கிழவனும் கடலும்: பரிசோ இலக்கோ இல்லாத நம்பிக்கையின் பயணம் - NOTES FROM PANDEMONIUM

728x90 AdSpace

Monday, July 18, 2016

கிழவனும் கடலும்: பரிசோ இலக்கோ இல்லாத நம்பிக்கையின் பயணம்

 கிழவனும் கடலும்: பரிசோ இலக்கோ இல்லாத நம்பிக்கையின் பயணம்
இலக்கியத்தில் இசங்கள் பல வந்த பிறகும் ஹெம்மிங்வே மாத்திரம் தன்னை ஒரு குறிப்பிட்ட வகைமைக்குள் தினித்துக் கொள்ளாமல் தனித்து நிற்கும் படைப்புகளை தந்தவர். ஜேம்ஸ் ஜாய்ஸ் போன்றவர்கள் தங்களுடைய புனைவுகளில் ஒரு குறிப்பிட்ட மனோவியல் உத்தியை கையாளாமல் இருந்திருந்தால் அவர்கள் படைப்புகள் ஆரம்ப நிலையில் இருந்த யதார்த்த புனைவுகளாக தான் இருந்திருக்கும். யதார்த்ததிற்கும் மீறிய பரிசோதனை முயற்சி மாத்திரமே அவர்களை தனித்து நிற்பவர்களாக காட்டியது. எட்மன்ட் வில்சன் என்ற விமசர்சகர் ஜாய்சின் யுல்லிசஸ் பற்றி விவாதிக்கும் போது, நனவோடை உத்தியை மீறி ஜாய்சிடம் இருப்பது வெறுமனே மேடம் பொவாரி கதை மாத்திரம் தான் என்று கூறுவார். இந்த மேடம் பொவாரி என்ற யதார்த்ததிற்கு மீறி யுல்லிசஸில் இருப்பது நனவோடை உத்தியால் மாத்திரமே. இதைப் பற்றி பேசுவதானால் நவீனத்துவம் என்ற ஒரு இயக்கத்தின் தீவிரத்தினால் ஏற்பட்ட இலக்கிய படைப்புகளை தாழ்த்தி பேசுவது என்பது அல்ல. மாறாக இவர்கள் தங்களுடைய படைப்பாற்றலை முற்றிலும் யதார்த்த வாழ்க்கைக்கு மிக தூரத்தில் வைத்துக் கொண்டார்கள் என்பதுதான். எனினும் அவருடைடய படைப்புகளில் இலக்கிய பரிசோதனையின் மேதாவித்தனம் தெரியாது. அவருடைய படைப்புகளில் வாழ்க்கை இலக்கியமாக்கப்பட்டிருப்பது மாத்திரமே புலப்படும்.
நவீனத்துவம் சார்ந்த பிரதிகளை வாசிப்பதற்கு எவரும் சற்று தயங்குவர். வாசிப்பில் தேர்ந்த பயிற்சி அவசியப்படுகிறது. ஆனால் ஹெம்மிங்வே படைப்புகளை அனுகும் போது இப்படிப்பட்ட ஒரு பயமுறுத்துதல் இடம் பெறாது. கதைக்கும் வாசிப்புக்கும் இடையில் பரிசோதனை முயற்சி ஒரு முட்டுக்கட்டையை கொண்டு வராது. அவருடைய படைப்புகளில் வாழ்க்கை கதையாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது. யதார்த்த வாழ்க்கை கதையாக்கப்படும் அதே தருணத்தில் அப்பிரதி இலக்கியம் என்ற தகுதியை அடைந்து விடுகிறது.
இந்த புறிதல் கடர்க்கரையில் எம்மிங்வேயின் கடலும் கிழவனும் கதையை நண்பர்களுடன் வாசிக்கும் போது ஏற்பட்டது. இந்தக் கதையை பற்றி பேசும் எவரும் பேச்சின் ஆரம்பத்திலேயே அதிகம் வியந்ந்து பாராட்டுவார்கள். வெள்ளிக்கிழமை (15/7/2016) சாயந்தரம் நண்பர்கள் அனைவரும் லயோலா கல்லூரியில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தோம். எங்கள் பேச்சு திடீரென்று ஹெம்மிங்வே பக்கம் திரும்பியது. நண்பர் ஒருவர் இந்தக் கதையை தன்னால் ஒருபோதும் மறக்க முடியாது என்று கூறினார். அந்தக் கிழவனின் நெற்றி சுருக்கம் அப்படியே தன் கண் முன்பாக தெரிகிறது என்று கூறினார். தமிழ் மொழிபெயர்ப்பு மாத்திரம் என்னிடம் இருந்தது. எனினும் அதை ஒரு குழுவாகத் தான் வாசிக்க வேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன். மறுநாள் கடர்க்கரையில் கதை வாசிப்பில் இந்தக் கதையை தெரிந்தெடுத்தோம்.
சந்தியாகு என்ற கிழவன் மீன் பிடிப்பதில் ராசியற்றவன். மீன் பிடிக்க எப்போது சென்றாலும் வெறும் கையோடுதான் திரும்பி வருவான். யாரும் அவனுடன் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள். மனோலின் என்ற சிறுவன் கிழவனுக்கு மிகவும் நெருக்கமானவன். ஆனால் அவன் பெற்றோர் சந்தியாகுவுடன் மீன் பிடிக்க போகக் கூடாது என்று தடை விதித்திருப்பர்கள். என்பத்தி நான்கு நாட்கள் ஆகிவிட்டன. ஒரு மீனும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் சிறுவன் கிழவனை சந்தித்து பேசுவான். உணவு தயாரிப்பார்கள், செய்திதாள் வாசிப்பார்கள். மனோலின் ஜோ டீமகியோ என்ற பேஸ்பால் ஆட்டக்காரனைப் பற்றி பேசுவான். மறுநாள் தான் மீன் பிடிக்க போவதாக கிழவன் கூறுகிறான். என்பத்தைந்தாவது நாள் கிழவன் மீன் பிடிக்க செல்கிறான். மார்லின் என்ற என்ற மீன் தான் தன்னுடைய இலக்காக வைத்திருக்கிறான். அந்த மீன் மாட்டிக்கொள்கிறது. தன் ஈட்டியால் மார்லினை வேட்டையாடிவிடுகிறான். தன் முழு பலத்தையும் பயன்படுத்தி கரைக்கு இழுத்து வருகிறான். துரதஸ்டவசமாக சுராமீன்கள் இரத்தவாடையை நுகர்ந்து மார்லினின் உடலை வேட்டையாடி விடுகின்றன. கிழவன் கரைக்கு மார்லினின் எலும்பு கூட்டை மாத்திரம் கொண்டுவருகிறான். ஊர்க்காரர்களுக்கு இது மாபெரும் அதிர்ச்சி. மீனின் எலும்பு கூடு ஐந்து மீட்டர் என்று அளக்கின்றனர். சில சுற்றுலா பயணிகள் அது சுறா மீன் என்று பெசிக்கொள்கிறார்கள்.   மனோலினை அனுப்பி கிழவனுக்கு ஆறுதல் சொல்ல சொல்கிறார்கள். தாங்கள் அனைவரும் அவனுடன் மீன்பிடிக்க வருவதாகவும் சொல்கிறார்கள். கிழவன் தூங்க செல்லும் போது கனவில் தன் இளமைப் பருவத்தையும் அப்பிரிக்க கடர்க்கரையில்  சிங்கங்கள் நிற்பதையும் காண்கிறான்.   
கதையை முழுவதும் வாசிக்கவில்லை. கதையின் முதல் பகுதியோடு முடித்துக் கொண்டு விட்டோம். அமைதிக்கு பிறகு பிரதியைப் பற்றி யாராவது ஆரம்பிப்பார்கள். என் பக்கத்தில் எவ்வாறு கதை ஒரு ஓவியம் போன்று மஞ்சல் என்ற ஒரே ஒரு வண்ணத்தால் தீட்டப்பட்டிருக்கிறது என்ற உணர்வைக் கதை தருகிறது என்று என் தரப்பு பகிர்தலை முன் வைத்தேன். பின்பு மற்றவர்கள் அதுவே எப்படி ஒரு விலையாட்டு என்ற அம்சம் உருவகமாக கதையில் ஆங்காங்கே வருவதை பற்றி முன் வைத்தார்கள்.
முதலாவது மஞ்சல் நிறம் என்பது கதை முழுக்க வியாபித்து இருக்கிறது. இந்த மஞ்சல் எதை அடையாளப்படுத்துகிறது என்பது தான் கேள்வி. பிரதியில் ஒரு பிம்பம்மோ உருவகமோ பயன்படுத்தப் பட்டிருந்தால் நிச்சயம் அது ஒரு குறியீடாகத்தான் இருக்கும். இங்கு மஞ்சல் நிறம் எதைக் குறிக்கிறது  என்பதை பற்றி விவாதித்தோம். Impressionist ஓவியர்கள் அதிகம் நீல நிறத்தை வண்ணக் குழைவில் பயன்படுத்தி இருப்பார்கள். அது இயற்கையின் நிறம். வானின் நிறம், கடலின் நிறம். இந்த நிறம் மாத்திரமே முழு சுற்றுச் சூழலிலும் பிரவாகிக்கிறது. எங்கும் நீலம் சிதறிக் கிடப்பதாக இந்த இயக்கத்தில் உள்ள ஒவியர்கள் நீலத்தை பயன்படுத்துவார்கள். அதே நேரத்தில் நீலத்தின் அடர்த்தி எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. அது சூரியனின் ஒளிக்கதிரின் பிரகாசத்திற்கு எற்ப மாறுபடும். ஆயினும் நீலம் மாறாது. அதன் அடர்த்தி மாத்திரமே குறையும் கூடும் அவ்வளவுதான்.
ஒருவேளை ஹெம்மிங்வே இந்த நீல நிறத்தை தன் கதைகளில் பூசியிருந்தால் இயக்கத்தினர் அவரை ஒரு அங்கமாக சேர்த்து கொண்டாடி இருந்திருப்பார்கள். ஹெம்மிங்வே கதையில் நீலம் அல்ல மஞ்சல் நிறம் வர்ணம் அடிக்கப்பட்டிருக்கிறது. இந்த மஞ்சல் இயற்க்கையில் எழிலை வர்ணிக்க அல்ல மாறாக உலகப் போரினால் எற்பட்ட சீரழிவை குறிக்கும் வண்ணமாக இருக்கிறது. கிழவன் சோற்றில் மீனை வைத்து சாப்பிடுகிறான். பொதுவாக அரிசியை அதன் செழிப்பின் நிறத்தில் நாம் தொடர்பு படுத்துவதுதான் வழக்கம். இங்கு சாதத்தின் நிறம் முற்றிலும் மஞ்சல் நிறமாக காணப்படும். மேலும் அவனுடைய தோல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதும் ஒரு விதமான மஞ்சல் நிறத்தை நமக்கு நினைவு படுத்தும். உலக யுத்ததிற்கு பிறகு வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு கோண்டாடப் படுவதாக இருந்திருக்க வில்லை. அது அழிவில் தன் வாழ்க்கையை மரணிக்க தயாராக இருப்பதை காட்டுகிறது. அழிவுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள இடைநிலையைத்தான் இந்த மஞ்சல் நிறம் குறிக்கிறது.  
விவாதத்தின் அடுத்த பகிர்வாக எவ்வாறு இந்த அழிவுக்கும் வாழ்வுக்கும் இடைபட்ட வாழ்க்கை மிக ஆபத்தானது என்பது தான். எப்படியோ வாழப்படும் வாழ்க்கை அழிவைதான் சந்திக்கப்போகிறது. நம்பிக்கை தரும் எந்த வாக்குறிதியும் நமக்கு கிடையாது. அதனால் இதனை நாம் தொடரலாமா அல்லது நிறுத்திவிடலாமா என்பதும் மற்றொரு கேள்வி. இங்கு உள்ள பிரச்சனை வாழ்க்கை வாழபடுவதில் எந்த  நம்பிக்கை இல்லை என்று அதை நிறுத்த முடியாது. விளையாட்டில் யாருக்கு வெற்றி என்பது ஊர்ஜிதம் இல்லை. யார் பக்கம் வெற்றி திரும்பும் என்பதையும் நம்மால் சொல்லி விட முடியாது. அதற்காக ஆட்டத்தை கைவிடவும் முடியாது. இங்கு ஹெம்மிங்வே சொல்வது வெற்றியின் மீது நம்மிபிக்கை இல்லை என்பதனால் ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்பது அல்ல. விளையாடாமல் ஆட்டத்தை நிறுத்துவது மரணத்தை விட கொடிய வேதனையாகும். ஆடப்படும் ஆட்டத்தில் நம்மை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும் அவ்வளவுதான். ஆட்டத்தின் வழிமுறைதான் முக்கியமே அன்றி அதன் இலக்கோ பரிசோ அல்ல. ஒரு முறை சலிப்பு எற்ப்பட்டு வாழ்க்கையின் ஓட்டம் நிறுத்தப் பட்டு விட்டால் அதற்கு பெயர் ஓய்வு என்பது அர்த்தம் அல்ல. நிசப்தம் அவ்வளவுதான்.
அந்த அமைதியின் மத்தியில் வாழ்க்கையின் கோரத்தின் முகம் மிகவும் சகிக்க முடியாதது. ஆட்டம் வெற்றி தோள்வி என்ற கணிக்க முடியாத ஒரு இலக்கிற்கு நேராக நம்பிக்கையின்றி பெரும் முயற்சியோடு தொடரப்பட்டாக வேண்டும்.


கிழவனும் கடலும்: பரிசோ இலக்கோ இல்லாத நம்பிக்கையின் பயணம் Reviewed by Arul Scott on 8:06 AM Rating: 5 starashbraswell.wordpress.com 640 × 513 Search by image   starashbraswell  கிழவனும்  கடலும்: பரிசோ இலக்கோ இல்லாத நம்பிக்கையின் பயணம் ...

No comments: