Wednesday, July 27, 2016

                                                  www.amazon.com304 × 500Search by image



இடியட் நாவலின் இந்த அட்டைப் படம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. கதையின் நாயகன் மிஷ்கினுக்குள் இருக்கும் ஆன்மாவை வெளிக்காட்டுகிற சித்திரம் இது. நாவலை வாசிக்கும் முன்பு இச்சித்திரத்தை பார்க்கும் போதெல்லாம் புதிய ஏற்பாட்டில் வருகின்ற சம்பவம் ஞாபகம் வரும். இயேசு கிறிஸ்து கடலின் மறுகரைக்கு தன் சீடர்களுடன் படகில் செல்லுவார். புயல் காற்றும் கடல் கொந்தளிப்பும் மூர்க்கமாக இருக்கும். இயேசுவோ நிம்மதியாக படகில் உறங்கிக் கொண்டிருப்பார். மீதி என்ன நடந்தது என்பது நமக்கே தெரியும். அக்கரைக்கு சென்றவுடன் பேய்பிடித்த ஒருவனை இயேசு குணமாக்குவார். குணமாக்கப் பட்ட நிலையில் இருக்கும் மனிதான் இந்த அட்டைப் படத்தில் இருக்கும் மிஷ்கின். குழப்பத்திலும் கொந்தளிப்பிலும் இருந்து விடுபட்ட ஆன்மாவின் நிலை தான் மகிஷ்கினின் இந்த நிலை. இது பைத்தியத்தின் நிலையும் அல்ல தெளிந்த மனதின் நிலையும் அல்ல. அனைத்திலும் இருந்து விடுபட்ட நிலை இது. ஆனால் இவனை ஏன் தாஸ்தாவஸ்கி இடியட் என்று அழைக்கிறார் என்பது தான் ஆச்சரியமான காரியம். நாவலை வாசித்து முடித்த பின்பு மிஷ்கினை தவிர அனைவரும் இடியட்களாக எனக்கு தெறிந்தார்கள்.

உண்மை என்னவென்றால் நாம் அனைவரும் தெளிந்த மனதை உடையவர்களை என்றும் மனம் பிரழ்ந்தவர்களை பைத்தியங்கள் என்றும் நாம் மதிப்பிடுகிறோம். உண்மையில் ஒரு இலட்சிய மனிதன் இந்த இரண்டு நிலைகளுக்கு அப்பார்பட்டவன். அப்படிப்பட்ட ஒரு மனிதன் தான் இந்த மிஷ்கின். எனினும் இந்த இலட்சிய மனிதன் கரமசோவ் சகோதரர்கள் நாவலின் நாயகன் அல்யோஷாவில் நிறைவடைகிறான்.          



No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...