Wednesday, May 15, 2019

All the Words Lead to Dabar


All the Words Lead to Dabar
For a long time, Marius was neither dead nor alive. For many weeks he lay in a fever accompanied by delirium, and by tolerably grave cerebral symptoms, caused more by the shocks of the wounds on the head than by the wounds themselves.

Tuesday, May 14, 2019

செவ்வியல் கண்டடையும் வாசகன்


செவ்வியல் கண்டடையும் வாசகன்
            புத்தக வாசிப்பில் வாசகன் புத்தகத்தை தெரிந்தெடுக்கிறானா அல்லது புத்தகம் வாசகனை தெரிந்தெடுக்கிறதா என்றால் புத்தகமே வாசகனை தெரிந்தெடுக்கிறது என சொல்லலாம். இது பட்டிமன்ற தலைப்பு போன்று தோன்றலாம். வாசிப்பனுபவம் இதனை உறுதி செய்கிறது. வாசிப்பின் தொடர்ச்சியில் ஒரு புத்தகம் முடியும் போது அடுத்த புத்தகம் வாசிப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறது. இது செவ்வியல் பிரதிகளின் விசயத்தில் அப்பட்ட உண்மை. ஒரு புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது அடுத்த புத்தகத்தை வாசகன் தெரிவு செய்வதில்லை. அவனது வாசிப்புக்காக புத்தகம் நீண்ட நாட்கள் காத்துக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு வகையில் புத்தகம் வாசகனை கண்டடைகிறது.

Wednesday, May 8, 2019

புலப்படாத பூனையும் (imperceptible) உணரப்படாத நிசப்தமும்


புலப்படாத பூனையும் (imperceptible) உணரப்படாத நிசப்தமும்
     நேரக்கணக்கு எப்போதும் கடிகார முள்ளின் நகர்வின் படி கணக்கிடப்படுவதில்லை. நிமிட முள், வினாடி முள், நேர முள் என்று காலம் அதன் வேகத்தில் அல்லது  தாமதத்தில் நகர்ந்து கொண்டே செல்கிறது. இப்பிரபஞ்சத்தின் அசைவு வினாடி முள்ளின் வேகத்தைக் காட்டிலும் மிகக் குறைவானது. நத்தை ஊர்ந்து போவது போன்று பிரபஞ்ச இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வளவு பெரிய பூமி பத்து நேர கணக்கு படி தன்னை தானே ஒரு சுற்று சுற்றிக் கொள்ள 24 மணி நேரங்கள் எடுத்துக் கொள்கிறது. இது பருப்பொருள் அசைவு. அதை விட சத்தத்தின் அதிர்வு இயக்க நகர்வு  மிக வேகமானது. ஒரு கல்லை தூக்கி எரிவதற்கும், அதிர்வலைகள் மூலம் சத்தத்தை ஒரு எல்லையில் இருந்து மற்ற எல்லைக்கு அனுப்புவதற்கும் கால வித்தியாசம் உண்டு. வெளிச்சத்தின் வேகத்தை அளப்பது மிகவும் கடினம். கணக்கிட முடியவில்லை என்பதை விட மனித மூளைக்கு அந்த திறன் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதி வேக இயக்கமான ஒளியின் பாய்தலும் சரி மிக மிக மிக குறைந்த வேகத்தில் இயங்கும் இந்த பிரபஞ்சமானாலும் சரி மனித பார்வைக்கு முன்பு அதன் இயக்கம் செயலற்ற சிசப்த நிலையாகும். கணிக்க முடியாததால் ஒரு இயக்க விதியை நிசப்த நிலை என்கிறோம். பிரபஞ்சத்தின் அகண்ட வெட்ட வெளியில் கிரகங்கள், விண்மீன்களின் இயக்கத்தை  நிசப்தம் என்று சொன்னால் அது பார்வை மயக்கம். புலன்களின் உணர்வுகளுக்கு அப்பால் பிரபஞ்சம் பேரியக்கத்தில் இயங்கி கொண்டிருக்கிறது.

Monday, May 6, 2019

IMPERCEPTIBLE


     புத்தக வாசிப்பில் ஒரு வார்த்தை ஒரே முறை தரிசனமாகி தன் அர்த்தத்தை காட்டிக் கொள்ளாமல் கடந்து சென்றால் போனால் போகிறது என்று விட்டு விடலாம். இனி அந்த வார்த்தை நம்மை சந்திக்கப் போவதில்லை. பொருள் தெரியாத அந்த வார்த்தையை மெனக்கெட்டு அர்த்தம் கண்டு பிடித்து மூலையில் சேமித்து வைப்பதில் பயனில்லை. அகராதியை பார்த்து அர்த்தப்படுத்திக் கொண்டு மனதில் பதிய வைத்துக் கொண்டாலும் சீக்கிரத்தில் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விடும். தேவையற்ற  உழைப்பு. அதுவும் நாவல் வாசிப்பில் இது போன்ற நேர விரையம் வாசிப்பின் சுவாரசியத்தை கெடுத்து விடும். அரிதாக புழக்கத்தில் உள்ள வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை. மொழியில் தன் மேதமையை காட்டிக் கொள்ள வேண்டுமானால் இந்த அரிதான சொற்களை பேச்சு வாக்கில் அள்ளி தூவி விட்டு போகலாம். கேட்கிறவர்கள் எப்படி அந்த வார்த்தையை கண்டும் காணாமல் செல்கிறார்களோ அதே போன்று இந்த மேதாவியையும் கண்டும் காணாமல் கடந்து செல்வார்கள்.

Friday, May 3, 2019

வீதி உலா



     சாதாரண நாட்களில் நாம் பார்க்கிற தெரு அவ்வளவு அழகானதாக இல்லை.  மக்கள் நாடமாடும் இடம் என்றாலும் ஒருவகையில் கைவிடப்பட்ட இடம் சாலை. அது தெருவாக இருக்கலாம், பரபரப்பு மிக்க சாலையாக இருக்கலாம் கைவிடப்பட்ட இடங்கள் அவை. வீட்டுவாசலின் எல்லைக்கு வெளியே உள்ள பகுதி கைவிடப்படலின் ஆரம்பம்.  ஒருவர் வீட்டு வாசலின் எல்லைக்கு வெளியே நகரும் போது கைவிடப்படலின் எல்லைக்குள் நுழைகிறார்.

Thursday, May 2, 2019

மாறிலிகள்



     ரே ஒரு நல்லவனுக்காக அவன் சார்ந்த ஒட்டு மொத்த தீயவர்களின் கூட்டத்தை நல்லவர்களாகவும்ஒட்டு மொத்த நல்லவர்கள் கூட்டத்தை அவர்கள் மத்தியில் உள்ள ஒரே ஒரு தீயவனுக்காக கெட்டவர்கள் என அனைவரையும் முத்திரைக் குத்துவதும் அநீதி. ஒருவனது நன்னடத்தை அவனுக்கே உரிய சொத்து. அதே போன்று ஒருவனது தீமை குணம் அவனுக்கே உரிய அவமான சின்னம்ஒருவன் உண்டாக்கிய நற்பெயரில் ஊரே பங்கு பெறுகிறதுஒருவனது தீய செயலுக்காக அவன் சார்ந்த ஒட்டு மொத்த இனமும் தண்டிக்கப்படுகிறதுஇந்த அநேகருக்காக ஒருவர் பதிலீடு என்பது  நாகரிகத்தின் கண்டு பிடிப்பு என சொல்ல முடியாது. இது அறிவின்மையில் கண்டடையப்படும் திடீர் ஞானோதயம்.

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...