வாசகசாலை - NOTES FROM PANDEMONIUM

728x90 AdSpace

Sunday, February 19, 2017

வாசகசாலை

தனியாக நூலகம் செல்லும் போதெல்லாம் கண்ணைக் கட்டி யாருமற்ற தீவில் விடப்பட்டதைப் போன்ற மனநிலை இருக்கும். சுற்றிலும் வாசகர்கள் இருப்பார்கள் இருப்பினும் நாம் மாத்திரம் யாருமற்று இருப்பது போன்ற தனிமை நிலவும். அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு செல்லும் போது அப்படிப்பட்ட பயம் இருந்தாலும் கண்ணாடிச் சுவர்கள் ஓரளவிற்கு அந்த பயத்தை போக்கி விடும். வெளி உலகம் நம் கண் முன் ஒரு விஸ்தார நிலையில் காட்சியளிக்கும். நேற்றைய அனுபவம் முற்றிலும் வித்தியாசமானது. #வாசகசாலை ”தமிழ்ச் சிறுகதைகளின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்” வாராந்திர தொடர் நிகழ்வுகள் – நிகழ்வு 2 நேற்று அண்ணா நுலகத்தில் நடைபெற்றது. நிறைய நண்பர்கள் அறிமுகமானார்கள். தனிமையில் புத்தகமும் அதில் கிடைக்கப் பெறும் அறிவைக் காட்டிலும் அதனை நண்பர்கள் மத்தியில் அறிமுகப்படுத்திக் கொள்வது என்பது ஒரு இனிமையான அனுபவம். இதற்காக பெரும்பாலும் நண்பர்களுடனேயே நூலகம் செல்ல விரும்புவேன். நிறைய நேரங்களில் அப்படிப்பட்ட தருணங்கள் வாய்க்கப்பெறாது. அவை மிக அரிதானவை. நேற்று மாத்திரம் ஒரு முழு நூலகமே நட்பு சூழலில் எனக்கு மிக நெருக்கமாக இருந்ததை உணர்ந்தேன். யாரையும் எனக்கு முன்பின் தெரியாது. அனைவரும் கதைகளைப் பகிர்ந்துக் கொள்வதற்காக இணைக்கப்பட்டோம். ஒருவருடன் நட்பை சம்பாதிப்பதற்கு எனக்கு ஏறக்குறைய ஆறுமாதங்களாவது ஆகும். நேற்று மாத்திரம் அந்த இரண்டு மணி நேரத்தில் ஏதோ காலம் காலமாக நாண்பர்களாக பழகிய உணர்வு மற்றவர்களுடன் ஏற்பட்டது. இச்சமுகத்தில் மொழி, இனம், சாதி இவைகளை மீறி எதாகிலும் நம்மை ஒன்றிணைக்குமா என்பது சந்தேகம்தான். நம் அனைவரையும் இந்த வேறுபாடுகள் அனைத்தையும் நீக்கி ஒ்ன்றிணைக்கும் ஒரே மையப் புள்ளி இலக்கியம் மாத்திரமே என்பதை நண்பர் கார்த்திகேயன் கடைசியில் பேசியபோது மகிழ்ச்சியாக இருந்தது. கூட்டம் முடிந்தவுடன் அனைவருடைய முகத்திலும் ஒரு மனநிறைவின் சாயல் தென்பட்டது. beauty will save the world என்று சொல்லவது போன்று literature will unite the world என்று நான் இனி சொல்லிக் கொள்ளலாம்.
வாசகசாலை Reviewed by Arul Scott on 11:23 PM Rating: 5 தனியாக நூலகம் செல்லும் போதெல்லாம் கண்ணைக் கட்டி யாருமற்ற தீவில் விடப்பட்டதைப் போன்ற மனநிலை இருக்கும். சுற்றிலும் வாசகர்கள் இருப்பார்கள் இரு...

No comments: