Monday, August 12, 2019

காலமே பயணமாக

                                    காலமே பயணமாக
காலம் என்ற பிரக்ஞைக்குள் நுழையும் போது பயணம் என்ற நகர்வுக்குள் நுழைந்து விடுக்கிறோம். காலம் ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு புள்ளிக்கு நகர்ந்து செல்கிறது. இதில் பயணம் செய்யும் நமக்கு அதன் ஓட்டத்தின் தொடர் நிகழ்வைப் பற்றின எந்த உணர்வும் ஏற்படுவதில்லை. இந்த பூமி நகர்கிறது. வெளிச்சம் கட்டுக்கடங்காத வேகத்தில் பயணிக்கிறது. ஒளியின் வேகத்திறுக்கு சற்று குறைவாக ஒலி தன் வேகத்தை சற்று குறைத்து நகர்கிறது.  ஒலி, ஒளி:  இவ்விரண்டின் இயங்கியலை உணருவது காலப் பயணத்தை உணருவதாகும். பூமியின் நகர்வையும் இதைக் கொண்டு உணர் ந்து கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் ஒரு மாபெரும் பயணம் ஒரு இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வேகம் நமக்கு புலப்படுவதாக தெரியவில்லை. அதாவது கண் பார்க்க வேண்டும். புலன்கள் துய்க்க வேண்டும். இவைகளின் எந்த ஒரு உணர்வும் இல்லாமல் பயணிக்கும் பூமிப் பந்தின் மீது அமர்ந்து கொண்டு நோக்கமற்று இலக்கற்று நாமும் பயணித்து கொண்டிருக்கிறோம். இந்த நகர்வின் பயணத்தை பயணி ஒருபோதும் உணருவதில்லை.

அப்படியே அது உணரப்படுமானால் மேற்கொண்ட பயணத்தின் சாதனம் அவ்வளவு வசதியானது அல்ல. சொகுசு இல்லாத வாகனம் ஒன்றில் பயணிப்பதை விட நடந்தே அந்த பயணத்தை முடித்து விடலாம். வாகனம் சொகுசானதாகவும் வேண்டும் பயணிக்கும் சாலை செம்மையானதாகவும் இருக்க வேண்டும். வாகனத்தை விட சாலையின் வசதி மிக அவசியமானது. வாகனத்தில் அமர்ந்திருப்பவருக்கு தான் அதில் அமர்ந்திருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் பயணம் தொடர வேண்டும்.
நம்ம ஊர் பஸ்ஸில் அது சாத்தியம் அல்ல. படிகட்டின் ஒரத்தில் ஒரு கலை வைத்து தொங்கிக் கொள்ள இடம் கிடைத்தாலே பெரிய விசயம். இதில் இருக்கை வறை சென்று உட்கார்ந்திருப்பவரிடம் எப்போது எழுந்திருப்பார் என அவரையே ஏக்கத்தோடு பார்ப்பதை விட தொங்கிக் கொண்டு பயணிக்கலாம். மாநகர பள்ளிகளில் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் செய்யும் சாகசங்களை பார்க்கும் போது இது நமக்கு தேவையா என தோன்றி இன்னொரு பஸ்சுக்கு காத்திருந்தே போகலாம் என்றிருக்கும்.
கிராமபுறங்களில் 90களுக்கு முன் இருந்து இரண்டாயிரம் வரை படிகட்டு பயணம் தவிர்க்க முடியாத்தாக இருந்தது. இரண்டு மணி நேரங்கள் காத்திருந்து பாஸ் வந்தவுடன் கடைசியில் படியில் ஒற்றைக் காலை வைத்து பயணிக்க கொஞ்சம் இடம் கிடைப்பதே பெரிய விசயம்.  நடுநிலை பள்ளிக்கு 2மைல்கள். உயர்நிலை பள்ளிக்கு 10 மைல்கள். கல்லூரிக்கு.... கற்பனைக்கே எட்டாத தூரம். ஒரே ஒரு பேருந்தை வைத்துக் கொண்டு திரைகடல் ஒடியும் கல்வியை தேடு என்பது யாரும் அடையமுடியாத ஒன்றிற்கான சவால் அன்றி வேறல்ல.
அடுத்த ஏரியாவில் பள்ளிக்கூடம் இருக்கும் போது அதே பஸ்ஸில்தான் போவேன் என்று அடம்பிடிப்பது அடாவடித்தனம். இதில் கத்தியை வைத்துக் கொண்டு சண்டை போடுவது ரவுடித்தனம். அரிதாக ஒன்று கிடைக்க பெற்றால் அது பொக்கிஷம். தேடுதல் இல்லாமல் தேவை அற்ற ஒருவனுக்கு பொக்கிஷத்தை கொடுத்தால்  அதன் மதிப்பு வீதியில் வீசி எரியும் கூழாங்கல்லுக்கான மதிப்பு மட்டுமே.
சொகுசு பயணம் அதன் இலக்கை பயணிக்கு ஒருபோதும் உணர்த்துவதே இல்லை. தாம்பரம் ஸ்டேஷனில் தொடர் வண்டியில் ஏறி அமர்ந்தால் போதும் கண்ணை மூடி திறப்பதற்கள்  கோட்டை ஸ்டேஷன் வந்துவிடும். பயணம் நடந்து முடிந்ததை புதுமைபித்தனின் சுப்பையா பிள்ளை தான் சொல்ல வேண்டும் எவ்வளவு சொகுசாக இருந்தது என்று. அப்போது இருந்த மீட்டர் கெஜ் இப்பொது விரிவடைந்து இன்னும் சொகுசாகி விட்டது. பயணத்தின் சொகுசு, வண்டியில் இல்லை. அது தண்டவாளத்தின் மீது இருக்கிறது. சிக்னல் விழும் போது மாத்திரமே தண்டவாளத்தின் மீதான நம்  பயணத்தின் உணர்வு ஏற்படும்.
மிகச்சிறந்த பயணம் என்று ஒன்று இருப்பின் அது வண்டியில் அமர்ந்தவுடன் புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு வாசிப்பை நூலகத்தில் இருந்து வாசிப்பதை விட இன்னும் சொகுசாக வாசிக்க வேண்டும். கோட்டை வரையிலான ஒரு மணி நேர பயணத்தில் ஒரு கட்டுரை, சிறுகதை, அல்லது நாவலின் ஒரு ச்சாப்ட்டர் என வாசிக்கலாம். புத்தகத்தின் முழுமைக்கான நேரம் சென்ட்ரல் ஷெடனில் இருந்து தில்லி வரை போதுமானது. அதுவும் குளிர்சாதன கோச்சாக இருத்தல் வேண்டும். இல்லை என்றால் மத்திய இந்தியா பயணத்தை மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி விடும். வாகனம் தராத தொந்தரவுகளைத் தவிர்த்து மற்ற சிரமங்கள் நாமே சரி செய்து கொல்ல வென்டியவைகள்.
நீண்ட பயணம் காலத்தால் விதியாசப்பட்டது, பயணம் செய்யும் வாகனத்தால் வித்தியாசப்பட்டது, மேலும் வாகனம் பயணிக்கும் வழி தடம் வித்தியாசப்பட்டது. ஒரு  மைல் தூரத்திற்கு கால் நடை பயணம் போதும், பத்து மைல்களுக்கு பேருந்து போதும், ஆயிரம் மைல்களுக்கு கம்பிகள் மீதான இரயில் போதும், கண்டம் கட்டக்க நீரின், காற்றின் மிது பயணிக்கும் கப்பலோ, விமானமோ போதும். காலத்தை கடக்க எதில் பயணிப்பது? நம்மை அறியாமல் காலம் என்னும் பெருவெளியில் அனைவரும் இலக்கின்றி பயணம் செய்து கொண்டிருக்கிறோம். கோட்டை ஸ்டேஷன் போன்று, டில்லி போன்று  டெஸ்டினேஷனை சென்றடையும் போதுதான் உணர்வு திரும்பும், இதுவரை நாம் காலம் கழிந்தது பயணத்தில் என்று. அல்லது காலமே பயணமாக அமைந்து விட்டது என்று. 

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...