Sunday, July 21, 2019

கிங் ஃபிஷ்ஷர்









கிங் ஃபிஷ்ஷர்
கடல் படையின் அதிகாரிகளின் நீல நிற சீருடை இந்த பறவையை பார்க்கும் போது நினைவிற்கு வருகிறது. பறவைகளில் தனித்துவமானது மீன்கொத்தி. ஒருவேளை தனித்து இருபதினாலேயோ என்னவோ? இருக்கட்டும். இருந்தாலும் தனித்துவமானதுதான் இந்த கிங் ஃபிஷ்ஷர். வண்ணங்களின் குழைவில் தனித்துவமாது இது. சாம்பல் நிறத்தில் சில குருவிகள். பச்சை நிறத்தில் கிளிகள். சாந்து நிறத்தில் சில பறவைகள். வண்ணங்களைக் கொண்டு பாரதி பூனைகளை வைத்து பாடியதைவிட இந்த பறவைகளை சுட்டிக்காட்டி பாடியிருக்கலாம். அதில் இந்த பறவையின் நீல நிறமும் சேர்க்கை. நீரின் மீதும் அதின் ஓட்டத்தில் செல்லும் மீன்கள் மீதும் இந்த அதிகாரிகளுக்கு கட்டற்ற அதிகாரம். அதனால் இரகுகளில் நீல நிற வண்ணம் தான் சரியான சீருடை இவர்களுக்கு. சுற்றிலும் சிறு குட்டைகள் எதுவும் இல்லாத இந்த பாலவாக்கத்தில் எப்படி இந்த பறவை இங்கு வந்து சேர்ந்தது! இறகுகளில் நீல நிறமும், மார்பில் கோட்டின் விரிப்பில் தெரியும் சட்டையின் வெள்ளை நிறம் போன்று சிறிதளவு வெண்மையும், உடலின் மற்ற பாகங்கள் கரும் பழுப்பு நிறமாகவும் மிக அருகில் ஜன்னல் வழியாக பார்க்கும் போது போனால் போகிறது என்று விட்டுவிட முடியுமா? அரிதான சந்திப்பு எக்களுடையது. நேரடியாக Naked Eyes மூலம் பார்த்தால் சந்திப்பு சிறிது நேரத்தில் முடிந்துவிடும். இருக்கவே இருக்கிறது Smart Phoneன் Camera. இந்த சந்திப்பை தற்காலிகமாக இல்லாமல் நிரந்திரமானதாக மாற்றிவிட வேண்டியதுதான். ஒரு சில Clicks. கடல் படை அதிகாரி இனி நம்முடைய நிரந்திர விருந்தினர்.      


No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...