Wednesday, July 27, 2016

மேற்கத்திய ஆளுமையில் சாதியைப் பற்றிய அறிவுசார் விசாரணை

மேற்கத்திய ஆளுமையில் சாதியைப் பற்றிய அறிவுசார் விசாரணை
கடர்கரையில் நண்பர்கள் அனைவரும் அம்பேத்கரின் முன்னுரைகளை மையமாக வைத்து அதில் எவ்வாறு இலக்கியம் தத்துவம் ஆகியவற்றின் தாக்கம் அவரில் மேலோங்கி நிற்கிறது என்பதைப் பற்றிய ஒரு விசாரணையில் வாசிக்க ஆரம்பித்தோம். இதுபோன்று மொட்டைத்தலைக்கும்  முழங்காலுக்கும் முடிச்சு போடுவது அபத்தமான காரியம் தான். எனினும் மறைக்கப் பட்ட உண்மையை பற்றி பேசும் போது இது போன்ற அபத்தம் என்னும் முற்று புள்ளி உண்மையை வெளிச்சப்படுத்துவதற்கு மிகம் பெரிய அபத்தம் ஆகும். அம்பெத்கருடைய கட்டுரைகளை வாசிக்க நேர்கையில் ஒரு பொருள் கொண்ட விசாரணைமாத்திரமே அவைகளில் இருக்கும். சாதியை பற்றிய எதிர்ப்பு குரள் மாத்திரமே அம்பேத்கரின் ஆய்வு பணி. இது அவருடைய ஆளுமை ஒரு சிறிய சட்டகத்திற்குள் சுருக்கி விடுகிறது. இதற்கு வெளியில் அவருடைய சக மனிதத் தன்மை அறிவு ஜீவி தன்மை என்பவைகள் முற்றிலும் அறியப்படாத ஒன்றாகும். சாலையின் முடிவில் இருக்கும் சிலையும் பாடபுத்தகங்களில் ஒரு கண்ணாடி அணிந்த உருண்ட முகமும் தான் அவருடைய அடையாளங்களாக இருகின்றன. இதற்கு மீறின அவருடைய வாழ்க்கை சார்ந்த குறிப்புகளில் அவருடைய ஆளுமையை தேடுவது மிக அறிது. இதற்க்காக அவருடைய கட்டுரைகளை விடுத்து விட்டு முன்னுரைகளை மாத்திரமே வாசிக்க ஆரம்பித்தோம்.
இந்த வாசிப்பின் நோக்கம் சாதியை பற்றிய தேடலாக அல்லாமல் மேலை நாட்டில் மேற்கத்திய தத்துவம் மற்றும் இலக்கியத்தினுடைய தாக்கம் இவ்வாறு அவர் மீது செலுத்தப் பட்டிருக்கிறது என்பதாக இருந்தது. தன் வாழ்நாள் முழுவதும் நூலகத்தில் பொருளாதாரத்தையும் சட்டத்தையும்  மட்டும் தான் படித்திருந்தாரா. நூலகத்தில் இவைகளுக்கு மீறி தன் பொழுது போக்கிற்க்கான புத்தகங்களாக நாவல்கள் நாடகங்களை போன்றவற்றை தொட்டிருக்க மாட்டார. நூலகத்திற்கு வெளியில் இசை நாடகம் போன்ற உணர்வு சார் கேளிக்கைகளில் ஈடுபட்டிருக்க மாட்டாரா என்பது கேள்வி.
அல்லது ஒரு மனிதனை அறிவியல், பொருளியல் மற்றும் சட்டம் மாத்திரமே ஒரு மேதையாக உருவாக்க முடியுமா என்பதும் கேள்வியாக இருக்கிறது. ஒரு துரையில் மேதையாக விளங்குவதற்கு அத்துறை மாத்திரமே ஒரு மனிதனை நடத்தாது. துரை சார்ந்த தரவுகள் வெறுமனே அறிவு மாத்திரமே. அது ஒரு மனிதனை எப்போதும் ஒரு ஆளுமையாக சிருஷ்டிக்காது. ஒருவனை ஆளுமையாகச் அவன் சார்ந்த துரையில் சிருஷ்டிப்பது கலை, இலக்கியம் மாத்திரமே. ஒரு அறிவு சார் துரை இலக்காக இருக்கலாம் ஆனால் அதற்காகன வழியை அத்துரை வழி நடத்தாது. இலக்கிற்கான வழி கலையும் இலக்கியமும் எற்படுத்தும் உந்துதலே ஆகும். ஒவ்வொரு அறிவியல் மேதைக்கும், தத்துவவாதிக்கும் ஏன் புரட்சியாளனக்கும் (லெனின்) பின்னால் ஏதோ ஒரு கலை இசை வடிவத்திலோ, ஓவிய வடிவத்திலோ, அல்லது சிற்ப வடிவத்திலோ உந்து விசை இலக்கை நோக்கி நடத்தி இருக்கும். இவைகளே ஒருவரை அவர் சார்ந்த துரையின் ஆளுமையாக மாற்றுகிறது.
நம்மிடைய அம்பெத்கர் என்ற ஒரு ஆளுமையின் வடிவம் கோளோட்சி கொண்டிருக்கிறது. சட்டம் தன்னில் தானே அவரை சட்ட மேதையாக உருவாக்கி இருக்க முடியாது, பொருளாதாரம் அதே போன்று தன்னில் தானே அவரை பொருளியல் மேதையாக உண்டாக்கியிருக்காது. அப்படியெனில் அவரை எது பல்துறையில் சாதைனையாளராக மாற்றியது என்பது தான் கேள்வி.
இவற்றை அவருடைய படைப்புகளில் அராய நாம் முற்பட்டால் அங்கே இலக்கியத்தை பற்றிய எந்த குறிப்பும் காணப்படாது. அவர் தன் சொந்த ஆளுமையை தன் முன்னுரைகளில் தான் காட்டி இருக்கிறார். அவருடைய படைப்புகள் அனைத்தும் முற்றிலும் objective Study அவ்வளவுதான். அவருடைய படைப்புகளின் முன்னுரைகளில் தான் அம்பெத்கர் என்ற நபர் வெளிப்படுகின்றார். இந்த அம்பெத்கர் என்ற நபர் எவ்வாறு செதுக்கப்பட்டிருக்கிறார் என்பதுவும் கேள்வியாக இருக்கிறது. ஒவ்வொரு முன்னுரையும் வித்தியாசமான அம்பெத்காரை வெளிப்படுத்துகின்றன. ஒரு முன்னுரை சரித்திரத்தை எவ்வாறு புனைவில் உண்டாக்க வேண்டும் என்பதைப் பற்றி பேசி இருப்பார். இது அப்படியே டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் நாவலில் டால்ஸ்டாயின் கருத்து ஆகும். ஆனால் டால்ஸ்டாயை பற்றியோ போரும் வாழ்வும் பற்றியோ எந்தக் குறிப்பும் இருக்காது. சில இடங்களில் அவருடைய குரல் அப்படியே ஸேக்‌ஷ்பியரின் நாடக்த்தில் வருகிற புரூட்டஸின் சொற்பொழிவு போன்று இருக்கும். சில இடங்களில் ரூஸோவைப் பற்றி பேசி இருப்பார். இவைகள் நமக்கு காட்டுவது அறிவு சார் படிப்புகளைத் தாண்டி ஒரு மனிதனுக்கு இலக்கியம், கலை, தத்துவன் ஆகியவை அத்தியாவசிய தேவைகள் போல் தோன்றுகிறது. இன்றைய சூழ்நிலையில் நாம் அம்பெத்காரை அவருடைய சாதியை பற்றிய எதிர்வினையில் தேடாமல் அவரின் ஆளுமையின் மேன்மையையும் அதை சாத்தியப்படுத்திய காரணிகளையும் ஆராய வேண்டி இருக்கிறது.

தத்துவம், இலக்கியம், வரளாறு என எல்லாவற்றையும் தன்னுடைய அறிவு தேடலாக அல்லாமல் தன் ஆளுமையின் அங்கமாக மாற்றியிருக்கிறார் என்பது முன்னுரைகள் தெளிவாக்குகின்றன. சாதியைப் பற்றிய அவருடைய விசாரனை மகர் சமூகத்தின் பிரதிநிதியாக அவர் மேற்கொள்ள வில்லை. மேற்கத்திய நாட்டில் இருந்து வந்ததவர் ஒரு புரூட்டஸாக அவர் எதிர்கொண்டார், டால்ஸ்டாயைப் போன்று ஒரு புனைவிலக்கிய பார்வையில் வரலாற்றை பார்த்தார், தத்துவத்தேடலில் நம் நாட்டிற்கு ரூஸோ மாதிரியான பார்வை எவ்வாளவு அவசியப் படுகிறது என்பவராக தான் இங்கு வந்தார். அவர் சாதியை எதிர் கொண்டது மேற்கத்திய கலவையின் ஒரு ஆளுமையாக எதிர்கொண்டார் என்பது ஆச்சரியமானது. 

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...