சிங்கப்பூரில் சிட்டுக்குருவிகள் மத்தியில்: காக்கை குருவி எங்கள் ஜாதி (சிங்கப்பூர் பயணக் குறிப்பு 1) - NOTES FROM PANDEMONIUM

728x90 AdSpace

Saturday, May 5, 2018

சிங்கப்பூரில் சிட்டுக்குருவிகள் மத்தியில்: காக்கை குருவி எங்கள் ஜாதி (சிங்கப்பூர் பயணக் குறிப்பு 1)சிங்கப்பூரில் சிட்டுக்குருவிகள் மத்தியில்: காக்கை குருவி எங்கள் ஜாதி (சிங்கப்பூர் பயணக் குறிப்பு 1)

இன்று சிங்கப்பூர் சுற்றுளாவின் இரண்டாம் நாள். இராட்சத சக்கரத்தில் சாகச பயணம். அதற்கு முன்பு கடல் ஓரத்தில் கடல் கோள் பகுதியை நிலமக்கிய பிரம்மாண்ட இடத்தில் சிறிது நேர பார்வையிடல். மனித முயற்சியின் பிரம்மாண்டம் இப்பகுதி. இயற்கையின் பிரம்மாண்டம் எனக்குள் பிரமிப்பை உண்டாக்கும். ஆனால் மனிதனுடையதோ தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி என்னையே அறியாமல் தும்புறுத்திக் கொல்லும். எல்லாவற்றையும் பார்த்து முடித்து கரையோரமாக கட்டிட மேடையில் நீர் நிலையை பார்த்தவாறு அமர்ந்திருக்கிறேன்.
சீனர் ஒருவர் ரொட்டித் துண்டுகளை வீசிக் கொண்டிருக்கிறார். புறாக்கள்  ஒன்று கூடி அவைகளை கொத்தித் தின்கின்றன. ஓரமாக காகம் தனக்கான சமயத்தை எதிர்பார்த்து கத்துக்கிடக்கிறது. இவர்கள் அனைவரின் சாப்பாட்டையும் காகம் ஒருவரே ஏப்பம் விட்டுவிடுவார் போலிருக்கிறது. இமைக்கும் நேரத்தில் மற்றொருவர் போட்டிக்கு வருகிறார். மிக மிக சீன்னஞ் சிறு குருவி - சிட்டுக்குருவி. அவ்வளவு பெரிய பருத்த உருவங்களை பொருட்படுத்தாமல் எல்லாம் எனக்கே என்று அனைத்தையும் படுவேகத்தில் கொத்திக் கொண்டு மின்னல் வேகத்தில் பறந்து செல்கிறது. சின்னஞ்சிறு சிட்டையும் புறாக்களையும்  ஒன்றுசேரத்த உருவமாக காக்கை  மாத்திரம் ரொட்டி தன்னை தேடி வரட்டும் என காத்துக் கிடக்கிறது.
சிங்கப்பூரின் இந்த பிரம்மாண்ட அழகிய கட்சியின் மதியில் ஒரு ஓரமாக அமர்ந்து இந்த சீனரின் வள்ளல் பெருங்கொடையில் பயனடையும் இந்த மூன்று வித பறவைகள் உணவு உண்டு பசியாறும் கட்சியை கண்டு களிக்கிறேன்.
மொபைலில் இருந்து புகைப்படம் எடுக்க ஆவல் தூண்டுகிறது. இப்போது நடத்தப்படும் காட்சி சீனருடையது. எப்படி நான் உள்ளே நுழைந்து அதனை படம் பிடிக்க முடியும்? மனசாட்சி உறுதுகிறது. கொஞ்சம் நேரத்தில் நான்கைந்து சிட்டுக்கள் கூடிவிட்டன. மற்றொரு சீனக் குடும்பம் சடார் என்று உள்ளே நுழைந்து பயமுறுத்துகிறார் "ப்பா" என மிரட்டல். பாவம் எல்லாம் சிதறி ஓடிவிட்டன.
கொஞ்சம் நேரம் கழித்து மீண்டும் ரொட்டிதுண்டுகள்  வீசப்படுகின்றன மீண்டும் மூன்று ஜாதிப் பறவைகளின் சங்கமம். ரொட்டி தன் பக்கம் வரும் என காகம் இன்னும் காத்துக் கிடக்கிறது. மைனாக்கள் கொஞ்சம் கூடிவிட்டன.
இன்னொரு சீனர் ஏற்படுத்திய சலனம் என் மனசட்சியின் குற்றவுணர்வில் இருந்து விடுத்தலையாக்கி விட்டது. கைபேசியை எடுத்து தைரியமாக அந்த சீனர் ஏற்படுத்திய காட்சியை படம் பிடிக்கிறென்.
பொல்லாத சிட்டுக்குருவிகள் அதீத வேகத்தில் ரொட்டிதுண்டுகளை அதிகாரமாக கொதிக்கொண்டு செல்கின்றன. இறைவனின் மிகச்சிறு படைப்பு மனிதனின் பிரம்மாண்டத்தை அலட்சியப்படுத்தும் தருணமாக இந்நிகழ்வு அமைந்து விட்டது. டூர் குருப்பை காணவில்லை. கல்லூரி முதல்வர் கோபத்தோடு  காத்துக்  கொண்டிருப்பார். கிளம்ப வேண்டும்.

சிங்கப்பூரில் சிட்டுக்குருவிகள் மத்தியில்: காக்கை குருவி எங்கள் ஜாதி (சிங்கப்பூர் பயணக் குறிப்பு 1) Reviewed by Arul Scott on 9:09 AM Rating: 5 சிங்கப்பூரில் சிட்டுக்குருவிகள் மத்தியில்: காக்கை குருவி எங்கள் ஜாதி (சிங்கப்பூர் பயணக் குறிப்பு 1) இன்று சிங்கப்பூர் சுற்றுளாவின் ...

No comments: