Thursday, May 2, 2019

மாறிலிகள்



     ரே ஒரு நல்லவனுக்காக அவன் சார்ந்த ஒட்டு மொத்த தீயவர்களின் கூட்டத்தை நல்லவர்களாகவும்ஒட்டு மொத்த நல்லவர்கள் கூட்டத்தை அவர்கள் மத்தியில் உள்ள ஒரே ஒரு தீயவனுக்காக கெட்டவர்கள் என அனைவரையும் முத்திரைக் குத்துவதும் அநீதி. ஒருவனது நன்னடத்தை அவனுக்கே உரிய சொத்து. அதே போன்று ஒருவனது தீமை குணம் அவனுக்கே உரிய அவமான சின்னம்ஒருவன் உண்டாக்கிய நற்பெயரில் ஊரே பங்கு பெறுகிறதுஒருவனது தீய செயலுக்காக அவன் சார்ந்த ஒட்டு மொத்த இனமும் தண்டிக்கப்படுகிறதுஇந்த அநேகருக்காக ஒருவர் பதிலீடு என்பது  நாகரிகத்தின் கண்டு பிடிப்பு என சொல்ல முடியாது. இது அறிவின்மையில் கண்டடையப்படும் திடீர் ஞானோதயம்.
     மிகவும் பலகீனமான குழு ஒன்று தாங்களே மிகச்சிறந்த மனிதர்கள் என காட்டிக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.  அவர்களால் செய்ய முடிந்ததெல்லாம் வன்முறை ஒன்றுதான். அது இயல்பிலேயே அவர்களுக்கு பழகிவிட்ட ஒன்று.  சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கும் போதே இடம் இரத்தம் தோய்ந்த மண்ணாகி விடுகிறது. இவர்களிடம் கோரிக்கை ஒன்று வைக்கப்படுகிறது:  இந்த குழு எப்போதும் அமைதி காக்கும் குழு என பெயரெடுக்க வேண்டும் என்பது அந்த கோரிக்கை. அது இயல்புக்கு முரணானது.
     கோரிக்கையை நிறைவேற்றியே ஆக வேண்டும். ஓரே ஒரு வழி மத்திரமே உண்டு. தீயவர்களின் பிரதிநிதி நல்லவன் ஒருவனை தங்களுக்காக முன்நிறுத்துவது. அது அவ்வளவு எளிது அல்ல. அது மிகவும் Costlyயான விசயம். HONESTY IS A LUXURY என்பார்கள். நேர்மை என்பது அவ்வளவு எளிதில் கடைப்பிடிக்கக் கூடிய விசயம் அன்று.  நூறு பேருக்கு மத்தியில் ஒருவன் மட்டும் மனம் உவந்து நேர்மையை கடைப்பிடிக்க விரும்பினால் எத்தனை நாளைக்கு அது செல்லுபடி ஆகும்.  எண்ணி ஐந்தே நாட்கள். ஆறாவது நாள் பத்தோடு பதினொன்றாக போக வேண்டியது தான். ஊறோடு ஒத்து வாழ் என்பது நிதர்சனமாகிவிடும்.
     நேர்மை என்பது அவ்வளவு விலை உயர்ந்த பொருள். ஒருவரின் நெர்மைக்கான விலை ஆயிரம் பேர்களின் நடத்தை இன்மை. நேர்மை என்ற ஒன்றை எப்படி கண்டுபிடிப்பது. பத்து பேரே நல்லவர்கள் என்றால் ஒருவனை மாத்திரம் அழைத்து நீதான் நேர்மைக்கு இலக்கணம் என்று சொன்னால் மற்றவர்களின் நேர்மை எங்கே போனது. இந்த வார்த்தையே விசித்திரமானது. வளைவு சுழிவு இல்லாத ஒன்றின் நிலை.
                 அளவு கோலை வைத்து பார்த்தால் பிசிறு தட்டாமல் ஒழுங்கில் நிற்கும்.  நேர்மையற்ற ஒன்றின் நிலையை BIAZED என்கிறார்கள். எல்லோரும் BIAZED மனிதர்கள். அனைவரும் நெளிவு சுழிவு அறிந்தவர்கள். அல்லது அவர்களே  நெளிவுசுழிவு கொண்டவர்கள். இதில் நேர்மையின் நிலை விசித்திரமானது.
     அநேகர் மத்தியில் ஒரே ஒருவரின் நேர்மை அசௌகரியத்தை உண்டு செய்கிறது.  ஒருவன் அப்படி இருப்பதன் பொருட்டு அநேகர் நல்லவர்களாக வேண்டிய கட்டாயம். அந்த ஒருவனது நேர்மையை அகற்றி விட்டால் எல்லாம் இயல்பாகிவிடும். பிரச்சனையே இப்பொது நேர்மையை தங்கள் சார்பாக முன்னிறுத்த வேண்டும் என்பதுதான். மிகவும் COSTLYயான விசயம். ஒரே ஒருவரை அதற்கென்றே நியமிக்க வேண்டும்.
                 அவர் வாழ்க்கை அனைத்துக்கும் நேர்மையையே கடைபிடிக்கவேண்டும். வாழ்நாள் முழுவதும் கறைபடாத நபராக இருக்க வேண்டும். ஒட்டுமொத்த பேருக்கும் அதுதான் அவர் கொடுக்கும் விலை. இந்த நிலையை தற்காத்து கொள்ள சிரமம் அதிகம் இல்லை. ஒன்றும் செய்யாமல் இருந்தாலே போதும்.  கண்டனம் இல்லை, விமர்சனம் இல்லை. அவர் தான் எதையும் செய்யவில்லையே.
                 அப்படியே எதையாவது செய்தால் அச்செயலின் சாதகங்கள் அனைத்தும் அவருக்கு சென்று சேரும். பாதகங்கள் என்று நேர்ந்தால் அவர் முன்னிறுத்திய மக்களைச் சாரும். இது கணித விதி. குற்றத்திற்காக அவற்றை விமர்சனம் செய்யமுடியாது. பழி அநேகர்மீது சுமத்தப்படுகிறது. முன் வந்து யார் தனியாளாக பொறுப்பேற்க போகிறார்கள். எப்போதுமே இந்த குழு அழிந்து போகாமல் பாதுகாக்கப்படுகிறது. தண்டனை என்று வரும்போது அது ஒரு கூட்டத்திற்கு அளிக்கப்படுவது அன்று. தண்டனை தள்ளுபடியாகிவிடுகிறது. அப்படியே தண்டனை ஒரு கூட்டத்திற்கு வழங்கப்படுமானால் அது இனப்படுகொலை.
     கூட்டத்தோடு இருப்பது பாதுகாப்பு. தனித்து விடப்படுவது மிகவும் ஆபத்தானது. தண்டனைக்கான குவிமையம் தனித்து விடப் பட்டவர். ஆனால் இந்த ஒரு நபர் கூட்டல் கூட்டுக்குழு என்ற கணக்கு ஒரு மாறிலி.  வேறுபாட்டிற்காக வேண்டுமானால் இப்படி சொல்லலாம் தனி நபர் எதிர் கூட்டுக்க்குழு. இந்த இரண்டாவது கணித செயல்பாடும் ஒரு மாறிலி. கூட்டுக்குழு ஒன்று நேர்மைக்கு இலக்கணமாக வாழ்கிறார்கள்.  நீண்ட நாளைய இந்த அப்பழுக்கற்ற கூட்டுக்குழு வாழ்க்கையில் ஒரே ஒருவர் சொஞ்சம் சறுக்கிவிடுகிறார். வீழ்ச்சியை பார்ப்பவர்கள் அந்த ஒரு தனித்த நபரின் வீழ்ச்சி என பார்க்க மாட்டார்கள். ஒருவரின் தடம் புறலுதல் அவர் சார்ந்த அனைவரையுமே பாதிக்கிறது. “அப்போதே தெரியும் இவர்கள் இப்படித்தான் என்று. அன்றே சொன்னேன் யாரும் கேட்கவில்லை”. இது திடீர் விமர்சனம்
                 இதில் நேர்மை என்பது ஒரு நபர்சார்ந்த விசயம் என்பது உறுதிப்படுகிறதுஎனினும் தனி நபர்சார் ஒழுக்கமானாலும் சரிஒழுக்கமின்மையானாலும் சரி அது ஒரு கூட்டுக்குழுவோடு தொடர்பு கொண்டிருக்கிறது. மனித நாகரிகம் இதனை மாறாமல் நிகழ்த்திக் கொண்டுவருகிறதுஒற்றை நபரின் அத்துனை ஆற்றலும் அவருக்கும் அவர்சார்ந்த கூட்டுக்குழுவுக்கும் வழங்கப்படுகிறது. தாங்கள் அல்லாத ஒன்றாக ஒருவரை அவர்கள் முன்னிறுத்துகிறார்கள். இந்த வித்தியாசம் தான் அவர்களின் இருப்புக்கு காரணம். தாக்குதல் நடக்கும் போது நேரடியாக இவர்கள் மீது பாதிப்பு எற்படுத்தப்படுவதில்லை. முதலில் தங்களின் பிரதிநிதி மீது பாய்கிறது. அவரை நெருங்கும் போதே தாக்குதல் வலுவற்றதாகிவிடுகிறது.
          


No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...