Friday, July 29, 2016

செவ்வியல் காட்டும் உலகம்: தொடுவானம் தொடும் விரிந்தகன்ற பார்வை

       meaningness.com437 × 560Search by image/The Mountain: a view from hell yes
செவ்வியல் காட்டும் உலகம்: தொடுவானம் தொடும் விரிந்தகன்ற பார்வை
டால்ஸ்டாய் மற்றும் தாஸ்தாவஸ்கியை படிக்கும் போதெல்லாம் குறிப்பிட்ட உணர்வு இப்படைப்பாளிகளை பற்றிய புறிதலை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். ஆனால் அது இதுதான் என்று வார்தையில் கூறமுடியாத உணர்வாக இருக்கும். எனினும் இவர்களின் படைப்புகள் வாழ்க்கையின் ஆழத்தையும் மேல்நோக்கிய பிரபஞ்சத்தின் உயரத்தையும் காட்டுபவைகளாக இருந்தன. குறிப்பாக கரமசோவ் சகோதர்கள் மற்றும் போரும் வாழ்வும் இது போன்ற உணர்வை எப்போதும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். எனினும் ஆழத்தை அதன் ஆழத்தில் இருந்து பார்க்க முடியாது. அதே போன்று உயரத்தின் எல்லையை அதன் முடிவில் சென்று காண முடியாது.
ஒரு மலையின் உச்சியில் இருந்து நிலப்பரப்பை காணும் போது அங்கு ஒரு பிரம்மாண்ட கட்சி நமக்கு பிரதியட்சியமாகும். அதுபோன்ற தருணம் நம் மனதில் ஒரு உண்ணதமான உணர்வை ஏற்படுத்தும். அது நம்மை விட்டு வெளியே வருவதற்கான நேரம். அதுவரையில் நம் ஆழ்மனதில் சிக்குண்டு தவித்து கொண்டிருப்போம். நிலப்பரப்பு அதுபோன்றதுதான் அது நம்முடைய பார்வையை முற்றிலும் குறிகியதாக வைத்திருக்கும். அது வெப்பத்தின் கொடூரத்தை நமக்கு எப்போதும் உணர்த்துவித்துக் கொண்டே இருக்கும். எப்போது நாம் சிகரத்தை தொட நெருங்குகிறோமோ வெப்பத்தின் கொடுமை நம்மை விட்டு நீங்குகிறது குளிர்ச்சியை நாம் அடைய முன்னேறுகிறோம். நம் பார்வையும் முற்றிலும் விசாலமாகிறது. அதுவரை நாம் கண்டிராத ஒரு உலகத்தை நாம் பார்க்கிறோம். அந்த உலகம் நிலபரப்பில் நாம் பார்த்த சிறிய உலகம் அல்ல, அது பரந்து விரிந்த உலகம். இந்த விரிந்தகன்ற பார்வை புற வய பட்ட உலகத்தை மாத்திரம் அல்ல நம்முடைய அக உலகத்தை பற்றிய பார்வையும் தான். நாம் எவ்வளவு குறுகியவர்கள் என்று நம்மை நாமே பல நாட்கள் பாத்திருந்தோமோ அது இப்போது இல்லை. நம்முடைய பௌதீக உடல் சிறியதுதான். அனால் நம் கண் முன் காட்சியாக்கப்பட்ட தரிசனம் பெறியது அதை பார்க்கும் நம் பார்வை அதனினும் பெறியது. என் பார்வைக்கு உள்ளடங்கியதுதான் என் கண்முன் இருக்கும் தரிசனம்.
நம்முடைய முயற்சிகள் அனைத்தும் அந்த சிகரத்தை நோக்கிய பயணமாக இருக்க வேண்டும். இருப்பினும் எளிதான காரியம் அல்ல. நெரம், உழைப்பு, பொறுமை அதிகம் இதற்கு தேவைப் படுகிறது. இவைளை பயணத்தின் செலவாக கருதலாம். இறுதியில் நம்மை அறியாமலேயே நாம் சிகரத்தில் இருப்போம். இவைகள் அனைத்தும் இயல்பாக நடைபெறும் செயல்கள்.
இந்த வகையில் டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் நாவலை ஒரு மாபெரும் மலையாக உருவகப்படுத்திப் பார்க்கிறேன். நிலபரப்பில் வாழும் அனேகர் இதனை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. தான் நின்ற இடத்திலேயே அது நின்று கொண்டிருக்கும். சிலர் மாத்திரமே அதில் பயணிக்க முயற்சி செய்வார்கள். முயற்சியின் எண்ணம் சில நேரங்களில் சளிப்படைய வைத்துவிடும். சிலர் மாத்திரமே அதன் முழு உயரத்தின் நீளத்தையும் கடக்க முயற்சி செய்வார்கள். அதன் முகட்டை தொடும் போது ஏற்படும் எண்ணத்தின் மலர்ச்சிக்கு நாம் கொடுத்த எந்த விலையும் குறைவானதுதான்.
கீழ் இருந்து பார்த்த ஒரு மாபெரும் மலை நம் சுண்டு விரல் அடக்கத்திற்கு உட்படும் உயரம் போன்றுதான் தோன்றும். சிறு வயதில் என் நண்பர்கள் ஒரு மாயாஜாலத்தை செய்து காட்டினார்கள். என்னுடைய பாட்டி ஊர் மலைகளால் சூழப்பட்ட ஊர். நண்பர்கள் என்னிடம் இங்கே பார் நான் இந்த மலையை என் கட்டை விரல் நீலத்திற்குள் அடக்கி விடுகிறேன் என்பார்கள். அதுதான் முதல் முறை விந்தையான காட்சியை கண்ட தருணம். என் சிறு கட்டை விரல் அளவிற்குள் மலையை அடக்கி விட்டேன். மற்றொரு முறை அதே நண்பர்கள் என்னை அதே மலையின் உட்சிக்கு அழைத்து சென்றார்கள். என் கண்முன்னால் விரிந்த நிலப்பரப்பின் காட்சி என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. தொடுவானம் வரைக்கும் என் கண் முன்னால் ஒரு நிலபரப்பு விரிந்திருந்தது. நீல வானம் ஒரு கூடையை போல் தட்டையான இந்த பூமியின் மீதி கவிழ்த்தி வைக்கப்பட்டிருந்தது. என் சிறு கட்டை விரலுக்குள் அடக்கிய மலையா அது என்று வியந்தேன்.
ரயிலில் பல்கலைக்கழகத்தை விட்டு அரைக்கு செல்லும் போது ஒரு முறை பேராசிரிய என்னிடம் செவ்வியல் என்பது ஒரு மாபெரும் மலை போன்றது அதனிடம் அருகில் செல்ல செல்ல நமக்கு ஒரு அச்சம் ஏற்படும், அச்சத்தை தவிர்க்க வேண்டும் எனில் நாம் அந்த மலையை உதாசினம் செய்ய வேண்டும். இல்லையெனின் நாம் காணாமல் போய்விடுவோம் என்று சொல்லுவார். எனினும் என்னுடைய அனுபவத்தில் இது நேருக்கு மாறாக இருந்தது.   
போரும் வாழ்வும்  நாவலை வாசித்து முடித்த பின்பு வாழ்க்கையைப் பற்றி இதுபோன்ற ஒரு அகன்ற பார்வை (முழுவதும் என்று சொல்லமுடியாது) கிடைத்தது. வாழ்க்கையில் அத்தனை மனிதர்களையும் சந்தித்து விட்ட அனுபவம். கோமான்களையும், ஈனர்களையும், துயருற்றவர்களையும், துரோகிகளையும், காதலர்களையும், தந்திரமான அரசியல் வாதிகளையும், சோம்பேரிகளையும் ஒரே நாவலில் பார்த்தேன். நடனகாட்சிகள், யுத்தங்கள், களியாட்டம், வேட்டை என சம்பவங்கள் விரிய ஆரம்பித்தன.
இவைகள் அனைத்தையும் ஒருசேர ஒரே நாவலில் கொண்டுவருவது என்பது டால்ஸ்டாயால் மாத்திரமே முடியும். ஆனால் சிகரத்தை தொட வேண்டும் என்பதுதான் கோரிக்கையை. ஜெயமோகன் ஒரு முறை செவ்வியலை வாசித்தலை இது போன்று இமைய மலையின் சிகரத்திற்கு செல்வதைப் பொன்று உருவக படுத்தி பேசுவார். நாம் மலை உட்சியில் சென்று நிற்க்கும் போது அந்த இடம் பனி படர்ந்து இருக்கும். நாம் அந்த பனி படர்வை சொந்தரவு செய்யவே கூடாது. அவ்வாறு செய்து விட்டால் அது அடிவாரத்தில் பனிசரிவை ஏற்படுத்தி விடும். ஆபத்து ஒன்றும் இல்லை. அது புனித நதிகளாக மாறி பூமியை தூய்மை படுத்தி விடும். நம்முடைய வாசிப்பிலும் இது போன்ற பனிச்சறுக்கம் எற்பட வேண்டி இருக்கிறது. நம் மனதின் அசுத்தங்கள் கழுவப்பட வேண்டி இருக்கிறது.   

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...