Monday, May 6, 2019

IMPERCEPTIBLE


     புத்தக வாசிப்பில் ஒரு வார்த்தை ஒரே முறை தரிசனமாகி தன் அர்த்தத்தை காட்டிக் கொள்ளாமல் கடந்து சென்றால் போனால் போகிறது என்று விட்டு விடலாம். இனி அந்த வார்த்தை நம்மை சந்திக்கப் போவதில்லை. பொருள் தெரியாத அந்த வார்த்தையை மெனக்கெட்டு அர்த்தம் கண்டு பிடித்து மூலையில் சேமித்து வைப்பதில் பயனில்லை. அகராதியை பார்த்து அர்த்தப்படுத்திக் கொண்டு மனதில் பதிய வைத்துக் கொண்டாலும் சீக்கிரத்தில் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விடும். தேவையற்ற  உழைப்பு. அதுவும் நாவல் வாசிப்பில் இது போன்ற நேர விரையம் வாசிப்பின் சுவாரசியத்தை கெடுத்து விடும். அரிதாக புழக்கத்தில் உள்ள வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை. மொழியில் தன் மேதமையை காட்டிக் கொள்ள வேண்டுமானால் இந்த அரிதான சொற்களை பேச்சு வாக்கில் அள்ளி தூவி விட்டு போகலாம். கேட்கிறவர்கள் எப்படி அந்த வார்த்தையை கண்டும் காணாமல் செல்கிறார்களோ அதே போன்று இந்த மேதாவியையும் கண்டும் காணாமல் கடந்து செல்வார்கள்.
     மற்றொரு வார்த்தை குறைந்தது பத்து முறையாவது வாசிப்பில் கடந்து சென்றால் கண்டிப்பாக அரகராதியின் துணை அவசியம். வார்த்தையை அர்த்தப்படுத்திக் கொண்ட பிறகே வாசிப்பை தொடர வேண்டும். இங்கு 'வேண்டும்' என்று கட்டளையாக எடுத்துக் கொள்ளலாம். அகராதி இந்த விஷயத்தில் துணைக்கு வராவிட்டால் வாசகன் சுத்த சோம்பேறி என்றுதான் அர்த்தப்படுத்திக் கொள்ளவேண்டும். வாக்கிய அமைப்பை வைத்துக் கொண்டு பொருள் கொள்ள முடியாத வார்த்தைகளை அர்த்தம் இதுதான் என்று யூகித்துக் கொள்ளலாம். அந்த நேரத்திலும் அகராதியின் துணை அவசியம். மிகவும் மங்கலாக தெரியும் அர்த்தம் அகராதியை பார்த்தவுடன் பளிச்சென்று தெரிய ஆரம்பித்துவிடும்.
     முதலாவது யூகிக்கவே முடியாத வார்த்தைகள். எவ்வளவு முயன்றாலும் வாக்கிய அமைப்பை வைத்துக் கொண்டு அர்த்தத்தை தெளிவு படுத்திக்க கொள்ளவே முடியாது. அகராதியை எடுத்து பார்த்தாலும் பொருள் கிட்டாது. இது போன்ற வார்த்தைகள் நீண்ட நாட்கள் கழித்து தான் புரிதலுக்கு வரும். அது வரை அது வெறும் வார்த்தை மட்டும் தான். பொருள் கொண்ட வார்த்தை கிடையாது. இது போன்ற வார்த்தைகள் பொருள் கண்டடையப்படாமல் இன்னும் நம் கையிருப்பில் இருக்கும். எதோ ஒரு நாள் எதோ ஒரு சூழலில் தன் முழுமுதல் அர்த்தத்தையும் வெளிக்காட்டி விடுவார். பொருள் கண்டடைந்த அந்த நேரம் வாரணம் ஆயிரம் அனைத்தையும் வெற்றி கொண்ட பெருமிதத்தின் நேரம். உடனடியாக பார்த்த மாத்திரத்தில் அர்த்தம் தெரிய வேண்டும் என்று அகராதியை தேடினால் தவறாக புரிந்து கொள்ள நேரிடும். இது போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் அதுவாக கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும். அர்த்தம் வரும் ஆனா வராது என்பது போல போங்கு காட்டும். jeopardize என்ற வார்த்தை இதற்கு உதாரணம். இதை தமிழை போன்று எழுத்து கூட்டி படிக்க முடியாது. ஆங்கிலத்தில் எழுத்து கூட்டி படிக்க முடியாது என்பதுதான் அம்மொழியின் பலவீனமும் பலமும். நம் மனம் எழுத்து கூட்டி படிப்பதற்கு பழக்கப்பட்டது. என்னுடைய ஆங்கில வகுப்பில் chaos என்று பலகையில் எழுதினேன். சொல்லி வைத்தாற் போன்று அனைவரும் 'சாவோஸ்' என்று படித்தார்கள். அன்று செந்தில் கவுண்டமணி புய்ப்பம் கதையாகிவிட்டது. இது போன்ற வார்த்தைகளுக்கு முதலில் அவைகளின் உச்சரிப்பு பழக்கப்பட்ட வேண்டும் பின்புதான் அவைகளின் அர்த்தம். மேற்கூறிய இரன்டு வார்ததைகளில் chaos வேண்டுமானால் கொஞ்சம் புழக்கத்தில் உள்ள வார்த்தை என்று சொல்லலாம். jeopardize அரிதினும் அரிதான வார்த்தை. தி இந்து ஆங்கில நாளிதழில் நடுப்பக்க பத்தியில் தான் முதலில் இந்த வார்த்தையை கண்டுபிடித்தது.      
     ஒரு சில வார்த்தைகள் புழக்கத்தில் அதிகம் இல்லாமல் இருக்கலாம் அவைகளுக்கென ஆதார வார்த்தை ஒன்று இருக்கும். அந்த ஆதார தன்மைக்காவது இந்த வார்த்தைகளின் அர்த்தத்தைக் கண்டு பிடிப்பது அவசியம். imperceptible இதற்கு சிறந்த உதாரணம். perceive என்ற சொல்லை இதற்கு ஆதார சொல்லாக யூகிக்கலாம்.   Les Miserableness நாவலின் இது போன்ற வார்த்தைகள் ஏறாளம் நம் வாசிப்பில் கடந்து போகும். imperceptible அப்படி கடந்து போகக் கூடிய வார்த்தை அல்ல. இது பண்பு பெயரடையாக இருந்தாலும் சிறு வாக்கியத்தை போன்று இந்த வார்த்தை வாசிப்புக்கு புலப்படுகிறது. வார்த்தையை வாசிக்கும் போதே அர்த்தம் தெளிவடைவதை போன்ற உணர்வு ஏற்படும். ஆதார சொல் perceive அதனை சாத்தியப்படுத்துகிறது. அகராதியை திறந்து பார்த்த உடனேயே கொஞ்சம் குறைய மங்கலாக இருக்கும் அர்த்தம் படிகமாக தெளிவடையும்.
     சில வார்த்தைகளுக்கு அர்த்தம் வரும் வரை காத்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் அகராதி உண்மையில் தன் அகராதி வேலையை காட்டிவிடும். சில வார்த்தைகள் அர்த்தங்களை தயாராக வைத்திருக்கும். வாசகன் வந்து அகராதியின் துணையோடு அவைகளின் அர்த்தத்தை பார்க்க வேண்டியதுதான் தேவை. பொருள் உடனடியாக புரிந்துவிடும். அதிகம் சிரமம் வேண்டியதில்லை. imperceptible அப்படிப்பட்ட வார்த்தைதான். 'புலப்படாத' என்ற இந்த வார்த்தையின் அர்த்தம் அகராதியை திறந்த உடன் கண்ணாடியின் மீது படிந்த நீர் துளிகளை துடைத்த உடன் புலப்படும் காட்சி போன்று வார்த்தையின் பொருள் தெளிவடைகிறது. ஆதாரமற்று தனித்து இயங்கும் வார்த்தைகள் புதிரான வார்த்தைகள். யூகித்து அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாதவைகள் இவைகள். பொருள் புலப்பட காத்திருத்தல் அவசியம்.                 

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...