மலேசியா பயணக்குறிப்பு (3): ஒரு பூவும் சிறு குருவியும் - NOTES FROM PANDEMONIUM

728x90 AdSpace

Monday, May 7, 2018

மலேசியா பயணக்குறிப்பு (3): ஒரு பூவும் சிறு குருவியும்

மலேசியா பயணக்குறிப்பு (3): ஒரு பூவும் சிறு குருவியும்
The Waste Land கவிதையில் எலியட் லண்டன் நகரத்தின் துரிதமான காலை நேரத்தைப் பற்றி பேசுவார். கூட்டமாக வேலைக்கு செல்லும் கும்பலில் தானும் ஒருவராக ஒருவருக்கு ஒருவர் பரிட்சயம் அற்ற நிலையில் கூட்டதில் தனிமையில் தலை கவிழ்ந்து நடந்து செல்கிறார். அக்கூட்டத்தில் ஒருவரை மாத்திரம் பார்த்து "There I saw one I knew, and stopped him, crying: “Stetson!" என்று கத்துகிறார். மாபெரும் கூட்டதில் தனிமையில் பிடித்த ஒருவரை பார்க்கும் போது ஒரு நிம்மதி பெருமூச்சு. கவிதையில் அவர் சந்தித்த நண்பர் எஸ்றா பௌன்ட் என எங்கள் பேராசிரியர் சொல்வார்.
அதே போன்றதொரு நிம்மதி பெருமூச்சு மலேசியாவில் எனக்கு எற்பட்டது. எலியட் கண்ட உற்ற நண்பனை பார்த்த நிம்மதி போன்றது அது. நான் பார்த்தது ஒரு பூவைம் ஒரு குருவியையும். எப்படி அந்த பாம் மரங்கள் மலேசியவைப் பற்றின ஒரு பிம்பத்தை எற்படுதுகிறதோ அதே போன்றதொரு மலேசியா பற்றின பதிப்பை இந்த இரு அழகுச் சித்திரங்கள் ஏற்படுத்தின.
காலை உணவுக்காக விடுதிக்கு சென்ற போது இவர்கள் இருவரையும் கண்டேன். விடுதிக்கு ஒருவித செடியினால் வேலி அமைத்திருந்தனர். சற்று உற்று நோக்கும் போதுதான்; நீயா என்ற அந்த எலியட்டின் ஆச்சரியம். நம்மூர் பூச்செடிதான்.
வேலியின் மீது நம்மூர் பரிட்சயமான பறவை ஒருவர் பறந்து செல்கிறார் - மைனா.
நகரத்திற்குள் செல்லும்போது நாட்டின் தேசிய மலர் வண்ண வண்ண மின் விளக்குகளால் சாலையோரம் எங்கும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. சிவப்பு வண்ண டாம்பீகம் இல்லாத எளிமையான மலர்கள் அவைகள். சொன்னால் அட இந்த மலரா? என்று ஆச்சரியப் பட்டுப் போவீர்கள். வேறொன்றுமில்லை - செம்பருத்திதான். இதுதான் இங்கு தேசிய மலர்.
பிரம்மாண்ட நகரத்தின் மத்தியிலும் நம் தமிழ் பறவைக்கும் மலருக்கும் தாராளமான இடம் இருக்கிறதே.
அதனால் என்ன? என்று எவரேனும் கேட்கலாம். இதனையே ஆங்கிலத்தில் "So what?" எனக் கேட்டால் அவமானம். இந்த விசயத்தில் நமக்கு தமிழை விட ஆங்கிலம் சுறுக்கென்று குத்தும். கூட்டத்தில் எலியெட் தன் நண்பனை பார்த்ததாக சொன்னதற்கு "so what?" என்று கேட்கலாம். கவிதை பின்நவீனத்துவ கவிதை அல்லவா. கேள்விக்குக்கு பதில் அளிக்கும் பொறுப்பு கிடையாது.
மலேசியா பயணக்குறிப்பு (3): ஒரு பூவும் சிறு குருவியும் Reviewed by Arul Scott on 5:26 AM Rating: 5 மலேசியா பயணக்குறிப்பு (3): ஒரு பூவும் சிறு குருவியும் The Waste Land கவிதையில் எலியட் லண்டன் நகரத்தின் துரிதமான காலை நேரத்தைப் பற்றி பேசுவ...

No comments: