Sunday, February 12, 2017

அவரா நீங்க!



சிலருடைய ஆளுமையை அடையாளம் காண்பதற்கு நீண்ட நாட்கள் ஆகும். ஒருவேளை அது சாத்தியப் படாமல் கூடப் போய் விடும். ஒரு நபர் என்னதான் தன்னுடைய சிறந்ததை வெளிக்கொணர்ந்தாலும் நாம் ரசித்து விட்டு அப்படியே அவரை மறந்து விடுவோம். நீண்ட நாட்கள் நம் நினைவில் அவர் தங்குவதில்லை. அந்த நபர் நமக்கு மிகவும் இணக்காமானவராக மாற வேண்டும். அதுமுதற்கொண்டே நாம் அந்த நபரின் ஆளுமையை சரியாக அடையாளம் காண்கிறோம் என்று அர்த்தப்படும். அந்த வகையில் Sir. Anthony Hopkins என்னை மிக நீண்ட நாட்களுக்குப் பின்னரே அதிகம் யோசிக்க வைத்த ஒருவராக மாறினார். இவர் எனக்கு மிகவும் முக்கியமானவராகப் படுவது ஒரே ஒரு காரணத்தால் மாத்திரமே. இவரை நான் முதன் முதலில் பார்த்தது Silence Of The Lambs. அவர் வெளிப்படுத்திய ஒரு கதையின் பாத்திரம் மிகவும் பயப்பட வைக்கக் கூடியது. மிக நீண்ட தூரத்தில் வைத்துப் பார்த்து இரசிக்க வேண்டிய ஒருவர் போன்று திரைக் கதையில் காணப்படுவார். எதையும் தீர்மாணமாக சொல்ல முடியாத ஒரு முகம். அதில் இருந்து வரும் மொழிக்கு ஒரு வசிகரம் இருக்கும். எனினும் அது நம்மை எளிதில் அருகில் அனுமதிக்காது.
சமீபமாக போரும் வாழ்வும் நாவலுடைய தழுவல் திரைப்படங்களை சேகரித்துக் கொண்டு இருக்கிறேன். ஒரு படம் 20 தொடர்களைக் கொண்ட படம். மற்றொன்று ரஷ்ய மொழியில் ஆறு மணி நேரத்திற்கு செல்லும் படம். சென்ற வருடமும் BBC ஆறு தொடர்களைத் தயாரித்து இருக்கிறது. இதற்கு எல்லாம் முன்னதாக Henry Fonda நடித்த மற்றொரு கருப்பு வெள்ளை படம் ஒன்று இருக்கிறதாம். அதையும் தேடிக் கொண்டிருக்கிறேன். பழைய BBC (1972) தயாரித்த இருபது தொலைக்காட்சித் தொடரில் பியராக நடித்த ஒருவர் என்னை ஏதொ ஒரு மையப்புள்ளியில் அவரைப் பற்றி யோசிக்க வைத்தது. Henry Fondaவோ அல்லது மற்ற யாராவது அந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தால் அதைப் பற்றி பெரிதாக யோசித்து இருக்க மாட்டேன். ஆனால் BBC தொடரின் அந்த நடிகர் மாத்திரம் பியர் பாத்திரத்திற்கு மிகக் கச்சிதமான நடிகர் போன்று தோன்றினார். நல்ல நடிப்பு என்பது மட்டுமே அதற்கு காரணம் என்று என்னால் சொல்ல முடியாது. நாவலில் பியர் என்ற பாத்திரம் கதையின் முக்கியமானவர். ஒரு கோமானின் illegitimate son பியர். கோமகன் சாவும் தருவாயில் அடுத்த வாரிசு யார் என்று பதற்றத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது யாரும் எதிர்ப்பார்க்காத விதத்தில் பியரை அடுத்த வாரிசாக கோமகன் நியமித்துவிடுவார்.
கதை முழுக்க இந்த பியர் என்பவன் தன் ஆளுமையின் முன்னேறத்தை மிருகத்தனத்தின் நிலையில் இருந்து புனிதன் என்ற நிலைக்கு சென்றடைவான். வாழ்க்கைக்கான பொருளைத் தேடும் ஒருவன் இந்த பியர். அதனை மதத்தின் மூலம் கண்டடைய முயற்சி செய்து கடைசியில் அது கைக்கூடாமல் போய் விடும். கதையின் இறுதியில் சிறைக்கைதியாக பிரென்ச்சு காவலர்களால் சிறைப்படுத்தப்படும் போது தன் உடன் சிறைக்கைதி வயதான விவசாயி ஒருவர் மூலமாக மதம் தனக்கு கொடுக்காத பதிலை இறுதியில் கண்டடைவார்.
இந்தப் பியர்தான் Sir. Anthony Hopkins. பியர் பாத்திரம் Sir. Anthony Hopkinsக்கு மாத்திரம் கச்சிதமாக பொருந்தியது அவருடையது நடிப்பில் வெளிப்படும் மிருகத்தனமா? அல்லது மனிதனுக்கான மேன்மையா? என்பதை துள்ளியமாகக் கூறிவிடமுடியாத நிலை. அதை அதிகம் தொந்தரவு செய்துவிட்டால் ஆபத்தை விளைவிக்கும். அதுவே பக்குவப்படுத்தபடும் போது மானுடத்தின் உச்சநிலையை எட்டிவிடும். மானுடத்தின் உன்னதநிலையாக இருப்பதுதான் நாவலில் பியரின் கடைசிக் கட்டம். Sir. Anthony Hopkinsஐ பொறுத்தவரையில் தன் நடிப்பில் இந்த இரண்டு நிலைகளையும் ஒன்றாக வைத்திருக்கக் கூடியவர். கதையின் ஆரம்ப நிலையில் பார்க்கும் போது பண்படுத்தப்படாத மிருகத்தின் தன்மைக் கொண்ட பியராக அவர் இருப்பார். அதே நேரத்தில் அந்த மிருக நிலைக்கும் ஆழ் நிலையில் ஒரு மென்மை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அந்த மென்மையும் மிருகத்தனமும் ஒன்றா? அல்லது வெவ்வேறானதா? என்பதை அவ்வளவு எளிதில் நம்மால் பிரித்துப் பார்த்து விளங்கிக் கொள்ளவே முடியாது. கதையின் இறுதியில் போரின் தாக்கத்தை அதிகம் ஈடுகட்டித் தாக்கு பிடிப்பது Sir. Anthony Hopkins நடிப்பு வெளிப்படுத்தும் பண்பட்ட பியர் அதன் மிருகத்தின் பலமோ என்று யோசிக்க வைக்கிறது. அது அந்த மானுடத்தை அந்த சோதனையின் வழியில் கடந்து செல்ல வேண்டிய பலத்தைக் கொடுக்கிறது. எது மிருகத்தனம் அல்லது எது மனிதனின் புனிதம் என்பதை வறையறுத்துக் கூற முடியாத நிலையில் இருக்கும் மனிதனின் இயல்பை பியர் பாத்திரத்தின் மூலம் Sir. Anthony Hopkins திறம்பட காட்டியிருப்பார். போரும் வாழ்வும் திரைப்படத்தை இருபது தொடர்களாக பார்த்துவிட்டு மிக நீண்ட நாட்களுக்குப் பின்பு அதைப் பற்றி அதிகம் மற்றவர்களோடு விசாரித்த போதுதான் தெரிந்தது யார் அந்த Sir. Anthony Hopkins என்று. தன்னுடைய ஆரம்பக் கால நடிப்பிற்கு பியர் ஒரு சிறந்த அடித்தளத்தைக் அவருக்குக் கொடுத்திருக்க வேண்டும். பின்பு அதே ஒரு மிருகத்தின் நிலையும் புனிதத்தின் நிலையும் தொடர்ந்து அவருக்குள் பயணித்து இருக்கிறது (யூகம்). இப்போது இந்தப் பியரை ”அவரா நீங்க” என்ற ஆச்சரியத்துடன் Silence Of The Lambsல் உற்று பார்க்க வேண்டியிருக்கிறது. அல்லது ஒரு hannibal lecterஐ போரும் வாழ்வும் பியரின் கண்களில் உற்றுப் பார்க்க வேண்டியிருக்கிறது.
நான் பார்த்த பியரின் வேடத்தை ஏற்று நடித்த ஒருவர் முற்றிலும் எனக்கு பரிட்சயம் அற்றவர். எனினும் தன்னில் ஏதோ ஒரு சிறந்ததை இந்த போரும் வாழ்வும் திரைத் தொடரில் வழங்கி விட்டார். யார் இவர் என்று கூகுல் தேடலில் தேடும்போது இவர் தான் Sillance of the Lampsன் Sir. Anthony Hopkins என்ற வியப்பு மேலிட்டது. அதே முகத்தின் சாயலோடு அவருக்குள் பியரை சந்திக்கும் போது இவரைத் தவிர வேறு யாரும் அவ்வளவு வெகு சிறப்பாக அந்த பாத்திரத்தை ஏற்று நடித்திருக்க முடியாது என்ற உறுதிப்பாடும் ஏற்படுகிறது. 


    



      

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...