைகளை வாழ்க்கையாக வாழ்ந்து விட்டால் பிரச்சனையே இல்லை. கொள்கையற்று எங்கும் காணக் கிடைக்காத உண்மையைத் தேடி அலைவதுதான் மரணத்தின் வலி. இருப்பினும் இந்துவில் THE AGE OF POST-TRUTH POLITICS என்னும் தலைப்புக் கொண்ட நடுப் பக்கப் பத்தி சற்று ஆறுதல் அளிக்கிறது.
Monday, November 28, 2016
Tuesday, November 22, 2016
குழப்பத்தின் யுகம் நம்முடைய யுகம், அதன் குழப்பத்தை ஏற்க நாம் மறுக்கிறோம்
இருபதாம் நூற்றாண்டு மிகவும் கொடூரமான
நூற்றாண்டு. உலகப்போர்களைக் கண்ட நூற்றாண்டு அது. அதனிடம் திரும்பிச் செல்ல யாருமே
விரும்ப மாட்டார்கள். படைப்பாளிகள் கூட அதனை அப்படியே தங்களுடைய கதைகளில் காட்சிப்படுத்தவில்லை.
போர்களை காட்ட காதல் காவியங்கள் மாத்திரமே அதனை பேசுவதற்கு துணை நின்றன. நேரில் பார்த்து
சகிக்ககூடாத யுகம் அது. அது தன்னை தற்போது கதைகள் மூலமாக நம்மை திருபத் திரும்ப நான்
மீண்டும் வருவேன் என்று பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது. நாமும் அது தரும் அச்சத்திலேயே
நம்முடைய இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த நூற்றாண்டு
எப்போது வெடித்தெழும்புமோ என்ற மெல்லியதான அச்சம் தேசிய/சர்வதேசிய அளவில் மாற்றங்கள் ஏற்படும்
போது துளிர்க்க ஆரம்பிக்கிறது. இருந்தாலும் அந்த அகோரமான நூற்றாண்டு நம்மிடம் கண்ணாமூச்சி
ஆட்டம் ஆடிக்கொண்டேயிருக்கிறது.
Wednesday, November 16, 2016
உலகப் புகழ் பெற்ற பேனா
உலகப் புகழ் பெற்ற பேனா
என்னுடைய பௌண்டன் பேனா ஆயிரம் ரூபாய்.
வாங்கியபோது அதிகம் விலை கொடுத்து ஏமாந்து விட்டேனோ என்ற குற்ற உணர்வு தொடந்து இருந்து
கொண்டே இருந்தது. ஏறக்குறைய ஒரு ஆண்டிற்கு யாரிடமும் அதனுடைய விலையைப் பற்றி சொல்லவே
இல்லை. யாரேனும் “என்ன விலை” என்று கேட்டாள் அன்பளிப்பு என்று மழுப்பி விடுவென். திறந்து
பார்த்து விட்டு ”இரிடியம் பாய்ன்ட்” என்று சொல்லி அதிகம் விலை இருக்கும் என்று திரும்பத்
தந்து விடுவார்கள். அதுதான் என் பேனாவைப் பற்றிய முதல் அறிவுத் தகவல். அது வரை இரிடியம்
பாயின்ட் பேனாவிற்கும் மற்ற பேனாக்களுக்கும் எந்த வித்தாசமும் தெரியாது. தெரிந்திருக்க
அவசியமும் இருந்திருக்கவில்லை. பள்ளிக் கூடத்தோடு எல்லாம் முடிந்து விட்டது. அப்போதெல்லாம்
Ink பேனா அவ்வளவு பெரிய விஷயமாக இருக்காது. அப்போது இருந்த ரெனால்ட்ஸ் பேனாக்கள் தான்
அதிகம் கவனத்தை ஈர்க்கும். அந்தப் பேனாக்களுக்கே டியூப்ளிக்கேட் வந்து கொண்டிருந்தது.
ரெனாட்ஸ் நான்கு ரூபாய் என்றால் போலி ஒரு ரூபாய். எனினும் பௌண்டன் பேனா பக்கம் கவனம்
திருபியதே கிடையாது. அது ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை. எனது பக்கத்து தெரு பையன் அவனுடைய
ஜாமன்ட்டரி பாக்ஸில் குறைந்தது ஏழு ரெனால்ட்ஸ் பேனாக்களாவது வைத்திருப்பான். ஒன்றையாவது
தரமாட்டனா என்ற ஏக்கம் அவைகளைப் பார்க்கும் போதெல்லாம் இருக்கும்.
Monday, November 14, 2016
கெய்ஷா: ஆண் அகங்காரத்தின் மீட்டெடுப்பு
கெய்ஷா: ஆண் அகங்காரத்தின் மீட்டெடுப்பு
ஜெயமோகனின் கெய்ஷா சிறுகதை தன்னில் தானே ஒரு வசிகரத்தை வைத்துக் கொண்டு வாசிப்பை வலியின்றி தன்னுள் இலகுவாக பயணிக்கச் செய்யும் கதையாகும். அவருடைய வலைபக்கத்தில் கதையை பார்த்தவுடன் முழுவதையும் வாசித்து விட வேண்டும் என்ற தீர்மானம் ஏற்பட்டது. கதை ஆரம்பித்ததுதான் தெரியும் எப்படி முடிந்தது என்று எண்ணம் கொஞ்சம் கூட இல்லை. அதுதான் ஒரு சிறந்தக் கதைக்கான இயல்பு. உண்மையில் அன்று காலை, வாசிப்புக்கு ஏற்ற காலையாக இருக்கவில்லை. நோக்கம் எதுவும் இன்றி எதை எதையோ இயந்திரத்தனமாக செய்து கொண்டிருந்தேன். அந்தத் தருணத்தில் கதை தன்னுடையை கரங்களை கெய்ஷாவைப் போல் தன்னுள் என் வாசிப்பை அரவணைத்துக் கொண்டது.
Friday, November 11, 2016
தண்டனைக்கான காரணம்: குற்றமா தப்பிக்க வழியின்மையா?
தண்டனைக்கான காரணம்: குற்றமா தப்பிக்க
வழியின்மையா? (கோமாளிக் குயிஸாட்டின் பதில்கள்)
சமுகத்தில் பாவப்பட்டவர்கள் என்று யாரேனும்
ஒரு குழுவினர் இருக்கிறார்களா. அப்படி இருந்தால் அவர்களுக்கான மீட்பு என்பது அவசியப்படுகிறதா.
அப்படியே அவர்களை விடுதலையாக்க ஒருவன் வந்தாலும் அவன் தரும் விடுதலையை ஏற்பதற்கு அந்த
அடிமைப்பட்ட மக்கள் தயாராக இருப்பார்களா. இவைகள் எல்லாம் இன்னும் புரிந்து கொள்வதற்கு நம்மால் முடியவில்லை.
இலட்சியவாதிகள் எப்போதும் தாங்கள் பாவ பட்ட ஜென்மங்களை விடுவிக்க பிறந்த மகா புருஷர்கள்
என்றே நம்பிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் யாரும் தங்களுக்கான விடுதலையை விரும்பியதும்
இல்லை உணர்ந்ததும் இல்லை. விடுதலை தேவை என்ற உணர்வு ஏற்பட்டால் தானே அவர்களுக்கு கிடைக்கப்போகும்
விடுதலையை உண்மையான விடுதலை என்றும் தாங்கள் பாவப்பட்டவர்கள் என்றும் உணர்வார்கள்.
சொல்லப்போனால் பாவப்பட்டவர்கள், ஆள்கிறவர்கள், அடிமைப்பட்டவர்கள் என்று யாரும் கிடையாது.
இதெல்லாம் நாம் உருவாக்கிக் கொண்டிருக்கும் கற்பனை பிம்பங்களே.
வெண்ணிற இரவுகள்: நவீனக் காதலின் ஏமாற்றங்கள்
வெண்ணிற இரவுகள்: நவீனக் காதலின் ஏமாற்றங்கள்
நம்
ஐம்புலன்களைக் கொண்டு இந்த பிரபஞ்ச வெளியை பார்க்கிறோம், சுவாசிக்கிறோம், கேட்கிறோம்,
தொட்டு உணருகிறோம். இதற்கு மீறியும் இந்த ஐம்புலன்களின் கூர்மையான செயல்பாட்டிற்கு
மீறி ஏதோ ஒரு விதத்தில் எதேனும் ஒரு புலன் மாத்திரம் அது செயல்படுகின்றதாக இருப்பினும்
திறன் அற்றதாக இருக்கிறதோ என்ற எண்ணம் நேற்று வெண்ணிற இரவுகள் கதையை வாசிக்கும்
போது ஏற்பட்டது. கதையின் நாயகன் பேசுவதற்கு வாய் இருந்தும் பேச்சற்றவன். அவன் ஒவ்வொரு
இரவாக சந்திக்கும் அந்தப் பெண் ஏதோ ஒரு விதத்தில் கண்கள் இருந்தும் பார்வை அற்றவள்.
உடல் என்கிற புறச்சட்டகத்திற்குள் சிக்கிக் கொண்டிருக்கும் உள் மனதிற்கும் கூட இப்படிப்பட்ட
உணர்வுகள் இருக்கின்றனவே என்று கதையை வாசித்து முடித்த பின்பு ஏற்பட்டது. உள் மனது
பார்க்கிற, கேட்கிற, உணருகிற சாளரங்கள் தான் நம்முடைய உடலின் புலன்களோ என்று கூட யோசிக்கத்
தோன்றுகிறது.
Wednesday, November 9, 2016
பணம் பொய்த்த நிலையும், வாசிக்கவிருக்கும் செல்லாத பணமும்
தி இந்து - The Hindu256 × 207Search by image
பணம் பொய்த்த நிலையும், வாசிக்கவிருக்கும் செல்லாத பணமும்
பணம் பொய்த்த நிலையும், வாசிக்கவிருக்கும் செல்லாத பணமும்
அநீதிகள் நிகழும் போது யாரோ ஒருவர் ஏதோ ஒரு விதத்தில்
அதற்கெதிரான எதிர்குரலை எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். அக்குரல்கள் ஏதோ ஒரு பாதுகாப்பு
வலையத்திற்குள்ளாக தங்களைப் பாதுகாத்துக் கொண்டே கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றன. எதிர்க்குரல்கள் எப்போதும் எதிர்குரல்களாக இருப்பதில்லை. அவைகள் பாதுகாப்பு என்கிற காப்பீட்டின் உதவியில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அநீதியும் சரி அதற்கான எதிர்க்குரலும் சரி ஏதோ ஒரு
விதத்தில் ஒன்றுடன் ஒன்று உடன்பட்டுத்தான் செயல்படுகின்றன. இவைகள் இரண்டிற்கும் மத்தியில்
ஏதோ ஒன்றின் செயல்பாட்டிற்கு நாம் தலையசைத்து ஆமோதித்தே ஆக வேண்டியிருக்கிறது. எதிர்க்குரலின் புரட்சிதன்னமைக்கு இசைந்து செயல்படுவதுதான் மிகவும்
ஆபத்தானது. அது வெறும் எதிர்ப்புக் குரல் மாத்திரமே. பிரச்சனை இங்கு என்னவெனில் இன்று
எது எதிர்க்குரலாக இருக்கிறதோ அதுதான் நாளைக்கான அதிகாரத்தின் குரல். அதிகாரத்தின்
குரலும் சரி புரட்சிக் குரலும் சரி எதோ ஒரு விதத்தில் ஒன்றாகத்தான் இயங்குகின்றன. இன்று
ஒரு குரலின் புரட்சி உத்வேகம் மேலோங்கி நிற்கும் போது அதுதான் நாளைக்கான அதிகாரத்தின்
சிம்மாசனம். அந்த சிம்மாசனத்தை அடைவதற்கான விலைதான் இன்றைய புரட்சியின் வலிகள் வீரப்போர்கள்
அனைத்தும். கண்டிப்பாக பரிசு ஒன்று இருக்கிறது. எந்த இலட்சியவாதியும் இதற்கு விதிவிலக்கல்ல.
இது ஒரு முரணியக்கம். இந்த Binaryக்கு மத்தியில் யார் ஒருவரும் தலையிடக்கூடாது. முரணியக்கங்களின்
நிலைப்பாடு வேண்டுமானால் மாறுபடலாம் எனினும் அவைகள் ஒன்றுக்கொன்று இரட்டைத்தன்மையில்
எப்போதும் தங்கள் இருத்தலைப் பாதுகாத்துக் கொண்டே இருக்கின்றன. இதில் மூன்றாம் சாராருக்கு
எந்த இடமும் இல்லை. வேடிக்கை மாத்திரம் பார்க்க வேண்டும்.
Sunday, November 6, 2016
ஏதேனின் பாம்புகள்
ஏதேனின் பாம்புகள்
இன்று ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது.
அது அப்படியே MGR ன் எங்கள் வீட்டு பிள்ளை படத்தை நினைவுப்படுத்தியது. சைவ உணவகம் செல்வதற்கு
என் பாக்கட்டில் இருந்த பணம் மிகுந்த தைரியத்தைக் கொடுத்தது. குறைந்தது இருநூறு ரூபாய்
இருந்தால் தைரியமாக உள்ளே நுழைந்து வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு அந்த இருநூறையும்
கால்லாவில் காலிசெய்து விடலாம். போதுமான பணம் கொடுத்த தைரியம் இன்று நேராக என் கால்களை
***** சைவ உணவகம் நோக்கி தள்ளியது. அதிகம் செலவழிந்தால்? இருநூறை நீச்சயம் தாண்டாது.
அத்தனை காலி மேஜைகள் இருந்தும் அந்த ஒரு இடம் மாத்திரம் ஏன் என்னை அந்த அளவிற்கு ஈர்த்தது
என்று தெரியவில்லை. என் எதிரில் இருந்த அந்தப் பையனுக்கு சுமார் இருபத்தி நான்கு இருபத்தைந்து
வயதிருக்கும். ஏற்கனவே ஒரு தட்டை காலி செய்து விட்டு கடைசியாக ஒரு பிலேட் இட்டிலியை
அமுக்கிக் கொண்டிருந்தான்.
Friday, November 4, 2016
துயருற்றவர்கள்
Fritz Eichenberg, illustrations to Crime and Punishment,1938.
துயருற்றவர்கள்
துயரத்தின் எல்லையைக் கடக்கும் போது அது
ஏற்படுத்தும் வலி தாங்க முடியாதது. அந்த நிலையில் ஒருவர் தன்னுடைய இருப்பை தொடகிறார் என்றால் அவர் நிச்சயம் மாகா புருஷனாகத்தான்
இருக்க வேண்டும். எனினும் மகா புருஷர்களே இன்றைக்கு இவ்வுலகத்தின் வேதனையில் சிக்கித்
தவிக்க முடியாமல் உலகத்தின் பந்தங்களை அறுத்துக் கொண்டு சன்யாசம் வாங்கிக் கொள்கின்றனர்.
வாழ்க்கை அதன் தன் இருத்தலில் மிக துயரகரமானது. இந்தத் துன்பக்கேணியை தவிர்த்து நம்மாள்
வாழ்க்கையை தொடர முடியாது. இந்தத் துன்பக்கேணியின் சாகரத்தில் திளைத்தப்பின்பு நமக்கு
காத்திருக்கும் வாழ்க்கை என்பதுதான் மிகவும் பொக்கிஷமானது. அந்த பொக்கிஷத்தை ஒவ்வொரு
நொடியும் ஊய்த்துணர வேண்டியிருக்கிறது. துன்பதிற்கு பின்வரும் வாழ்க்கையை பொக்கிஷமாக
ஒவ்வொரு நொடியையும் வாழ ஆரம்பிக்கிறார்கள். ஆனால் துன்பத்தின் வலி அதன் எல்லைக் கோட்டை
அத்து மீறினவனுடைய வாழ்க்கையை இன்பமானதாக வைத்திருக்குமா என்பது தான் என்னுடைய முக்கியமான
கேள்வி.
Thursday, November 3, 2016
”நெஞ்சமெல்லாம் வண்ணம் செய்த மாயம்”
”நெஞ்சமெல்லாம் வண்ணம் செய்த மாயம்”
சில நேரங்களில் குறிப்பிட்ட சில அனுபவங்கள்
நம்மைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவைகள் கனவுகளாக, சித்திரங்களாக, கதைகளாக
ஏதோ ஒரு விதத்தில் நம் ஆழ்மனதின் அனுபவங்களின் காட்சிகளாக தங்களை இருத்திக் கொண்டே
இருக்கும். எனினும் அந்தக் குறிப்பிட்ட அனுபவத்தின் சம்பவத்திற்கு நம்மால் கடந்து செல்லவே
முடியாது. ஒரு குறிப்பிட்ட சித்திரத்தை பார்க்கும் போது ஒரு விதமான சோகத்தின் வலி ஏற்படும்.
சில நேரங்களில் சில கனவுகள் அவைகள் நம்முடைய பண்டைய காலத்து அனுபவம் போன்ற உணர்வை ஏற்படுத்தி
விடும். அவைகள் நம்முடைய வயதின் கணக்கை விட ஆண்டுகளின் கணக்கில் மிகவும் தொன்மையானவைகள்
போல் தோன்றும். ஏன் இந்த குறிப்பிட்ட அனுபவங்கள் மாத்திரம் தொன்மையானவைகளாக இருக்கின்றன
என்பது நம்மால் சிந்துத்துப் பார்க்க முடியாதவைகள். இதற்கான விடை நண்பர் ஜெய் தினேஷ்
உடன் உரையாடிக்கொண்டிருக்கும் போது கிடைத்தது.
Tuesday, November 1, 2016
நிஜத்தில் யதார்த்தம் என்று ஒன்று இருக்கிறதா?
நிஜத்தில் யதார்த்தம் என்று ஒன்று இருக்கிறதா?
சிவ விஷ்வநாதன் இந்து ஆங்கில நாளிதழில்
மாதம் ஒருமுறைக்காவது opinion pageல் கட்டுடையை எழுதிவிடுகிறவர். இந்த நடுப்பகுதிப்
பத்தியை (column) வாசிப்பது என்பதே மிகப் பெரிய சாதனையாகும். எழுதுகிறவர்கள் ஒரு குறிப்பிட்ட
துரையின் வல்லுனர்களாக இருப்பவர்கள். அவர்களுடைய பத்தியை வாசித்து முடிப்பது ஒரு அறிவுச்
சுரங்கத்திற்குள் பயணிப்பதற்கு ஒப்பானதாகும்.
சில நேரங்களில் தங்கவேட்டை சாத்தியப்படும். சில நேரங்களில் கடைசி பத்து விரிகளுக்கு
முன்பதாகவே மூச்சு திணறல் ஏற்படும். எனினும் சில பத்தி எழுத்தாளர்களின் பெயரைக் கண்டாலே
மகிழ்ச்சிதான். அதில் முக்கியமானவர் சிவ விஷ்வநாதன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பதாக
அவருடைய எழுத்தின் மீது ஏதொ ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அவருக்கு மாத்திரம் கூடதல் கவனிப்பு
செலுத்தி வாசிக்க ஆரம்பித்தோம். தொடர்ந்து அவருடைய கருத்துக்கள் மீதும் ஈர்ப்பு ஏற்பட
ஆரம்பித்தது. இவர் மாத்திரம் மற்றவர்கள் போல் அல்லாமல் ஏதோ ஒன்றை அதுவும் மிகவும் பழகிப்போன
ஒன்றை புதுமையான விதத்தில் பேசுவதைப் போன்று தோன்றியது.
Subscribe to:
Posts (Atom)
வாசிக்கும் போதே இந்த தன் வரலாற்று நூலின் சில பகுதிகளைப் பகிராமல் இருக்க முடியவில்லை. பௌத்த வேட்கையின் பயணத்தில் கொஸாம்பி எடுத்து வைத்த...
-
கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே கரிச்சான் குருவிகளை அதிகம் என் ஊரில் ப...
-
Nostalgic feelings of the nursery rhyme gush to one’s memory whilst the eye gazes at the night sky. The floating pristine disc invite...
-
Prey Searching White Birds One can see thousands of birds camped on the bog land of “*******”. They are very busy by looking down into...