Monday, August 26, 2019

கசாக்குகளின் இருட்டு: இருட்டு பகலைப் போன்றே இயல்பானது



கசாக்குகளின் இருட்டு: இருட்டு பகலைப் போன்றே இயல்பானது
             நாவலின் சில வரிகள் மின்னல் போன்று நம் வாசிப்பில் சொற்ப நேரத்தில் மின்னிவிட்டு போகின்றன. அப்படிப்பட்ட மின்னல் போன்ற வரிகளை உடைய நாவல்கள் மிகவும் அரிதானவை. நல்ல மழை காலத்தில் மின்னல் வீச்சுகளுக்கு கணக்கே கிடையாது. தொடர்ந்து மின்னல்களும் இடிகளும் வந்து கொண்டே இருக்கும். தொடர் மின்னல்களை உடைய நாவல் என ஆரம்ப கால பிரெஞ்சு நாவலான கார்கென்டுவா மற்றும் பென்ட்டகுரல் நாவலை சொல்வேன். மறுமலர்ச்சி கால கட்டத்தில் உருவான அந்த நாவலை மனம் உட்கிறகித்துக் கொள்ள கொஞ்சம் ஆற்றல் தேவைப்பட்டது.

Monday, August 19, 2019

ஜீவன் என்னும் சிறப்பு அந்தஸ்து: ஏகாந்த நிலை


ஜீவன் என்னும் சிறப்பு அந்தஸ்து: ஏகாந்த நிலை
இந்த பூமி ஜீவராசிகளின் வாழ்வாதாரத்திற்காக சுழன்று கொண்டிருக்கிறது. மற்றெந்த கிரகமும் ஜீவராசிகளின் இருத்தலுக்கு உகந்ததாக இல்லை. பூமியின் மீதான மனித ஜீவன்களுக்கு அத்தனை கிரகங்களும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பில் உள்ளன என்று நம்பப்படுகிறது. எது ஒன்று ஜீவனுக்கு உரியது இல்லையோ அது வணக்கத்துக்கு உரியதாக பூமியில் இருந்து போற்றப்படுகிறது. ஆனால் எது ஒன்று ஜீவராசிகளின் வாழ்வியலுக்கு ஆதாரமாக இயங்கிக் கொண்டிருக்கிறதோ அது முற்றிலும் கணக்கில் கொள்ளப்படாமல் நிராகரிக்கப்படுகிறது. பூமியின் மீதான உயிரினங்களின் வாழ்வியல் தொடர்ச்சி சுற்று வட்டத்தில் சங்கிலித் தொடராக ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இந்த சுழற்சியின் ஒரு சரடு அறுபட்டாலும் பூமியும் மற்ற கிரகங்கள் போன்று உயிரற்ற பாலைவனமாக மாறிவிடுமோ என்னும் சந்தேகம் ஏற்படுகிறது. நீரற்ற, பச்சையமற்ற ஒரு நிலபரப்பை பாலைவனம் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்லுவது.

Monday, August 12, 2019

காலமே பயணமாக

                                    காலமே பயணமாக
காலம் என்ற பிரக்ஞைக்குள் நுழையும் போது பயணம் என்ற நகர்வுக்குள் நுழைந்து விடுக்கிறோம். காலம் ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு புள்ளிக்கு நகர்ந்து செல்கிறது. இதில் பயணம் செய்யும் நமக்கு அதன் ஓட்டத்தின் தொடர் நிகழ்வைப் பற்றின எந்த உணர்வும் ஏற்படுவதில்லை. இந்த பூமி நகர்கிறது. வெளிச்சம் கட்டுக்கடங்காத வேகத்தில் பயணிக்கிறது. ஒளியின் வேகத்திறுக்கு சற்று குறைவாக ஒலி தன் வேகத்தை சற்று குறைத்து நகர்கிறது.  ஒலி, ஒளி:  இவ்விரண்டின் இயங்கியலை உணருவது காலப் பயணத்தை உணருவதாகும். பூமியின் நகர்வையும் இதைக் கொண்டு உணர் ந்து கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் ஒரு மாபெரும் பயணம் ஒரு இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வேகம் நமக்கு புலப்படுவதாக தெரியவில்லை. அதாவது கண் பார்க்க வேண்டும். புலன்கள் துய்க்க வேண்டும். இவைகளின் எந்த ஒரு உணர்வும் இல்லாமல் பயணிக்கும் பூமிப் பந்தின் மீது அமர்ந்து கொண்டு நோக்கமற்று இலக்கற்று நாமும் பயணித்து கொண்டிருக்கிறோம். இந்த நகர்வின் பயணத்தை பயணி ஒருபோதும் உணருவதில்லை.

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...