960 × 540Search by image
எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது: வினாடிகளில் உறைந்திருக்கும் மணி நேரங்கள்
எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது: வினாடிகளில் உறைந்திருக்கும் மணி நேரங்கள்
கால
அளவையில் வினாடிகள் கண் இமைக்கும் நேரத்தில் கடந்து செல்பவை. ஒளி வீச்சுகள் மட்டுமே இக்கால வினாடிக்குள் நடைபெறும் நிகழ்வுகள். மற்றபடி எந்த நிகழ்வும் நடத்தப்படுவதற்கு கால அவகாசம் நீடிக்கப்பட வேண்டியிருக்கிறது. சாகசக் காவியங்களின் யுகங்கள் கால அளவில் அளக்க முடியாததாயினும் சாகச வீரனின் இளமைப் பருவக் காதல் நேரத்தில் அளக்கப்படுகிறது. நாடகங்கள் ஐந்து மணி நேரங்களில் இருபத்துநான்கு மணி நேரக் கதை அளக்கப்படுகிறது. இங்கு நம்ப முடியாத இதிகாச காலங்களும், யதார்த்த காலங்களும் இலக்கியக் காலத்தால் நாம் ஏற்றுக்கொள்ளுமாறு அளவிடப்படுகின்றன.