Wednesday, May 15, 2019

All the Words Lead to Dabar


All the Words Lead to Dabar
For a long time, Marius was neither dead nor alive. For many weeks he lay in a fever accompanied by delirium, and by tolerably grave cerebral symptoms, caused more by the shocks of the wounds on the head than by the wounds themselves.
He repeated Cosette’s name for whole nights in the melancholy loquacity of fever, and with the sombre obstinacy of agony. The extent of some of the lesions presented a serious danger, the suppuration of large wounds being always liable to become re-absorbed, and consequently, to kill the sick man, under certain atmospheric conditions; at every change of weather, at the slightest storm, the physician was uneasy. - Les Misarables

            உடலும் மனதும் பாதிப்படைந்த நிலையில் இருக்கும் ஒருவனது நிலையை பற்றி மேற்கூறிய பத்தி பேசுகிறது. மனித மூளை சொற்களால் நிறைந்திருக்கிறது. அது சொற்களின் களஞ்சியம். அது சொற்களுக்காகவே படைக்கப்பட்ட மனித உறுப்பு. கண் பார்வைக்கு என்று பிரத்யேகமாக இருப்பது போன்று, காது கேட்பதற்கு இருப்பது போன்று, மூக்கு நுகர்வுக்கு இருப்பது போன்று மூளை சொற்களுக்கு என்று இருக்கிறது. அல்லது சொற்களை தன்னுள் உறிஞ்சி வைத்திருக்கிறது. ஆம் சொற்களை தன்னுள் உறிஞ்சி வைத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
            ஆரோக்கியமான நிலையில் இருக்கும் போது தன்னுள் சேகரித்த வார்த்தைகளைக் கொண்டு உரையாடுகிறது. இது இயல்பான நேரங்களில் நடக்கும் செயல்பாடு. இதனை Dialogue என்கிறார்கள். மூளை அதி உத்வேகமான நேரத்தில் வார்த்தைகளின் பிரவாகம் கட்டுக்கடங்காது பிரவாகிக்கிறது. அந்த நிலையில் வார்த்தைகளின் பாய்தலை பேசுபவனின்  eloquence என்கிறார்கள். மூளை பாதிப்படைந்த நிலையில் தன்னிலையில் இல்லாமல் கட்டுக்கு மீறி வார்த்தைகள் உளறலாக வெளியேறுகின்றன. இதனை loquacity என்கிறார்கள். இந்நிலையில் பேசப்படும் சொற்கள் வீணான சொற்கள் என்றழைக்கப்படுகிறது.  interlocution என்ற வார்த்தை உரையாடலோடு தொடர்புடைய வார்த்தை. இது உரையாடல் வாதம் என்றழைக்கப்படுகிறது.
            தான் பேசாமல் வேறு யாரோ ஒருவர் பேசுவது பொன்று உரையாடுவது Ventriloquism எனப்படும். கையில் பொம்மை ஒன்றை வைத்துக் கொண்டு தானும் பொம்மையும் பேசுவது பார்வையாளர்களுக்கு ஆச்சரியமான சித்து விளையாட்டு. பார்ப்பதற்கு தத்ரூபமாக பொம்மையே பேசுவது போன்று தோற்றமளிக்கும். இதுவும் ஒரு உரையாடல்தான். வாயை மூடிக்கொண்டு பொம்மையை வைத்திருப்பவர் பேசுகிறாரா அல்லது மறைவில் இருந்து யாரேனும் பொம்மைக்காக குரல் கொடுக்கிறார்களா என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. Dialogue, elequence, loquacity, interlocution,ventriloquism என இந்த ஐந்து வார்த்தைகள் பெயர்ச்சொல், பெயரடைச்சொல் என்று இலக்கண அமைப்பில், அர்த்தங்களில் மாறுபட்டாலும் பொதுவில் இவைகள் உரையாடல் பற்றின வார்த்தைகள். logue என்பது இவ்வார்த்தைகள் அனைத்தின் ஆதார கட்டமைப்பு. பிரென்சு வாத்தையான இதன் அர்த்தம் உரையாடல். logue உரையாடலாகவும், உரையாடல்வாதமாகவும், நாவன்மையாகவும், பிதற்றலாகவும், ”பிறிதிடக் குரற்பாங்காகவும்” பல்வேறு உரையாடல் வகைகளாக பரிணமிக்கின்றன. இந்த ஆங்கில  வார்த்தைகள் எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பது  பிரென்சு வார்த்தையான logue.
            Les Misarables நாவலில் வாசித்த முதற்கூறிய பகுதி உரையாடல் மீதான சந்தேகத்தை ஏற்படுத்தவே loquacityன் மற்ற இணைசொற்களைத் தேட இந்த நான்கு வார்த்தைகள் ஞாபகத்தின் சேகரிப்பில் இருந்து கிடைத்தது. இந்த ஐந்து இணைவார்த்தைகளின் உச்சரிப்பில் மாறாத ஓர்மை ஒன்று இருப்பது தெளிவாகிறது. அனைத்தும் logue என்ற வார்த்தையை ஆதாரமாக கொண்டிருப்பது இன்னும் சற்று நுணுகி பார்த்தால் தெரிய வருகிறது. நாவலோ பிரென்சு நாவல். ஆங்கில மொழிபெயர்ப்பில் பிரென்சு வார்த்தையை பார்ப்பது பொன்ற தோற்ற மயக்கத்தை இந்த loquacity தருகிறது.
            logue என்ற பிரென்சு வார்த்தையை இன்னும் கொஞ்சம் சந்தேகத்தோடு பார்க்கும் போது logueன் ஆணிவேர் சொல் இன்னும் நீண்டு வேறொரு மொழியில் வேரூன்றி இருப்பது போன்ற தோற்ற மயக்கம் ஏற்படுகிறது. logue ஏன் logoவாக இருக்க கூடாது என சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. அகராதியில் logue வார்த்தையை தேடினால் கிரேக்க வார்த்தை logo என்று பதில் வருகிறது.  சந்தேகத்தில் ஐரோப்பிய மொழிகளை வடிகட்டிக் கொண்டே சென்றால் கடைசியில் எஞ்சி இருப்பது கிரேக்க மொழியாக இருக்குமோ என்று தோன்றுகிறாது. அல்லது கிரேக்க மொழிதான் ஐரோப்பிய மொழிகளில் பல்வேறு கிளைகளாக விரிந்து பல்வேறு மொழிகளாக உருமாறி இருக்கிறதோ எனவும் தோன்றுகிறது. கடைசியில் எஞ்சி இருப்பது கிரேக்கமோ? ”எல்லா சாலைகளும் ரோமுக்கு செல்கின்றன” என்ற சொல்வழக்குக்கு ஏற்ப மொழியின் பல்வேறு கிளைகள் அனைத்தும் கிரேக்கத்தில் சென்றடைகின்றன போலும்.
            logosயை இன்னும் வடிகட்டினால் Dabar என்னும் எபிரேய வார்த்தை கிடைக்கிறது. Dabarக்கு "word", "talk", "thing" என்று பொருள். ஆரம்பத்தில் logos இருத்தது என்று சொல்லும் போது அது வெறும் மொழியோடு நின்றுவிடுகிறது. ஆரம்பத்தில் Dabar இருந்தது என்று யூகத்தில் சொல்லும் போது எதுவும் இன்மையில் இருந்தோ, இல்லாமையில் இருந்தோ, மாயையில் இருந்தோ ஆரம்பிக்கவில்லை என்று தெரிய வருகிறது. Dabar, logosயைப் போன்று மொழி ஆராய்ச்சிக்கு உரிய வார்த்தை. ஒன்று மட்டும் உறுதி ஆரம்பத்தில் ஏதோ இருந்தது.  




No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...